மெசொபொத்தேமியா சுமேரியர்

சீதனம் வேண்டாம் - சிறுகதை

Recommended Posts

5 hours ago, anuja said:

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் ? உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் ? கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் ? உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் """ க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் ? யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று ?

யாரைப்பற்றிக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லையே ????😲

4 hours ago, அபராஜிதன் said:

தற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

இப்ப தான் விளங்கிச்சு ..

நன்றி வருகைக்கு அபராஜிதன் 🙂

4 hours ago, Kavallur Kanmani said:

இன்றைய நாட்களில் எம்மவர் மத்தியில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் அவதானித்தவரை பெண்ணும் மாப்பிள்ளையும் (காதலித்து திருமணம் செய்பவர்கள்) தாமே திட்டமிட்டு தமது பொருளாதார தேவைக்கேற்ப அழைக்கும் எண்ணிக்கையையும் செலவுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒழுங் கமைப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சுமே மிக அழகாக கதை சொல்லியுள்ளார். அதிகம் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை. திருமணத்தில் சேரும்பணம் புதுமணத் தம்பதிகளுக்கு  சேருவது சிறந்தது என்பது எனது கருத்து.

வருகைக்கு நன்றி அக்கா

Share this post

Link to post
Share on other sites

பச்சைகள் தந்த  நிழலி , அனுஜா, மீரா, கண்மணி அக்கா , புத்தன்  ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாரைப்பற்றிக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லையே ????😲

அக்கா அது நான் உங்க‌ளுக்கு எழுத‌ வில்லை , குமார‌சாமிஅண்ணாவுக்கு எழுதின‌து ? உங்க‌ளின் திரியில் அப்ப‌டி எழுதிய‌மைக்கு என்னை மன்னித்துக் கொள்ளவும் ? நீங்க‌ள்தொட‌ர்ந்து  எழுதுங்கோ அக்கா வாசிக்க‌ மிக‌வும் ஆர்வ‌மாய் இருக்கு ?

Share this post

Link to post
Share on other sites
On 10/17/2019 at 4:29 PM, anuja said:

அக்கா அது நான் உங்க‌ளுக்கு எழுத‌ வில்லை , குமார‌சாமிஅண்ணாவுக்கு எழுதின‌து ? உங்க‌ளின் திரியில் அப்ப‌டி எழுதிய‌மைக்கு என்னை மன்னித்துக் கொள்ளவும் ? நீங்க‌ள்தொட‌ர்ந்து  எழுதுங்கோ அக்கா வாசிக்க‌ மிக‌வும் ஆர்வ‌மாய் இருக்கு ?

குமாரசாமிக்கு எழுதினாலும் எனக்கும் புதினம் அறிய ஆசைதான். அதுதான் கேட்டேன் 😀

Share this post

Link to post
Share on other sites
On 9/27/2019 at 3:34 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

நான் கேட்டது மணப்பெண்ணின் தாயாரின் திருமணத்தில் 
வந்த காசுக்கு என்ன நேர்ந்தது என்று?  வாணியின் (மணப்பெண்ணின் தாயார் உங்கள் கதையில்) 
திருமணத்தில் வந்த காசு மாப்பிளை வீடுக்குதானே போயிருக்கும்? 

On 9/26/2019 at 7:41 PM, Maruthankerny said:

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குமாரசாமிக்கு எழுதினாலும் எனக்கும் புதினம் அறிய ஆசைதான். அதுதான் கேட்டேன் 😀

விடுப்பு பாக்கிறதெண்டால் காணும் முதல் ஆளாய் வந்து நிப்பினம். உந்த பொம்புளையளே உப்புடித்தான்.....:grin:

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, Maruthankerny said:

நான் கேட்டது மணப்பெண்ணின் தாயாரின் திருமணத்தில் 
வந்த காசுக்கு என்ன நேர்ந்தது என்று?  வாணியின் (மணப்பெண்ணின் தாயார் உங்கள் கதையில்) 
திருமணத்தில் வந்த காசு மாப்பிளை வீடுக்குதானே போயிருக்கும்? 

அதுதான் கூறியுள்ளேன் மருதங்கேணி. பணத்தை மாப்பிள்ளையின் தாயார் எடுத்துக்கொண்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை மட்டும் ஒரு தாளில் எழுதி பெண்ணின் தாயாருக்கு பெண்ணிடம் கொடுத்துவிட்டார்.

1 minute ago, குமாரசாமி said:

விடுப்பு பாக்கிறதெண்டால் காணும் முதல் ஆளாய் வந்து நிப்பினம். உந்த பொம்புளையளே உப்புடித்தான்.....:grin:

எதோ ஆண்கள் மட்டும் விடுப்புக்கு அலையிறதில்லை போல 🤔

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுதான் கூறியுள்ளேன் மருதங்கேணி. பணத்தை மாப்பிள்ளையின் தாயார் எடுத்துக்கொண்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை மட்டும் ஒரு தாளில் எழுதி பெண்ணின் தாயாருக்கு பெண்ணிடம் கொடுத்துவிட்டார்.

என்ன அக்கா திரும்ப திருப்ப அதையே எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்?

நான் கேட்பது ...
நீங்கள் அளித்த பதிலில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா?
1 மாப்பிள்ளையின் தாயார் 

2 மணப்பெண் 

 3 மணப்பெண்ணின் தாயார் ( உங்கள் கதையில் வாணி) 

எனது கேள்வி இந்த திருமணத்துக்கு பல வருடம் முன்பு ... மணப்பெண் பிறக்கும் முன்பு 
மணப்பெண்னின் தாயாருக்கு நடந்த (வாணிக்கு நடந்த) திருமணத்தில் வந்த பணம் எங்கு போனது? 

அது வாணியின் பெற்றோருக்கு கிட்டியதா? 

மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை.

இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று  பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து  வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும்.

என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, Maruthankerny said:

வாணியிடம் கேட்டபோது அவளின் திருமணம் இலங்கையில் நடந்ததாகவும், அங்கே தங்கள் உறவினர் தன்  பெற்றோரிடமே பணங்களைக் கொடுத்ததாகவும், கணவரின் உறவினர்கள் கணவரின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும்,  நண்பர்கள் கொடுத்த பரிசுகள் எல்லாம் தமக்குத் தரப்பட்டதாகவும் கூறினாள். 

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாணியிடம் கேட்டபோது அவளின் திருமணம் இலங்கையில் நடந்ததாகவும், அங்கே தங்கள் உறவினர் தன்  பெற்றோரிடமே பணங்களைக் கொடுத்ததாகவும், கணவரின் உறவினர்கள் கணவரின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும்,  நண்பர்கள் கொடுத்த பரிசுகள் எல்லாம் தமக்குத் தரப்பட்டதாகவும் கூறினாள். 

ஆ கடைசியாக உங்களுக்கு விளங்கி பதில் எழுதியதுக்கு  நன்றி 

ஆனாலும் நம்பும் படியாக இல்லை ... அல்லது நடைமுறைக்கு சாத்தியமில்லாதாக இருக்கிறது 
பொதுவாக மொய்யையும் அன்பளிப்புகளையும் மணமேடையில் மணமக்களிடம்தான் 
கொடுப்பார்கள் ....... பொதுவாகவே அது மாப்பிளையிடமும் அவர்கள் வீடாரிடமும் செல்வதுண்டு 
திருமணம் முடிந்த பின்பு பொதுவாகவே பெண் வீட்டார் அதில் தலையிடுவது குறைவு. 

பெண் வீட்டாருக்கு நஷ்ட்டமும் (சீதனம் காலியான செலவு உட்பட)
மாப்பிளை வீட்டாருக்கு லாபமும் என்ற சமநிலை அற்ற போக்கு பொதுவானது 
இது வாணிக்கு முதல் முறை நடந்தது போன்ற கதையை எந்த கோணத்தில் இருந்து எழுதினீர்கள் 
என்ற கேள்விதான் எனக்கு முதலில் வந்தது. அதனால்தான் அந்த கேள்வியை கேட்டேன் 

Share this post

Link to post
Share on other sites

மருதங்கேணி நான் இலங்கையில் திருமணம் செய்யவில்லை.  அதனால் எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. இலங்கையில் நடைபெறும் திருமணங்களை நாம் இதனுள் அடக்கிட முடியாது. இங்கு சிலர் தான் சீதனம் கொடுக்கின்றனர். பலர் விரும்பிச் செய்வதால் அல்லது பண பலம் இருப்பதால் செலவுகள் பற்றியோ அல்லது மாப்பிளை வீட்டார் எடுத்தாலும் அதுபற்றிக் கூறுவதில்லை அல்லது பெரிதாக எடுப்பதில்லை என எண்ணுகிறேன். இவர் எனக்குத்தெரிந்தவர். அவருக்கு நடந்ததை குறையாகக் கூறியதால் எழுதினேன். என்பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவில்லை ஆனதால் எனக்கும் அந்த அனுபவம் இல்லை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.