• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Paanch

உணவகத்தில் மயிர்க்கொட்டி, குளவிக்கூடு சிலந்தி வலை

Recommended Posts

இவற்றைத்தானே உட்கொள்கிறீர்கள்...? திடீர் பரிசோதனையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

  •  

  •  
 
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த றொட்டி வகைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் மயிர்க்கொட்டி, குளவிக்கூடு மற்றும் சிலந்தி வலை என்பன காணப்பட்டதுடன் சமைத்த, சமைக்காத உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சில உணவகங்களில் மூடியற்ற நிலையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததுடன் சமைத்த உணவுகள் மூடப்படாத நிலையிலும் வெளிச்சமற்று காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

வேறு சில உணவகங்களில் மிகவும் அழுகிய நிலையில் சமைக்க தயார்நிலையில் இருந்த மரக்கறி வகைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன. அத்துடன் பலகடைகளில் இலையான் பெருக்கம் அதிகளவில் இருந்தமை அவதானிக்கமுடிந்தது.

இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

இதேவேளை மருந்தகங்களுக்கான பரிசோதனையின்போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மருந்தாளர்கள் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Share this post

Link to post
Share on other sites

😄

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites

இது உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் நடைபெறுவது வழமையே.

Share this post

Link to post
Share on other sites

படங்களை பார்க்க, குமட்டிக் கொண்டு வருகின்றது.
உணவு விடயத்தில்....  சுகாதாரத்தை கடைப் பிடிக்காத, உணவகங்கள் மீது,
மிகவும் கடுமையான... நடவடிக்கை  எடுக்க,வேண்டும்.
ஒரு  மாதத்துக்கு, அவர்களின் வியாபார உரிமையை.... தடை  செய்தாலும் நல்லது.

Share this post

Link to post
Share on other sites
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் நடைபெறுவது வழமையே.

இருப்பினும் பல நாடுகளில் மிகவும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கின்றனர். அவ்வாறு தயாரிக்காத இடங்களில் இவ்வாறு பரிசோதனைகள் இடம்பெற்று எச்சரிக்கை புள்ளிகளும் சில வேளைகளில் தற்காலிக மூடலும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் முற்றாக தடைகளும் விதிக்கின்றனர். கனடாவில் அடிக்கடி தமிழ் /சீன/ இந்திய உணவு விடுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அவை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பரப்படுகின்றன.

மேலே உள்ள படங்களில் இருப்பவற்றை பார்க்கையில் மிக மோசமாக சுகாதார விடயங்களை பேணியுள்ளனர் என தெரிகின்றது. பசிக்கு உணவுக்காக வருகின்றவர்களை இவ்வாறு ஏமாற்றுவது பெருங் குற்றம் என்ற உணர்வு கூட இல்லாமல் இருந்திருக்கின்றனர்.

Share this post

Link to post
Share on other sites

வியாபாரம் என்றாலே 
லாபம்தான் முதலில் கண்ணை கட்டுவது.

நாம் மூளைசலவைக்கு உள்ளான மனிதர்கள் 
சீமானை ஏற்பதும் விடுவதும் வேறு 
அவர் சொல்லவருவது என்னவோ மனிதனால் நீண்ட காலத்துக்கு புறக்கனித்து 
வாழ முடியாது. 

Share this post

Link to post
Share on other sites

யாழில் பல உணவகங்களில் இதே நிலைதான். நிலங்களில் எல்லாம் உணவுகள் கொட்டுண்டு பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. அதன் உணவகங்களில் உண்ணவே இல்லை.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

இது உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் நடைபெறுவது வழமையே.

வழமை? அமெரிக்காவில் இப்படி இருக்கிற ஒரு உணவகத்தைக் காட்டுங்களேன் அண்ணை! மயிர்க்கொட்டி வறுவல் சாப்பிட ஆசையாய் இருக்கு!

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, Justin said:

வழமை? அமெரிக்காவில் இப்படி இருக்கிற ஒரு உணவகத்தைக் காட்டுங்களேன் அண்ணை! மயிர்க்கொட்டி வறுவல் சாப்பிட ஆசையாய் இருக்கு!

எனக்கு இரண்டு முறை மயிர் கண்டு திருப்பி கொடுத்திருக்கிறேன் 
ஒரு முறை நாங்கள் 6 பேர் சாப்பிட சென்று இருந்தோம்  எப்படியும் $150 பில் 
வந்திருக்கும் மேனேஜர் வந்து உங்களுக்கு பிரீயாக தருகிறோம் என்று  சொல்லி போனார்.
எனது உணவையும் திருப்பி செய்து தந்தார்கள் .... அதை சாப்பிடத்தான் பயமாக இருந்தது 
கோவத்தில் துப்பிப்போட்டு தந்தார்களோ தெரியவில்லை 

ஒருமுறை மக்டோனாசில்லேயே ஒரு அலுமினத் பேப்பர்  துண்டு இருந்து திருப்பி கொடுத்து இருக்கிறேன் 
எவ்வாறு வந்தது என்று புரியவில்லை .... நான் ஒரு வருடம் மேலாக மக்டோனாசில் வேலை செய்து இருக்கிறேன். 
அதுக்கு சாத்தியமே பெரிதாக இல்லை .. யாரோ வேண்டும் என்று வைத்திருக்கலாம் எனும் கோவத்தில்தான் திரும்பி சென்றேன். 

இங்கு மேலே இருப்பதுபோல குப்பை இல்லத்தை இருக்கலாம் 
உடலுக்கு தீங்கான இரசாயனம்  மற்றைய பல அதகாளவாக இருக்கிறது 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

எமது நாடுகளில் உணவகங்களில் மட்டுமல்ல பொதுவாகவே பொது இடங்களில் சுத்தத்தை சுகாதாரத்தை  கடைப்பிடிப்பது மிகவும் குறைவு.  சுத்த‍ப்படுத்துவது  பெரிய செலவான விடயமும் இல்லை. ஏனோ தெரியவில்லை அங்குள்ள மக்களுக்கு  அதில் ஈடுபாடு இல்லை. பொது இடங்கள் சுத்தமாக இருப்பதை அவர்கள் விரும்புவதிலேயோ எனக்கு தெரியாது.  யாழ் நகரில் மிக  புதிதாக  மிகஅழகாக  கட்டப்பட்டிருந்த கடை முதலாளி  தனது வாடிக்கையாளர் வரும் கடை வாசல் படியிலேயே தனது வெத்திலையை துப்புவதை நேரிலே கண்டேன்.  

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, Justin said:

வழமை? அமெரிக்காவில் இப்படி இருக்கிற ஒரு உணவகத்தைக் காட்டுங்களேன் அண்ணை! மயிர்க்கொட்டி வறுவல் சாப்பிட ஆசையாய் இருக்கு!

ஜஸ்ரின் மேலே உள்ள காணெளி சிறு உதாரணமே.
மருது சொன்னது போல எமக்கும் ஒருநாள் நடந்தது.அவர்கள் இலவசமாக பரிமாற முயன்றும் எமது வீட்டுப் பெண்கள் மறுத்துவிட்டனர்.

முன்னர் நிறைய தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமிருந்தது.
அந்தநேரம் 20/20 என்ற நிகழ்ச்சி என்று நினைக்கிறேன் உணவகங்களில் நடந்த அநிஞாயங்களை காட்டுவார்கள்.நல்லவேளை நீங்க பார்க்கவில்லை.

உணவகங்களுக்கு போனால் பின்பக்கம் போகவே கூடாது.
அதற்காக எல்லா உணவகங்களும் என்றல்ல.

இங்கே உணவகங்களில் வேலை செய்பவர்கள் ஏதாவது எழுதினால்த் தான் தெரியும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

எனக்கு இரண்டு முறை மயிர் கண்டு திருப்பி கொடுத்திருக்கிறேன் 
ஒரு முறை நாங்கள் 6 பேர் சாப்பிட சென்று இருந்தோம்  எப்படியும் $150 பில் 
வந்திருக்கும் மேனேஜர் வந்து உங்களுக்கு பிரீயாக தருகிறோம் என்று  சொல்லி போனார்.
எனது உணவையும் திருப்பி செய்து தந்தார்கள் .... அதை சாப்பிடத்தான் பயமாக இருந்தது 
கோவத்தில் துப்பிப்போட்டு தந்தார்களோ தெரியவில்லை 

ஒருமுறை மக்டோனாசில்லேயே ஒரு அலுமினத் பேப்பர்  துண்டு இருந்து திருப்பி கொடுத்து இருக்கிறேன் 
எவ்வாறு வந்தது என்று புரியவில்லை .... நான் ஒரு வருடம் மேலாக மக்டோனாசில் வேலை செய்து இருக்கிறேன். 
அதுக்கு சாத்தியமே பெரிதாக இல்லை .. யாரோ வேண்டும் என்று வைத்திருக்கலாம் எனும் கோவத்தில்தான் திரும்பி சென்றேன். 

இங்கு மேலே இருப்பதுபோல குப்பை இல்லத்தை இருக்கலாம் 
உடலுக்கு தீங்கான இரசாயனம்  மற்றைய பல அதகாளவாக இருக்கிறது 

மருதர், இதெல்லாம் வேண்டுமென்றே உணவு தயாரிக்கும் இடத்தைச் சுத்தமின்றி நடத்துவதால் வரும் பிரச்சினைகள் அல்ல! தலைமுடி, பிளாஸ்ரர், அலுமினியம் தற்செயலாக வருபவை, அங்கங்கே நடக்கும் தான்! ஆனால், தொடர்ந்து மேலே செய்தியில் இருப்பது போல தயாரிப்பிடத்தை வைத்துக் கொண்டு கடை திறந்து வைத்திருக்க இங்கே முடியாது என்பதே என் கருத்து! இலங்கையில் இது முடியும்.

இரசாயனங்கள் என்று பார்த்தாலும் ஆசிய நாடுகளை விட இங்கே அதிகம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது! இங்கே இன்ன இரசாயனம் இவ்வளவு தான் இருக்கிறது என்று அளவிட்டு அது நன்மையா தீமையா என்று குறித்து வைத்திருப்பர். இலங்கை இந்தியாவில் என்ன வகை இரசாயனம் இருக்கிறது என்று பரிசோதிப்பதே கிடையாது. பரிசோதனை செய்யாததை எப்படி இரசாயனங்கள் குறைவென்று சொல்ல முடியும்? 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

எமது நாட்டில் இந்த விடயத்தில்  மிக மிக மோசமாக இருக்க. எங்களை விட  ஒப்பீட்டளவில் பல மடங்கு சுத்தமாக  இருக்கும் இடங்களில் உள்ள சிறிய விடயங்களை நாம் தூக்கி பிடிப்பது சரியானதல்ல.

Share this post

Link to post
Share on other sites

துல்ப்பன் வெளிநாடுகளில் இலங்கையை விடச் சுத்தமாக இருந்தாலும் பல உணவகங்களில் எலிகள் நடமாட் டத்தைக் கட்டுப்படுத்தாது விட்டு அதனால் தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. அத்தோடு இங்கும் குளிர்பதனப் பெட்டியில் அசுததமாக் உணவுகளை மூடாமல் இருப்பதையும் பலதடவைகள் தொலைக்காட்சியில் கண்டுள்ளேன்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துல்ப்பன் வெளிநாடுகளில் இலங்கையை விடச் சுத்தமாக இருந்தாலும் பல உணவகங்களில் எலிகள் நடமாட் டத்தைக் கட்டுப்படுத்தாது விட்டு அதனால் தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. அத்தோடு இங்கும் குளிர்பதனப் பெட்டியில் அசுததமாக் உணவுகளை மூடாமல் இருப்பதையும் பலதடவைகள் தொலைக்காட்சியில் கண்டுள்ளேன்.

இருக்கலாம் ஆனால் பொது இடங்களை துப்பரவாக வைத்திருப்பதில் எமது மக்களுக்க்கு  காலம் காலாமாக  உள்ள அக்கறையீனத்தை மட்டும் தான் நான் இங்கு குறிப்பிட்டேன். 

Share this post

Link to post
Share on other sites

நான் என்ரை வாழ்கையிலைஅரைவாசி காலத்தை ஹொட்டல் ரெஸ்ரோறன்ஸ்  எண்டு காலத்தை கொண்டு போறவன். அதே போல என்ரை அஞ்சாறு கூட்டுவளும் அதே போல தான்.அதாலை கன கிச்சின் சூட்சுமங்கள் அறிய பெற்றவன். இஞ்சை வந்து பாத்தால் எல்லாம் தெரிஞ்ச ஒருத்தர்/இரண்டு பேர் இஞ்சையும் விறாண்டி விறாண்டி விளையாடுறதை  பாக்க கெக்கெக்கே பெக்கெக்கே எண்டு சிரிக்க வேண்டிக்கிடக்கு...... 😎
அவைக்கு எல்லாம் தெரியுமாம்.....அய்யோ.....அய்யோ🤣 🤣

Share this post

Link to post
Share on other sites

நாட்டில் சுகாதாரம் பேணும் பழக்கம் வெகு குறைவுதான்.ஆனால் அதை நாங்கள் இங்கிருந்து கொண்டு நகையாடி விமர்சிப்பதை விட அங்கு உள்ளவர்களுடன் இருக்கும் போது. அறிவுறுத்தலாமே.அதுக்கும் முதல் தீர்வு வர வேண்டும் என்டு அடம் பிடிக்காமல்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, சுவைப்பிரியன் said:

நாட்டில் சுகாதாரம் பேணும் பழக்கம் வெகு குறைவுதான்.ஆனால் அதை நாங்கள் இங்கிருந்து கொண்டு நகையாடி விமர்சிப்பதை விட அங்கு உள்ளவர்களுடன் இருக்கும் போது. அறிவுறுத்தலாமே.அதுக்கும் முதல் தீர்வு வர வேண்டும் என்டு அடம் பிடிக்காமல்.

சுவைப் பிரியன் தங்கள் கருத்துக்கு நன்றி. எம்மிடம் உள்ள தவறுகள் பலவீனங்களை போலக் கெளரவத்திற்காக மறைக்காமல்  பொது வெளியில் பேசுவதே வாத பிரதிவாதங்களுடன்  அவற்றை திருத்தி மற்றைய உலக மக்கள் முன் உண்மையான கௌரவத்துடன் எம்மை வாழ வழிவகுக்கும். இதில் தாயகத்தில் வாழ்பவர்கள், புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்  என்று பிரித்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அங்கு வாழும் தமிழர்களுக்கும் இங்கு வாழும் நாமும் வேறு வேறல்ல.  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.