Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

 • Replies 204
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

14/11/2019, 23:59   க்கு முதல் நான் களத்திலை இறங்குவன்.:cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் யார்யார் வேட்பாளர்கள் என்று தெரியவில்லை.எனவே பொறுத்திருக்க வேண்டியிருக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Men Dancing GIF

ஆஹா... நல்ல போட்டி. :grin:

இன்னும்.... ஆறு கிழமை இருக்கு. தேர்தல் பிரச்சார  வியூகங்களை  அவதானித்து, 
நானும் போட்டியில் இந்த இணைந்து கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போட்டியின் நாயகமே, முதல்ல யார் யார் எங்கெங்கு போட்டியிடுகின்றார்கள் என்று அறியத் தாருங்கள்.(அவர்களின் படங்கள் முக்கியம்).எமக்கு யாழைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது அதுதான்.......!  🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

14/11/2019, 23:59   க்கு முதல் நான் களத்திலை இறங்குவன்.:cool:

கட்டாயம் அண்ணை. விளையாட்டுல தேவைப்படுறது போல அரசியல்ல உங்களுக்கு நண்டு, சிண்டுகளின் உதவி தேவைப்படாது 😂. இறங்கி விளையாடுங்கோ.

8 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னமும் யார்யார் வேட்பாளர்கள் என்று தெரியவில்லை.எனவே பொறுத்திருக்க வேண்டியிருக்கு.

இப்போதைக்கு கோட்ட அபய ராஜபக்ச, அனுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில சுயேட்சைகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதும் தொழிலதிபர் தம்மிக பெரேரா போட்டியிடுவாரா என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாளின் பின், இங்கே இறுதி வேட்பாளர் பட்டியலை இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Men Dancing GIF

ஆஹா... நல்ல போட்டி. :grin:

இன்னும்.... ஆறு கிழமை இருக்கு. தேர்தல் பிரச்சார  வியூகங்களை  அவதானித்து, 
நானும் போட்டியில் இந்த இணைந்து கொள்கின்றேன். :)

நன்றி சிறி அண்ணா,

அரசியலில் 1 கிழமையே ஒரு நீண்ட காலம் என்பார்கள். 6 கிழமைக்குள் என்னவும் நடக்கலாம். எனவே அவர்களின் வியூகங்களை பார்த்து, சரியான தருணத்தில், சரியான வியூகத்தோடு களமிறங்குங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

போட்டியின் நாயகமே, முதல்ல யார் யார் எங்கெங்கு போட்டியிடுகின்றார்கள் என்று அறியத் தாருங்கள்.(அவர்களின் படங்கள் முக்கியம்).எமக்கு யாழைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது அதுதான்.......!  🤔

நிச்சயம் அண்ணா.

படங்கள் மட்டுமல்லாது, அவர்களின் சுய விபரக் குறிப்புகளையும் இணைப்பதாக உத்தேசம். 

ஜனாதிபதி தேர்தல் முறை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் கூட சில தகவல்களை பகிர இருக்கிறேன்.

ஜனாதிபதிக்கான தேர்தலில் நாடு முழுவது ஒரே தேர்தல் அலகாக கருதப்படும். தொகுதி அடிப்படையிலோ, மாவட்ட அடிப்படையிலோ அல்லாமல், ஒட்டு மொத்த வாக்குகளில் யார் அதிகம் பெறுகிறார்கள் என்பதின் அடிப்படையிலேயே இங்கே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

ஆனால் குறித்த மாவட்ங்களில் யார் அதிகம் வாக்குகளை பெற்றார்கள் என்பதை வைத்து, இனக்குழுக்கள் யாரை ஆதரித்தார்கள் என்ற முடிவுக்கு வரலாம். குறிப்பாக யாழ், வன்னி, மட்டகளப்பு மாவடங்கள் எல்லாம் ஒருவரை ஆதரித்தால்- அந்த வேட்பாளரை தமிழ் வாக்காளர் மற்றயவரை விட விரும்பியதாக ஒரு எடுகோளை எடுக்கலாம்.

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், நுணா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ.....!   💪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

எல்லாம் சரி   உதாரப்பா ஐநா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் வாறன்  ராசா

ஆனால்  எனது  விருப்பங்கள்  தான்  முன்னிற்குமே தவிர  நிஐம்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ.....!   💪

அண்ணா,

நீங்கள் முன்பே கருத்து, எழுதி கலந்து கொள்வதாக கூறியதால் உங்களை சேர்கவில்லை. 

29 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் சரி   உதாரப்பா ஐநா?

😂 அது நம்ம நைனா, நுணா. ஓட்டோகரெக்ட், ஐநா ஆக்கிவிட்டது.

15 minutes ago, விசுகு said:

நானும் வாறன்  ராசா

ஆனால்  எனது  விருப்பங்கள்  தான்  முன்னிற்குமே தவிர  நிஐம்??

நீங்கள் இல்லாமலா.

இப்படியான போட்டிகளில் இதற்கு ஒரு உத்தியை கடைப்பிடிபேன். 

நிஜத்தின் அடிப்படையில் தெரிவுகளை இடுவேன்.

என் தெரிவுப் படிநடந்தால் - என் கணிப்பு வென்றது எனும் சந்தோசம்.

என் விருப்பபடி நடந்தால் - நான் விரும்பியது நடந்தது என்ற சந்தோசம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நீங்கள் இல்லாமலா.

இப்படியான போட்டிகளில் இதற்கு ஒரு உத்தியை கடைப்பிடிபேன். 

நிஜத்தின் அடிப்படையில் தெரிவுகளை இடுவேன்.

என் தெரிவுப் படிநடந்தால் - என் கணிப்பு வென்றது எனும் சந்தோசம்.

என் விருப்பபடி நடந்தால் - நான் விரும்பியது நடந்தது என்ற சந்தோசம்.

இலங்கையில்

தமிழரின்  விருப்பங்கள்  நிறைவேற   வாய்ப்பே  இல்லை  ராசா

பௌத்த  விகாரைகளை யார்  அதிகம்   அமைப்பார்கள்  என்ற  போட்டி  தொடங்கியுள்ளநிலையில்

அதற்கான  வாக்குறுதிகள்  வெளிவரத்தொடங்கியுள்ளநிலையில்

சிங்கள   பௌத்தர்களின் விருப்பங்கள்  மட்டுமே நிஐமாகும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

இலங்கையில்

தமிழரின்  விருப்பங்கள்  நிறைவேற   வாய்ப்பே  இல்லை  ராசா

பௌத்த  விகாரைகளை யார்  அதிகம்   அமைப்பார்கள்  என்ற  போட்டி  தொடங்கியுள்ளநிலையில்

அதற்கான  வாக்குறுதிகள்  வெளிவரத்தொடங்கியுள்ளநிலையில்

சிங்கள   பௌத்தர்களின் விருப்பங்கள்  மட்டுமே நிஐமாகும்

அதுதான் 48 இல் இருந்து நடக்குதே அண்ணை. எந்த தேர்தலிலும் இதற்கு முடிவுவராது 😳

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாளின் பின், இங்கே இறுதி வேட்பாளர் பட்டியலை இணைக்கிறேன்.

அது மட்டும் முக்கியமல்ல.யார் யாரோடு கூட்டணி வைக்குது என்பதும் முக்கியம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

அது மட்டும் முக்கியமல்ல.யார் யாரோடு கூட்டணி வைக்குது என்பதும் முக்கியம்.

உண்மைதான். கள நிலவரங்கள் பற்றி டெய்லி அப்டேட் ஒன்று போடுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா?  இல்லை😀

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?  இல்லை😀

----------------------------------------------------------------------------------------------------------------------------------
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).   ஆம்.

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்). சஜீத் பிரேமதாச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).

இல்லை  

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

முதல் ஆளாக களத்தில் கெத்தாக குதித்துள்ள துல்பெனுக்கு நன்றியும் வாழ்துக்களும்.

உங்களை போலவே நானும் பிரெக்சிட், டிரம்ப் இரெண்டிலும் தோற்கும் குதிரையை தெரிவு செய்தேன் 😂.

இந்த முறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இம்முறை முன்முனைப் போட்டி அல்லது நால்முனைப் போட்டி (சுதந்திரக் கட்சியும் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தினால் ) என்பதால் எவரும் 50 வீதத்தினை பெற முடியாது. ஜேவிபிக்கு கிடைக்கும் வாக்குகள் எல்லாவற்றையும் குழப்பிவிடும்

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கண்டிப்பாக கோத்தா (அதென்ன முதலாம் சுற்று எனும் கேள்வி? 50 வீதம் கிடைக்காமையால் இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு என்பதை கருத்தில் கொண்டா கேட்கின்றீர்கள்?)

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

50 வீதம் கிடைக்கமையல் உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்களா எனத் தெரியாது. ஆனால் இரண்டாம் விருப்பு பெற்றவர் என்பதை தேர்தல் ஆணையம் / தேர்தல் கமிஷன் தீர்மானிக்கலாம்

கேள்விக்கு பதில்: வாய்ப்புகள் இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

இன்றிருக்கும் நிலையில் கோத்தா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோத்தா இறங்குவாரா இல்லையா என்பதே உறுதியாகத் தெரியவில்லை..அதற்குள் கோத்தாவை கோர்த்து விட்டால் கோவிந்தாதான்.....!   🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:
6 hours ago, goshan_che said:

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ...

நானும் தான் குத்தியிருந்தேன்.

16 minutes ago, நிழலி said:

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

Link to comment
Share on other sites

9 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

எடிட் செய்வன் என்று கூறவில்லை. இன்னொரு பதிலை தரமுடியுமா என்று குறிப்பிட்டு கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இம்முறை முன்முனைப் போட்டி அல்லது நால்முனைப் போட்டி (சுதந்திரக் கட்சியும் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தினால் ) என்பதால் எவரும் 50 வீதத்தினை பெற முடியாது. ஜேவிபிக்கு கிடைக்கும் வாக்குகள் எல்லாவற்றையும் குழப்பிவிடும்

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கண்டிப்பாக கோத்தா (அதென்ன முதலாம் சுற்று எனும் கேள்வி? 50 வீதம் கிடைக்காமையால் இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு என்பதை கருத்தில் கொண்டா கேட்கின்றீர்கள்?)

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

50 வீதம் கிடைக்கமையல் உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்களா எனத் தெரியாது. ஆனால் இரண்டாம் விருப்பு பெற்றவர் என்பதை தேர்தல் ஆணையம் / தேர்தல் கமிஷன் தீர்மானிக்கலாம்

கேள்விக்கு பதில்: வாய்ப்புகள் இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

இன்றிருக்கும் நிலையில் கோத்தா

பங்கெடுத்தமைக்கு நன்றி நிழலி,

1. இதுவரை இதை பற்றி நான் சிந்திக்கவில்லை. ஆனால் போட்டியின் சுவாரசியம் கருதி, பின்வரும் விதியை அமைக்கிறேன். ஒரு தடவை பதில் அளித்த போட்டியாளர்,  கட் அவுட் நேரத்துக்கு முன்னதாக, மேலும் ஒரு பதிவின் மூலம் விடைகளை திருத்தி சமர்பிக்கலாம். கட் அவுட் நேரம் கடைசியாக  பதிந்த பதிவில் உள்ள பதில்களே கணக்கில் எடுக்கப்படும். ஒரு போட்டியாளர் இரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாது.

2. ஆம், அம்பாந்தோட்டை ராஜபக்சக்களின் கோட்டை, ஆனால் சஜித் 90 களில் இருந்தே அங்கு அரசியல் செய்கிறார். எனவே, மற்றைய இடங்களை விட, இங்கே சஜித்துக்கு 1ம் வாக்கு போடுபவர்கள், கோட்ட வுக்கு 2ம் வாக்கையும், கோட்டாவுக்கு 1ம் வாக்கை போட்டு, சஜித்துக்கு 2ம் வாக்கை போட வாய்ப்புகள் கூட. எனவே அம்பாந்தோட்டை மக்களின் 1ம் தெரிவு யார் என்பதை அறியவே கேள்வி அப்படி அமைக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் கோட்ட தான் என அடித்து சொல்லும் அளவுக்கு இருக்குமா? தெரியவில்லை.

27 minutes ago, suvy said:

கோத்தா இறங்குவாரா இல்லையா என்பதே உறுதியாகத் தெரியவில்லை..அதற்குள் கோத்தாவை கோர்த்து விட்டால் கோவிந்தாதான்.....!   🤔

கோட்ட தான் தாமரையின் வேட்பாளர் என மகிந்த அறிவித்துவிட்டார். ஆனால் இரட்டை குடியுரிமையுடன் இருந்து முன்னைய தேர்தல்களில் வாக்களித்தார் என்ற வழக்கில் கோத்தா சிக்கினால் - மாற்று வேட்பாளரை தேர்தலுக்கு முன் மகிந்த போடும் படியோ, அல்லது தேர்தலின் பின், கோட்ட வென்றால், கோட்டாவின் அபேட்சகம் செல்லாது என்று உச்ச நீதி மன்றை நாடும் நிலையோ ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தான் குத்தியிருந்தேன்.

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

மன்னிக்க வேண்டும் ஈழப்பிரியன் அண்ணா,

விருப்ப குறியிட்டு விட்டு, போட்டியில் பங்களிக்கிறேன் என சொல்லாதவர்களைத்தான் அந்த பதிவில் குறிப்பிட்டேன். நீங்களும் சுவி அண்ணாவும் பதில் எழுதியதால்- போட்டியில் கலந்து கொள்வீர்கள் என assume பண்ணிவிட்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நன்றி சிறி அண்ணா,

அரசியலில் 1 கிழமையே ஒரு நீண்ட காலம் என்பார்கள். 6 கிழமைக்குள் என்னவும் நடக்கலாம். எனவே அவர்களின் வியூகங்களை பார்த்து, சரியான தருணத்தில், சரியான வியூகத்தோடு களமிறங்குங்கள்.

Ähnliches Foto

உண்மைதான்... கோசான்,
மகிந்த... ஜனாதிபதியாக  இருந்த போது,   அவருக்கு ஆதரவாக நடித்த  மைத்திரி... 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.. அழைப்பின் பேரில்,  
அவர்  வீட்டிற்கு, தோசை சாப்பிடப் போய்...
மைத்திரி.... ஜனாதிபதியாக வந்த, விடயங்களையும்....  நாம், மறக்கவில்லை.

(அப்போ...தாயார்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சகோதரர் அனுரா ஆகியோர்...  
உயிருடன் இருந்திருக்கிறார்கள் என நினைக்கின்றேன்.  உறுதியாக தெரியவில்லை)

அந்த நேரம்... மகிந்தவுக்கு, மைத்திரி... கொடுத்த அதிர்ச்சியை போல்...
இன்னும்... நடக்க சந்தர்ப்பம் இருக்கு. 

தமிழன்... கண்டு பிடித்த தோசையில், எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.