Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

முட்டையில் உள்ள கொழுப்பு ஆபத்தானதா - ஆய்வுகள் கூறுவதென்ன?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
ஜெசிகா பிரவுண் பிபிசி
 
ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது.

``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,'' என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ.

மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல் கிரகித்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. உதாரணமாக, சாலட் உடன் ஒரு முட்டையை சேர்த்துக் கொண்டால், அந்த சாலட் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் விட்டமின்-ஈ அளவு அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதிக கொழுப்புச் சத்து கொண்டது என்பதால் பல பத்தாண்டுகளாக முட்டை சாப்பிடுவது சர்ச்சைக்கு உரியதாக இருந்து வருகிறது.

முட்டை சாப்பிட்டால் இருதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வுகள் தொடர்பு படுத்தியுள்ளன. ஒரு நாளுக்கு மனிதனுக்கு 300 கிராம் கொழுப்புச் சத்து தேவை என்று அமெரிக்க உணவு முறை வழிகாட்டுதல்கள் சமீப காலம் வரை பரிந்துரைத்தன. ஒரு முட்டையின் கருவில் 185 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, அதாவது தினசரி தேவையில் பாதிக்கும் மேல் இதில் உள்ளது.

பொரித்த முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

முட்டை நமக்கு ஊறு விளைவிக்கும் என்பது சரியா?

கல்லீரல் மற்றும் குடல்களில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் எனும் மஞ்சள் நிறத்திலான கொழுப்பைக் கொண்ட கொழுப்பு, நமது உடலின் செல்கள் அனைத்திலும் உள்ளது. அது கெடுதலானது என்று சாதாரணமாக நாம் நினைக்கிறோம். ஆனால் நமது செல் சவ்வுகளில் முக்கியமானதாக உள்ள இணைப்பு படலத்தை அளிக்கிறது. விட்டமின் டி உருவாக்கவும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கவும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கவும் அது தேவைப்படுகிறது.

நமக்குத் தேவையான அனைத்து கொழுப்புச் சத்துகளையும் நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் மாட்டிறைச்சி, இறால் மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிப் பொருட்களிலும் அது கிடைக்கிறது. பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணெயிலும் கிடைக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புப் புரத மூலக்கூறுகள் மூலமாக உடல் முழுக்க கொழுப்புச் சத்து கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு மாதிரியான கொழுப்புப் புரதங்கள் உள்ளன. தனிப்பட்ட உடலமைப்பைப் பொருத்து, இருதய நோய் வருவதற்கான ஆபத்து அளவு நிர்ணயிக்கப் படுகிறது.

குறைந்த அடர்வு கொண்ட கொழுப்புப் புரதம் கெடுதலான கொழுப்பு என கருதப்படுகிறது. கல்லீரலில் இருந்து ரத்த நாளங்கள் மற்றும் உடலின் திசுக்களுக்கு கொழுப்பு எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்கு இது காரணமாகி, இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சி மற்றும் முட்டைகள் போன்ற விலங்கின பொருட்களின் மூலமும் கொழுப்புச் சத்து கிடைக்கிறது.படத்தின் காப்புரிமை Getty Images Image caption இறைச்சி மற்றும் முட்டைகள் போன்ற உணவுப் பொருட்களின் மூலமும் கொழுப்புச் சத்து அதிகம் கிடைக்கிறது.

ஆனால் கொழுப்புச் சத்து மிகுந்த உணவை சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்பதற்கான தொடர்பை ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையில், இறால்களுடன் சேர்த்து முட்டையும் குறைந்த செறிவுள்ள கொழுப்பு அதிகம் உள்ள ஒரே உணவாக இருக்கிறது.

``இறைச்சி மற்றும் இதர இறைச்சி பொருட்களைவிட முட்டையில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது என்றாலும், செறிவுள்ள கொழுப்பு ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும். பல ஆண்டுகளாக பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப் பட்டுள்ளது,'' என்று அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள மரியா லஸ் பெர்னான்டஸ் கூறுகிறார்.

கொழுப்புச் சத்து பொருட்களைக் கொண்டு தயாரித்த, நன்கு வறுக்கப்பட்ட சில உணவுகளால் நமது எல்.டி.எல். (அல்லது ``கெட்ட'' கொழுப்பு) அளவு அதிகரிக்கும்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption கொழுப்புச் சத்து பொருட்களைக் கொண்டு தயாரித்த, நன்கு வறுக்கப்பட்ட சில உணவுகளால் உடலில் ''கெட்ட'' கொழுப்பு அளவு அதிகரிக்கும்.

முட்டை சாப்பிடுவதற்கும், இதயக் கோளாறுகளுக்கான ஆபத்து அதிகரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவருடைய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், நீண்ட காலம் தொடர்ந்து முட்டை உட்கொள்வது பற்றிய சில ஆய்வுகள் வேறு மாதிரியான முடிவுகளைத் தருகின்றன.

நாம் சாப்பிடும் கொழுப்புச் சத்துகளை நமது உடல் தா

னே சமன் செய்து கொள்ளும் என்பதால், முட்டை உடல் நலத்தின் மீது செலுத்தும் தாக்கம் பற்றிய விவாதம் இப்போது ஓரளவுக்கு மாறியுள்ளது.

2015 ஆம் ஆண்டில், 40 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற ஆய்வில் உணவு மூலம் கிடைக்கும் கொழுப்பு சத்துக்கும் இருதய நோய்களுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

``உணவு முறையில் கொழுப்புச் சத்து எடுத்துக் கொண்டால் அதை நல்ல முறையில் கட்டுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு மனிதர்களுக்கு உள்ளது. அதை குறைந்த கொழுப்பாக தானாகவே மாற்றிக் கொள்ளும்'' என்கிறார் மரியா.

முட்டையில் உள்ள கொழுப்பைப் பொறுத்தவை உடல்நலக் கேடுக்கான ஆபத்து குறைவானதாக உள்ளது.

நமது ரத்த நாளங்களில் ஆக்சிஜனுடன் சேரும்போது கொழுப்பு அதிக கெடுதல்களை ஏற்படுத்தும். ஆனால், முட்டையில் உள்ள கொழுப்பில் ஆக்சிஜன் சேர்வது கிடையாது என்கிறார் பிளெஸ்ஸோ.

ஆக்சிஜன் சேரும் போது கொழுப்புச் சத்து கேடு விளைவிக்கும் - ஆனால் முட்டையில் உள்ள ஆக்சிஜனாக்குதலுக்கு எதிரான சத்துப் பொருட்கள் அப்படி நடக்காதவாறு தடுக்கின்றன.படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், சில கொழுப்புகள் உண்மையில் நமக்கு நல்லவை. அதிக அடர்வு கொண்ட கொழுப்புப் புரதம் (எச்.டி.எல்.) கொழுப்பு கல்லீரலுக்குச் செல்கிறது. அங்கே அது சிதைக்கப்பட்டு உடலில் இருந்து அகற்றப்படுகிறது. ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுத்து, இருதய நோய்கள் வராமல் எச்.டி.எல். கொழுப்பு தடுக்கிறது என்று கருதப்படுகிறது.

``ரத்தத்தில் சேரும் கொழுப்பு பற்றியே மக்கள் கவலைப்பட வேண்டும். அதுதான் இருதய நோய்களை ஏற்படுத்துகிறது,'' என்று பெர்னான்டஸ் குறிப்பிடுகிறார்.

நம்மில் பெரும்பாலானோர், கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்புடன், நாம் சாப்பிடும் கொழுப்பையும் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. கொழுப்புப் பொருட்களை சாப்பிடும் போது நம்மில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு கொழுப்பு அளவு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று பிளெஸ்ஸோ கூறுகிறார்.

மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், முட்டைகள் சாப்பிட்ட பிறகு எல்.டி.எல். அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

அதிக எடை கொண்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு எல்.டி.எல். அதிகரிப்பு குறைவாகவும், எச்.டி.எல். மூலக்கூறுகள் அதிகமாகவும் இருக்கும் என்கிறார் பிளெஸ்ஸோ. எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அதிக எடையாக இருப்பவர்களைவிட முட்டை உங்களுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் ஏற்படும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.படத்தின் காப்புரிமை Getty Images Image caption தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் ஏற்படும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முட்டைகள் நமது உடல்நலத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்ற சமீபத்திய ஒருமித்த கருத்துக்கு எதிராக, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு உள்ளது.

30,000 பெரியவர்களை சராசரியாக 17 ஆண்டுகள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது, மரணத்துக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

முட்டைகளின் தாக்கத்தைத் தனியாகக் கண்டறிவதற்காக, ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கங்களையும், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகளையும் அவர்கள் கண்காணித்தனர்.

''ஒருவர் தினமும் கூடுதலாக 300 மி.கி. கொழுப்பு சாப்பிட்டால், அது எந்த வகையில் வந்ததாக இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 17 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும், மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்து 18 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் நாங்கள் கண்டறிந்தோம்,'' என்று இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவரும் அமெரிக்காவில் இல்லினோய் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நோய்த் தடுப்பு மருந்து துறை இணைப் பேராசிரியருமான நோர்ரினா ஆலன் கூறியுள்ளார்.

''தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான ஆபத்து 6 சதவீதம் அதிகரிக்கிறது, மரணத்துக்கான ஆபத்து 8 சதவீதம் அதிகரிக்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்,'' என்கிறார் அவர்.

இதய நோய்களுக்கும் முட்டைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நடந்த மிகப் பெரிய அளவிலான ஆய்வாக அது இருந்தாலும், அதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பது கவனிக்கப்பட்டது.

....... ஆனால் இருதய நோய்களுக்கான ஆபத்து குறைவாக உள்ள உணவாக முட்டைகள் உள்ளன என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.படத்தின் காப்புரிமை Portland Press Herald/Getty Images Image caption இருதய நோய்களுக்கான ஆபத்து குறைவாக உள்ள உணவாக முட்டைகள் உள்ளன என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பங்கேற்றவர்கள் எப்போது முட்டை உட்கொண்டோம் என்று தாங்களாக அளிக்கும் தகவல்களை மட்டுமே சார்ந்ததாக இருந்தது. 31 ஆண்டுகள் வரை அவர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது. காலப்போக்கில் நமது உணவுப் பழக்கம் மாறுபடும் என்றாலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உட்கொண்ட உணவுகள் பற்றிய தகவல்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருப்பது தெரிகிறது.

மேலும் முன்பு கண்டறியப்பட்ட விஷயங்களுக்கு முரணாக இந்த ஆய்வு உள்ளது. இதய ஆரோக்கியத்துக்கு முட்டைகள் நல்லது என்று நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 5 லட்சம் பெரியவர்களிடம் நடத்திய முந்தைய ஆய்வின் முடிவுகள் 2018ல் வெளியிடப்பட்டன. முட்டைகள் சாப்பிடுவது இதய நோய்க்கான ஆபத்துகளைக் குறைக்கிறது என்று நேர் எதிரான முடிவு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமும் முட்டை சாப்பிடுபவர்கள் இதய நோயால் மரணம் அடைவதற்கான ஆபத்து, முட்டை சாப்பிடாதவர்களைவிட 18 சதவீதம் குறைகிறது, அதேபோல பக்கவாத பாதிப்பில் ஏற்படும் உயிரிழப்பு முட்டை சாப்பிடாதவர்களைவிட, முட்டை சாப்பிடுபவர்களுக்கு 28 சதவீதம் குறைகிறது என்றும் அதில் தெரிய வந்துள்ளது.

முந்தைய ஆய்வைப் போல, இதுவும் கண்காணிப்பு வகையில் நடந்த ஆய்வுதான். அதாவது காரணம் மற்றும் தாக்கத்தை குறை கூறுவது சாத்தியமற்றது. னாவில் ஆரோக்கியமான பெரியவர்கள் அதிக முட்டைகள் சாப்பிடுகிறார்களா, அல்லது முட்டை சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? அது பெரிய குழப்பம் தான்.

நல்ல முட்டை

நமது ஆரோக்கியத்தில் முட்டையில் உள்ள கொழுப்புச் சத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய விவாதத்தை இந்த ஆய்வுகள் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், நோயின் ஆபத்தை முட்டைகள் எப்படி பாதிக்கும் என்பதை அறிய நாம் சில வழிகளை அறிந்திருக்கிறோம்.

முட்டையில் உள்ள கோலின் என்ற சேர்மம் அல்சைமர் என்ற முளை செல்களின் இறப்பு நோயில் இருந்து நம்மைக் காப்பாறற உதவும். அது கல்லீரலையும் பாதுகாக்கிறது.

முட்டைகளில் காணப்படும் கோலின், அல்சைமர் நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றும் .படத்தின் காப்புரிமை Getty Images Image caption முட்டைகளில் காணப்படும் கோலின், அல்சைமர் நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றும் .

ஆனால் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். கோலின் சேர்மம் குடலில் நுண்ணுயிர் தொகுப்புகளில் டி.எம்.ஓ. என்ற மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு, பிறகு கல்லீரலில் கிரகிக்கப்படுகிறது. பிறகு இருதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்வதில் தொடர்புடைய டி.எம்.ஏ.ஓ. மூலக்கூறுகளாக மாற்றப்படுகிறது.

முட்டைகள் மூலம் நிறைய கோலின் சாப்பிடுவது டி.எம்.ஏ.ஓ. அளவை அதிகரிக்கச் செய்யும் என்று பிளெஸ்ஸோ அஞ்சுகிறார். கண்காணிப்பில் இருந்தவர்களில் முட்டைகள் சாப்பிட்டு 12 மணி நேரம் வரை டி.எம்.ஏ.ஓ. அதிகமாக இருந்தது என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

முட்டை சாப்பிடுதல் மற்றும் டி.எம்.ஏ.ஓ. தொடர்பை மதிப்பிடுதலுக்கான ஆராய்ச்சி, இதுவரை டி.எம்.ஏ.ஓ. நிலையில்லாமல் அதிகரித்திருப்பதை மட்டுமே கண்டறிந்துள்ளது. அடிப்படை அளவில் இருதய நோய்களைக் கண்டறிவதற்கான அடையாளமாக மட்டுமே டி.எம்.ஏ.ஓ. மதிப்பீடு செய்யப்படுகிறது.

நாம் முட்டைகள் சாப்பிடும் போது, கோலினின் பயன்தரும் தாக்கங்கள் நமக்கு கிடைப்பதால் இது நிகழக்கூடும் என்கிறார் அவர்.

முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. நல்ல பார்வைத் திறன் அளிப்பதில் இதற்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் காப்புரிமை Getty Images Image caption முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. நல்ல பார்வைத் திறன் அளிப்பதில் இதற்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

''ரத்தத்தில் கோலின் கிரகிக்கப்படாமல், பெருங்குடலுக்கு செல்வதுதான் பிரச்சனைக்குரியது. அங்கு அது டி.எம்.ஏ.வாகவும், பிறகு டி.எம்.ஏ.ஓ.வாகவும் மாறுகிறது,'' என்கிறார் பெர்னான்டஸ்.

''ஆனால் முட்டைகளில் கோலின் கிரகிக்கப்பட்டு, பெருங்குடலுக்குச் செல்வதில்லை. எனவே அது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதில்லை,'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கிடையில், முட்டைகளின் ஆரோக்கிய பயன்களைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. இது நல்ல பார்வைத் திறன் அளிக்கவும், கண் நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும் நிறமியாகும்.

முட்டைகள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்று புரிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் இன்னும் நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும். அவை உடல்நலத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் நமக்கு பயன்களைத்தான் தருகிறது என்றும் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

அப்போதும் கூட, தினமும் காலை உணவாக முட்டைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது. முட்டைகளை மட்டுமே தனியாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக, கலவையான உணவுப் பட்டியலை நாம் கொண்டிருக்க வேண்டும்..

https://www.bbc.com/tamil/science-49768737

Link to comment
Share on other sites

8 minutes ago, பிழம்பு said:
ஒரு நாளுக்கு மனிதனுக்கு 300 கிராம் கொழுப்புச் சத்து தேவை என்று அமெரிக்க உணவு முறை வழிகாட்டுதல்கள் சமீப காலம் வரை பரிந்துரைத்தன. ஒரு முட்டையின் கருவில் 185 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, அதாவது தினசரி தேவையில் பாதிக்கும் மேல் இதில் உள்ளது.
 
என்ன அநியாயம் இது, 300 கிராம் கொழுப்பில் சுமார் 2700 கி.கலோரிகள் உள்ளன. 6 மாதத்துக்குள் மாரடைப்பு வருவது உறுதி.  😯 
ஒரு முட்டையின் மொத்த நிறையே 60-70 கிராம்தானே ? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, இணையவன் said:

என்ன அநியாயம் இது, 300 கிராம் கொழுப்பில் சுமார் 2700 கி.கலோரிகள் உள்ளன. 6 மாதத்துக்குள் மாரடைப்பு வருவது உறுதி.  😯 
ஒரு முட்டையின் மொத்த நிறையே 60-70 கிராம்தானே ? 

இப்படியே மாறி  மாறிக்குளப்பி

முட்டைசாப்பிடுவதையே  நிறுத்தி  வருசங்கள் பல ஆச்சு

இனி  தம்பி  நிழலியில் கதையைக்கேட்டு திருப்பித்தொடங்கத்தான்   இருக்கு

ஆனால் முட்டை  சாப்பிட்டால்  இதய  வருத்தம்  வருமென்றால்

அமெரிக்காவிலும்  கனடாவிலும் இப்ப ஆட்களே  இருக்கமுடியாது

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 year later...

நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். ... நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டுவதல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்து கொள்ளமுடியும். அதைபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நாட்டு கோழி (nattu koli) முட்டை சாப்பிடுவதால் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். மலட்டு தன்மை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பெற உதவும்.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 01:07, Crest said:

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் பாரிய ஆரோக்கிய விளைவுகள் ஏற்படாது! முட்டை எழுபது கிராம், அதில் கொழுப்பு ஒரு 5 கிராம் தான்! 

ஐயா க்றெஸ்ற், ஆரோக்கியப் பகுதியில் இப்படி ஆதாரங்களில்லாத நாட்டு வைத்திய நம்பிக்கைகளைப் பதிந்து வாசிப்போரை முட்டாளாக்காதீர்கள்! நரம்பிற்கும் மலட்டுத் தன்மைக்கும் என்ன தொடர்பு? ஆண் மலட்டுத் தன்மை விந்து குறைவதால், உயிர்ப்பை இழப்பதால் வருவது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அங்கை மேலே தமிழ் பிபிசி காரன் மண்டையை கலங்க வைக்கிறான் முட்டை நல்லதோ அல்லது குஞ்சு பொரிக்க  வைத்து கோழியாய்  வளர்த்து சாப்பிட்டால் கொழுப்பு குறையுமோ ? அவ்வளவுக்கு குழப்பம் .

அவ்வளவு கலகத்திலை  புதிசா  வந்தவரை வெருட்டிக்கொண்டு நிக்கிறார் வந்ததுகளும் தெறிச்சு ஓடப்போகுதுகள் .

😀

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப நான் முட்டை சாப்பிடலாமா இல்லையா..? கெதியா ஒரு முடிவுக்கு வாங்கோ...

(கொறோனா ஆடின ஆட்டத்தில இப்ப ஒரு மாசமா நான் நாளாந்தம் 2 முட்டை சாப்பிடுகிறேன். இந்த முட்டைதான் என்னை எழும்பி நடக்க வைத்தது 😀)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நரம்பிற்கும் மலட்டுத் தன்மைக்கும் என்ன தொடர்பு? ஆண் மலட்டுத் தன்மை விந்து குறைவதால், உயிர்ப்பை இழப்பதால் வருவது

ஜஸ்ரின் அண்ணா, யாழ்களத்தில் நான் பார்த்திருக்கிறேன் ஒரு உணவு பொருளை நல்லது என்று சொல்வதானால் அது ஆண்மை தரும் மலட்டு தன்மை நீங்கும் என்று தான் பெரும்பாலும் சொல்லபடுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2019 at 18:03, விசுகு said:

இப்படியே மாறி  மாறிக்குளப்பி

முட்டைசாப்பிடுவதையே  நிறுத்தி  வருசங்கள் பல ஆச்சு

இனி  தம்பி  நிழலியில் கதையைக்கேட்டு திருப்பித்தொடங்கத்தான்   இருக்கு

ஆனால் முட்டை  சாப்பிட்டால்  இதய  வருத்தம்  வருமென்றால்

அமெரிக்காவிலும்  கனடாவிலும் இப்ப ஆட்களே  இருக்கமுடியாது

அதே மாதிரித்தான் தேங்காயும். தேங்காய் உடம்புக்கு கூடாது எண்டால் ஆசியாவிலையும் தென் அமெரிக்காவிலையும் சனமே இருந்திருக்காது. 😁

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2019 at 17:05, பிழம்பு said:

முட்டை நமக்கு ஊறு விளைவிக்கும் என்பது சரியா?

அங்கை ஊர்களிலை எல்லாம் கலியாணம் கட்டின புது மாப்பிளை எண்டால் காலமை முட்டைக்கோப்பி அடிச்சு குடுப்பினம்.
தண்ணியடிக்கிற மாப்பிளையெண்டால் பின்னேரம் அரை அவியல் முட்டை.
அதோடை இளந்தாரியள் எண்டால் பச்சை முட்டை.
ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே சாகும் வரைக்கும் வாழ்ந்ததுகள்.

இப்ப என்னடாவெண்டால் கனக்க படிச்சிட்டு கனக்க ஆராய்ச்சி செய்துட்டு கனக்க கதைக்கினம். முதல்லை மனிசன்ரை சாப்பாட்டிலை கெமிக்கல் கலக்கிறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ படிச்ச மாணவர்களே.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

அங்கை ஊர்களிலை எல்லாம் கலியாணம் கட்டின புது மாப்பிளை எண்டால் காலமை முட்டைக்கோப்பி அடிச்சு குடுப்பினம்.
தண்ணியடிக்கிற மாப்பிளையெண்டால் பின்னேரம் அரை அவியல் முட்டை.
அதோடை இளந்தாரியள் எண்டால் பச்சை முட்டை.
 
அண்ணை, கேக்கிறன் எண்டு கோவிக்க கூடாது, இப்ப என்னமதிரியான முட்டை உங்களுக்கு தாறினம்?🙂

கூள்முட்டையாக இல்லாதவரை சந்தோசம்தான்.😄

32 minutes ago, குமாரசாமி said:

ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே சாகும் வரைக்கும் வாழ்ந்ததுகள்.

அதெப்பிடியண்ணை உங்களுக்கு தெரியும்? சிலரின்ர கருமவினை, இந்த புது மாப்பிள்ளைகளின்ர மனிசிகள் எல்லா இரகசியத்தையும் உவைக்குத்தான் காதோட காதா சொல்லிவைக்கிறது. நீங்களும் அப்படியான ஒருவரா?😋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

அண்ணை, கேக்கிறன் எண்டு கோவிக்க கூடாது, இப்ப என்னமதிரியான முட்டை உங்களுக்கு தாறினம்?🙂

கூள்முட்டையாக இல்லாதவரை சந்தோசம்தான்.😄

அதெப்பிடியண்ணை உங்களுக்கு தெரியும்? சிலரின்ர கருமவினை, இந்த புது மாப்பிள்ளைகளின்ர மனிசிகள் எல்லா இரகசியத்தையும் உவைக்குத்தான் காதோட காதா சொல்லிவைக்கிறது. நீங்களும் அப்படியான ஒருவரா?😋

குருட்டு கேள்வியளும்...செலுட்டு கதையளும்.😶

உங்களைப்போலை ஆக்களுக்காகத்தான் அங்கை ஊரிலை வீட்டுக்கு வீடு கறுவல் கடியன் நாய் வளர்க்கிறவையள் 😎

தட்டிவானில் ஏறிய தமிழன் 💪🏽

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

குருட்டு கேள்வியளும்...செலுட்டு கதையளும்.😶

உங்களைப்போலை ஆக்களுக்காகத்தான் அங்கை ஊரிலை வீட்டுக்கு வீடு கறுவல் கடியன் நாய் வளர்க்கிறவையள் 😎

தட்டிவானில் ஏறிய தமிழன் 💪🏽

உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறன் சாமி 

நான் அவிச்ச முட்டை சாப்பிடமாட்டன் பொரியல் மட்டும் , இல்லையென்றால் முட்டை றொட்டி மாத்திரம்  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முட்டை கிழமைக்கு நான்கு எடுப்பது பிரச்சனை அற்றது என்று எங்கோ அறிந்தேன்.

முட்டை மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை மாத்திரம் உண்பது நல்லது என்று சிலர் சொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ட்ரோல் பிரச்சனை என்று வைத்தியர்களிடம் செல்பவர்களுக்கு ஆட்டு இறைச்சி ,நண்டு இறால்.கணவாய்,முட்டை மஞ்சள்கரு போன்றவற்றை அதிகமாக  ரவுண்டு கட்டி அடிக்க வேண்டாமென்றே ஆலோசனை வழங்கப்படுகிறது.

அப்படி கெடுவில எல்லாத்தையும் போட்டு தாக்கினாலும் கொழுப்புள்ள சாப்பாட்டை சாப்பிட்டபின்னர்  குளிர்நீர் அருந்துவது நல்லதல்ல, எப்போதும் ஒருகிளாஸ் சுடுதண்ணி குடிப்பது ஆரோக்கியமானது என்றும் அறிவுரை வழங்குகிறார்கள்.

ஊரில் அடிக்கிற வெய்யிலும்  அங்குள்ளவர்களின் உடலை வருத்தும் கடின உழைப்பும் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு  வெளியேறும் லீற்றர் கணக்கு  வியர்வையும் ஓரளவு இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி விடுகிறது. 

இங்கு வருசத்தில் 7 மாசம் குளிர் ஐஞ்சுமாசம் வெக்கை என்றால் கோடைகாலத்திலும் வீடுகளிலும் கார்களிலும் ஏசி, ஆகமொத்தம் வருசம் முழுவதும் குளிரோடு   விளையாடி குளிரோடு உறவாடிதான்.

நான் பல வருசங்களாக ஒருமுட்டைமட்டுமே  மஞ்சள்கருவுடன் சாப்பிடுவேன் , அதுக்கு மேலதிகமா முட்டையை போட்டு தாக்கினால் வெள்ளைகரு மட்டுமே சாப்பிடுவேன்.

முட்டை நிறைய சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் வெள்ளைகரு மட்டும் எத்தனை வேண்டுமானும் வெளுத்து வாங்கலாம் பாதிப்பு இல்லையென்றே மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறன் சாமி 

நான் அவிச்ச முட்டை சாப்பிடமாட்டன் பொரியல் மட்டும் , இல்லையென்றால் முட்டை றொட்டி மாத்திரம்  

உப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.....எனக்கு இஞ்சை திண்ணையும் இல்லாமல் முகடும் இல்லாமல்  நடு ரோட்டிலை திரிஞ்சமாதிரி திரியுறன்.இதுக்குள்ளை என்ரை  செம்புள்ளி கரும்புள்ளி வேறை லெவல்.😂

ஆனா ஆவென்னா எழுதவே 68 தரம் யோசிக்க வேண்டிக்கிடக்கு 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, valavan said:

கொலஸ்ட்ரோல் பிரச்சனை என்று வைத்தியர்களிடம் செல்பவர்களுக்கு ஆட்டு இறைச்சி ,நண்டு இறால்.கணவாய்,முட்டை மஞ்சள்கரு போன்றவற்றை அதிகமாக  ரவுண்டு கட்டி அடிக்க வேண்டாமென்றே ஆலோசனை வழங்கப்படுகிறது.

அப்படி கெடுவில எல்லாத்தையும் போட்டு தாக்கினாலும் கொழுப்புள்ள சாப்பாட்டை சாப்பிட்டபின்னர்  குளிர்நீர் அருந்துவது நல்லதல்ல, எப்போதும் ஒருகிளாஸ் சுடுதண்ணி குடிப்பது ஆரோக்கியமானது என்றும் அறிவுரை வழங்குகிறார்கள்.

ஊரில் அடிக்கிற வெய்யிலும்  அங்குள்ளவர்களின் உடலை வருத்தும் கடின உழைப்பும் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு  வெளியேறும் லீற்றர் கணக்கு  வியர்வையும் ஓரளவு இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி விடுகிறது. 

இங்கு வருசத்தில் 7 மாசம் குளிர் ஐஞ்சுமாசம் வெக்கை என்றால் கோடைகாலத்திலும் வீடுகளிலும் கார்களிலும் ஏசி, ஆகமொத்தம் வருசம் முழுவதும் குளிரோடு   விளையாடி குளிரோடு உறவாடிதான்.

நான் பல வருசங்களாக ஒருமுட்டைமட்டுமே  மஞ்சள்கருவுடன் சாப்பிடுவேன் , அதுக்கு மேலதிகமா முட்டையை போட்டு தாக்கினால் வெள்ளைகரு மட்டுமே சாப்பிடுவேன்.

முட்டை நிறைய சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் வெள்ளைகரு மட்டும் எத்தனை வேண்டுமானும் வெளுத்து வாங்கலாம் பாதிப்பு இல்லையென்றே மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

நான் அநேகமான நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு முட்டைகள் சாப்பிடுகின்றேன். வார இறுதிகளில் மாட்டு இறைச்சி, ஆடு, காட்டுப் பன்றி, மான், மரை, இரால், கணவாய், ஆட்டு மூளைப் பொரியல் என்பனவற்றில் ஒன்றையேனும் உண்கின்றேன். இரண்டு கிழமைக்கு முன்  முழு உடல் பரிசோதனை செய்து உடம்பில் கெட்ட கொழுப்பு இல்லை என்றும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்துள்ளது என்றும் முடிவு வந்துள்ளது.

வார நாட்களில் பச்சை இலைகளுடனான சலட் சாப்பிடுவதும் ஒரு காரணம் என்றாலும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் அடிகளாவது நடப்பதுதான் கொழுப்பும் சுகரும் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான காரணம் என நம்பிகின்றேன்.

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

வார இறுதிகளில் மாட்டு இறைச்சி, ஆடு, காட்டுப் பன்றி, மான், மரை, இரால், கணவாய், ஆட்டு மூளைப் பொரியல் என்பனவற்றில் ஒன்றையேனும் உண்கின்றேன். இரண்டு கிழமைக்கு முன்  முழு உடல் பரிசோதனை செய்து உடம்பில் கெட்ட கொழுப்பு இல்லை என்றும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்துள்ளது என்றும் முடிவு வந்துள்ளது.

வார நாட்களில் பச்சை இலைகளுடனான சலட் சாப்பிடுவதும் ஒரு காரணம் என்றாலும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் அடிகளாவது நடப்பதுதான் கொழுப்பும் சுகரும் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான காரணம் என நம்பிகின்றேன்.

வாரத்தில் ஓரிருநாள் மட்டும் இறைச்சி வகைகள்,

வாரம் முழுவதும் பச்சை காய்கறி வகைகள்

போதியளவு நடை பயிற்சி

உடம்பில் கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டது என்று ஒருவர் மருத்துவரிடம் சென்றால்  அதனை கட்டுக்குள் கொண்டுவர அவர் என்ன என்ன செய்யவேண்டும் என்று  ஆலோசனைகள் வழங்குவாரோ அதையே வழமையாகசெய்துகொண்டிருக்கிறீர்கள் 

அதனால்  உங்களுக்கு கொலொஸ்ட்ரோலும் சுகரும் கட்டுக்குள் இருப்பதில் ஆச்சரியமேயில்லை.

உணவு பழக்க வழக்கங்களில் நான் அடுத்து அதிகமாக  கவனிப்பது சோடியத்தின் அளவு, கடையில் எந்த உணவுபொருள் வாங்கினாலும் சோடியத்தின் அளவை முதலில் பார்ப்பேன், ஒரு மனிதன் ஒருநாளைக்கு சராசரியாக 2300 மில்லிகிராம்  அளவு சோடியத்துக்குமேல் எடுத்துக்கொள்ளக்கூடாது எனறு சொல்வார்கள்,

இரத்த கொதிப்பு,மாரடைப்பு வலிப்பு போன்றவற்றின் உற்ற நண்பன் சோடியம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

18 hours ago, valavan said:

கொலஸ்ட்ரோல் பிரச்சனை என்று வைத்தியர்களிடம் செல்பவர்களுக்கு ஆட்டு இறைச்சி ,நண்டு இறால்.கணவாய்,முட்டை மஞ்சள்கரு போன்றவற்றை அதிகமாக  ரவுண்டு கட்டி அடிக்க வேண்டாமென்றே ஆலோசனை வழங்கப்படுகிறது.

அப்படி கெடுவில எல்லாத்தையும் போட்டு தாக்கினாலும் கொழுப்புள்ள சாப்பாட்டை சாப்பிட்டபின்னர்  குளிர்நீர் அருந்துவது நல்லதல்ல, எப்போதும் ஒருகிளாஸ் சுடுதண்ணி குடிப்பது ஆரோக்கியமானது என்றும் அறிவுரை வழங்குகிறார்கள்.

ஊரில் அடிக்கிற வெய்யிலும்  அங்குள்ளவர்களின் உடலை வருத்தும் கடின உழைப்பும் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு  வெளியேறும் லீற்றர் கணக்கு  வியர்வையும் ஓரளவு இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி விடுகிறது. 

இங்கு வருசத்தில் 7 மாசம் குளிர் ஐஞ்சுமாசம் வெக்கை என்றால் கோடைகாலத்திலும் வீடுகளிலும் கார்களிலும் ஏசி, ஆகமொத்தம் வருசம் முழுவதும் குளிரோடு   விளையாடி குளிரோடு உறவாடிதான்.

நான் பல வருசங்களாக ஒருமுட்டைமட்டுமே  மஞ்சள்கருவுடன் சாப்பிடுவேன் , அதுக்கு மேலதிகமா முட்டையை போட்டு தாக்கினால் வெள்ளைகரு மட்டுமே சாப்பிடுவேன்.

முட்டை நிறைய சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் வெள்ளைகரு மட்டும் எத்தனை வேண்டுமானும் வெளுத்து வாங்கலாம் பாதிப்பு இல்லையென்றே மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

வளவன், உங்களடைய கருத்துக்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

வைத்தியர்கள் கொலஸ்ரரோல் இருந்தால் வைத்தியர்கள் கொழுப்பு உணவைக் குறைக்குமாறு சொல்வது வழமை. உடல் சரியாக இயங்குவதற்குக் கொலஸ்ரரோல் அவசியம். உணவுகள் மூலம் சரியாக அதனை வழங்காவிட்டால் 70 வீதமான கொலஸ்ரரோலை உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். இது உடலில் மிதமிஞ்சிப் போவதற்குக் காரணம் நாம் உண்ணும் கொழுப்பு மட்டுமல்ல. சோறு மா சாப்பாடுகள்தான் முக்கிய காரணம். மிதமிஞ்சிய கொலஸ்ரரோலை விடுவிப்பதற்கு நல்ல கொலஸ்ரரோல் (HDL) அவசியமானது. இது குறிப்பாக தாவர எண்ணை, மீன் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. இதனை உடல் உற்பத்தி செய்யாது. கோழி உண்ணும் உணவைப் பொறுத்து முட்டையிலும் நல்ல கொழுப்பு omega 3 உண்டு. 

ஊரில் யார் இப்போது வியர்வை சிந்த கடின உழைப்பில் வாழ்கிறார்கள் ?
அத்துடன் குளிர் காலத்தில்தான் அதிக கலோரிகள் தேவைப்படும். சாதாரணமாக ஒருவருக்கு 2000 கி.ககோரிகள் நாளாந்தம் தேவைப்படும் என்றால் அதே ஆள் கடும் குளிர் நாடொன்றில் குளிரில் வேலை செய்தால் 5000 கி.கலோரி வரை தேவைப்படும்.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். முட்டை அதிகமாக உண்பதால் கொலஸ்ரரோல் அதிகமாகும் என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்படவில்லை. ஓரளவு விரும்பியதைச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் உடற்பயிற்சிதான் ஒரே வழி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

உணவு பழக்க வழக்கங்களில் நான் அடுத்து அதிகமாக  கவனிப்பது சோடியத்தின் அளவு,

அது சரி தான். ஆனால் உப்பு தாராளமாக பாவிக்கலாம் 😂 தமிழ் பழமொழியே இருக்கிறது. உப்பில்லாத உணவு  குப்பை தொட்டிக்குள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்போது எனக்கு கொலஸ்ரோல் பிரச்சனை வந்ததோ அன்று தொடக்கம் நான் முட்டை மஞ்சள் கருவை சாப்பிடுவதில்லை. தனிய வெள்ளைக்கருவை மட்டும்  சாப்பிடுவேன். ஆனால் வெள்ளைக்கரு அதிகம் சாப்பிட்டாலும் பிரச்சனைதான் என கேள்விப்பட்டேன்.

எல்லாவற்றையும் விட அவரவர் உடம்பு வாசி. ஒரு சிலருக்கு எரியல் பொரியல் சாப்பாடுகள் எளிதாக ஜீரணிக்கும். ஒரு சிலருக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும்.

விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் அவரவருக்கு என்னென்ன உணவுகள் ஏற்புடையதாக இருக்கின்றதோ அதையே உண்டால் விபரீதங்கள் அதிகமாக இருக்காது என்பது என் சொந்த அனுபவம்.

கனடாக்காரர் அடுகிடை படுகிடையாய்  கோழிமுட்டை,கௌதாரி முட்டை,மட்டன் சாப்பிடீனம் எண்டத்துக்காக நானும் சாப்பிட நினைக்கிறது  ரொம்ப தப்புங்க.😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கனடாக்காரர் அடுகிடை படுகிடையாய்  கோழிமுட்டை,கௌதாரி முட்டை,மட்டன் சாப்பிடீனம் எண்டத்துக்காக நானும் சாப்பிட நினைக்கிறது  ரொம்ப தப்புங்க.

ஊர்க்கோழி இறைச்சி,  ஊர்க் கோழியின்  முட்டை,  ஊர் அரிசிச்சோறு, ஊர்ச் சமையல்,
ஊர்ச் சாப்பாடு  என்று  எந்த விஷக்கிருமிகளையும்   கலக்காமல்
எங்கள் மூதாதையர்களும் அவர்களின் வழியில் நாங்களும் உண்டு  வாழ்ந்த காலம் இனித் திரும்பி வராது கு சா அண்ணை
இது   எதைச் சாப்பிட்டாலும் கூகிளில் அதன் கலோரியைத் தேடும்  காலம்   
  
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

ஊர்க்கோழி இறைச்சி,  ஊர்க் கோழியின்  முட்டை,  ஊர் அரிசிச்சோறு, ஊர்ச் சமையல்,
ஊர்ச் சாப்பாடு  என்று  எந்த விஷக்கிருமிகளையும்   கலக்காமல்
எங்கள் மூதாதையர்களும் அவர்களின் வழியில் நாங்களும் உண்டு  வாழ்ந்த காலம் இனித் திரும்பி வராது கு சா அண்ணை
இது   எதைச் சாப்பிட்டாலும் கூகிளில் அதன் கலோரியைத் தேடும்  காலம்   
  
நாங்கள் ஊரிலை இதுதான் சாப்பாடு எண்டு ஆடு மாட்டுக்கு புல்லு தவிடு புண்ணாக்கு போட்ட மாதிரி......
இப்ப....
கடையளிலை மனிசருக்கு இதுதான் சாப்பாடு இல்லாட்டி போ எண்ட நிலைக்கு வந்திட்டுது. ஒழுங்கான தண்ணி கூட நிம்மதியாய் குடிக்கேலாது.

கோயில் குளத்திலை சந்தோசமாய்  கையாலை அள்ளிக்குடிச்ச தண்ணியை கூட கூடாது எண்டுறாங்கள் இப்பத்தையான் விஞ்ஞானியள் 😁
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2021 at 07:09, நிழலி said:

நான் அநேகமான நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு முட்டைகள் சாப்பிடுகின்றேன். வார இறுதிகளில் மாட்டு இறைச்சி, ஆடு, காட்டுப் பன்றி, மான், மரை, இரால், கணவாய், ஆட்டு மூளைப் பொரியல் என்பனவற்றில் ஒன்றையேனும் உண்கின்றேன். இரண்டு கிழமைக்கு முன்  முழு உடல் பரிசோதனை செய்து உடம்பில் கெட்ட கொழுப்பு இல்லை என்றும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்துள்ளது என்றும் முடிவு வந்துள்ளது.

வார நாட்களில் பச்சை இலைகளுடனான சலட் சாப்பிடுவதும் ஒரு காரணம் என்றாலும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் அடிகளாவது நடப்பதுதான் கொழுப்பும் சுகரும் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான காரணம் என நம்பிகின்றேன்.

எனது வாழ்வின் மிக முக்கியமான கட்டங்களில் இந்த முட்டை தான் எனக்குக் கை கொடுத்துள்ளது!

ஆபிரிக்காவில் இருந்த காலத்தில் தூரப்பயணங்களின் போது, சுத்தமான,நம்பகமான உணவு கிடைப்பது கடினம்!

சிறு குழந்தைகள் தலைகளில் அவித்த உடைக்காத முட்டைகளை விற்பார்கள்! இவை கொதிநீரில் அவிக்கப் படுவதால், உள்ளதுக்குள்ளையே வள்ளிசான உணவாகப் பல தடவைகள் இந்த முட்டை கை கொடுத்துள்ளது!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.