Jump to content

எழுக தமிழ் 2019,  படிப்பினைகள். - வ.ஐ.சஜெயபாலன்

Recommended Posts

எழுக தமிழ் 2019,  படிப்பினைகள்.

- ..சஜெயபாலன்

பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான்ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்றுதமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.”  - யதீந்திரா

*

எழுக தமிழ் பற்றிய யதீந்திராவின் கருத்து முக்கியமானது. உலக்கை தேய்ந்து உளியானதுபோல என்று சொல்வார்கள். எழுக தமிழ் ஆரம்பத்தில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பு என்கிற முகத்தை ஓரளவுக்குக் கொண்டிருந்தது. ஈழத்திலும் பெயர்புலத்திலும் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பது அவசியமென்பது பலராலும் பரலாக உணரப்பட்ட காலக் கட்டம் அது. கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் ரணில் அரசை தட்டிக் கேட்க்கும் அமைப்புகளை மக்கள் தேடிகொண்டிருந்த தருணத்தில் எழுக தமிழ் தோற்றம் பெற்றது. அதனால்தான்  எல்லா விமர்சனங்களையும் மீறிய பரவல் ஆதரவை எழுக தமிழ் பெற்றது.

ஆனால் அண்மைக் காலங்களில் எழுக தமிழ் கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் அமைப்பல்ல  கூட்டமைப்பை எதிர்க்கும் அழிக்க முனையும்   மாற்று அணியென்கிற கருத்தே மக்கள் மத்தியில் பரவலாகப் பலபட்டு வந்தது. எந்த அரசியல் போராட்டங்களுமின்றி  மூல உபாய செயல்பாடுகளுமின்றி கூட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்ச்சியை பலரும்  ஆதரிக்கவில்லை. மக்கள் தங்கள் கருத்தை எழுக தமிழ் 2019ன் போது மிகத் தெளிவாகவே பதிவு செய்துள்ளனர்

1995 ஜனாதிபதி தேர்தலின்போது நான் வன்னியில் இருந்தேன். தமிழர் அதி தீவிரவாத நிலைபாடு எடுத்து தேர்தலை பகிஸ்கரித்தால் மட்டுமே மகிந்தராஜபக்ச வெற்றிபெறுவார் என்கிற சூழல் இருந்தது. அதனால் மகிந்த தனது வெற்றிக்கு ”தேர்தலை பகிஷ்கரி” என்கிற ஈழம் கொழும்பு புலம் பெயர் நாடுகளில் இயங்கிய தமிழ் தீவிர வாதிகளைத்தான் நம்பியிருக்க நேர்ந்தது. 

1995 ஜநாதிபதி தேர்தலை தமிழ் மக்கள்  பகிஸ்கரிக்க வேண்டுமென்பதற்க்காக  பகிஸ்கரிக்க வைப்பதற்க்கு பல நூறு கோடிகள்  மகிந்த சகோதரர்கள் கோத்தபாயா அணி தயாராக இருந்தது எல்லோரும் அறிந்ததேஇப்பவும் தேர்தல் பகிஸ்கரிப்பு ஒன்றே தங்கள் வெற்றியை உறுதி செய்யும் என்பதை அவர்கள் அறிவார்கள்.  அதிதீவிர வாத போக்கினர் ஊடாக  தமிழரை பகிஸ்கரிக்க வைக்கும் முயற்சியை நேரடியாகவோ மறசிமுகமாகவோ தூண்ட இப்பவும் மகிந்தகோத்தா அணி கழம் இறங்கியுள்ளது. ஈழத்திலோ கொழும்பிலோ புலம்பெயர் நாடுகளிலோ வாழும் அதிதீவிரவாதிகளே மகிந்த கோத்தா அணியினரின் சூட்சிகளில் மாட்டிக்கொள்ளாது  கவனமாக இருங்கள்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, poet said:

1995 ஜநாதிபதி தேர்தலை தமிழ் மக்கள்  பகிஸ்கரிக்க வேண்டுமென்பதற்க்காக  பகிஸ்கரிக்க வைப்பதற்க்கு பல நூறு கோடிகள்  மகிந்த சகோதரர்கள் கோத்தபாயா அணி தயாராக இருந்தது எல்லோரும் அறிந்ததே

2005 ஐ 1995 உடன் குழப்பக்கூடாது!

கோடிகளை யார் வாங்கினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? 

Link to comment
Share on other sites

11 hours ago, கிருபன் said:

2005 ஐ 1995 உடன் குழப்பக்கூடாது!

கோடிகளை யார் வாங்கினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? 

கிருபன் சுயதிருப்திக்காக எழுதுவது எங்கள் சந்ததிகளின் வழிகளில் முள்ளுப்போடும் அநீதியாகும். எம் சந்ததிகள் வழிகாண நாங்கள் தடயங்களையாவது விட்டுச் செல்ல வேண்டும். எல்லா தோல்விகளும் விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்துக்க்கும் உரியவைதான். 

உலகில் அதிகமான போராட்டங்களின் தோல்விக்கு காரணம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாமையே. இலங்கை அரசியல் இன்று இலங்கையின் கையில் இல்லை. சீனா பாகிஸ்தான் அணி எதிர் அமரிக்கா இந்தியா மேற்க்குநாடுகள் அணியின் உதைபந்தாட்ட மைதானமாகவே இலங்கை தொடர்கிறது.

கிருபன் என் நிலைபாடு எங்கள் பிள்ளைகளாவது வரலாற்றின் இருந்து கற்றுக்கொள்ள நாம் வழி விட வேண்டும் என்பதுதான்.  எங்கள் இறுக்கங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தடைக்கற்களாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான். 1995லும் 2005ஐயும் எங்கள் பிள்ளைகள் நிச்சயமாக கட்டவிழ்த்துப் பார்ப்பார்கள்.

சீனாவும் மகிந்த குடும்ப சார்பு சிங்கள கடும்போக்காளர்களுக்குமான உறவு மேலும் பலமாகித் தொடர்கிறது. இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு எதிரான  இந்தியாவும் அமரிக்க மேற்க்கு அணியிலும் அவர்களது ஐதேக கூட்டமைப்பு உறவுகளிலும்  மாற்றமில்லை. நெடுங்காலமாக அணிகளில் மாற்றமில்லை என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். தோல்வியில் இருந்து வெற்றிக்கு நகர விரும்பும் நாம்தான் வழி தவறாமல் சரியான திசையில் மாறவேண்டும். தமதித்தால் எதிரிகள் எங்கள் தாய்மண்ணை ஏப்பம் விட்டுவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, poet said:

எழுக தமிழ் 2019,  படிப்பினைகள்.

- ..சஜெயபாலன்

பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான்ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்றுதமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.”  - யதீந்திரா

*

எழுக தமிழ் பற்றிய யதீந்திராவின் கருத்து முக்கியமானது. உலக்கை தேய்ந்து உளியானதுபோல என்று சொல்வார்கள். எழுக தமிழ் ஆரம்பத்தில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பு என்கிற முகத்தை ஓரளவுக்குக் கொண்டிருந்தது. ஈழத்திலும் பெயர்புலத்திலும் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பது அவசியமென்பது பலராலும் பரலாக உணரப்பட்ட காலக் கட்டம் அது. கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் ரணில் அரசை தட்டிக் கேட்க்கும் அமைப்புகளை மக்கள் தேடிகொண்டிருந்த தருணத்தில் எழுக தமிழ் தோற்றம் பெற்றது. அதனால்தான்  எல்லா விமர்சனங்களையும் மீறிய பரவல் ஆதரவை எழுக தமிழ் பெற்றது.

ஆனால் அண்மைக் காலங்களில் எழுக தமிழ் கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் அமைப்பல்ல  கூட்டமைப்பை எதிர்க்கும் அழிக்க முனையும்   மாற்று அணியென்கிற கருத்தே மக்கள் மத்தியில் பரவலாகப் பலபட்டு வந்தது. எந்த அரசியல் போராட்டங்களுமின்றி  மூல உபாய செயல்பாடுகளுமின்றி கூட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்ச்சியை பலரும்  ஆதரிக்கவில்லை. மக்கள் தங்கள் கருத்தை எழுக தமிழ் 2019ன் போது மிகத் தெளிவாகவே பதிவு செய்துள்ளனர்

1995 ஜனாதிபதி தேர்தலின்போது நான் வன்னியில் இருந்தேன். தமிழர் அதி தீவிரவாத நிலைபாடு எடுத்து தேர்தலை பகிஸ்கரித்தால் மட்டுமே மகிந்தராஜபக்ச வெற்றிபெறுவார் என்கிற சூழல் இருந்தது. அதனால் மகிந்த தனது வெற்றிக்கு ”தேர்தலை பகிஷ்கரி” என்கிற ஈழம் கொழும்பு புலம் பெயர் நாடுகளில் இயங்கிய தமிழ் தீவிர வாதிகளைத்தான் நம்பியிருக்க நேர்ந்தது. 

1995 ஜநாதிபதி தேர்தலை தமிழ் மக்கள்  பகிஸ்கரிக்க வேண்டுமென்பதற்க்காக  பகிஸ்கரிக்க வைப்பதற்க்கு பல நூறு கோடிகள்  மகிந்த சகோதரர்கள் கோத்தபாயா அணி தயாராக இருந்தது எல்லோரும் அறிந்ததேஇப்பவும் தேர்தல் பகிஸ்கரிப்பு ஒன்றே தங்கள் வெற்றியை உறுதி செய்யும் என்பதை அவர்கள் அறிவார்கள்.  அதிதீவிர வாத போக்கினர் ஊடாக  தமிழரை பகிஸ்கரிக்க வைக்கும் முயற்சியை நேரடியாகவோ மறசிமுகமாகவோ தூண்ட இப்பவும் மகிந்தகோத்தா அணி கழம் இறங்கியுள்ளது. ஈழத்திலோ கொழும்பிலோ புலம்பெயர் நாடுகளிலோ வாழும் அதிதீவிரவாதிகளே மகிந்த கோத்தா அணியினரின் சூட்சிகளில் மாட்டிக்கொள்ளாது  கவனமாக இருங்கள்.     

பொயட் முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள், கிருபன் கூறியும் 2005 இல் நடந்ததை 1995 என்றே தொடர்கிறீர்கள்....

1995 இல் சிறீலங்காவில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

பொயட் முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள், கிருபன் கூறியும் 2005 இல் நடந்ததை 1995 என்றே தொடர்கிறீர்கள்....

1995 இல் சிறீலங்காவில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறவில்லை...

வரலாறு இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. எங்கள் கண் முன்னால் நடந்தவையே சாய்மனைக் கதிரை ஆய்வாளர்களால் திரிக்கப்பட்டு சமூகவலை உலகமெங்கும் பரவிக்கொண்டு இருக்கின்றது. இந்த ஆய்வாளர்களில் பலர் ஒரு ஆணியையும் புடுங்கமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

2005 ஜனாதிபதி தேர்தலை தவறுதலாக 1995 என எழுதிவிட்டேன். அது கருத்து பிழையல்ல எனினும்  தவறுதான்.  திருத்த முனைந்தபோது எடிற் மூடபட்டுவிட்டது. எழுத்தாளர் எடிற் பண்ணும் உரிமையை திறந்து வைப்பதே ஜனநாயக மரபு. யாழ் இணையமும் அதனை கடைப்பிடிக்க வேண்டுகிறேன். கருத்து பிழை பற்றி பேசுங்கள் கிருபன். நான் ஒருபோதும் சாய்மனைக் கதிரை ஆய்வாளனாக இருக்கவில்லை என்பதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எப்பவும் பிரபலமாவதை தவிர்த்தே வருகிறேன். அடுத்த தலை முறைக்காக மட்டுமே எழுதுகிறேன். கைக்கெட்டிய தூரத்தில் எல்லாம் இருந்தும் ஒரு சங்ககாலக் கவிஞனைப்போல இந்த தலை முறையிடம்  எப்போதும் எந்த சூழலிலும் எதற்காகவும் பணிந்தறியாத எனது தவம் போதும் எனக்கு.  என் தோழ தோழியருடன் கொண்டாடும் இந்தக் குடிசை வாழ்வு போதும் எனக்கு. 

Link to comment
Share on other sites

நன்றி goshan_che

1 hour ago, MEERA said:

பொயட் முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள், கிருபன் கூறியும் 2005 இல் நடந்ததை 1995 என்றே தொடர்கிறீர்கள்....

1995 இல் சிறீலங்காவில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறவில்லை...

மதிப்புகுரிய மீரா, 2005 கைபிழைபாடாக 1995 என எழுதிவிட்டேன். மனவேகத்தில் எழுதுகிறபோது நேர்ந்த தவறு. மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

56 minutes ago, கிருபன் said:

வரலாறு இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. எங்கள் கண் முன்னால் நடந்தவையே சாய்மனைக் கதிரை ஆய்வாளர்களால் திரிக்கப்பட்டு சமூகவலை உலகமெங்கும் பரவிக்கொண்டு இருக்கின்றது. இந்த ஆய்வாளர்களில் பலர் ஒரு ஆணியையும் புடுங்கமாட்டார்கள். 

கிருபன் உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். உங்கள் ஆரோக்கியமான உழைப்பை எப்பவும் மதிக்கிறேன்.  அதேசமயம் உறவு விவாதம் கருத்து மோதல்  எல்லாம் இருவழிப்பாதையல்லா?  சாய்மனைக் கதிரையைத் தூக்கி பொத்தாம் பொதுவாக அடிப்பது நியாயமா? என்மீது குறிப்பிட்டு முன்வைக்கும் விவாதங்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப் பட்டிருக்கிறேன். நேரே கேழுங்கள் கிருபா. நிச்சயம் பதில் சொல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஐயாவின் திகதி பிழைகளுக்கு அப்பால், அவர் சொல்ல வந்த கருத்தை நாம் உள்வாங்க வேண்டியது அவசியம்.

தமிழர்களை ஒன்றில் விரக்தியாக்கி அல்லது, முஸ்லீம்களை அடக்க கோட்டவே சரியான ஆள் என்ற விதத்தில் அணுகி (குறிப்பாக கிழக்கில்) கோட்டவுக்கு போடுமாறு அல்லது விலகி இருக்குமாறு செய்யும் ஒரு தந்திரம் எடுத்துவிடப்பட்டுள்ளது.

உடனே சஜித் என்ன திறமா, யு என் பி 4 வருடமாக எமக்கு என்ன செய்தது என என்மேல் பாயவேண்டாம்.

எமது அடிப்படை உரிமைகளை மறுப்பதில் இரு பகுதியும் ஒன்றை ஒன்று விஞ்சியவர்கள், சஜித்தும் எமக்குத் தீர்வுதரப் போவதில்லை.

ஆனால் திலீபன், முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நினைவை அஞ்சலிக்க விட்டமை, காணிகள் கணிசமாக மீளளிக்கப்பட்டமை, ராணுவ பிரசன்னம், தலையீடு குறைந்தமை என்று, 2005-2015 ஐ விட, 2015-2019 இல் ஒப்பீட்டளவில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதே நான் கருதுவது.

இந்த அடிபடையில் கோட்ட வைவிட சஜித் வந்தால் பரவாயில்லை என நான் நினக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

ஆனால் அண்மைக் காலங்களில் எழுக தமிழ் கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் அமைப்பல்ல  கூட்டமைப்பை எதிர்க்கும் அழிக்க முனையும்   மாற்று அணியென்கிற கருத்தே மக்கள் மத்தியில் பரவலாகப் பலபட்டு வந்தது. எந்த அரசியல் போராட்டங்களுமின்றி  மூல உபாய செயல்பாடுகளுமின்றி கூட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்ச்சியை பலரும்  ஆதரிக்கவில்லை. மக்கள் தங்கள் கருத்தை எழுக தமிழ் 2019ன் போது மிகத் தெளிவாகவே பதிவு செய்துள்ளனர்

மக்கள் போகாததற்கு தமிழ் கூட்டமைப்பு மீதான பற்றுத்தான் காரணம் என்று கட்டமைப்பது தவறு.

பேரவை கட்சி அரசியலுக்கு வெளியே எழுக தமிழ் நிகழ்வை நடாத்தியிருக்கவேண்டும். ஆனால் விக்கினேஸ்வரன் பேரவையில் இருப்பதும் தனிக்கட்சி நடாத்துவதும் அவரின் கட்சிக்கு அனுகூலமாகிவிடும் என்பதால் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன்னணி போன்றவை பங்கேற்கவில்லை, 

அத்தோடு பல்கலைக்கழக மாணவர்களும் கடைசி நேரத்திலேயே உதவியவதால் மக்கள் திரளைக் கொண்டுவரமுடியவில்லை. மழை காரணமாக வன்னியிலிருந்து வரக்கூடியவர்களின் தொகையும் குறைந்திருந்தது. 

பேரவை கட்சிகளைத் தாண்டி தமிழ் மக்களின் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக இல்லாமல் இருப்பதுதான் எழுக தமிழ் தோல்விக்குக் காரணம்.

தமிழ்த் தேசியத்தை இடையிடையே சடங்குகளை நடாத்தி வலுப்படுத்தமுடியாது.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

மக்கள் போகாததற்கு தமிழ் கூட்டமைப்பு மீதான பற்றுத்தான் காரணம் என்று கட்டமைப்பது தவறு.

நட்ப்புக்குரிய கிருபனுக்கு, நான் அப்படி ஒரு இடத்திலும் சொல்லவில்லை. கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் விமர்சிக்கும் அமைப்பாக எழுக தமிழ் நிகழ்வை மக்கள் வரவேற்றார்கள். ஆனால் எழுக தமிழ் கூட்டமைப்புக்கு  அமைப்பு ரீதியான அரசியல் மாற்றுச் சக்தியாக வளராமல்   கூட்டமைப்பை சீர்குலைப்பதை மக்கள் வரவேற்க்கவில்லை. என்பதைத்தான் நான் சொன்னேன். என்னுடைய ஆய்வு முடிவுகள் அவைதான் நண்பா.  கிருபன், இதுவும் உண்மையின் ஒரு பகுதி என்பதை  நிராகரிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, த.தே.கூட்டமைப்பு இதுவரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?
தமிழ் மக்கள் பேரவை அழுத்தக் குழுவா மட்டும் இருக்கவேண்டும் என்று கட்டாயமா?
மக்களின் உரிமை சார்ந்து குரல் கொடுப்போர் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
கடைசி வருசத்தில கம்பரெலிய அபிவிருத்தி யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்ற முனையக் கூடாது.
அபிவிருத்திய டக்ளஸ் தேவானந்தாவும் முன்னெடுத்தவர், அவருக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இப்ப வித்தியாசம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

நட்ப்புக்குரிய கிருபனுக்கு, நான் அப்படி ஒரு இடத்திலும் சொல்லவில்லை. கூட்டமைப்புக்கு அழுத்தம் தரும் விமர்சிக்கும் அமைப்பாக எழுக தமிழ் நிகழ்வை மக்கள் வரவேற்றார்கள். ஆனால் எழுக தமிழ் கூட்டமைப்புக்கு  அமைப்பு ரீதியான அரசியல் மாற்றுச் சக்தியாக வளராமல்   கூட்டமைப்பை சீர்குலைப்பதை மக்கள் வரவேற்க்கவில்லை. என்பதைத்தான் நான் சொன்னேன். என்னுடைய ஆய்வு முடிவுகள் அவைதான் நண்பா.  கிருபன், இதுவும் உண்மையின் ஒரு பகுதி என்பதை  நிராகரிக்க முடியுமா?

மக்கள் கூட்டமைப்பை சீர்குலைப்பதை விரும்பவில்லை என்பதை ஆய்வு முடிவாக சொல்லுவதற்கான ஆதாரங்கள் என்னவென்று முன்வைத்திருந்தால் அவற்றை உண்மையா இல்லையா என்று கருத்துச் சொல்லலாம் கவிஞரே.

Link to comment
Share on other sites

கிருபன் என் இறுதிக்கருத்தாக நான் சொல்ல விரும்புவது இதுதான்.

கடந்த ஐந்தாறு வருடங்களில் நிகழ்ந்த தேர்தல் முடிவுகள் பற்றிய புலம்பெயர் சமூகத்தின்  எதிர்பார்ப்பு எதிர்வு கூறல்களையும் அதனைப் பொய்யாக்கிய தேர்தல்  முடிவுகளையும் ஒப்பிட்டு ஆராயுங்கள்.

பரவலாக வடக்கு கிழக்கென்று ஈழ மையமாக இயங்காமல் யாழ் மையமாக இயங்கும் அரசியல் செயல்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களில் பலம் பெறுவதன் மூலம் மாற்றுத் தலைமையாக வடகிழக்கு அரசியலில் பலம் பெறுவது சாத்தியமில்லை.    ஓரிரு ஊர்வலங்கள் ஆர்பாட்டங்கள் சமூக வைலைத்தளங்கள் என பிரபலமாக இருந்த அமைப்புகள் ஏன் தேர்தல் என்று வரும்போது கூட்டமைப்பிடம் தோற்றுப்போயின? கஜேந்திரன் பொன்னம்பலமோ ஆனந்தியோ விக்னேஸ்வரனோ யாழ்ப்பாணத்தில் செயல்படும் அழுத்தக்குழு என்பதை தாண்டி கூட்டமைப்புக்கு மாற்று அமைப்பாக தம்மை அரசியல்ரீதியாக வளர்த்துக் கொள்ளவில்லை. இதனால்தான் வாக்கு என வரும்போது மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் சூழல் தொடர்ந்தது.

கூட்டமைப்புக்கு வெளியில் அமைப்பு ரீதியான வெற்றிடமே தொடர்கிறது. அமைப்பு ரீதியாக கட்டமைக்கபடாத பகுதிநேர செயல்ப்பாட்டாளர்களான   மாணவர்கள்  இளைஞர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை மக்கள் மைய தளமாக மாற்றுவதில் கஜேந்திரனோ விக்னேஸ்வரனோ வெற்றி பெறவில்லை.

பல புலம்பெயர் தமிழ் ஆர்வலர்கள் ஈழ அரசியலையும் தமிழ் நாட்டு அரசியலையும் சமூக வலைத் தளங்களிலேயே தரிசிக்கின்றனர். அமைப்பு ரீதியாக மக்களைக் கட்டியெழுப்பாமல் சமூக வலைத் தளங்களில்  பிரபலமாக இருப்பவர்களை முக்கிய ஆற்றல் என கருதுகின்றனர்.  தொடற்ச்சியற்ற ஆனால் கவற்ச்சியான அரசியல் நடவடிக்கைகளை வழிநடத்தும் பிரபலங்களை அமைப்புரீதயாக பலபட்டிருக்கும் கூட்டமைப்புக்கு மாற்றாகக் கருதுகிறார்கள்.  

பரவலாக இல்லாவிட்டாலும் சமூக ரீதியாக தொடர்ந்தும் புறக்கணிக்கபடுகிற  சிறுபாண்மை மக்கள் மக்கள் மத்தியில் டக்ளஸ் சிறு அமைப்பையும் ஆதரவு தளத்தை  கொண்டிருக்கிறார். கூட்டமைப்புக்கு வெளியில் டக்ளஸ்ஸைத் தவிர  தவிர வேறு தமிழ் அரசியல் அணிகள்  மக்களின் சிறுபகுதியைக்கூட அமைப்புரீதியாக அணி திரட்டவில்லை. ஆனால் டக்ளஸ் முஸ்லிம் அரசியல் வாதிகள்போல  அமைச்சு பதவியை இலக்கு வைத்து அரசியல் செய்வதால் மக்கள் அவரை ஏற்க்கவில்லை. இந்த சூழலில் இப்போதும்கூட எந்த மாற்றமும் நிகழவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டைப் பிழையாக எழுதி விட்டதைத் தவிர கவிஞர் எழுதிய அனைத்தும் வலுவான கருத்துகள்.

கடும் போக்குக் கொண்ட தேசியவாதிகள் சிலரைத் தவிர, சாதாரண தாயக மக்களின் மனப் போக்கு தற்போது இருக்கும் ஒரே வலுவான அமைப்பான  கூட்டமைப்பையும் இழந்து விடக் கூடாது என்பதாகவே இருக்கிறது! அதனால் கூட்டமைப்பின் மீது பற்றுதல் என்று இல்லை. எப்படி மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்களிடையே யார் தமிழருக்குப் பாதுகாப்பான தெரிவென்று தேட வேண்டியிருக்கிறதோ, அதே போன்ற ஒரு நிலை தான் கூட்டமைப்பு விடயத்திலும் நடக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில், விக்கினேஸ்வரன் ஐயா கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையை வழங்க மாட்டார் என்பது அவர் மாகாணசபையில் பயனற்ற விதத்தில் செயற்பட்டமையைப் பார்த்தபோது தெளிவாகி விட்டது. இப்போது தேர்தலுக்குக்  காலம் நெருங்கி விட்டதால் அவரது ஆதரவாளர்கள் அவரை மாற்றுத் தலைமையாகக் காட்ட  பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கிறது. எழுக தமிழின் வெற்றியின்மை இந்த முயற்சியின் மீது ஒரு சின்ன உறுத்தல் தான்! 

Link to comment
Share on other sites

எழுக தமிழ் தோற்றுப்போய் விட்டது. ஆனால் அதன் தேவை, கோரிக்கை அம்சங்கள் வலுவானவையே.

எனவே, கூட்டமைப்பு அவ்வாறு ஒரு மக்கள் எழுச்சியை ஒருங்கிணைத்து செய்யலாம். செய்யாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

எழுக தமிழ் தோற்றுப்போய் விட்டது. ஆனால் அதன் தேவை, கோரிக்கை அம்சங்கள் வலுவானவையே.

எனவே, கூட்டமைப்பு அவ்வாறு ஒரு மக்கள் எழுச்சியை ஒருங்கிணைத்து செய்யலாம். செய்யாது.

கூட்டமைப்புச் செய்யாது! ஏனெனில் இப்படியான எழுச்சி நிகழ்வுகளால் மக்களாதரவை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை கூட்டமைப்பிற்கில்லை! அவர்கள் சாதாரணமாக தேர்தலில் நிற்கிறார்கள். காணிகள் விடுவிப்பு விடயத்தில் கொஞ்சமாவது அக்கறையுடன் செயற்பட்டிருக்கிறார்கள்! பல விடயங்களில் அக்கறை காட்டியும் தோல்வி கண்டிருக்கிறார்கள். சில விடயங்களில் அக்கறை காட்டவேயில்லை! என் கருத்துப் படி ஷோ அல்ல இங்கே முக்கியம்! செயலே முக்கியம்! தேர்தலே மக்கள் ஆதரவைக் காட்ட வேண்டிய இடம்!

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

உலகின் பலமான சனநாயக நாடான அமெரிக்காவிலும் அதிக பெரிய சனநாயக நாடான இந்தியாவிலும் கூட மக்கள் பலத்தை காட்டுவது வழமை.

கூட்டமைப்பினர் செய்ய மாட்டார்கள். மக்களை மாக்களாக வைத்திருக்க எண்ணுபவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மக்களுக்குத் தலைமைதாங்கிச் செய்யவேண்டிய பல விடயங்களில் அக்கறையே காட்டுவதில்லை. ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டும் அழுத்தத்தைப் பிரயோகித்து அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கு வலுவிழந்துவிட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மாற்றுக் கட்சிகளும் உதிரிகளாக இருப்பதுதான் கூட்டமைப்பின் பலம்!

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் ஐந்தோ ஆறாக இருக்கும் நிலையில் கிடைக்கும் கதிரைகளுக்கு போட்டிபோடுவதுதான் அவர்களுடைய தற்போதைய பிரச்சினை.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல கிருபன். ஆனால் இன்று தமிழர்கள் வாழ்கிற ஓரளவாவது நடமாடக்கூடிய  வாழ்வு மீட்ட காணிகள் சர்வதேசன் தேசிய கட்சியின் பங்காளிகளாக பார்க்காமல் அங்கீகரிக்கிற சூழல் தருகிற அழுத்தம் எதுவும் புலம்பெயர்ந்த தமிழராலோ அல்லது ஏனைய கட்ச்சிகளாலோ வந்ததில்லை என்றால் அது தப்பா?  30 வருட போராட்டம் இனக்கொலையை தொடர்ந்து தேசிய கட்ச்சிகளிடம் அடிபணியாது வடக்கு கிழக்கு என பிழவுப்படாது  தமிழரை ஒரே அமைப்பாக கட்டிக்காத்தது சம்பந்தர்தான் என்பதை மறுக்கிறீர்களா?

சம்பந்தர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என சொல்லவில்லை. ஆனால் ஆனால் அவரைவிட பலமான ஒருத்தர் தயாராகும்வரைக்கும் மக்கள் ஆதரவு தழமற்ற அமைப்பு பலமற்ற யாழ்பாண எல்லைக்குள் குறுகிய பலமற்ற உதிரி யாழ்பாண இளைஞர்கள்  தலைக்கு கொழும்பு பிரமுகர்களின் தலைக்கு சுமையை மாற்ற மக்கள். அவர் வடகிழக்கை இணைக்கும் ஒரு அமைபையே ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் மக்கள்  ஒன்றும் மூடர்களில்லை நண்பா. ஆகாயத்தால் வந்து குதிக்கும் அதிதீவிர வாதிகள் வாணவேடிக்கைகாட்டி உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக்கண்ணர்கள் என்பதை மக்கள் அனுபவரீதியாக  அறிவார்கள்.   சம்பந்தரின் காலம் மட்டுபட்டது. மாற்று தலைவர்கள் மக்கள் ஆதரவு தளங்களோடு  உருவாகுவது அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

கூட்டமைப்புச் செய்யாது! ஏனெனில் இப்படியான எழுச்சி நிகழ்வுகளால் மக்களாதரவை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை கூட்டமைப்பிற்கில்லை! அவர்கள் சாதாரணமாக தேர்தலில் நிற்கிறார்கள். காணிகள் விடுவிப்பு விடயத்தில் கொஞ்சமாவது அக்கறையுடன் செயற்பட்டிருக்கிறார்கள்! பல விடயங்களில் அக்கறை காட்டியும் தோல்வி கண்டிருக்கிறார்கள். சில விடயங்களில் அக்கறை காட்டவேயில்லை! என் கருத்துப் படி ஷோ அல்ல இங்கே முக்கியம்! செயலே முக்கியம்! தேர்தலே மக்கள் ஆதரவைக் காட்ட வேண்டிய இடம்!

தமிழ்  மக்களுக்கு கூட்டமைப்பை பிரிப்பதோ

அதனை  பலவீனமாக்குவதோ  எவ்வளவு அழிவென்று  புரிகிறதோ

அதைவிட  பலமடங்கு

தமிழ்  மக்கள்  தங்:களைத்தவிர  வேறு  எவருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்

தம்மை  பலவீனப்படுததமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது

இன்று  நிகழும்  அத்தனை நான

நாசகாற கள்ள மௌனங்களுக்கும்

தனி மனிதசுயநல ஒப்பந்தங்களுக்கும் 

இதுவே  காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கள்ள மௌனங்கள் எனும் போது எனக்கு வேறு தரப்புகள் தான் நினைவுக்கு வருகிறதே தவிர கூட்டமைப்பு பெரிதாக வரவில்லை!

சம்மும் சும்மும் தாம் பேசுவது எல்லாவற்றையும் வெளியே மைக் பிடித்துப் பிரபலப் படுத்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எனக்கு கிடையாது! அவர்களுக்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கும் இல்லை என நினைக்கிறேன்! காரியம் ஆக வேண்டும் என்றால் சில விடயங்களை பிரபலமாக்காமல் இருப்பதே உசிதம் என்பது உங்களுக்குத் தெரியாததல்லவே!

மேலும், மேலே கிருபன் சொன்னது போல ரணிலின் ஆட்சியை கூட்டமைப்பு காப்பாற்றியது உண்மை. ஏன்? ரணில் போயிருந்தால் மகிந்த குழு வந்திருக்கும்! இப்போது யாழில் வெள்ளைவான்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருப்போம். எழுக தமிழ் திட்டமிடப் பட்டிருக்கவே மாட்டாது!

19 hours ago, ampanai said:

உலகின் பலமான சனநாயக நாடான அமெரிக்காவிலும் அதிக பெரிய சனநாயக நாடான இந்தியாவிலும் கூட மக்கள் பலத்தை காட்டுவது வழமை.

கூட்டமைப்பினர் செய்ய மாட்டார்கள். மக்களை மாக்களாக வைத்திருக்க எண்ணுபவர்கள். 

அமெரிக்காவில் மக்கள் பலத்தைக் காட்டினால் மாற்றம் வரும். ஏன்? அங்கே இனரீதியான பிரச்சினை எங்கள் ஊரில் இருப்பது போல இல்லை. ஒரு செயலாற்றும் சிஸ்ரம் இருக்கிறது.

தமிழர்கள் யாழில் கொடி பிடித்து ஊர்வலம் போனால் சிங்களவன் பார்த்துப் பயப்படுவானா? சர்வதேச ஊடகம் ஒன்றாவது கண்டு கொண்டதா? இல்லை. இதை நான் எழுக தமிழைச் சிறுமை செய்யும் வகையில் சொல்லவில்லை. இப்படியான சிம்பொலிக்கான நிகழ்வுகளை அதிகம் முன்னிலைப் படுத்தாமல் பயன் தரக்கூடிய விடயங்களில் சக்தியையும் நிதியையும் செலவு செய்ய வேண்டுமேயொழிய மக்கள் பேரணி நடத்தாததால் கூட்டமைப்பு ஏதோ தீமை செய்கிறது என்ற தவறான பிரச்சாரம் செய்யக் கூடாது!

கூட்டமைப்பு தான் செய்வதைச் செய்யட்டும், பேரவை எழுக தமிழ் நடத்தட்டும்! இரண்டுக்கும் இடம் இருக்கிறது தற்காலத்தில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கள்ள மௌனங்கள் எனும் போது எனக்கு வேறு தரப்புகள் தான் நினைவுக்கு வருகிறதே தவிர கூட்டமைப்பு பெரிதாக வரவில்லை!

சம்மும் சும்மும் தாம் பேசுவது எல்லாவற்றையும் வெளியே மைக் பிடித்துப் பிரபலப் படுத்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எனக்கு கிடையாது! அவர்களுக்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கும் இல்லை என நினைக்கிறேன்! காரியம் ஆக வேண்டும் என்றால் சில விடயங்களை பிரபலமாக்காமல் இருப்பதே உசிதம் என்பது உங்களுக்குத் தெரியாததல்லவே!

மேலும், மேலே கிருபன் சொன்னது போல ரணிலின் ஆட்சியை கூட்டமைப்பு காப்பாற்றியது உண்மை. ஏன்? ரணில் போயிருந்தால் மகிந்த குழு வந்திருக்கும்! இப்போது யாழில் வெள்ளைவான்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருப்போம். எழுக தமிழ் திட்டமிடப் பட்டிருக்கவே மாட்டாது!

அமெரிக்காவில் மக்கள் பலத்தைக் காட்டினால் மாற்றம் வரும். ஏன்? அங்கே இனரீதியான பிரச்சினை எங்கள் ஊரில் இருப்பது போல இல்லை. ஒரு செயலாற்றும் சிஸ்ரம் இருக்கிறது.

தமிழர்கள் யாழில் கொடி பிடித்து ஊர்வலம் போனால் சிங்களவன் பார்த்துப் பயப்படுவானா? சர்வதேச ஊடகம் ஒன்றாவது கண்டு கொண்டதா? இல்லை. இதை நான் எழுக தமிழைச் சிறுமை செய்யும் வகையில் சொல்லவில்லை. இப்படியான சிம்பொலிக்கான நிகழ்வுகளை அதிகம் முன்னிலைப் படுத்தாமல் பயன் தரக்கூடிய விடயங்களில் சக்தியையும் நிதியையும் செலவு செய்ய வேண்டுமேயொழிய மக்கள் பேரணி நடத்தாததால் கூட்டமைப்பு ஏதோ தீமை செய்கிறது என்ற தவறான பிரச்சாரம் செய்யக் கூடாது!

கூட்டமைப்பு தான் செய்வதைச் செய்யட்டும், பேரவை எழுக தமிழ் நடத்தட்டும்! இரண்டுக்கும் இடம் இருக்கிறது தற்காலத்தில்!

நீங்கள்   சொல்லும்  அரசியலும்  சிங்களவர்  விரும்புவதே...?

காலம்  காத்திருப்பதில்லை

Link to comment
Share on other sites

நமக்கு நிச்சயம் விடியும், நம் பிள்ளைகள் நிமிர்ந்து வாழும் காலம் தூரத்தில் இல்லை என்பதுதைத் தவிர, எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன். எமக்கும் விடியும் என்பதைத் தவிர என்னிடம் ஏது மந்திரச் சொற்கள்?.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.