Jump to content

தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள்


Recommended Posts

 

தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.

விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள்.

சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு புலிகளின் வான்படையை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டார்.

தொழில்நுட்பம், பயிற்சி, விமான கட்டுமானம் என்று அனைத்துத் தடைகளையும் கடந்து இயங்கிய புலிகளின் வான் படையின் மூலம், வெற்றிகரமாகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எத்தனை விமானங்கள், அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்ற புலனாய்வுத் தகவல்களைக் கூட சரியாகப் பெற முடியாமல் இலங்கை அரசு அந்தக் காலப்பகுதியில் தடுமாறியிருந்தது.

உலகிலேயே முப்படைகளையும் பெற்றிருந்து, இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்த புலிகளின் முப்படைகளின் வளர்ச்சிக்கும் அளப்பெரும் பணியாற்றியவர் இவர்.

‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, போராளிகளைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.
சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகள் பற்றியும் கற்பித்தவர்.

அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள்.

இறுதியில், இலங்கைப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் இந்த வீரமகன். (Sep 26, 2001)

என்றும் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் அண்ணா !

எனது கண்ணீர் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.