Jump to content

September 28-உலக ரேபீஸ் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் மருத்துவ மாணவனாக இருந்த சமயத்தில் பீடியாற்றிக் வார்ட்டில் அப்பாயிண்ட்மெண்ட் செய்துகொண்டிருந்த பொழுது ஒரு நாள் கிளிநொச்சியை சேர்ந்த தாய் தந்தையை யுத்தத்தால் இழந்த தனது அம்மம்மாவின் பராமரிப்பில் இருக்கும் ஒரு சிறுவன் ஒரு தனி அறையியில் இருப்பதை கண்டேன்..மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தான்..வாயில் இருந்து விழுங்க முடியாமல் உமிழ்நீர் கீழே வடிகிறது……அறையில் தற்செயலாக water tap திறக்கப்பட்ட போது அவன் பட்ட அவஸ்தையை பார்த்த போது தான் ரேபீஸ் நோய்க்கு ஏன் நீர்வெறுப்பு நோய் எனக்கூறுகிறார்கள் எனும் அர்த்தம் புரிந்தது…சுவாச உதவிகள் வழங்கப்படுகிறது..அவனது நோவை குறைக்க மருந்துகள் வழங்கப்படுகிறது..அவன் எம் கண்முன்னே இறக்கப்போறகின்றான் என அவனை பார்க்கும் எமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது,,.ஆனாலும் வைத்தியர்கள் அவனை காப்பாற்றிவிடுவார்கள் எனும் நம்பிக்கையில் அவனது அம்மம்மா,,,ஆனாலும் அன்றே அவன் இறந்துவிட்டான்..அனேகமாக அவனது ஹிப்போக்காம்பஸை ஆட்டாப்சிக்காக கொழும்பு MRI க்கு அனுப்பி இருப்பார்கள்

.ஆம் நடந்தது என்ன எனில் அந்த பையனுக்கு நாய் கடித்துவிட்டது..அவனது கெட்டகாலம் அது ஒரு விசர்நாய் …அம்மம்மாவுக்கு விளக்கம் இல்லாமல் அவன் காயத்துக்கு ஏதோ மஞ்சள்மா நல்லெண்ணை வைத்து கட்டிவிட்டார்..இந்த உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் உன்ன ஏன் ஜெசி லவ் பண்னினேன் என கார்த்தி கேட்பான்…அதுபோல உலகத்தில் ஆயிரக்கணக்கான நோய்கள் இருந்தாலும் இந்த நோய் ஏற்பட்டால் 100% மரணம் (100%motality) ஏற்படும் நோய் என்றால் இந்த ரேபிஸ் நோய் மட்டும் தான்…உலகில் உள்ள அத்தனை கடவுளர்கள் வந்தாலும் உங்கள் இறப்பை தடுக்கவே முடியாது…ஆனால் இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மை...நவீன மருத்துவத்திடம் எல்லா மதங்களும் அடியோடு தோற்று அம்மணப்பட்டு நிற்கும் சந்தர்ப்பமும் இதுவே

ரேபீஸ் என்பது விசர்நாய்க்கடி என அறியப்பட்டாதால் இது நாயின் கடி மூலமே ஏற்படும் என நினைத்துவிடாதீர்கள்…இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் மூலமாக பரவக்கூடியது…அது போல இன்னொரு கர்ணபரம்பரை கதை உண்டு..விசர்நாய் கடித்தால் தொப்புளை சுற்றி 28 ஊசிகள் போடவேண்டும் என்று..அதற்கு பயந்தே பல சனம் நாய் கடித்தாலும் வைத்தியசாலைக்கு வருவதில்லை,,,ஆனாலும் குஷியான விஜெய் ஜோதிகாவின் தொப்புளை பார்த்து அவர்கள் இருவருக்குமிடையில் பெரும் சண்டை வந்ததை பார்த்து பீதியடைந்த வைத்தியர்கள் தொப்புள் மேட்டரை விட்டுவிட்டு கைகளில் 4 ஊசி மட்டும் போட தொடங்கிவிட்டார்கள்..மகிழ்ச்சி தானே இனி…

ரேபீஸ் என்பது சிங்கிள் RNA கொண்ட ஒரு வைரசு….இதற்கு நரம்புகள் என்றால் அலாதிப்பிரியம்….எமது உடலில் தொற்றியவுடன் பெரிபெரல் நரம்புகள் வழியாக ஸ்பைனல் கேங்கிலியன் எனும் பகுதியை அடைந்து அங்கே பெருக்கமடைந்து மிகவேகமாக மூளைக்கு சென்று என்செப்பலைட்டிஸ் எனும் நிலையை உருவாக்கிவிடும்…பின்னர் உடலின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு பரவலடையும்..நரம்பு தொகுதி பாதிப்படைவதால் தொகுதிதசைகளின் இயக்கம் பாதிக்கப்படும்..சுவாசத்தசைகள் பாதிக்கப்பட்டு சுவாசச்செயற்பாடு காம்பிரமைஸ் ஆகும்…விழுங்கும் தசைகள் பாதிப்படைந்து விழுங்க முடியாத நிலை ஏற்படும்..தண்ணீரை காண்கையில் அல்லது தண்ணீர் ஓடும் சத்தத்தை கேட்கையில் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து கடும் வலி ஏற்படுவதுடன் சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால் எங்கே உயிர் போய்விடுமோ எனும் பயத்தில் நோயளிகள் துடிப்பார்கள்..இதனால் தான் ரேபிசுக்கு நீர்வெறுப்பு நோய் எனும் பெயர் ஏற்பட்டது,,அது போல ஏனைய தசைகள் வலுவிழந்து அவற்றின் செயற்பாட்டுக்குரிய தொழிழ்கள் காம்பிரமைஸ் ஆகும்…இறுதியில் மரணம் சம்பவிக்கும்

அப்படியானால் எம்மை எப்படி தற்காத்துக்கொள்வது?
முதலில் நாய் ஒன்று கடித்தால் உடனடியாக சவர்க்காரம் கொண்டு ஒரு 5 நிமிடங்கள் கழுவுங்கள்
முடியுமனால் 70% ஸ்பிரிட் ஸ்பிரிட்கொண்டு தூய்மைப்படுத்துங்கள்
வைத்தியசாலையில் கடந்த 5 வருடங்களில் ஏற்பூசி போடாவிட்டால் போடுங்கள்

அடுத்த விடயம் தான் முக்கியமானது….விசர்நாய் தடுப்பூசி போடவேண்டுமா இல்லையா எனும் வினா..இதை மருத்துவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..தயவுசெய்து நீங்களாக முடிவு எடுத்துவிடாதீர்கள்...ஏனெனில் உங்கள் உயிர் உங்கள் கையிலா இல்லையா என தீர்மாணிக்கும் இடம் இந்த இடமே..

இதற்கு மருத்துவர்கள் மருத்துவத்தில் கடுமையான கடி(major exposure)
சாதாரண கடி (minor exposure) என இரண்டு வகையாக பிரித்து மருத்துவம் வழங்குவார்கள்

major exposure எனும் கடுமையான/ஆபத்தான கடி என்றால் என்ன எனப்பார்த்தால்

1)குருதிப்பெருக்குடன் கூடிய ஒன்று அல்லது பல கடி(bite) உங்கள் தலை,கழுத்து முகம் மேல் புயம்,உள்ளங்கை,விரல் நுனி,மர்ம உறுப்புகள் மீது ஏற்பட்டாலோ
2)உடலின் எந்தப்பகுதியிலும் மிகவும் ஆழமான கடி ஏற்பட்டு இரத்தம் சீறிப்பாயும் நிலைமை ஏற்படும் போது
3)கடி அல்லாமல் முகத்தில் அல்லது கழுத்தில் சிராய்ப்பு ஏழ்ர்பட்டு குருதிப்பெருக்கு ஏற்பட்டாலோ
4)உங்கள் சீத அகவணியில் நாயின் எச்சில் பட்டாலோ
5)வளர்ப்பு நாயை விட ஏனைய காட்டு விலங்குகள் கடித்தல்

உங்களுக்கு நாம் கடி ஏற்பட்ட இடத்தில் இமினோகுளோபின் எனும் ஊசியும் முதலாம் நாள்,3ஆம்.7ஆம்,13ஆம் நாளில் உங்களுக்கு மேல்கையில் ரேபீஸ்வக்சீன் ஊசியும் போட வேண்டும்…
ஆனாலும் அந்த நாய்க்கு வருடம் வருடமாக இந்த வருடத்திலும் கடந்த வருடத்திலும் (கடைசி இரண்டு வருடங்களில் இரண்டு ஊசி) ஏஆர்வி ஊசி போடப்பட்டிருந்தால் (கடைசி ஊசி போடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்க வேண்டும்) இமினோகுளோபினோ வக்சீனோ போடமால் அந்த நாயை 14 நாட்கள் அவதானித்து நாய்க்கு ஏதும் பிரச்சனை வந்தால் பின்னர் நமக்கு ஊசி போடலாம்

minor exposure எனப்படும் சாதாரண கடி என்பது நாயின் ஆழமான கடி இல்லாமல் நகக்கீறல் மூலமாகவோஅல்லது இரத்தம் பெருக்கெடுக்காமல் கசிந்துகொண்டிருந்தால் அல்லது மிகவும் மேலோட்டமான காயமாக இருந்தால் இவர்களுக்கு இமினோகுளோபின் கொடுக்கத்தேவை இல்லை..கடி ஏர்பட்ட நாளிலும்,3ஆம்,7ஆம்,13ஆம் நாளில் வக்சீன் மட்டும் கொடுத்தால் போது..
minor exposure கடி ஏற்படுத்திய நாய் கடந்த வருடத்தில் ARV ஊசி போட்டிருந்தால்(இரண்டு வருடங்கள் இல்லை) உங்களுக்கு வக்சீன் தேவையில்லை..ஆனால் நாய்க்கு இறுதி ஊசி போடப்பட்டு ஒரு மாதம் கடந்திருக்க வேண்டும்…

அதுபோல நீங்கள் பாலூட்டும் தாயாகவோ கர்ப்பிணியாகவோ இருந்தாலும் ரேபீஸ் வக்சின் போட்டுக்கொள்ளலாம்..ரேபீஸ் மனிதன் மூலம் இன்னொரு மனிதனுக்கு பரவுவது இதுவரை பதிவுசெய்யப்படவில்லை

ஆனாலும் காயமேற்படாத தோலின் மீது விசர்நாயின் உமிழ்நீர் பட்டாலோ
தெரியாமல் விசர்நாயை குளிப்பாட்டி அதன் சாப்பாட்டுக்கோப்பையை தொட்டாலோ
தெரியாமல் விசர்நாய் சாப்பிட்ட உணவை உண்டாலோ
விசர்நாய் கிணற்றில் விழுந்து இறந்து அந்த நீரை நீங்கள் குடித்தாலோ
ரேபீஸ் தொற்றுள்ள கோமாதா/ஆட்டின் பாலை கொதிக்க வைக்காமல் குடித்தாலோ
வீட்டு எலி கடித்தாலோ ரேபீஸ் வியாதி வராது..பயப்படத்தேவையில்லை…இமினோகுளோபினோ வக்சீனோ தேவையில்லை…

பாவம் அந்த அம்மம்மாவுக்கு ரேபீஸ் சம்மந்தமான அறிவு இருந்திருந்தால் அந்த சிறுவனை காப்பாற்றியிருக்கலாம்…இந்த சமூக வலைத்தளங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அக்கபூர்வமான விடயங்களை மக்களுக்கு கடத்துவதில் சமூக வலைத்தளங்கள் மிகவும் துணையாக இருக்கிறது...விசர்நாய் கடி ஏற்பட்டு சிகிற்சைக்கு செல்லாமல் இறந்த பெந்தக்கோஸ்தே ஃபாதர் ஒருவரையும் நான் அறிவேன்...அப்படியான முட்டாள்களுக்கு இதை வாசிக்கும் நீங்கள் இந்த விடையத்தை இடித்து கூறுங்கள்

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு விரையுங்கள்
உங்களையும் அன்புக்குரியவர்களையும் காத்துக்கொள்ளுங்கள்
அன்புடன் Dr.Grey

Image may contain: one or more people and text
No photo description available.
Image may contain: night
Image may contain: 1 person, text
 
நன்றி முகனூல்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.