Jump to content

நமது சூரிய மண்டலங் களுக்கு அப்பால் 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


Recommended Posts

நமது சூரிய மண்டலங் களுக்கு அப்பால் 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் கிளீஸ்-581 என்ற நட்சத்திரத்தை சுற்றி சூப்பர் பூமி என்ற புதிய கிரகம் சுற்றி வருவதை கண்டறிந்தனர். இந்த புதியகிரகம் பூமியை போலவே உள்ளது.

இப்போது கரோட் எக்சோ 1 பி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள் ளனர். மானோசிரஸ் என்ற நட்சத்திர கூட்டங்களை இந்த புதிய கிரகம் சுற்றி வருகிறது.

இந்த நட்சத்திர கூட்டங்களில் இருப்பது 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளது.

பிரான்சு நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய கரோட் என்ற விண்கலம் இந்த புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

குரு கிரகத்தை விட 1.3 மடங்கு பெரியதாக உள்ள இந்த புதிய கிரகம் சூரியனைப் போலவே உள்ளது. அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகத்தில் தீப்பிளம்புகள், பாறைகள் வெடித்து சிதறுவதாகவும் விண்கலம் தகவல் அனுப்பி உள்ளது.

லங்கா ஸ்ரீ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.