Jump to content

கோத்தாபய ஜனாதிபதியானால் தமிழருக்கு தீமையில்லை – விக்னேஸ்வரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்கிருந்து பலர் அங்கு போய் வாக்களிக்க ஆவலாய் இருக்கினம்.ரொம்ப மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப இங்கிருந்து பலர் அங்கு போய் வாக்களிக்க ஆவலாய் இருக்கினம்.ரொம்ப மகிழ்ச்சி.

😂 ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை துறந்தவர் இப்ப அரசனை நம்பி புருசன கைவிட்ட நிலைக்கு ஆளாவார் போல கிடக்கு. இதுக்க நாங்க வேற போகோணுமா? 😂.

Link to comment
Share on other sites

இந்த திரியில் உள்ள மூலப்பேட்டியை மீண்டும் பார்க்கும்பொழுது அதில் விக்கி அவர்கள் எந்த மானத்தமிழனும் கொத்தாவிற்கு வாக்களிக்க மாட்டான் என கூறுகின்றார். அது தான் கள யதார்த்தம் என்பதை  கூறும் அதேவேளை கீழ்வரும் கூற்றையும் முன்வைக்கின்றார். 

On 9/30/2019 at 6:19 AM, ampanai said:

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்.

இதை நான் புரிந்து கொண்டது இவ்வாறாக. தமிழர் தரப்பு கோத்தாவை வெல்ல வைத்தால், இல்லை தமிழர் ஆதரவு இல்லாமலும் அவர் வென்றால் அது தமிழ் இனத்திற்கு சாதகமாக அமையலாம் என்பதே, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி விக்கி ஐயாவிடம். நீங்கள் நீதியரசராக இருந்து யாருக்குமே தண்டனை வழங்கவில்லையோ..??!

கோத்தபாய என்பவர்.. ஒரு இனப்படுகொலை.. அதாவது மனித இனப்படுகொலைக் குற்றவாளி. அதுபோக உள்நாட்டிலேயே.. ஆட்கடத்தல்.. கொலை என்று செய்த மனிதர். ஒரு இனத்தின் சுதந்திர விடுதலைப் போராளிகளைக் கொன்று குவித்த ஒருவர்.

அந்தக் குற்றவாளி தப்பித்து... ஒரு உயர் பதவிக்கு வருதல் என்பது.. மொத்த மனித இனத்துக்குமே ஆபத்தானது என்பது வெளிப்படை. அதுக்கும் மேல்.. ஒரு பகிரங்கக் குற்றவாளி.. தண்டனைகள் ஏதுமின்றி.. தப்பி.. ஒரு நாட்டின் உயர் பதவிக்கு வருதல் என்பது.. இந்த உலகில் இருக்கும் நீதிநடைமுறைகள் மீது முழு நம்பிக்கையீனத்தையே மக்களிடம் பதிவு செய்யும். அது எந்தளவுக்கு இந்த உலகை ஒழுங்குபடுத்தும் என்று விளங்கவில்லை.

கோத்தா.. உண்மையில்.. வேட்பாளராக இருக்கவே தகுதியற்றவர். அவர் இருக்க வேண்டிய இடம் தூக்கு மேடை.

தமிழர்களைப் பொறுத்தவரை.. கோத்தா.. சஜித் வேறுவேறல்ல. எல்லாமே.. சிங்கள பெளத்த பேரினவாத வெறிக்குள் மூழ்க்கியதுகள் தான்.  ஆனால்.. ஒரு மனித இனத்துக்கு எதிரான குற்றவாளியை ஆட்சிப் பீடம் ஏற்ற தமிழர்கள் மனிதர்களாக இருந்து கொண்டு கோத்தாவுக்கு வாக்களிக்க முடியுமா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கனும். அதாவது தமிழர்கள் தாங்கள்.. மனிதர்களா இல்லையா என்பதை. 

Link to comment
Share on other sites

எழுத்துமூலமான உடன்படிக்கைக்கு வரமாட்டொமென கோத்தாவும் சஜித்தும் முடிவெடுத்தால் மகிந்த தரப்பு வெற்றி உறுதியாகும். அத்தகைய தருணத்தில் இருவரையும் எதிர்த்து  இரண்டாம் சுற்று தேர்தலுக்கு வழிவகுக்க முடியுமா என்பது பற்றி யோசிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2019 at 2:54 PM, Lara said:

இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதனால் தான் பல நாடுகளும் இலங்கையுடன் தொடர்புகளை பேணுவதில் ஆர்வம் காட்டுகின்றன. போர்க்காலத்திலும் இந்நாடுகளின் உதவியை இலங்கை பெற்றது.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் 3 நாடுகளுடனும் தனது தொடர்புகளை பேணும். கடந்த காலங்களில் சீனாவுக்கு ஒரு அபிவிருத்தி திட்டம் கொடுத்தால் இந்தியாவுக்கு ஒரு அபிவிருத்தி திட்டம் கொடுத்தது கூட இச்சமநிலையை பேணுவதற்கு தான். அதே போல் அமெரிக்காவுடனும் நட்பை பேணி வருகிறது.

ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த சீனாவுடனும் கோத்தா அமெரிக்காவுடனும் பசில் இந்தியாவுடனும் தமது தொடர்புகளை பேணி வருபவர்கள். தனிப்பட்ட ரீதியிலும் கோத்தாவுக்கு 3 நாடுகளின் ஆதரவும் உள்ளது. 

தவிர கோத்தா அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகளை பேணி வருபவர் என்பதால் எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவம் இலங்கைக்குள் கால் பதிக்க கோத்தா அனுமதிக்கலாம். 

2007 இல் மகிந்த ஆட்சியின் போது அமெரிக்காவுடனான ACSA உடன்படிக்கையில் கோத்தா கையெழுத்திட்டவர் என்பதை மறந்து விட கூடாது.

லாரா 
இதுக்குள் பல விடயங்களை நீங்கள் மீள் பரிசீலனை செய்ய மறந்துவிடீர்கள் 

அவர் இவருடன் ... இவர் அவருடன் என்பதை எல்லாம் சின்னவீடு போலவும்  
போய்  படுத்துட்டு வருவதுபோலவும் நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை. 
அமெரிக்க - சீன பொருளாதார போர் என்பது அவர்களின் நீண்ட கால திட்டத்தின் ஊடக 
செயல்படுத்த படுவது .... மற்ற நாடுகளில் யாரை கையுக்குள் போட்டு என்ன உடன்படிக்கை செய்வது என்றுதான் அவர்கள் சிந்திக்கிறார்கள் .. இவர்கள் ஆதரவு நிலைமை அவர்களுக்கு தேவை இல்லை.

மகிந்த அன் கோ  சீனவை உதறும் நிலையில் இருப்பது என்றால் 
இப்போதே அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் நன்று ... அப்படி இருந்தும் அரசிலுக்கு 
ஏன் வந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் கருப்பு  பணம்தான் காரணம். 

லைக்கா நிறுவனம் அன்-லிமிடெட் பட்ஜெட்டில் ரஜனியை வைத்து படம் எடுக்கிறது என்ற
செய்தியிலேயே மகிந்த அன் கோ எவ்வளவு கருப்பு பணத்தை வைத்திருக்கிறது என்று உங்களுக்கு கொஞ்சமாவது புரியவேண்டும். அவ்வளவும் சீனாவின் பிடியில்தான் இருக்கிறது 
தற்போது திறந்த தாமரை கோபுரத்துக்கு கேட்ச் போட்டதே கொஞ்சத்தை தன்னும் வெள்ளை ஆக்கத்தான் 
சீனாவில் இல்லாத சீன வங்கி ஒன்று பைனான்ஸ் பண்ணியதை செய்தியில் படித்திருப்பீர்கள். அந்த பணம் முழுதும் மகிந்த அன் கோவின் உடையது 

அமெரிக்க முதிலீடுகளுக்கும்  சீன முதலீடுகளுக்குமான பாரிய வித்தியாசத்தை நீங்கள் இன்னும் புரியவில்லை என்று எண்ணுகிறேன் .......அமெரிக்க முதிலீடுகள் எல்லாம் தனியார் முதலீடுகள் தனியார் லாபம் சார்ந்தது அரசு பாதுகாப்பு உறுதி கொடுக்கும்.  சீன முதலீடுகள் தனியார் பெயரில் ஆனவை முழுதாக 
பின்திரையில் சீன அரசின் பங்கு இருக்கும். இங்கு அமெரிக்க  கனடா வங்கூவர் போன்ற இடங்களில்  சீன பிரஜைகளின்  ஊடாக ரியல் ஸ்டேட் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் பணம் சீன அரசுதான் கொடுக்கிறது 
தொலைநோக்கு பார்வை கொண்ட  முதலில் பித்தல்தாலாட்டம் போல தோன்றும் முதலீடுகள் ஆனால் இப்போ 15-20 வருடம் கழித்து 30% வரையான ரியல் ஸ்டெடை கையில் போட்டு உள்ளார்கள்.

அமெரிக்காவுக்கு எப்போதும் தோழனாக இரு என்று பாகிஸ்தானுக்கு 1953லேயே திட்டம் வகுத்து கொடுத்தது 
சீனாதான் இலங்கைக்கு இனி ஒரு தமிழனே ஜனாதிபதி ஆனால் கூட சீனாவை தள்ளி செயல்படுத்த ஒன்றும் இல்லை  எல்லாம் நீண்ட கால ஒப்பந்தங்கள் இந்த காசை பிடி ஆளைவிடு என்றும் விலக முடியாத  பில்லியன் டொலர் ஒப்பந்தங்கள்  இனி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க முடியுமே தவிர நிறுத்தினால் நாட்டின் பொருளாதார  நிலையை அடிபாதாளத்தில் தள்ளிவிடும். 

அமேரிக்கா - இந்தியா .... இனி  வரும் காலங்கள் அமெரிக்க சீனாவுக்கான பாரிய பொருளாதார போரின் உச்ச  காலம் 2040இல் சீனாவை முதலாவது நாடக வரவிடாது தடுக்க அமெரிக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்யும்  அதன்  பகுதியாகவே ட்ரம்மை ஜனாதிபதி ஆக்கி லூசுத்தனம் எல்லாம் செய்தும் ஒன்றும்  வேலைக்கு ஆவதுபோல் தெரியவில்லை. சீனாவுக்கு நன்கு தெரியும் இறுதியாக வட கொரியா மீது போரை திணித்து  இயலா தன்மையை காட்டுவார்கள் என்று ... அதுதான் நேற்று நடந்த 70வது அணிவகுப்பில்  
40 வீதம் உலகமே பார்த்திராத புது ஆயுதங்களை கொண்டுவந்து காட்டி விட்டு போனார்கள் நீங்களும் பார்த்திருப்பீர்கள். இப்போதும் இங்கு சீன இறக்குமதி கூடியும் எமது ஏற்றுமதி குறைந்துதான் இருக்கிறது ட்ரம்மின்  ட்ரேட் சண்டை டிவி காரர்களுக்கு செய்தி போட மட்டுமே உதவி இருக்கிறது. 5ஜி டெக்னோலஜியை  பார்த்தால்  எமக்கு இரண்டு தெரிவுதான் உண்டு ஒன்று இன்னும் 5வருடம் பின் தள்ளுவது அல்லது சீனாவிடம் பெற்றுக்கொள்வது.  பின் தள்ளுவது என்பது உலக பொருளாதார நிலமையிலேயே பின்தள்ளும் என்பதால்  இனி அது  ஒரு தெரிவே இல்லை .. ஆகவே மற்றதுதான். 
இந்தியா இப்போதும் உள்நாட்டு ஊழலும்  குடும்ப அரசியலும் என்று  காசுமீரை கூட கையில் போட்டுக்கொள்ள முடியாத  ஒரு கேடு கெட்ட அரசியலை செய்துகொண்டு இருக்கிறது தொலைநோக்கு பார்வை இருந்து இருப்பின்  1970களிலேயே காஸ்மீர் மக்களை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பி இருக்க முடியும் அத்தோடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காசுமீரை கூட மீட்டு இருக்க முடியும் .... இன்று சொந்த ஆமியை பலிகொடுத்து  பிரித்த பங்களாதேசம் கூட இந்தியாவுக்கு நண்பனாக இல்லை ... நட்பு நாடு என்று சொல்ல  அருகில் ஒரு நாடு இல்லை இந்த கோமாளி நிலைதான் தொடருகிறது. இந்த லட்ஷணத்தில் சீனாவின் தொலைநோக்கு  விரிவுபடுத்தல்களை இந்தியா புரிந்து செயல்படும் எனும் எண்ணம் எனக்கு அறவே இல்லை. 

கோத்த ஜனாதிபதி ஆனால் .... 
மகிந்த அன்  கோ  இலங்கையில் அசுர வளர்ச்சி அடைவார்கள்  சீனாவின் உதவியுடன் 
அனைத்து கறுப்பு பணத்தையும் வெள்ளையாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை ஓரளவு தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள்  இவர்களின் எல்லா முதலீட்டிலும் சீனாவும் பின்புறம் இருக்கும் 

அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே வழி  போர் குற்றத்தை கையில் எடுத்து நிலைமையை மாற்றுவது 
இன பிரச்சனை இருக்கிறது என்பதை யு ன் ஊடாக ஏற்றுக்கொள்வது. இதுதான் தமிழருக்கும் நன்மை கொடுக்க கூடியது  அப்போது ஒரு ஆளுமையான தமிழர் தரப்பு இருந்தால்  யூ ன் ஊடாக எதய்யாவது பெற்றுக்கொள்ள முடியும். 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

லாரா 
இதுக்குள் பல விடயங்களை நீங்கள் மீள் பரிசீலனை செய்ய மறந்துவிடீர்கள் 

அவர் இவருடன் ... இவர் அவருடன் என்பதை எல்லாம் சின்னவீடு போலவும்  
போய்  படுத்துட்டு வருவதுபோலவும் நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை. 
அமெரிக்க - சீன பொருளாதார போர் என்பது அவர்களின் நீண்ட கால திட்டத்தின் ஊடக 
செயல்படுத்த படுவது .... மற்ற நாடுகளில் யாரை கையுக்குள் போட்டு என்ன உடன்படிக்கை செய்வது என்றுதான் அவர்கள் சிந்திக்கிறார்கள் .. இவர்கள் ஆதரவு நிலைமை அவர்களுக்கு தேவை இல்லை.

மகிந்த அன் கோ  சீனவை உதறும் நிலையில் இருப்பது என்றால் 
இப்போதே அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் நன்று ... அப்படி இருந்தும் அரசிலுக்கு 
ஏன் வந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் கருப்பு  பணம்தான் காரணம். 

நீங்கள் எனது கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். 😀

நான் சொல்ல வந்தது மகிந்த சீனாவுடனும் கோத்தா அமெரிக்காவுடனும் பசில் இந்தியாவுடனும் தொடர்புகளை பேணி வருபவர்கள். தனிப்பட்ட ரீதியிலும் கோத்தாவுக்கு 3 நாடுகளின் ஆதரவும் உள்ளது. 3 நாடுகளையும் ராஜபக்ச குடும்பம் கையாள்வார்கள் என்ற அர்த்தத்தில்.

ராஜபக்ச குடும்பம் சீனாவை உதறும் என எங்கும் நான் கூறவில்லை. கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அவர் சீனா சார்ந்து செல்வார், எனவே அமெரிக்காவும் இந்தியாவும் கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு சார்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விக்னேஸ்வரனின் கூற்றை மறுதலித்து தான் எனது பதில்கள் அமைந்தன.

ராஜபக்ச குடும்பம் சீனாவுக்கு இடமளித்தாலும் இன்னொரு பக்கம் அமெரிக்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அமெரிக்க விருப்பங்களையும் நிறைவேற்றும். எனவே அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக போக மாட்டாது. இது தான் நான் கூற வந்தது. (இந்தியா அமெரிக்கா பக்கம் என்பதால் அதை தனியாக சேர்க்க வேண்டியதில்லை).

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

கோத்த ஜனாதிபதி ஆனால் .... 
மகிந்த அன்  கோ  இலங்கையில் அசுர வளர்ச்சி அடைவார்கள்  சீனாவின் உதவியுடன் 
அனைத்து கறுப்பு பணத்தையும் வெள்ளையாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை ஓரளவு தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள்  இவர்களின் எல்லா முதலீட்டிலும் சீனாவும் பின்புறம் இருக்கும் 

அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே வழி  போர் குற்றத்தை கையில் எடுத்து நிலைமையை மாற்றுவது 
இன பிரச்சனை இருக்கிறது என்பதை யு ன் ஊடாக ஏற்றுக்கொள்வது. இதுதான் தமிழருக்கும் நன்மை கொடுக்க கூடியது  அப்போது ஒரு ஆளுமையான தமிழர் தரப்பு இருந்தால்  யூ ன் ஊடாக எதய்யாவது பெற்றுக்கொள்ள முடியும். 

ட்ரம்ப் ஐநாக்கு எதிரானவர். போன வருடம் UNHRC இலிருந்து அமெரிக்காவை விலக்கியவர். அதற்காக அமெரிக்காவில் வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் ஐநா மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிட்டும் என நினைக்க கூடாது. 

கோத்தா தனியே சீனாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் போக வெளிக்கிட்டால் ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்ற தாக்குதல் திட்டங்களை அமெரிக்கா கைவசம் வைத்திருக்கும். தமிழர்களுக்கு தீர்வு தந்து தான் இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய தேவை இல்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

இதைத்தான் விக்கி அவர்களும் வேறு விதமாக கூறி உள்ளார்.

கோத்தா நிச்சயம் தூக்கு மேடைக்கு செல்ல வேண்டியவர். ஆனால், எம்மால் அதை செய்ய முடியாது. எமது இறுதி நோக்கமும் அதுவல்ல. ஒரு அரசியல் தீர்வே.

ஐ,தே,க. கூட்டம் வென்றால் ஒன்றும் நடக்காது. அரைச்ச மாவையே மீண்டும் அரைப்பார்கள் அந்த ஏமாற்றுபேர்வழிகள்.

கோத்தா என்ற பெயரை விட்டுவிட்டு, மகிந்த அண்ட் கோ கூட்டத்தில் என்று பார்க்கலாம். இந்த கூட்டத்தை வெல்ல வைப்பது ஒரு அமெரிக்க தலையீட்டை வலுவடைய செய்யும்.

எனவே, மகிந்த அண்ட் கோவிற்கு வாக்களிப்பது என்பது மானப்பிரச்சனை தான். இருந்தாலும் உணர்வுப்பூரமாக இல்லாமல் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய வரலாற்று நிலையில் எமது சரித்திரம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

ட்ரம்ப் ஐநாக்கு எதிரானவர். போன வருடம் UNHRC இலிருந்து அமெரிக்காவை விலக்கியவர். அதற்காக அமெரிக்காவில் வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் ஐநா மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிட்டும் என நினைக்க கூடாது. 

கோத்தா தனியே சீனாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் போக வெளிக்கிட்டால் ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்ற தாக்குதல் திட்டங்களை அமெரிக்கா கைவசம் வைத்திருக்கும். தமிழர்களுக்கு தீர்வு தந்து தான் இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய தேவை இல்லை.

நான் எழுதியது இனி ஒரு தமிழரே அல்லது நீங்களே ஜனாதிபதி ஆனால் கூட 
சீனாவை புறம்தள்ள முடியாது அப்படி ஒரு சக்தி இனி இல்லை அல்லது தற்கொலைக்கு சமமாக 
நாட்டை அடிபாதாளத்துக்கு தள்ள வேண்டும் ... அப்படி தள்ளினாலும் வந்து தூக்கிவிடும் நிலையில் 
இந்திய அமெரிக்க பொருத்தாளர முதலீடுகள் இல்லை. 
இங்கிருக்கும் பலபேர்கள் தமிழ் பத்திரிககைகள் மூலம் செய்தி வாசித்து அதன் அடிப்படையில் பேசுபவர்கள் 
தமிழ் செய்தி எழுதுபவனுக்கு எக்கோனோமிக்ஸ் என்பது அறவே தெரியாது.
அந்த அடிப்படையில்தான் மைத்திரி ஜனாதிபதி ஆனபோது இங்கே அல்லி கொட்டிக்கொண்டு இருந்தார்கள் 
நான் ஒருவனே தனியாக எழுதிக்கொண்டு இருந்தேன் சீனாவை புறந்தள்ளும் நிலையில் இலங்கை பொருளாதாரம் இல்லை என்று. (நானும் நீங்களும் இலங்கை துறைமுகம் சார்ந்து பேசியதை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் அதில் நீங்கள் எழுதியதுதான் உண்மை நிலை) 

கோத்தவையோ கோத்தாவின் அப்பனையோ நம்பி சீனா முதலீடு செய்வதில்லை 
உள்நாட்டு அரசியலை குழப்புவது முடிந்தால் கிளர்ச்சிகளை உருவாக்கி போரை உண்டுபண்ணுவதை 
அமெரிக்க இறுதியாக செய்யும் என்பதை சீனா 20 வருடம் முன்பே எதிர்பார்த்தே எல்லா நாட்டிலும் 
முதலீடுகளை செய்துவருகிறது. உள்நாட்டு அரசியல் சூழலை நம்பி சீனா இல்லை ... மாறாக எந்த சூழலிலும்  உள்நாடு  சீனாவை நம்பி ஆகவேண்டும் எனும் சூழ்நிலையை உள்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கின்றது. 
இது இலங்கையில் இல்லை அனைத்து ஆபிரிக்க நாடுகளிலும் இதுதான் நிலை. 

ஆனால் மகிந்த அன் கோ புலிவாலை பிடித்தவர்கள் போல இனி சீனாவை விடுவது என்றால் 
இப்போதே அரசியலையே விடுவது அவர்களுக்கு மிகுந்த லாபம்.... அதையுமீறி வருகிறார்கள் என்றால் 
அனைத்து நகர்வுகளிலும் சீனா இருக்க்கிறது என்பதுதான் அதன் பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

நீங்கள் எனது கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். 😀

நான் சொல்ல வந்தது மகிந்த சீனாவுடனும் கோத்தா அமெரிக்காவுடனும் பசில் இந்தியாவுடனும் தொடர்புகளை பேணி வருபவர்கள். தனிப்பட்ட ரீதியிலும் கோத்தாவுக்கு 3 நாடுகளின் ஆதரவும் உள்ளது. 3 நாடுகளையும் ராஜபக்ச குடும்பம் கையாள்வார்கள் என்ற அர்த்தத்தில்.

ராஜபக்ச குடும்பம் சீனாவை உதறும் என எங்கும் நான் கூறவில்லை. கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அவர் சீனா சார்ந்து செல்வார், எனவே அமெரிக்காவும் இந்தியாவும் கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு சார்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விக்னேஸ்வரனின் கூற்றை மறுதலித்து தான் எனது பதில்கள் அமைந்தன.

ராஜபக்ச குடும்பம் சீனாவுக்கு இடமளித்தாலும் இன்னொரு பக்கம் அமெரிக்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அமெரிக்க விருப்பங்களையும் நிறைவேற்றும். எனவே அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக போக மாட்டாது. இது தான் நான் கூற வந்தது. (இந்தியா அமெரிக்கா பக்கம் என்பதால் அதை தனியாக சேர்க்க வேண்டியதில்லை).

இந்த சித்து விளையாட்டில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன லாபம்?
இது உங்களுக்கே தெரியும்போது அமெரிக்க இந்திய வெளியுறவுக்கு புரியாதா?
மகிந்த இந்தியா போவதும் வருவதானாலும் மகிந்தவை நம்பும் அந்தளவு முட்டால்களாக 
இந்தியா இல்லை. அதை வைத்து தமிழர் தரப்பை  தமிழ்நாட்டு அரசியலை சூடு ஏத்த 
ஒரு உந்தாக இருப்பதால் அதை செய்து வருகிறார்கள். 
மகிந்த அன் கோ சீனாவிடம் சரணாகதி அடைந்தவர்கள் அவர்களுக்கு வேறு வழி  இனி இல்லை என்பதை 
சிறு பிள்ளையும் அறியும். 

Link to comment
Share on other sites

5 hours ago, Maruthankerny said:

நான் எழுதியது இனி ஒரு தமிழரே அல்லது நீங்களே ஜனாதிபதி ஆனால் கூட 
சீனாவை புறம்தள்ள முடியாது அப்படி ஒரு சக்தி இனி இல்லை அல்லது தற்கொலைக்கு சமமாக 
நாட்டை அடிபாதாளத்துக்கு தள்ள வேண்டும் ... அப்படி தள்ளினாலும் வந்து தூக்கிவிடும் நிலையில் 
இந்திய அமெரிக்க பொருத்தாளர முதலீடுகள் இல்லை. 
இங்கிருக்கும் பலபேர்கள் தமிழ் பத்திரிககைகள் மூலம் செய்தி வாசித்து அதன் அடிப்படையில் பேசுபவர்கள் 
தமிழ் செய்தி எழுதுபவனுக்கு எக்கோனோமிக்ஸ் என்பது அறவே தெரியாது.
அந்த அடிப்படையில்தான் மைத்திரி ஜனாதிபதி ஆனபோது இங்கே அல்லி கொட்டிக்கொண்டு இருந்தார்கள் 
நான் ஒருவனே தனியாக எழுதிக்கொண்டு இருந்தேன் சீனாவை புறந்தள்ளும் நிலையில் இலங்கை பொருளாதாரம் இல்லை என்று. (நானும் நீங்களும் இலங்கை துறைமுகம் சார்ந்து பேசியதை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் அதில் நீங்கள் எழுதியதுதான் உண்மை நிலை) 

கோத்தவையோ கோத்தாவின் அப்பனையோ நம்பி சீனா முதலீடு செய்வதில்லை 
உள்நாட்டு அரசியலை குழப்புவது முடிந்தால் கிளர்ச்சிகளை உருவாக்கி போரை உண்டுபண்ணுவதை 
அமெரிக்க இறுதியாக செய்யும் என்பதை சீனா 20 வருடம் முன்பே எதிர்பார்த்தே எல்லா நாட்டிலும் 
முதலீடுகளை செய்துவருகிறது. உள்நாட்டு அரசியல் சூழலை நம்பி சீனா இல்லை ... மாறாக எந்த சூழலிலும்  உள்நாடு  சீனாவை நம்பி ஆகவேண்டும் எனும் சூழ்நிலையை உள்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கின்றது. 
இது இலங்கையில் இல்லை அனைத்து ஆபிரிக்க நாடுகளிலும் இதுதான் நிலை. 

ஆனால் மகிந்த அன் கோ புலிவாலை பிடித்தவர்கள் போல இனி சீனாவை விடுவது என்றால் 
இப்போதே அரசியலையே விடுவது அவர்களுக்கு மிகுந்த லாபம்.... அதையுமீறி வருகிறார்கள் என்றால் 
அனைத்து நகர்வுகளிலும் சீனா இருக்க்கிறது என்பதுதான் அதன் பொருள். 

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என புரிகிறது.

எனது கருத்து,

அமெரிக்காவுக்கு இப்பொழுது SOFA ஒப்பந்தம் முக்கியம். அது கையெழுத்திடப்பட்டு விட்டால் இலங்கை அமெரிக்கா கையில் விழுந்தது போலாகி விடும்.

அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கையின் வடக்கு கிழக்கில் அதற்கு அதிக அக்கறை. அது சீனா கையில் இன்னும் விழவில்லை.

MCC உடன்படிக்கையும் வெளிக்கு சாதாரண உடன்படிக்கை போல் தெரிந்தாலும் அதன் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன. எனவே அதிலும் கையெழுத்து போட்டால் அமெரிக்காவுக்கு இன்னும் வசதி.

SOFA இல் இலங்கை கையெழுத்திடாவிட்டால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்ற தாக்குதல்களை மேற்கொண்டோ, கலவரங்களை உருவாக்கியோ அச்சூழ்நிலையை பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் உள்ளே புக முடியும். அதற்கு ACSA இடமளிக்கிறது.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

இந்த சித்து விளையாட்டில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன லாபம்?
இது உங்களுக்கே தெரியும்போது அமெரிக்க இந்திய வெளியுறவுக்கு புரியாதா?
மகிந்த இந்தியா போவதும் வருவதானாலும் மகிந்தவை நம்பும் அந்தளவு முட்டால்களாக 
இந்தியா இல்லை. அதை வைத்து தமிழர் தரப்பை  தமிழ்நாட்டு அரசியலை சூடு ஏத்த 
ஒரு உந்தாக இருப்பதால் அதை செய்து வருகிறார்கள். 
மகிந்த அன் கோ சீனாவிடம் சரணாகதி அடைந்தவர்கள் அவர்களுக்கு வேறு வழி  இனி இல்லை என்பதை 
சிறு பிள்ளையும் அறியும். 

மகிந்த ஜனாதிபதியாக இருந்த நிலையையும் கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அந்நிலையையும் நான் வேறுபடுத்தி பார்க்கிறேன்.

கோத்தா அமெரிக்காவின் நண்பன்.

அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகளை பேணி வருபவர்.

இலங்கை இராணுவம் கோத்தாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோத்தா ஜனாதிபதியாக வந்தால் மகிந்த அவரை பின்னாலிருந்து இயக்க விரும்பினாலும் கோத்தாவின் கட்டுப்பாட்டினுள்ளேயே முப்படைகளும் இருக்கும். அது அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு சாதகம்.

அமெரிக்கா விரும்பும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்.

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் சீனாவுடன் தொடர்புகளை பேணத்தான் போகிறார்கள். அதற்கு மைத்திரி-ரணில் அரசு கூட உதாரணம்.

எனவே கோத்தா ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா விரும்பும். அமெரிக்கா விரும்பினால் இந்தியாவும் விரும்பும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

நீங்கள் ஏன் மகிந்த அன் கோ தமது குடுமபத்தில் ஒருவரை ஜனாதிபதி 
ஆக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து எழுதுவது மாதிரி தெரியவில்லை 
புலிகளின் பல சர்வதேச பணம் உள்நாட்டில் இருந்த தங்கம் பணம் உளப்பட 
பல ஊழல் செய்த பணம் என்று பல மில்லியன் டாலர்கள் இவர்களிடம் சிக்குப்பட்டு 
கருப்பு பணமாக இருக்கிறது இவை எல்லாம் தட்காலிகமாக சீனாவின் உதவியுடன் அங்கு அங்கு சிதறி இருக்கிறது ... அது நேரடியாக இவர்களுக்கு எந்த லாபத்தையும் கொடுக்கும் நிலையில் இப்போது இல்லை.
லைக்கா போன்ற தமிழர்களுடன் கூடி சில தொகைகளை சினிமா எடுத்து வெள்ளை ஆக்க பார்க்கிறார்கள் 
இவர்கள் நடிகர்களின் சம்பளங்கள் செலவுகளை பணமாக கொடுக்கிறார்கள் (அது கருப்பு பணம்) 
பின்பு படம் விற்கப்படும் தொகையை வரவாக காட்டி அந்த தொகையை வங்கிகளின் ஊடாக எடுத்து வெள்ளையாக்குகிறார்கள் இருப்பினம் சில வெட்டுக்கொத்துகளின் பின்பு இவர்களுக்கு குறித்த அளவே 
சென்று சேரும் ... மாறாக ஒப்பந்தங்கள் செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றுவிட்டால். பல ஒப்பந்தங்களை 
இல்லாத கொம்பனிகளின் பெயர்களில் செய்துகொள்ளவர்கள்... பின்பு இலங்கையில் கட்டபடும் கட்டுடங்களை அந்த ஒப்பத்தின் ஊடாக தமது குடும்பத்தின் ஒருவரின் பெயரில் மாற்றிவிடுவார்கள். இவர்கள் குடும்ப சொத்து மதிப்பு அதன் பின்புதான் கூடும் .. அதன் பின்புதான் ஒரு பலமான குடும்பமாக இவர்கள் சிங்களவர்களுக்குள் எழுந்து இருக்க முடியும். அவர்களின் கனவு அதுதான். 

3 hours ago, Lara said:

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என புரிகிறது.

எனது கருத்து,

அமெரிக்காவுக்கு இப்பொழுது SOFA ஒப்பந்தம் முக்கியம். அது கையெழுத்திடப்பட்டு விட்டால் இலங்கை அமெரிக்கா கையில் விழுந்தது போலாகி விடும்.

அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கையின் வடக்கு கிழக்கில் அதற்கு அதிக அக்கறை. அது சீனா கையில் இன்னும் விழவில்லை.

MCC உடன்படிக்கையும் வெளிக்கு சாதாரண உடன்படிக்கை போல் தெரிந்தாலும் அதன் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன. எனவே அதிலும் கையெழுத்து போட்டால் அமெரிக்காவுக்கு இன்னும் வசதி.

SOFA இல் இலங்கை கையெழுத்திடாவிட்டால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்ற தாக்குதல்களை மேற்கொண்டோ, கலவரங்களை உருவாக்கியோ அச்சூழ்நிலையை பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் உள்ளே புக முடியும். அதற்கு ACSA இடமளிக்கிறது.

News

Now SOFA agreement with US

By Our Diplomatic Editor
View(s): 5212

Foreign Minister Tilak Marapana raised concerns of the Sri Lanka Government — during his visit to Washington DC this week — with his US counterpart, Secretary of State Michael Pompeo, on the proposed Status of Forces Agreement (SOFA) between the two countries.

rodney-perera.jpg

Rodney Perera: Next envoy to US

SOFA is another controversial  agreement the US was proposing to the Acquisition and Cross Services Agreement (ACSA) signed first in 2007 and renewed in 2017.

The ACSA provides for joint military cooperation between Sri Lanka and the United States and includes logistic support, supplies, services and the use of airports and ports during “unforeseen circumstances”. While the 2007 ACSA permits US military vessels to anchor in Sri Lanka ports on a ‘one-off’ basis, the 2017 ACSA appears to be “open ended”.

A spokesman for the Sri Lankan delegation told the Sunday Times that Minister Marapana had raised issues on some of the provisions in SOFA (see Political Editor on pages 12 and 13), including the provision relating to immunity being provided to foreign servicemen on Sri Lankan soil.  He said these were matters that related to diplomatic immunity, privileges and local laws.

He said he had consulted President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe prior to raising the Sri Lankan Government’s “concerns’ on some of the provisions of SOFA and that the US embassy in Colombo had already been apprised of these concerns.

The US Government agreed to further negotiate the proposed agreement through the “usual diplomatic channels”, which would initially be at a “technical level”.

Minister Marapana also met US National Security Adviser John Bolton at the White House on Friday. They discussed cooperation in counter terrorism, with specific areas to be clarified later. With the advent of an ISIS footprint in Sri Lanka, US support was likely to increase with its Federal Bureau of Investigation (FBI), which sent a team to do forensic studies after the Easter Sunday bombings expected to continue its work in collaboration with the Sri Lankan security authorities in the area of cyber security and cracking ISIS codes through the internet.

During his talks with the US Under Secretary of State for Political Affairs, David Hale, Minister Marapana and the Sri Lankan delegation were briefed about the US-led Global Coalition to defeat ISIS, but there was no word yet if Sri Lanka was to join this coalition.

Sira-with-Chinese-premier.jpg

President Sirisena with Chinese Prime Minister LI Keqiang

Among the topics discussed was the use of the Indian Ocean through a “rule based order”, a reference that the US uses aimed at neutralising the growing Chinese maritime influence in the seas. A joint statement released yesterday on the US-SL Partnership Dialogue says that “both governments welcomed ongoing bilateral security sector cooperation, including US support for demining, joint military engagement….and visits by US ships and military officials”.

Sri Lanka also welcomed the US$480-million compact by the US Millennium Challenge Corporation Board. It requires Congressional approval in the US and cabinet approval in Sri Lanka.

The Marapana visit to the US this week coincided with President Maithripala Sirisena’s visit earlier in the week to Beijing where he also signed a defence agreement with the Chinese government. Accordingly, China agreed to grant Rs.2.6 billion for the Sri Lankan security forces along with 100 jeeps to the Police Department.

President Sirisena met Chinese President Xi Jingpin on the sidelines of the Conference on Dialogue on Asian Civilisations which he attended. The discussions concentrated mainly on the Easter Sunday attacks in Colombo and Batticaloa and the heightened security situation in Sri Lanka following intelligence reports that ISIS influence was prevalent among a group of radicalised youth in the country.

He also met with Chinese Prime Minister Li Keqiang and Wang Yang, head of the Chinese People’s Political Consultative Conference.

Both, the US and China lost some of their officials during the Easter Sunday bombings while they were at the Shangri La hotel. The US official was from the Commerce Department, while the Chinese lost four scientists who were here from China’s Oceanographic Institute here as part of their study for their BRI (Belt and Road Initiative).

Mara-with-Bolton.jpg

Foreign Minister Marapana with US National Security Advisor John Bolton

President Sirisena was accompanied by Ministers Thalatha Athukorala, Daya Gamage, State Minister Asoka Abeysinghe and Ambassador Karunasena Kodituwakku.

Foreign Minister Marapana was accompanied by Foreign Secretary Ravinatha Aryasinha and Sri Lanka’s EU Ambassador Rodney Perera who this week received his confirmation from President Sirisena as Sri Lanka’s Ambassador to the US. He is due to take up his posting in Washington DC in mid-

http://www.sundaytimes.lk/190519/news/now-sofa-agreement-with-us-349988.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இந்தியாவை எப்படி கையாள்வது என்பது சீனாவுக்கு தெரியும் 
அவர்களும் சமநிலையை மேம்படுத்தியே வருகிறார்கள்.
மோடி இலங்கை சென்றபோது 2 பில்லியன் தருவதாக கூறினார் அதன் மூலம் 
துறைமுக உடன்படிக்கையில் இருந்து சீனாவை வெளியேற்றலாம் என்று நினைத்தார்கள் 
சீனாவின் முதலீடு என்பது 2 பில்லியன் மட்டும் சார்ந்து இல்லை.
அளவுக்கு அதிகமாக அள்ளிக்கொட்டும் நிலையில் இந்தியாவும் இல்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

நீங்கள் ஏன் மகிந்த அன் கோ தமது குடுமபத்தில் ஒருவரை ஜனாதிபதி 
ஆக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து எழுதுவது மாதிரி தெரியவில்லை 
புலிகளின் பல சர்வதேச பணம் உள்நாட்டில் இருந்த தங்கம் பணம் உளப்பட 
பல ஊழல் செய்த பணம் என்று பல மில்லியன் டாலர்கள் இவர்களிடம் சிக்குப்பட்டு 
கருப்பு பணமாக இருக்கிறது இவை எல்லாம் தட்காலிகமாக சீனாவின் உதவியுடன் அங்கு அங்கு சிதறி இருக்கிறது ... அது நேரடியாக இவர்களுக்கு எந்த லாபத்தையும் கொடுக்கும் நிலையில் இப்போது இல்லை.
லைக்கா போன்ற தமிழர்களுடன் கூடி சில தொகைகளை சினிமா எடுத்து வெள்ளை ஆக்க பார்க்கிறார்கள் 
இவர்கள் நடிகர்களின் சம்பளங்கள் செலவுகளை பணமாக கொடுக்கிறார்கள் (அது கருப்பு பணம்) 
பின்பு படம் விற்கப்படும் தொகையை வரவாக காட்டி அந்த தொகையை வங்கிகளின் ஊடாக எடுத்து வெள்ளையாக்குகிறார்கள் இருப்பினம் சில வெட்டுக்கொத்துகளின் பின்பு இவர்களுக்கு குறித்த அளவே 
சென்று சேரும் ... மாறாக ஒப்பந்தங்கள் செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றுவிட்டால். பல ஒப்பந்தங்களை 
இல்லாத கொம்பனிகளின் பெயர்களில் செய்துகொள்ளவர்கள்... பின்பு இலங்கையில் கட்டபடும் கட்டுடங்களை அந்த ஒப்பத்தின் ஊடாக தமது குடும்பத்தின் ஒருவரின் பெயரில் மாற்றிவிடுவார்கள். இவர்கள் குடும்ப சொத்து மதிப்பு அதன் பின்புதான் கூடும் .. அதன் பின்புதான் ஒரு பலமான குடும்பமாக இவர்கள் சிங்களவர்களுக்குள் எழுந்து இருக்க முடியும். அவர்களின் கனவு அதுதான். 

மகிந்த & கோ தமது குடும்பத்திலிருந்து ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனால் கோத்தா ஜனாதிபதி வேட்பாளராக வருவதன் பின்னணியில் முக்கியமாக அமெரிக்கா உள்ளது என நான் நினைக்கிறேன். 🙂

1 hour ago, Maruthankerny said:

Sri Lanka also welcomed the US$480-million compact by the US Millennium Challenge Corporation Board. It requires Congressional approval in the US and cabinet approval in Sri Lanka.

இது பின்னர் குழம்பி விட்டது. இனி அடுத்த அரசு வந்த பின்னர் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

Now SOFA agreement with US

SOFA பற்றி நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை. (கையெழுத்து கூட தேவையில்லை, வேறு ஏதோ விதத்தில் ஒப்புதல் வழங்கினால் போதும் என்றும் வாசித்திருக்கிறேன்)

ஆனால் 28 ஓகஸ்ட் 2018 இலிருந்து SOFA இலுள்ள சில விடயங்கள் நடைமுறையிலுள்ளன.

கோத்தா என்றில்லை, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் SOFA இல் கையெழுத்திட சந்தர்ப்பம் உள்ளது. இழுத்தடிப்புகள் நிகழலாம்.

1995 இல் கையெழுத்திடப்பட்ட SOFA இன்னும் கைவசம் வைத்துள்ளார்கள். திகதி காலாவதியாகி விட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அது பழைய உடன்படிக்கை. புதிய உடன்படிக்கை பழையதை விட பல விடயங்கள் புகுத்தி நீட்டிக்கப்பட்டது. இது பற்றி முன்னரும் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

இன்றைய உலக அரசியல் ஒரு இதுவரை இருந்திராத நிலையில் உள்ளது. காரணம், மேற்குலக மற்றும் உலக நாயகனான ட்ரம்ப். 

இன்று வெளியான தகவலின் படி, புதிய உக்ரைன் தலைவருடன் உரையாடியது போன்று சீன தலைவருடனும் உரையாடி உள்ளார். அந்த உரையாடலில் தனக்கு எதிராக முன்னணி சனநாயக கட்சியின் வேட்ப்பாளர் ஜோ பைடன் மீதும் அவரின் மகன் மீதும் ஊழல் விசாரணை ஆரம்பிக்க கேட்டுள்ளார். அதற்காக, ஹாங்கோங்கில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் ஆதரவு தரப்போவதில்லை என கூறியுள்ளதாக இன்னொரு   சனநாயக கட்சியின் வேட்ப்பாளர் எலிசபெத் வரன் கூறியுள்ளார். ஆனால், அந்த ஹாங்கோங் மக்களோ அமெரிக்காவை நமபி போராடி வருகிறார்கள். 

இது முன்னொரு காலத்திலும் கற்பனையிலும் எதிர்பார்க்க  முடியாத நிகழ்வு.  

சரி, அதற்கும் எமது நாட்டின் வேட்ப்பாளருக்கும் என்ன தொடர்பு? 

மகிந்த கட்சி சார்பான வேட்ப்பாளர் வென்றால் நாடு சீன பக்கம் சாயும் என்பதும் அதை அமெரிக்க நாடு எதிர்க்கும் என்ற கணக்கும் ட்ரம்ப் இருக்கும் வரை ஒரு தப்புக்கணக்காக அமையலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.