Jump to content

ஈழப்போரின் இறுதிநாட்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போரின் இறுதிநாட்கள்

இளங்கோ - டிசே

 

Monday, September 30, 2019

 
90களில் இயக்கத்தில் இணைந்துஅடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும்கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது.  ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றதுபோர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள்போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.

போராளியாக இருந்த வெற்றிச்செல்விக்கு புலிகளின் தலைவர்இறந்துவிட்டார் என்ற களச்செய்தியைக் கேட்டபின் அவரைப்போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளைப் போல அடுத்து என்னமுடிவு செய்வது என்பது பெரும் சிக்கலாகின்றதுஇறுதியில்அவரின் உயிர் போவது இரண்டு இடங்களில் தடுத்துநிறுத்தப்படுகின்றதுமக்களோடு சேர்ந்து சரணடையாமல்சயனைட் குடிப்பதை ஒரு இயக்கத் தம்பி தடுத்து நிறுத்துகின்றார்'இனி எல்லாம் முடிந்தபின் இறப்பது என்பது வீணானதுதயவுசெய்து சயனைட் அடித்துவிடாதீர்கள்இப்படித்தான்காயங்களோடு பங்கருக்குள் நின்றவர்களுக்கு முதல்நாளிரவுசொன்னேன்அடுத்தநாள் காலையில் போய்ப்பார்த்தால்எல்லோரும் சயனைட் அடித்துக் கிடக்கின்றார்கள்நீங்களும்அதைச் செய்துவிடாதீர்கள்என இவர்கள் பதுங்குகுழிக்குள்கிடக்கதன்னைத் தரையோடு தரையாக சாய்த்துக்கொண்டு விழும்எறிகணைக்களுக்கிடையில் அந்தத் தம்பி மீண்டும் மீண்டும்வலியுறுத்துகின்றான் . வாழ்வா சாவா என்று முடிவுசெய்யும்நாணயச்சுழற்சியில் வாழ்வு வெல்கின்றது
இன்னொருமுறை இராணுவத்தை முதன்முதலாகச் சந்திக்கையில்சயனைட்டை மீண்டும் வாயில் வைக்கமுயல்கையில்வெற்றிச்செல்வியோடு இருக்கும் அவரின் பால்யகாலத்தோழியும்அந்தத்தோழியின் தாயாரும் தடுத்து சயனைட் குப்பியைப் பிடுங்கிநிலத்தில் புதைக்கின்றனர்இப்படியான ஏதாவது ஒருசந்தர்ப்பத்தில் வெற்றிச்செல்வியை நாம் இழந்திருந்தால் ஒருமாபெரும் சாட்சியத்தை இழந்திருப்போம் என்பதைவிடஒருஅருமையான போராளியை இழந்திருப்போம்மேலும் தன் கதைகள்எதையும் எமக்குச் சொல்லாமலே அவர் நம் நினைவுகளில்என்றென்றைக்குமாய் இல்லாமற்போயுமிருப்பார்.
 
vetti.jpg
ன்று ஈழப்போர் முடிந்துகிட்டத்தட்ட 10 ஆண்டுகள்முடிந்தபின்போர் பற்றிய நிறையச்சாட்சியங்கள்புனைவுகள் எனவரத்தொடங்கிவிட்டனஆனால்அநேகமானவை தாம் சார்ந்தநம்பிக்கைகளுக்குள் மட்டும்சுருண்டுவிடுவதால் அங்கேபலவேளைகளில் உண்மைகள்காணாமல் எங்கையோதொலைந்துவிடுகின்றனவெற்றிச்செல்வி எவ்வாறுபோராளிகளின் ஓர்மத்தைபெரும்போருக்குள்விபரிக்கின்றாரோ அவ்வாறேகட்டாயமாகப் போரில்சேர்க்கப்பட்டவர்களின் உண்மைநிலைமைகளையும்அந்தப்பொழுதுகளில் மக்களின் மனோநிலைஎப்படி இருந்ததென்பதையும் வெளிப்படையாகப் பேசுகின்றார்அதேவேளை இயக்கம் மீது ஆற்றாமையோடும்கோபத்தோடும்இருந்த  பெரும்பகுதி மக்கள் போராளிகளை ஒருபோதும்கைவிடத்தயாராகவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டபோது வாரித்தூற்றிய மக்களேபிறகுபோராளியாகிப் பசியோடு அவர்கள் திரிந்தபோது அவர்களை பசிதீர்த்து அரவணைத்தார்கள் என்பதையும் பதிவுசெய்கின்றார்.
இந்த இறுதியுத்தம் நாம் நினைத்தே பார்க்கமுடியாக் கொடூரம்நிறைந்ததாக இருந்திருக்கின்றதுஎந்தப்பக்கத்திலும் எவ்விதநியாய/அநியாயங்களுக்கு இடம் இருக்கவில்லைஎப்படி இருந்தமக்கள் இப்படியாயிற்றனரே என எல்லா மனிதவிழுமியங்களும்கரைந்துபோய்விட்டிருந்த நாட்கள் அவைபோரின்போது நிகழும்அழிவுகளைப் போல போரின்பின் வந்த வெறுமையும் விரக்தியும்அவ்வளவு எளிதில் போகமுடியாதவைஅது தன் வாழும் காலம்முழுதும் தன்னோடு வரப்போகின்றது என்றே வெற்றிச்செல்வியும்குறிப்பிடுகின்றார்.
பத்தாண்டுகளானபின்னும்போரில் வெற்றிபெற்றபோதும் இன்றும்சிங்களப்பேரினவாதம் எதையும் விட்டுக்கொடுக்கவோபகிர்ந்துகொள்ளவோ தயாராக இல்லைபோராளிகளும்ஆயுதங்களும் இல்லாமலும்தமிழ் அரசியல் தலைமைகள்என்போரும் மீளாத்துயிலில் இருக்கும்போதும் ஏனின்றும் தமிழர்நிலங்களில் பாரியளவிலான இராணுவமுகாங்களும்கண்காணிப்புக்களும்புத்தர் சிலையுடனான குடியேற்றங்களும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியோசிக்கவேண்டியிருக்கின்றதுஇயல்பான வாழ்க்கையும்,  தன்மொழிஇனம் சார்ந்து தன்னிருப்பு அச்சுறுத்தப்படாத போதும்ஒரு சமூகம் ஒருபோதும் போராடப்போவதில்லை என்பதுபேரினவாத அரசுக்குத் தெரியாமல் இருக்கப்போவதில்லைசிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்துவதன்மூலமே தமது அரசியல் இருப்பை வலுவாக்கலாம் என்ற பேரினவாதசிந்தனையையை ஒழிக்காதவரை எந்தக்கட்சியோ அல்லதுஎவரோ அரசுபீடமேறினாலும் நாட்டில் அவ்வளவு எளிதில் சுபீட்சம்வந்துவிடப்போவதில்லை.
 
ழப்போரின் இறுதி நாட்கள் என்ற இந்நூல் 80களைப் போலஅரசியல் சூழ்நிலை மீண்டும் வந்தாலும்/இருந்தாலும் நம்மைஉணர்ச்சி அரசியலுக்குள் போகவிடாது நமக்கு நிகழ்ந்தபேரழிவைத் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றதுநாம்இறுதியுத்தத்தில் செய்த நம் பக்கத்து தவறுகளிலிருந்து வரலாற்றைஇன்னும் பின்னோக்கி (இந்நூலில் அது இல்லாதபோதும்சென்றுநமது எல்லோருடைய தவறுகளையும் மீள்வாசிப்புச் செய்யச்சொல்கின்றதுகொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையிலும்அந்நியநாடுகளின் தலையீட்டுக்கு இரையாகி ஆயுதங்களைமீண்டும் அவசரப்பட்டுத் தூக்கவேண்டாமென நம்அந்தரங்கத்தோடு உரையாடச் செய்கின்றது.
ஓர் உண்மையான போராளி தான் போராட வந்ததன் நோக்கத்தைஎந்தக் காலகட்டத்திலும் மறந்துவிடுவதில்லைஅந்த ஓர்மம்அந்தப் போராட்டம் தோற்றபின்னால்கூட எங்கோ ஓரிடத்தில்ஒளிர்ந்துகொண்டேதானிருக்கும்அதே சமயம் தங்கள் தவறுகளைஒப்புக்கொள்ளவும் எதிரிகளென நினைத்துப் போராடியவர்களிடம்  அவ்வப்போது வெளிப்படும்  மனிதாபிமானத்தையும்மனந்திறந்துபாராட்டவே செய்யும் (வெற்றிச்செல்வியை பேரூந்தில்ஏற்றி தடுப்புமுகாமிற்கு ஏற்றிச்செல்லும் இளவயதுஇராணுவத்தினனின் மனிதாபிமானம் எவ்வித மறைத்தலுமின்றிஇந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது). 
ஈழப்போரில் இறுதியில் நடந்தவற்றை வாசிக்க -முக்கியமாய்எதையும் அறியவிரும்பாது தமக்கான 'உண்மை'களுடன்போராட்டத்தை விளங்கிக்கொள்ள முயல்வோர்இந்நூலைத்தேடிக் கட்டாயம் வாசிக்கவேண்டும்இதை மட்டுமில்லை அப்புஎழுதிய 'வன்னி யுத்தம்மற்றும் வெற்றிச்செல்வி இந்நூலின்தொடர்ச்சியாக தடுப்பு முகாம் வாழ்வைப் பற்றி எழுதிய 'ஆறிப்போனவலிகளின் காயம்போன்றவற்றையும் வாசிக்கவேண்டும்ஆகக்குறைந்தது இவற்றை வாசித்தாலாவதுஉணர்ச்சிவசப்படாமல்போலிப்பெருமிதம் இல்லாமல் எங்கேஅமைதியாக அரசியல் சார்ந்து இருக்கவேண்டுமென்பதையாவதுநாம் கற்றுக்கொள்ளலாம்.
----------------------------------------------------

(நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019)

 

http://djthamilan.blogspot.com/2019/09/blog-post_30.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.