பிழம்பு

வாள் வெட்டு கும்பலின் தாக்குதல் – இரும்பக உரிமையாளர் மரணம்…

Recommended Posts

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
எனினும் உரிமையாளர் உயிரிழந்தவுடன் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்” என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2019/131421/

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பிழம்பு said:

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளையே குற்றவாளிகளைத் தேடும்படி வேண்டும் அவலநிலைக்குள் வாழும் தமிழ்மக்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

குற்றவாளிகளையே குற்றவாளிகளைத் தேடும்படி வேண்டும் அவலநிலைக்குள் வாழும் தமிழ்மக்கள்.

சொறிலங்காடை போலீஸ் காடையர்கள் யாழ்பாணத்துல இருக்கிற காடையர்களோட தான் கூட்டு.
இனம் இனத்தோட சேருமாமே! அந்த மாதிரி!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

யாழ் கள,  உறவு ஒருவரின்..  உறவினர் ஒருவரே, கந்தையா கேதீஸ்வரன். அவர்களுக்கே... இவர், ஏன் கொல்லப் பட்டார் என்று, தெரியாத நிலையில் உள்ளார்கள். 😥

 ##############      #############      ##############     

Jaffna-2-720x450.jpg

தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த செம்டெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், இரும்பகத்துக்குள் புகுந்து உரிமையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த இரும்பினால் உரிமையாளரை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 24 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு, நேற்று இரவு முதல் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் வாள் வெட்டுக் குழுக்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் வாள் வெட்டுத் தாக்குதல் ஏதும் இடம்பெறவில்லை என்பதை பிரதேச தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Jaffna-3-720x341.jpg

1.jpg

4-720x340.jpg

5-720x341.jpg

http://athavannews.com/வாள்வெட்டுக்கு-இலக்கான-ந/

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Arrested.jpg

யாழ். கோண்டாவில் தாக்குதல் சம்பவம் – இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கோண்டாவில் பகுதியில் இரும்புக் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளரை கடையில் வைத்து இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியிருந்தனர். தாக்குதலுக்கு இலக்காகிய நபர் கடந்த வாரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/யாழ்-கோண்டாவில்-தாக்குத/

Share this post


Link to post
Share on other sites

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

3 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை என்றால் நல்ல விடையம்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

அந்த யாழ்கள உறவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, goshan_che said:

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

அது தான் சொல்லீட்டிங்களே கள்ளரோடு கூட்டு வைக்க வேண்டும். இல்லாட்டி அப்பாவிகளை பிடிக்க வேண்டும் என்று. நான் அறிந்த வரையில் கண்டும் காணாமல் போவது தான் நடக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, nunavilan said:

அது தான் சொல்லீட்டிங்களே கள்ளரோடு கூட்டு வைக்க வேண்டும். இல்லாட்டி அப்பாவிகளை பிடிக்க வேண்டும் என்று. நான் அறிந்த வரையில் கண்டும் காணாமல் போவது தான் நடக்கிறது.

இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது வடகிழக்குக்கு மட்டுமானதல்லல. பொலீசாரின் குளறுபடிகள் நாடெங்கிலும்தான்.

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, goshan_che said:

இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது வடகிழக்குக்கு மட்டுமானதல்லல. பொலீசாரின் குளறுபடிகள் நாடெங்கிலும்தான்.

தெற்கில் கண்டும் காணாமலும் போவார்கள் என நான் நினைக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்.. அது எல்லாவற்றையும் சிங்களம்/தமிழ் என்ற tinted glass ஊடாக நீங்கள் பார்பதாலும் இருக்கலாம். தெற்கிலும் பல கண்டுபிடிக்க படாத குற்ற செயயல்கள் நடக்கிறன.

5 minutes ago, nunavilan said:

தெற்கில் கண்டும் காணாமலும் போவார்கள் என நான் நினைக்கவில்லை.

 

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

ரின்ரட் இல்லாமல் பார்த்தாலும் அப்படி தான் தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, nunavilan said:

ரின்ரட் இல்லாமல் பார்த்தாலும் அப்படி தான் தெரிகிறது.

சில தரவுகளை இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Kotakethana_murders 

https://www.bbc.com/sinhala/news/story/2010/07/100703_beggars.shtml 

http://www.sundaytimes.lk/140112/news/crimes-murders-decline-but-most-remain-unsolved-with-fewer-successful-prosecutions-79699.html

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

ஆமாண்ணய்.....
சிங்கள போலீஸ் வவுணதீவில் இரண்டு போலீசை சுட்டவர்களை பிடித்த சீத்துவத்தை பார்த்தோம் தானே....
ஸஹ்ரான் வெளியில் வந்திருக்காவிடில் இரண்டு அப்பாவிகள் வருடக்கணக்கில் களி திண்டிருப்பினம் , போலீசை போட்டுத்தள்ளினத்துக்கே அப்பாவிகளை தான் பிடிப்பினம் என்றால் மற்ற கேஸ்களுக்கு காட்டாயம் குற்றவாளிகளை தான் பிடித்திருப்பினம் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை 

Quote

Subsequently, two former LTTE members had been taken into custody over the killing of the policemen. The two suspects were identified as Kadiramathambi Iraja kumaran (Kannan,40) and Rasanaygam Sarvananthan.  

Kannan was taken into custody in Batticaloa and Sarvananthan at Kilinochchi. Later Sarvananthan was brought to Batticaloa for questioning. He is a former leading intelligence operative of the LTTE. He had told the police that he was in Batticaloa for several weeks to organise a Mahaveer event. Sarvananthan was staying in Kannan’s house in Vavunathivu, Batticaloa. It was also revealed that Sarvananthan had come to Batticaloa several times to celebrate Mahaveer every year.  

Although reports said that one of the suspects had admitted that he was responsible for the killing, the CID has no strong evidence against the two suspects and therefore whether both of them were involved in the double murder is still unknown. Meanwhile, UNP MP Ranjith Madduma Bandara pointed out that the incident in Batticoloa was serious in nature and demands a proper investigation, as such crimes did not take place during the past three and half years.  
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆமாண்ணய்.....
சிங்கள போலீஸ் வவுணதீவில் இரண்டு போலீசை சுட்டவர்களை பிடித்த சீத்துவத்தை பார்த்தோம் தானே....
ஸஹ்ரான் வெளியில் வந்திருக்காவிடில் இரண்டு அப்பாவிகள் வருடக்கணக்கில் களி திண்டிருப்பினம் , போலீசை போட்டுத்தள்ளினத்துக்கே அப்பாவிகளை தான் பிடிப்பினம் என்றால் மற்ற கேஸ்களுக்கு காட்டாயம் குற்றவாளிகளை தான் பிடித்திருப்பினம் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை 
 

மற்றைய திரிகளில் சொன்னதுதான்.

1. தமிழ்-சிங்கள அல்லது படையினர் மீது தமிழ் பகுதியில் தாக்குதல் - என்பதை பொலிஸ் அணுகும் முறைக்கும். சாதாரண தமிழர் எதிர் தமிழர் குற்றங்களை பொலீசார் அணுகும் முறைக்கும் வேறுபாடு உண்டு.

2. இலங்கையின் சகல பாகங்களிலும் பொலீசார் ஊழலில் திளைக்கிறார்கள். இது தனியே வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை.

மற்றும் படி பொலிசாருக்கு நான் ஒன்றும் அதி விசேட சித்தி என்று சேர்டிபிக்கேட் கொடுக்கவில்லை.

பிகு: காட்டுக்குள் சிங்கத்தை தேடிப்போய் மாட்டோடு வந்து அதை நான்தான் சிங்கம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைத்த பகிடி தெரியும்தானே? இலங்கை பொலீசின் நிலை இப்போதும் அப்படித்தான். ஆனால் சில நுணுக்கமான வேறுபாடுகள் இருக்கிறன.

Edited by goshan_che
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

அன்றாட மக்களை தவிர யாரையும் நம்ம தயாரில்லை. நியத்தில் நடந்தவைகளை யாழில் எழுதி நிரப்ப விருப்பமில்லை. 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

அன்றாட மக்களை தவிர யாரையும் நம்ம தயாரில்லை. நியத்தில் நடந்தவைகளை யாழில் எழுதி நிரப்ப விருப்பமில்லை. 

மன்னிக்கவும்,

இது டிண்டட் கண்ணாடி அல்ல, டிண்டட் கொண்டாக்ட் லென்ஸ். 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

மன்னிக்கவும்,

இது டிண்டட் கண்ணாடி அல்ல, டிண்டட் கொண்டாக்ட் லென்ஸ். 

ஓ அப்படியா? லேசர் விசனில் பார்த்தாலும்  மாற்றமில்லை .

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

😂 மனத்தின் விந்தை.

உண்மையிலேயே மனத்தின் விந்தை தான்! ட்ரம்ப், பிறெக்சிற், ஜோன்சன், இவையெல்லாம் நல்ல சமாச்சாரங்களாக இன்றைக்கு முன்னணியில் திகழக் காரணமான அதே மனத்தின் விந்தை தான் இதுவும்!

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
  • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
  • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
  • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
  • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!