• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

                              உ 
        ஒரேயொரு ....................!

ஒரேயொரு  வானுயர்ந்த கட்டிடம் - உயரத்தில் 
ஒரேயொரு  நீள்சதுர அறை  - உச்சியில் 
ஒரேயொரு  சாரளம்  கூரைக்குள் அசையும்  - ஆங்கே 
ஒரேயொரு  கட்டிலோடு மெத்தையுடன் தலையணை ......!

ஒரேயொரு  குறுக்கு மறைப்பில் சமையலறை - எதிரே 
ஒரேயொரு  குளியலறை நாலடி நடையில் 
ஒரேயொரு  மீன்தொட்டி ஒரு பொன் மீனோடு 
ஒரேயொரு  நாய்குட்டி கழுத்தில் கயிறோடு .....!

ஒரேயொரு  அம்மணி அகவையோ எண்பது  - காலையில் 
ஒரேயொரு  முறை திறப்பாள் சாரளத்தை 
ஒரேயொரு  தரம் வரும் தென்றல் தங்கி நிக்கும் 
ஒரேயொரு  துளிகளாய் வரும் மழை முகம் நனைக்கும் ....!

ஒரேயொரு  தடவை அழைப்புமணி எதிரொலிக்கும் 
ஒரேயொரு  க்கால் திறந்த கதவிடுக்கில் உணவிருக்கும் 
ஒரேயொரு  கதிரவன் அவள் நோக்க மலைமேல் உதயம் - அந்த 
ஒரேயொரு  பகலவன் அவள் பார்க்க கடல் விளிம்பில் அஸ்தமனம்.....!
 

  • Like 8
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தனிமை கொடிது ....ஒரேயொரு நாள்

கட்டிலோடு மெத்தையும் தலையணையும்  

.கதவை .திறக்க எழும்பாத  நிசப்தத்தில் .

...மீளாத தூக்கம் .ஆறடி நிலமே தஞ்சம். 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை

ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை

 நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா தாண்டா

நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலாட 

 

அருமையான பாடல் நன்றி 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மனித வாழ்வில் தனிமை கொடியது .தனிமையாக வாழும் மனிதர்களுடன் அன்பும் கருணையும் செலுத்தி வாழ்வதே மானிட தர்மம் .
அழகான கவிதை suvy.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this