Jump to content

மஹா பாரத தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம்


Recommended Posts

அலெக்ஸாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பு உண்மையாகவே அவனின் உலகத்தை பிடிக்கும் ஆசையின் பகுதியா? அல்லது வேறு ஏதோ ஒரு இரகசியத்தை தேடி வந்தானா?  அப்படி 25000 மைல்கள் வரை வந்தவன் சிந்து நதி தீரம்(இன்றைய பஞ்சாப் /பாகிஸ்தான் பகுதிகள்?) உடன் திரும்பியதற்கான காரணம் என்ன?  அவன் தேடி வந்த இரகசியத்தை அவன் கண்டறிந்து அதை அடைந்து விட்டதனாலா? அல்லது அவனின் படையினரின் எதிர்ப்பா? களைப்பா? 

#######################

ஒலிம்பியாஸிடம் ( அலெக்ஸாண்டரின் அம்மா)  தூரதேசத்து துறவி ஒருவரினால் 5 கட்டளைகள் எழுதப்பட்ட கன சதுரமும் ஆட்டு தோலில் எழுதிய குறிப்பு மற்றும் வரை படங்களும் கொடுத்து இவற்றை அவன் சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படி நிறைவேற்றுவானாயின் அவள் எதிர்பார்ப்பதை அவன் அடைவான் அதில் ஏதும் தவறுகள் வருமிடத்து பெரும் விளைவுகள் ஏற்படுமெனவும் எச்சரிக்க படுகிறாள் பாரசீக படையெடுப்பற்கு தயாராகும் அலெக்ஸ்சாண்டரிடம் ஒலிம்பியாஸ் இதனை கொடுக்கிறாள்..அதுவே அவனை இந்திய நோக்கி படையெடுக்க தூண்டுதலாக இருந்திருக்க கூடும்..

#########################
சாகா வரம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய மந்தரமலை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் பயன்படுத்துகின்றனர் வாசுகியின் நஞ்சால் துரத்தப்படும் இவர்கள் ஆதி சிவன்/ உருத்திரனிடம் தஞ்சமடைகின்றனர் ஆதி சிவன் நஞ்சை உண்டு நீலகண்டர் ஆகிறார் அமிர்தத்தை பெறும் சண்டையில்   மகாவிஷ்ணு மோகினி உருவம் கொண்டு அசுரர்களை மயக்கி தேவர்களிற்கே அமிர்தம் முழுவதையும் கிடைக்குமாறு செய்கிறார் .. இதன்மூலம் தேவர்கள் சாகாவரம்/ என்றும் இளமை  பெறுகின்றனர்...இது மகாபாரத ஆதி பர்வத்தில் உள்ள கதை...(ஆண்டு 3 சமயபாடத்திலும் எங்களுக்கிருந்த்து)

############################
அமிர்தம் என்பது சாகாவரம் கொடுக்கும் ஒரு பண்டம் எனில் சாகாவரம் என்பது முதுமையடைவதிலிருந்து தடுத்தல்
 எங்கள் உடலில் உள்ளமரபணுக்கூறுகளை அப்படி தடுக்ககூடியதான புரதங்களை உற்பத்தி செய்ய கூடியதாக  சரியாக வேலை செய்ய வைத்தல் (P53 எனும் புரதம் கான்சர் செல் களை கொல்லுகிறதாம், இப்படியே, அல்ஷைமர் நீரிழிவு, மற்றும் வேறு
நோய்களை  கட்டுபடுத்தும் புரதங்களை உற்பத்தி செய்யக்கூடிய மரபணுக்கள்  நிறையவே இருக்கன்றனவாம்.. அவற்றின் சிதைவு அல்லது செயல்படா தன்மை தான் இந்த நோய்கள் நம்மை பாதிக்க செய்ய காரணமாம் , அவற்றை வெளித்தூண்டல் மூலம் செயற்பட() வைக்க முடியுமாக இருப்பின் இவ்வகையான நோய்களிலிருந்து எம்மால்  தப்பிக்க முடியுமாம் ..

உடலில் உள்ள இப்படியான புரதங்களை உற்பத்தி செய்ய மரபணுக்களிற்கு தூண்டலை கொடுக்க  வெளியிலிருந்து கொடுக்கப்படும் ஒரு வகையான சம அளவுகளில் கலக்கப்பட்ட  இரசாயன கரைசலே அமிர்தமாக இருக்க கூடும் என்கிறார் 
#########################

ஒலிம்பியாஸிடம் கொடுக்கபட்டது இதை எப்படி எங்கு பெற வேண்டும் என எழுதப.பட்ட கட்டளைகள் அடங்கிய பகுதியே அதை அவள் அலெக்ஸாண்டரிடம் கொடுத்து அதை அடைந்து வருமாறு கூறுகிறாள்...அலெக்ஸாண்டரும் அதை பின் பற்றுகிறான்.. அவன் அமிரத்தை  அடைந்தானா இல்லையா? 

 

இங்கு நான் எழுதியிருப்பது சில பகுதிகள் பற்றிய மட்டுமே அன்று  இன்று என மாறி மாறி வரும் ஒரு த்ரில்லர் இது இன்று நடைபெறும் எதையும் நான் இங்கு எழுதவில்லை, தொன்மங்கள் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்...

https://images.app.goo.gl/v3NN4iPPsPncyiEF8

https://images.app.goo.gl/v3NN4iPPsPncyiEF8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.