Jump to content

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் சிக்கினான்.. இன்னொருவன் தப்பி ஓட்டம்.. திருவாரூரில் நள்ளிரவில் அதிரடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் சிக்கினான் இன்னொருவன் ஓட்டம்

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் சிக்கினான்.. இன்னொருவன் தப்பி ஓட்டம்.. திருவாரூரில் நள்ளிரவில் அதிரடி!

ஒரு வழியாக திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கி விட்டது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கி விட்டான். துரதிர்ஷ்டவசமாக இன்னொருவன் தப்பி விட்டான்.

பிடிபட்ட நபரிடமிருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது பார் கோடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடையில் துளையிட்டு

இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி பதிவுகள்

கொள்ளையர்கள் வட மாநிலத்தவரா, கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. நேற்றுதான் கடையின் சிசிடிவி பதிவுகளும் கூட வெளியாகியிருந்தன. இந்த நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடினார்.

2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, 'பார் கோடு' மூலம் தெரியவந்துள்ளது. பிடிபட்டவனிடம் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்டது என்பது உறுதியானதாக தகவல் தெரியவந்ததுள்ளது.

சுரேஷ் தப்பி ஓட்டம்

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. தப்பியோடியவர் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட கொள்ளையன் திருச்சியை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது.

சிக்குவாரா சுரேஷ்

தப்பி ஓடி விட்ட சுரேஷைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சுரேஷின் தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து தற்போது தங்கள் வசம் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இன்றைக்குள் சுரேஷும் பிடிபடுவார் என போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/thiruvarur/lalitha-jwewllery-thief-captured-near-thiruvarur-364726.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை : 8 மணி நேர விசாரணையும் வெளிவந்த உண்மைகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெண்ணாம் பெரிய கடைக்கு அலாரம் சிஸ்ட்டம் இல்லை என்பது எங்கேயோ உதைக்குதே ?

அதென்னடா மூலைக்கு மூலை கமரா பூட்டினவன்களால் அலாரம் பூட்டமுடியாமல் இருக்கினம் என்பது சந்தேகமே இப்ப எல்லாம் கண்டதுக்கும் அலாரம் அடிக்கும் காலம் போய் மனித உடல் சூட்டின் அளவை வைத்து அலாரம் வேலை செய்யும் காலத்தில் இருக்கிறம் இவங்கள் என்னடா என்றால் கோடிக்கணக்கான நகையை ஒரு கமரா கண்காணிப்பாளர் கூட இல்லாமல் வாசலில் வயது போன செக்யுரிட்டி களிடம் கொடுத்து இருப்பது நாடகமே என்பது போல் தோணுது எதுக்கும் இன்சூரன்ஸ் கிளைம் எவ்வளவு எடுக்கினம் என்று பார்த்தால் உண்மை கள்ளன் பிடிபடுவான் .

Link to comment
Share on other sites

திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக் கும்பல் தலைவன்..!

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில் கொள்ளைக்கு திட்டம் வகுத்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டுள்ள இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து பல மணி நேரமாக விசாரணை நடத்தி உள்ளனர். பிடிபட்டுள்ள கொள்ளையன் சுரேசின் தாய்மாமனான முருகன்தான் , இந்த கும்பலுக்கு தலைவன் என்பதும், பிடிபட்டுள்ள மணிகண்டன், சுரேஷ் மற்றும் முருகன் உள்ளிட்ட 8 பேர் கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் வெளியாகும் வங்கி கொள்ளை தொடரை பார்த்தே, முருகன் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு திட்டம் தீட்டியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறியுள்ளான். இந்த தொடரில் வருவதை போலவே, சுவரில் துளையிடுவது, முகமூடி அணிந்து திருடுவது, திருடிய பின்னர் தப்புவது என அனைத்தும் ஒன்றாக இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும் சுவரின் கன்னம் வைத்து திருடுவதில் முருகன் பலே கில்லாடி.திருவாரூர் அருகே உள்ள சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன் ஆரம்பத்தில் சின்ன சின்ன திருட்டு என ஆரம்பித்து, பிறகுதான் பெரிய திருடனாக மாறியுள்ளான். கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 180 வழக்குகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கர்நாடக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான முருகன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான்.

ஐதராபாத்திற்கு சென்று கைவரிசை காட்ட ஆரம்பித்த முருகன், இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. சொந்த ஊரான சீரா தோப்பில் உள்ள தனது சொந்தக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு, திருடிய பணத்தில் ஒரு பகுதியை செலவிடுவதை முருகன் வழக்கமாக கொண்டு உள்ளான். அரிசி, பருப்பு முதல் வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என, அடுத்தவர் வீட்டு பணத்தில் தான, தர்மம் செய்து தன்னை வள்ளலாக முருகன் காட்டி வந்து உள்ளான்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் இருவரை த த்து எடுத்து முருகன் வளர்த்து வருவதாகவும், மாற்று திறனாளிகளுக்காக முருகன் ஒரு காப்பகம் ஆரம்பித்த தாகவும் சீராத்தோப்பு கிராம மக்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த காப்பகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் முருகனுக்கு சினிமா ஆசையும் சேர்ந்து கொள்ள, 50 லட்ச ரூபாய் முதலீட்டில் பாலமுருகன் புரடெக்சன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி, மனாசா வினாவா என்ற தெலுங்குபடத்தை தயாரித்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

கதாநாயகிக்கு 6 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்த முருகன், தனது அக்காள் மகனும், இப்போது பிடிபட்டு உள்ளவனுமான சுரேசை அந்த படத்தில் நடிக்க வைத்து உள்ளான். ஆனால் அந்த படம் வெளியாகாத நிலையில் மீண்டும் திருட்டு, கொள்ளை என்று ஈடுபட்டு சிறைக்கு சென்ற முருகன், விடுதலையான பின்னர் ஆத்மா என்ற மற்றொரு படத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டான்.

ஆனால் இப்போது குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் முருகன் சிக்கி உள்ளதாகவும், இதனால் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு வேனில், அவன் ஊர், ஊராக சென்று கொண்டே இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வேனிலேயே வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

https://www.polimernews.com/dnews/83321/திருட்டுப்-பணத்தில்-சினிமாஎடுத்த-கொள்ளைக்-கும்பல்தலைவன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

சும்மா கிடந்தவனுங்கள ஓனர்தாங்க உசுப்பேத்தி விட்டாரு..!!

Image may contain: 4 people, meme and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

 

71512910_2294965443958790_2614338518536683520_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQm6YfW7UTPtoz3r5AmbyDjpKNsflSmdmoVe8UOhz4m4HMJfV4XAOJaGFcxmZHh7T74&_nc_ht=scontent-frx5-1.xx&oh=6d308753c8b0dd973b11f971d98659f3&oe=5DF21E1B

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிகண்டன்

ஃபேன்சி ஸ்டோரில் வாங்கிய மாஸ்க்.. காலில் கயிறு கட்டி சிக்னல்.. மணிகண்டனின் பகீர் வாக்குமூலம்

"ஃபேன்சி ஸ்டோரில்தான் அந்த மாஸ்க் வாங்கினோம்.. காலில் கயிறு கட்டி சிக்னல் கொடுத்தோம்.." என்று அடுக்கடுக்கான பகீர் வாக்குமூலங்களை அசால்ட்டாக சொல்லி கொண்டு இருக்கிறான் கொள்ளையன் மணிகண்டன்!

லலிதா ஜூவல்லரி கொள்ளையில், திருவாரூரில் மணிகண்டன் என்பவனை சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு விரட்டி பிடித்தார்.

மணிகண்டன் சிக்கியதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் ஆதாரமே.. திருவாரூரில் 5 கிலோ நகையுடன் பிடித்த மணிகண்டனை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.

இன்று 3-வது நாளாக மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டன் வீடு கேகே நகரில் உள்ளதால், அங்குள்ள மணிகண்டன் சொந்தக்காரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மணிகண்டன் கேரளா உட்பட பக்கத்து மாநிலங்களிலும் கைவரிசையை காட்டி உள்ளதால், இந்த விசாரணையில் அண்டை மாநில போலீசாரும் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

விவரங்கள்

அந்த விசாரணையில் தாங்கள் கொள்ளை அடித்த விவரங்களை போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லி வருகிறான். இதற்கெல்லாம் மூல காரணம், ஸ்கெட் போட்டு தந்தது முருகன் என்பதில் இருந்து பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

ஃபேன்சி ஸ்டோர்

"நகையை கொள்ளை அடிக்க ஒரு மாசத்துக்கு முன்னேயே பிளான் போட்டிருந்தோம். ஆளுக்கு 5 கிலோ நகைகளை பிரித்து கொள்வது என்பது எங்கள் ஐடியா. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகையை திருட ஒரு ஃபேன்சி ஸ்டோரில் பொம்மை மாஸ்க் வாங்கினோம். காஸ்ட்லியான மாஸ்க் வாங்கினால், அது ஈஸியா கண்டுபிடிச்சு தந்துடும் இல்லை, அதனாலதான் சாதாரணமான மாஸ்க் வாங்கி கொண்டோம்" என்று மிக நுணுக்கமான விஷயத்தில் இருந்து மணிகண்டனின் வாக்குமூலம் அதிர வைத்து வருகிறது.

சிக்னல்

"2 பேர் உள்ளே போனோம்.. வெளியில ஒரு ஆளை சிக்னல் தர நிக்க வெச்சோம். சத்தம் போட்டு சிக்னல் தந்தால் மாட்டிக்குவோம் என்று காலில் கயிரை கட்டிக் கொண்டு சிக்னல் தந்து கொண்டோம். யாருமே பேசிக்கவில்லை. கொள்ளை நடந்து முடியும்வரை செல்போனும் யூஸ் பண்ணவில்லை" என்று அடுத்தடுத்த நுணுக்கமான டெக்னிக்கை சொல்கிறார் மணிகண்டன்.

டூவீலர்

போலீசாரின் கவனம் எல்லாம் வட மாநில கொள்ளையர்கள் மீதேஇருந்ததால், நாங்கள் சிக்க மாட்டோம் என்று நினைச்சுட்டோம். அதனாலதான் தைரியமா டூவிலரில் வெளியே வந்தோம் என்கிறார். இன்னும் என்னவெல்லாம் மணிகண்டன் வாக்குமூலத்தில் வெளியாக போகிறதோ தெரியவில்லை!

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/third-day-investigation-from-manikandan-in-lalitha-jewellery-theft-case-364854.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுதான் லலிதா ஓனரோட நிஜ குரலா..!! அதிர்ந்து போன செய்தியாளர்கள்..!

tobbery-jpg_1200x630xt.jpg

எந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதிக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் குடிபெயர்ந்து அங்கிருந்து அருகில் உள்ள மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் செடியான சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கினார். பின்னர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த லலிதா ஜூவல்லரி கையகப்படுத்தி சென்னையிலேயே குடியேறினார். கிரண்குமார் வசம் வந்த லலிதா ஜுவல்லரி ஆந்திராவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்தது.

அரசியல் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் சினிமா காரர்கள் என அத்தனை துறையில் உள்ளவர்களையும் தனது நண்பர்கள் ஆக்கிக்கொண்டார் கிரண்குமார். அடையார் ஆனந்த பவன் மற்றும் யுனிவர்சல் பூர்விகா மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கிளைகளை அடுத்தடுத்து ஆரம்பிக்க தொடங்கிய நிலையில் நாமும் என் இதேபோன்று பல கிளைகளை நடத்தி வெற்றிபெற கூடாது என நினைத்தார் கிரண்குமார். அதன் அடிப்படையில்தான் தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் பிரமுகர்களின் உதவி மற்றும்  முதலீடு பெற்று சென்னையில் பல இடங்களிலும் திருவள்ளூர், திருப்பதி, விசாகபட்டினம், ஹைதராபாத், திருச்சி என 50க்கும் மேற்பட்ட கிளைகளை அடுத்தடுத்து கிரண்குமார் திறந்துகொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் என்ன உள்ளே வருகிறது எவ்வளவு வெளியே செல்கிறது என்ற கணக்கு கூட புரியாத அளவிற்கு கிரண்குமார் வர்த்தக சாம்ராஜ்யம் வெறும் மூன்றே வருடங்களில் நூறு மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறுகிறார்கள். நகைக்கடை வட்டாரங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த நிலையில்தான் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரி துளை போட்டு குழந்தைகள் அணியும் கார்ட்டூன் விளையாட்டு முகமூடிகளை அணிந்துகொண்டு காமெடியாக பாக்யராஜ் பட பாணியில் மொத்தமாக மிச்சம் மீதி வைக்காமல் வழிச்சு வாரிக்கொண்டு சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.

இதுகுறித்து தகவலறிந்த நகைக் கடை உரிமையாளரான கிரண்குமார் சுமார் 5 மணி நேரம் கழித்து திருச்சி சென்றடைந்து கொள்ளையடிக்கப்பட்ட கடையை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்குமார் காவல்துறை நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் அப்போது முதன்முறையாக கிரண் குமார் குரலை கேட்ட செய்தியாளர்கள் மற்றும் அங்கிருந்து நபர்கள் சற்று ஆடித்தான் போனார்கள் காரணம் டிபிக்கல் வடமாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள் மற்றும் நகை கடைக்காரர்கள் பேசுவதைப் போன்று தமிழை தட்டுத்தடுமாறி அதே நேரத்தில் கீச் கீச் குரலில் பேசினார் அப்போதுதான் தெரிந்தது கிரண்குமார் விளம்பரத்தில் தோன்றி பேசுவது அவர் குரலில் அல்ல அது டப்பிங் வாய்ஸ் என்று எப்போதுமே நிழல் வேறு நிஜம் வேறு.

https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/robbery-alitha-jewellery-branch-own-press-meet-pys686

டிஸ்கி :

இந்த நிறுவனத்தை இலங்கையை சார்ந்தவர்கள் முதலில் நடாத்தி வந்ததாக சொல்கிறது இந்த செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

இந்த நிறுவனத்தை இலங்கையை சார்ந்தவர்கள் முதலில் நடாத்தி வந்ததாக சொல்கிறது இந்த செய்தி.

1975 - 1980 களில்.... இலங்கையிலும், லலிதா ஜூவல்லரி, லலிதா நகை மாளிகை என்ற பெயரில் இருந்தது.
இலங்கை வானொலியில் கூட... அந்நேரம் விளம்பரங்கள் வந்திருந்தது.  
1983 இனக் கலவரத்திற்கு பிறகு... தமிழ் நாட்டுக்கு மாறி விட்டதாக  நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, meme and text

இப்ப வேண்டாம்.... இரவுக்கு  வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 1:59 AM, தமிழ் சிறி said:

1975 - 1980 களில்.... இலங்கையிலும், லலிதா ஜூவல்லரி, லலிதா நகை மாளிகை என்ற பெயரில் இருந்தது.
இலங்கை வானொலியில் கூட... அந்நேரம் விளம்பரங்கள் வந்திருந்தது.  
1983 இனக் கலவரத்திற்கு பிறகு... தமிழ் நாட்டுக்கு மாறி விட்டதாக  நினைக்கின்றேன். 

இப்போதும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உண்டு 
நான் நினைக்கிறன் சென்னையில் இருந்ததை ... இந்த ஆந்திரா காரன் வாங்கி இருக்கலாம். 

1.JPG

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இப்போதும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உண்டு 
நான் நினைக்கிறன் சென்னையில் இருந்ததை ... இந்த ஆந்திரா காரன் வாங்கி இருக்கலாம். 

1.JPG

 

வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் போலுள்ளது.
தற்போது.... 50 மேற்பட்ட, கிளைகள் உள்ளதாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் போலுள்ளது.
தற்போது.... 50 மேற்பட்ட, கிளைகள் உள்ளதாம். 

உண்மையான திருடன் இவர்தான் இவரை விசாரித்தால் தமிழ்நாடு தென்கோடி மட்டும்  கலங்கும்  அரசியல்வாதிகளின் பினாமி ஆக உள்ளபடியால்தான் இவ்வளவு கிளைகள் திறக்க முடியுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உண்மையான திருடன் இவர்தான் இவரை விசாரித்தால் தமிழ்நாடு தென்கோடி மட்டும்  கலங்கும்  அரசியல்வாதிகளின் பினாமி ஆக உள்ளபடியால்தான் இவ்வளவு கிளைகள் திறக்க முடியுது .

அவரை குற்றம் சொல்ல முடியாது 
ஏமாறும் கூட்டமாக மக்கள் இருக்கும்வரை 
அவர்கள் காட்டில் மழைதான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முருகன், பெங்களூருவில் சரணடைந்த நிலையில் அவரைக் காவலில் எடுத்த கர்நாடக போலீஸார் பெரம்பலூரில் முருகன் புதைத்து வைத்துள்ள நகைகளை மீட்கும் காட்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா அந்த தமிழ்ப்பட நாயகிகள்? முருகனுக்கு எயிட்ஸ் இருக்காமப்பா.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.