Jump to content

ரூமிக்கு -வ.ஐ.ச.ஜெயபாலன் ,


Recommended Posts

.

Image may contain: one or more people, hat and text

Image may contain: 1 person, beard, close-up and indoor

 

.

ரூமிக்கு
-வ.ஐ.ச.ஜெயபாலன்

,
நலமா ரூமி,
கவிஞர்களின் கவிஞரே

உலரும் நமது உடலும் உயிரும் செளிக்க
மது வார்க்கிறவர்கள் எங்கே?
சுவர்கத்து நூலேணிகளில்
இறங்கி வருகிறதே வசந்தம்.
பாரசீக ரோஜாவோ,
மதுரை மல்லியோ தேன் சிந்துமுன்னம்
நம் இதயங்கள் திறக்க வேண்டுமே?.
.
”இதயம் திறக்கும்வரை
உடைத்துக்கொண்டிரு” என்கிறாயே. ரூமி.
ஆம், மூடிய இதயம்
சிறையிலும் கொடிதே.
ஆனாலும் உடைந்த இதயம்
நினைவின் ஆறாப் புண்ணல்லவா?
என்போல் நீயும்
தகிக்கும் படைப்பு வெறியில் உளறுகிறாய்.
.
அவசரப்படாதே ரூமி,
இது எப்பவுமே திறந்திருக்கும் மதுக்கடை.
நானோ இதயம் எப்பவும்
இயல்பாக பூக்குமென காத்திருப்பவன்.
உலகில் முத்தமிட
அம்மாவாக சகோதரியாக தோழியாக
காதலியாக மகளாக
கடைசிப் பெண் இருக்கிற வரைக்கும்
மூடிய நம் இதயங்கள் மலராது போமோ?
.
ரூமி,
அவரவர் வழிகள் அவரவருக்கு எனினும்
அவசரப்பட்டு இதயத்தை உடைக்காதே.
வசந்த காலம் பூச்சி புழுக்களுக்குக்கூட
அழகிய நாட்க்களை வைத்திருக்கிறதே.
நீயும் காத்திரு.
.

 


.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூமி,
அவரவர் வழிகள் அவரவருக்கு எனினும்
அவசரப்பட்டு இதயத்தை உடைக்காதே.
வசந்த காலம் பூச்சி புழுக்களுக்குக்கூட
அழகிய நாட்க்களை வைத்திருக்கிறதே.
நீயும் காத்திரு.
.

 

நல்லதொரு கவிதை ஐயா .மிகவும் ரசித்து படித்தேன்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

அவசரப்படாதே ரூமி,
இது எப்பவுமே திறந்திருக்கும் மதுக்கடை.
நானோ இதயம் எப்பவும்
இயல்பாக பூக்குமென காத்திருப்பவன்.
உலகில் முத்தமிட
அம்மாவாக சகோதரியாக தோழியாக
காதலியாக மகளாக
கடைசிப் பெண் இருக்கிற வரைக்கும்
மூடிய நம் இதயங்கள் மலராது போமோ

இதயம் முழுக்க கவிதை பூத்த கவிஞன் எல்லவா .இது உம்மால் மட்டும் தான் முடியும் பொயட் .
அருமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் முக பாவனையையும் கவிதையையும் பார்க்க ஏதோ வெள்ளிக்கிழமை மாலை விசேசம் போல இருக்கே? 😎

Link to comment
Share on other sites

கவிஞரே,

கண்ணுக்கு மை அழகு - உங்கள் கவிதைக்கு உணர்ச்சிகள் அழகு...

தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்....

Link to comment
Share on other sites

மிகவும் அன்பும் நன்றியும், goshan_chesuvyuthayakumarJustinஇரும்பொறை. உங்கள் போன்றவர்களால்தான் கவிதை வாழ்கிறது நண்பர்களே. Justin ”கவிஞரின் முக பாவனையையும் கவிதையையும் பார்க்க ஏதோ வெள்ளிக்கிழமை மாலை விசேசம் போல இருக்கே?” சொல்வது ஆச்சரியமாக இருக்கு?  நான் பதின்ம வயசுகளிலேயே  சுவாமிப்போக்கு. இதை அகில உலகமும் உலகம்  அறியுமே Justn 

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் முற்று முழுதான நிலைத்த உண்மைகள் இல்லை. அதாலால் உண்மையை முடிவிலி வரை தேடுவதே மகத்தான கவிதை.

கவிதையில் மருமகளாக என ஒரு சொல்லை சேர்க்க விரும்பினேன் எடிற் மூடிவிட்டார்காள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.