Jump to content

தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர்


Recommended Posts

கனடிய தேர்தல் |’தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர்

 
singh-turban-exchange_2500kbps_852x480_1
மொன்றியல் தெருவில் வாக்காளரை எதிர்கொள்ளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (படம்: CBC)

அக்டோபர் 21 இல் நடைபெறவிருக்கும் கனடிய பொதுத் தேர்தலை முன்னிட்டு கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கியூபெக் மாகாணத்தில் இன்று தனது பிரச்சார வேலைகளை மேற்கொண்டார்.

மொன்றியால் நகரில் அவர் தெருவில் மக்களைச் சந்தித்து அளவளவியபோது ஒரு வெள்ளை இனத்தவர் சிங்கை அணுகி அவரது கைகளைக் குலுக்கிவிட்டு, ‘ தலைப்பாகையை வெட்டிவிட்டாயானால் நீ கனடியன் மாதிரி இருப்பாய்’ என ஆலோசனை கூறினார்.

சிங் அந்த வாக்காளரை எதிர்கொண்டு பதிலளித்த விதம் கனடா முழுவதும் அவர் மீதான மதிப்பை அதிகரித்திருக்கிறது.

“ஓ, கனடியர் பலவித தோற்றங்களில் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அது தான் கனடாவின் அழகு” என சிங் பதிலளித்தார்.

“அது சரி, நான் ஒத்துக்கொள்கிறேன் ஆனால் ரோமாபுரியில் இருக்கும்போது நீ ரோமானியர்கள் போல் இருக்கவேண்டும்” என அந்த வாக்காளர் பதிலுக்குக் கூறினார்.

“இது கனடா. நீ விரும்பிய எதையும் செய்து கொள்ளலாம்’ எனக் கூறியவாறு சிங் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

“சரி, நன்றாக இரு. நீ வெற்றி பெறுவாய் என நான் நம்புகிறேன்” என அம் மனிதர் பதிலுக்குக் கூறினார்.

இன்றிரவு நடைபெறும் தொலைக்காட்சியொன்றில் நடைபெறவிருக்கும் பிரஞ்சு மொழியிலான, இதர கட்சித் தலைவர்களின் விவாதத்தில் கலந்து கொள்ள சிங் கியூபெக் மாகாணத்திற்கு வந்திருந்தார்.

கியூபெக் மாகாணம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரச்சினைக்குரிய சட்டமூலம் (Bill 21) அம் மாகாணத்தில் வாழும் இனக்குழுமங்களிடையே பலத்த விவாதங்களை எழுப்பி வருகிறது.

மாகாணத்தின் பொதுப்பணிகளில் (அரச உத்தியோகங்கள்) பணியாற்றுபவர்கள் கடமை நேரத்தில் மத அடையாளங்களை அணியக் கூடாது என்ற சட்டத்தை மாகாணப் பாராளுமன்றம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.

மத அடையாளமான தலைப் பாகையுடன் சிங் தலைவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு கியூபெக்கின் மத அடையாளச் சட்டம் பற்றி விவாதிப்பதுவும் ஒருவகையில் விவாதத்தைச் சுவாரசியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மத்திய அரசியல் கட்சியின் தலைவராக ஒரு வெள்ளையரல்லாத சிறுபான்மை இனத்தவர் கனடிய அரசியலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்ரூ ஷியர், புளொக் கியூபெக்குவா கட்சியின் தலைவர் ஈவ்-பிரான்சுவா பிளான்ஷே ஆகியோரும் பிரன்ச்சு மொழியிலான இவ் விவாதத்தில் கலந்து கொள்கிறார்கள்.

கியூபெக் மாகாணத்தில் இன்று ‘நனோஸ்’ நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் லிபரல் கட்சி முதலாவது இடத்திலும், புதிய ஜனநாயகக் கட்சி நான்காவது இடத்திலும் இருக்கிறது.

பாராளுமன்றத்தில், ஒன்ராறியோவிற்கு (121) அடுத்தபடியாக கியூபெக் மாகாணம் 78 ஆசனங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் அதிகளவு ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆடிசியமைக்கும் வழக்கமுண்டு. அந்த வகையில் கியூபெக் விவாதம் தலைவர்கள் மத்தியில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிங்கின் தலைமையில் புதிய ஜனநாயக்கட்சி நாடு தழுவிய ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நிதி சேகரிப்பு முதல் வேட்பாளர்களை நியமிப்பதுவரை சிங்கின் பயணம் இதுவரையில் இலகுவாக இருப்பதாகத் தெரியவில்லை.

http://marumoli.com/?p=4714&fbclid=IwAR3xnzpWqjRy3hZX2L-hJDOAX9YYqKFutWPgpXrXwQdU9s-24lsM18abKNw

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.