• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

முதுமையை தாமதப்படுத்தும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு

Recommended Posts

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-2.jpg

முதுமையை தாமதப்படுத்தும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு

வயது முதிர்ச்சியால் ஏற்படும் முதுமை மற்றும் முதுமைசார்ந்த நரம்பு தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடுகளும் நோய்களும் அதிகரிக்கத் தொடங்கி விடுவது இயற்கையின் நியதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், முதுமை மற்றும் முதுமை சார்ந்த நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88.jpg

அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரில் உள்ள மஹரிஷி மார்கண்டேஷ்வர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜய் குப்தா, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஜினிகாந்த் மிஷ்ரா மற்றும் இவர்களின் மாணவி குஷ்பூ ஆகியோர் கண்டுபிடித்துள்ள இந்த மூலிகை மருந்தினை ஆய்வகத்தில் உள்ள எலிகளுக்கு அளித்து பரிசோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த மூலிகை மருந்தை உட்கொண்ட வயது முதிர்ந்த எலிகள் இளம் வயது எலிகளைப் போல் சுறுசுறுப்பாக செயற்படுவது ஆய்வில் தெரியவந்தது.

நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களும் கோளாறுகளும் மூளையில் இருந்துதான் உற்பத்தியாகின்றன என்பதால் இந்த மருந்தை சாப்பிட்ட வயதான எலிகளின் மூளையில் உள்ள புரதங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதை இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

அதேவேளையில், இந்த மருந்து மூளையில் உள்ள உயிரணுக்களில் ஏதேனும் நச்சுத்தன்மையை உண்டாக்குமா? என்று பரிசோதித்ததில் நல்லவேளையாக எவ்வித நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட வேளையில் மூளையில் உள்ள உயிரணுக்கள் ஆரோக்கியமாக செயலாற்றியுள்ளன.

வயது முதிர்ச்சியை யாராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது. எனினும், நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களால் தாக்கப்படாமல் ஆரோக்கியமான முறையில் முதுமையை எதிர்க்கொள்ள உதவப்போகும் இந்த அரியவகை மருந்து முழுக்க முழுக்க மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் மனிதர்களின் பயன்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக அமையும் என்பதால் இதற்கான காப்புரிமைக்கும் கண்டுபிடிப்பாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-3.jpg

http://athavannews.com/முதுமையை-தாமதப்படுத்தும/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாவட்ட செயலக வாள் வெட்டு; சற்றுமுன் ஐவர் கைதாயினர்!   யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பாக மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இன்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு வாள்கள், கைக்கோடரி ஒன்று, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. மல்லாகம் கனி எனப்படும் குழுவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளார் என்ற பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/மாவட்ட-செயலக-வாள்-வெட்டு/
  • 2020  தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...        
  • என் கூடவே இரும்  ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆணீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாம் நீங்கதனப்பா 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமாநீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனாணீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாம் நீங்காதானப்பா  3.வியாதியின் நேரத்தில் வைத்யராநீரே சோதனை நேரத்தில் நண்பரானீரே என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாம் நீங்கதானப்பா  
  • இராவணன் சிவபக்தன்: தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது – இந்துமகாசபா வேதனை   “கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “ என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/இராவணன்-சிவபக்தன்-தேர/  
  • சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்; நொருங்கியது ஆட்டோ! கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.   https://newuthayan.com/சங்குப்பிட்டி-விபத்தில்/