Jump to content

சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகிறார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sivaji-lingam.jpg

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகிறார் தமிழ் வேட்பாளர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தேர்தல் திணைக்களத்தில் அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன்,  கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மேலும் டெலோ அமைப்பில், அவர் வகித்த அனைத்து பதவிகளையும் இதனால் சிவாஜிலிங்கம் இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த  2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-களம/

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

கடந்த  2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிவரும் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவார் போலிருக்கு. 😀

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ; செல்வம் எம்.பி அதிரடி 

எமது கட்சியை சேர்ந்த  சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

selvam.jpg

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்  இன்று ஊடகவியலாளர்கள் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். நாளைய தினம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.

எமது கட்சி ஒழுக்கமான கட்டுகோப்புள்ள ஒரு கட்சி, ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது எமது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். 

இதேவளை இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை.வெற்றிபெறக்கூடியாவருக்கு வாக்கை அளிக்காமல் வேறு நபருக்கு அளித்தால் அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் எம்மை பழி வாங்குவார்கள் என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கிறது. 

அத்துடன் கோத்தாபய தொடர்பாகவும் எமது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் எதிர்கின்ற ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விடுமோ என்ற பிரச்சனை இருக்கிறது. அத்துடன்  நாம் சரியான ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை, அவர்கள் அந்த கட்சிகளோடு இல்லை என்ற தோற்றபாடு ஏற்படும் அபாயகரமான நிலையும் உள்ளது. 

எனவே  எம்மை பொறுத்த வரை வெற்றிபெறும் வேட்பாளரிடம் எமது கோரிக்கையினை முன்வைத்து அதை நடைமுறைபடுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம். 

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அந்த கோரிக்கையினை முன்வைக்கவேண்டும், அப்போது அது பெறுமதியானதாக இருக்கும். இம்முறை தேர்தலில் எமது தரப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் ஆதரிக்க முடியும். எமது கட்சியும் அதில் உறுதியாக உள்ளது.எமது கோரிக்கைகளை எடுத்தெறிந்தவர்களிற்கு எமது மக்களின்  வாக்குகளை பெற்றுகொடுப்பது தவறான விடயம். 

வேட்பாளர்களுடன் பேசும் போது இதனை நாம் வலுவாக கூறுவோம். அவர்களது வெற்றிக்காக அவர்கள் எமது கோரிக்கைக்கு ஒத்து வரவேண்டும் என்பதுவே எமது கருத்து. ஒற்றுமையாக அதனை முன்வைக்கும் போது அது சாத்தியமாகும். அப்படி இல்லையாயின் என்ன செய்யலாம் என்று நாம் யோசிக்கலாம். என்றார்

https://www.virakesari.lk/article/66333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

எமது கட்சியை சேர்ந்த  சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கம் இப்பவும் வேலை செய்யுதா?

Link to comment
Share on other sites

தமிழர்களுக்காகவே களமிறங்கினேன் - சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன்  என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

sivaji_lingam.jpg

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. 

அது குறித்து சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்கள் சார்பிலே ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். தென்னிலங்கை பிரதான கட்சிகளை எந்த விதமான திட்டவட்டமான வாக்குறுதிகளும் இல்லாமல் பின்பற்றுவது பயனில்லை எனும் கருத்து எமது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓங்கி ஒலித்ததை அடுத்து , இன்றைய தினம் என்னை ஒரு வேட்பளராக முன்னிறுத்தி வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் எனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளேன். ஆனால் சாதாரண உறுப்புரிமையில் கட்சியில் அங்கத்துவம் வகிப்பேன். 

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிடவுள்ளேன். தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். தாயகத்தில் உள்ளவர்களினதும் புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களினதும் வேண்டுகோளின் அடிப்படையிலையே போட்டியிடுகிறேன்.

ஆகவே தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்துவே களமிறங்கியுள்ளேன். 

எனவே நாளை திங்கட்கிழமை காலை 09 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு தவிசாளரிடம் கையளிப்பேன். என மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/66307

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படித்ததில் பிடித்தது 👇

கோமாளிப் பொம்மை 2019

அரங்கே அதிர்ந்தது,

ஆரம்பமாயிற்று பொம்மலாட்டம்.

வகை வகையாய் பொம்மைகள்,

கலர் கலராய் சட்டைகள்.

நீலம், பச்சை, சிவப்புப் பொம்மைகள் துள்ளித் துள்ளி ஆடுகிறன.

ஓரமாய் சில பொம்மைகள் அரங்குக்கு நோகாமல் நொண்டி ஆட்டம் ஆடின.

சில பொம்மைகளுக்கு காலில்லை. சிலதுக்கு கையில்லை. ஒரு சிலதுக்கு தலையே இல்லை. 

ஆனாலும் அவை ஆடின, ஆட வைக்கப்பட்டன.

போனதடவை ஆட்டத்தை வென்ற பொம்மை, இந்த தடவை ஆடவே இல்லை. 

அரங்கின் ஓரமாய் அது அங்கலாய்ப்பாய் பார்தபடி இருந்தது.

குல்லா போட்டன மூன்று பொம்மைகள்.

அல்லஹாவின் மக்கள் கவனம் அவர்கள் மீதே இருக்க வேண்டும் என்பதற்காய்-குல்லா போட்டன மூன்று பொம்மைகள்.

என்ன தருவீர்கள் எமக்கு? அரங்கின்  வடக்கே இருந்து ஒரு குரல் கேட்டது.

அதுதானே, என்ன தருவீர்கள்? கிழக்கில் இருந்து ஈனஸ்வரத்தில் இன்னொரு குரலும் சேர்ந்தது.

 இதுவரை தந்ததே அதிகம் என்றது பச்சைப் பொம்மை.

உங்களுக்கு எதுவும் தந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் ஆட வந்தேன் என்றது நீலப்பொம்மை.

சிவப்பு பொம்மை, முதலாளி, தொழிலாளி, வர்கம், நவகாலனியம் என்று ஏதேதோ சொன்னது, ஆனால் கடைசிவரை என்ன தரும் என்று சொல்லவே இல்லை.

எல்லாப் பொம்மைகளுக்கும் இறுதியாக ஒரு கோமாளிப் பொம்மையும் அரங்கில் ஏறியது.

அது பல மேடைகள் கண்ட பொம்மை.

அது அரங்கில் அங்கும் இங்கும் தாவிற்று.

மானம் என்று மார்தட்டிற்று. கோபம் கொண்டு அனல் கொட்டிற்று. இழந்தவற்றை நினைத்து கண்களில் ஈரம் சொட்டிற்று.

அரங்கில் வடக்கு-கிழக்காக ஓடி, என்னை பாருங்கள், பாருங்கள் என்றது.

உங்கள் தேவைகளை உலகறிச் செய்வேன் என்னை பாருங்கள், பாருங்கள் என்றது.

கோமாளிப் பொம்மையின் ஆட்டம் முன்பை விட இந்த முறை கவர்சியாகவே இருந்தது.

கோமாளியாக இருந்தாலும் இப்படியும் ஒரு பொம்மையும் தேவைதான் என மக்கள் சிலர் பேசியும் கொண்டார்கள்.

ஆனாலும், கோமாளிப் பொம்மையினை ஆட்டிய கைகளில், காய்ந்து போயிருந்த இரத்தத்தை எல்லா கண்களும் கவனித்து கொண்டன.

ஆட்டம் முடிந்தது.

கோமாளிப் பொம்மைக்குப் படுதோல்வி.

மக்களுக்கு நாம் கொடுத்ததே போதும் அதுதான் கோமாளிப் பொம்மை தோற்றது என்றன பச்சை பொம்மைகள்.

மக்களுக்கு எதுவுமே தேவையில்லை அதுதான் கோமாளிப் பொம்மை தோற்றது என்றன நீலப்பொம்மைகள்.

வழமை போல் சுரண்டல், சுண்டல் என ஏதேதோ பேசியது சிவப்புப் பொம்மை.

களைப்பில் ஒரு ஓரமாய் கிடந்தது கோமாளிப் பொம்மை.

இன்னும் நாலு ஆண்டுகளுக்கு அதற்கான வேலை இல்லை. ஆனாலும் என்ன வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் ஆடியாயிற்றே!

களைப்பிலும் களிப்போடு கிடந்தது கோமாளிப்பொம்மை.

Link to comment
Share on other sites

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தன்னை முன்மொழிந்த பொழுது அவரையும் பலர் 'கோமாளி' என்றனர். இன்றும் அவரை, 'கோமாளி' என்று தொடர்ந்தும் கூறும் அமெரிக்க மற்றும் உலக மக்கள் உள்ளனர். 

ஆனால், ட்ரம்ப் பொருளாதார ரீதியாக ( சில துறைகளை தவிர்த்து), அமெரிக்காவை ஒரு பலமான நிலையில் வைத்துள்ளார். அதனால். உலகமே பயன் பெறுகின்றது.   

உக்ரைன் தலைவர் Zelensk உண்மையிலேயே ஒரு கோமாளியாக நடித்தவர். 

அதேவேளை தம்மை அறிவியல் வாதிகளாக காட்டிய பல உலக தலைவர்கள் மக்களால் "கோமாளியாக" பார்க்கப்பட்டனர்.  

இங்கே சிவாசிலிங்கம் கொள்கை கோமாளித்தனமானதா இல்லையா என்பதே விவாதப்பொருளாக தமிழர் தரப்பிற்கு அமையவேண்டும். அதுவே, வருங்காலத்திற்கு ஆரோக்கியமானது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

ஒவ்வொரு தேர்தலிலுமா சிவாஜிலிங்கத்தின் கோமாளித்தனத்தை தமிழர் விவாதிக்க வேண்டும் 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ananthi-Sivajilingam-President-election-2019-700x450.jpg

ஜனாதிபேதி தேர்தல் 2019: வேட்பு மனு தாக்கல் செய்தார் சிவாஜிலிங்கம்

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில், சற்றுமுன்னர் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேடபுமனுத் தாக்கல் செய்துள்ளார்.

http://athavannews.com/ஜனாதிபதி-தேர்தலுக்கான-வ-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தன்னை முன்மொழிந்த பொழுது அவரையும் பலர் 'கோமாளி' என்றனர். இன்றும் அவரை, 'கோமாளி' என்று தொடர்ந்தும் கூறும் அமெரிக்க மற்றும் உலக மக்கள் உள்ளனர். 

ஆனால், ட்ரம்ப் பொருளாதார ரீதியாக ( சில துறைகளை தவிர்த்து), அமெரிக்காவை ஒரு பலமான நிலையில் வைத்துள்ளார். அதனால். உலகமே பயன் பெறுகின்றது.   

உக்ரைன் தலைவர் Zelensk உண்மையிலேயே ஒரு கோமாளியாக நடித்தவர். 

அதேவேளை தம்மை அறிவியல் வாதிகளாக காட்டிய பல உலக தலைவர்கள் மக்களால் "கோமாளியாக" பார்க்கப்பட்டனர்.  

இங்கே சிவாசிலிங்கம் கொள்கை கோமாளித்தனமானதா இல்லையா என்பதே விவாதப்பொருளாக தமிழர் தரப்பிற்கு அமையவேண்டும். அதுவே, வருங்காலத்திற்கு ஆரோக்கியமானது.   

அவர் பொருளாதார ரீதியாகவும் கோமாளித்தனம்தான் செய்துகொண்டு இருக்கிறார் 
இங்கு எதுவும் பலமாக இல்லை  ....பலவீனமான நிலையில்தான் போய்க்கொண்டு இருக்கிறது 
வட்டிவீதம் மீண்டும் குறைக்கப்படும் என்பதே எதிர்க்கூவல்  ... 

ஓவருமுறை குடியரசு கட்சியில் ஒருவர் ஜனாதிபதியாகும்போதும் 
இங்கிருக்கும் வங்கிகள் ரெகுலேஷனை தமக்கு சாதகமாக மாற்றி ... மக்களுக்கு பாரிய கடன்களை 
கொடுப்பார்கள்  ... கடன் கொடுக்கும் வீதம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டு போகிறது 
மக்கள் கடன் வாங்கி செலவழிக்கிறார்கள் .... இது ஒரு தற்காலிக நிலைதான் 
வருகிற வருடம் கடன் கட்ட தொடங்கும்போது ... நிலைமை வேறாக இருக்கும். 

உலக மக்கள் தொகை கூட கூட உற்பத்தியும் பொருளாதாரமும் கூடிக்கொண்டுதான் இருக்கும் 
அது யார் இருந்தாலும் உற்பத்தி பெருகுவது நடந்துகொண்டு இருக்கும் .... தேக்க நிலை என்பதை 
எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்து பொருளாதார நிலை அமையும். 

NY Fed

Link to comment
Share on other sites

6 minutes ago, Maruthankerny said:

ஆனால், ட்ரம்ப் பொருளாதார ரீதியாக ( சில துறைகளை தவிர்த்து), அமெரிக்காவை ஒரு பலமான நிலையில் வைத்துள்ளார். அதனால். உலகமே பயன் பெறுகின்றது.  

எந்த நாடும் தனது பொருளாதார திறனை அதன் நுகர்வோர் திறன் கொண்டு அளக்கலாம். அந்த விடயத்தில் அமெரிக்க நுகர்வோர்கள் பலமாக உள்ளார்கள்.

நான் குறிப்பாக குறிப்பிடுவது அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் கிட்டத்தட் ஐம்பது வருட குறைவான சுட்டியை கொண்டுள்ளது.

https://www.bbc.com/news/business-48145563

https://tradingeconomics.com/united-states/consumer-spending

இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் அமெரிக்க கடனை ஒப்பீடடளவில் விரும்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 3:00 PM, ampanai said:

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ; செல்வம் எம்.பி அதிரடி 

selvam.jpg

விடுதலைப்புலிகள் இருந்த போது தங்களுக்கு சன நாயகம் போதாது என்று ஊளையிட்டவர்கள் இப்போ.. தங்களுக்குள்ளேயே சன நாயகத்தை அனுமதிக்கிறார்கள்.. இல்லையே..

புலிகள் ஆவது போராட்ட காலத்தில் மக்களின் பலத்தை ஒருமிக்க அப்படிச் செய்தார்கள்... இவர்கள்..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் இருந்த போது தங்களுக்கு சன நாயகம் போதாது என்று ஊளையிட்டவர்கள் இப்போ.. தங்களுக்குள்ளேயே சன நாயகத்தை அனுமதிக்கிறார்கள்.. இல்லையே..

புலிகள் ஆவது போராட்ட காலத்தில் மக்களின் பலத்தை ஒருமிக்க அப்படிச் செய்தார்கள்... இவர்கள்..?!

இந்த இரண்டு மூஞ்சியையும் நான் 1988இல் நேருக்கு நேர் பார்த்து இருக்கிறேன் 
அன்றுதான் எனக்கு இவர்கள் எவ்ளவு பெரிய டபாகூறுகள் என்று புரிந்தது. 
இந்த இரண்டு டபாக்கூரையும் நம்பி அழிந்தவர்களும் இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

எந்த நாடும் தனது பொருளாதார திறனை அதன் நுகர்வோர் திறன் கொண்டு அளக்கலாம். அந்த விடயத்தில் அமெரிக்க நுகர்வோர்கள் பலமாக உள்ளார்கள்.

நான் குறிப்பாக குறிப்பிடுவது அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் கிட்டத்தட் ஐம்பது வருட குறைவான சுட்டியை கொண்டுள்ளது.

https://www.bbc.com/news/business-48145563

https://tradingeconomics.com/united-states/consumer-spending

இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் அமெரிக்க கடனை ஒப்பீடடளவில் விரும்புகிறார்கள்.

இதுக்கு ட்ரம் ஒன்றும் பெரிதாக வெட்டி புடுங்கவில்லை 2010இல் இருந்து இது குறைந்துகொண்டுதான் 
வருகிறது  இது ஐந்து பத்து வருடம் முன்பே எதிர்கூவிய விடயம்தான் 

இப்போது ட்ரம் வெட்டி புடுங்கியது என்றால் வரிக்குறைப்பு என்பதை கொண்டுவந்தது 
இதையும் டிரம்புக்கு லஞ்சம் கொடுத்தும் பல வெளிநாட்டு நிறுவனங்கள்  குறிப்பாக ஜெர்மனி ஜப்பான் 
கார் உற்பத்தியாளர்கள் .... குறைந்த சம்பளம் மற்றும் பெனிபிட்ஸ்கள் இல்லை  ..... லீவு இல்லை போன்ற 
நன்மைகளை கருதி இங்கே விரிவாக்கம் செய்கிறார்கள் .... அவர்கள் இங்கு உற்பத்தி (அசெம்பிளி) செய்கிறார்களே தவிர  .. பொருளையும்  லாபத்தையும் தமது நாட்டுக்கு கொண்டு சென்று விடுவார்கள் 
நீண்ட காலத்தில் இது வெறும் புண்ணாக்கு வேலைதான்.
அவர்கள் மலிவான ஆட்கூலியையும்  ..... மலிவான உள்ளூர் கனிமவளங்களையும் சேர்த்து கார் ஆக்கிக்கொண்டு வெளியேறுகிறார்கள் ....... இதில் நாட்டுக்கு பெரும் நஷ்ட்டம்தானே தவிர லாபம் ஒன்றும் இல்லை. 
சூழல் மாசு அடைவது .... தண்ணீர் மற்றும் கனிமவள இழப்பு ...... வெறும் கூலியோடு மட்டும் வாழும் குடிமக்கள்.
போன்றவற்றை கொடுத்து .... கூடவே லாபத்தையும் அவர்கள் சொந்த நாட்டுக்கு கொண்டுபோய்விடுவார்கள். 

Data extracted on: October 7, 2019 (4:52:37 PM)

Labor Force Statistics from the Current Population Survey

Series Id:           LNS14000000
Seasonally Adjusted
Series title:        (Seas) Unemployment Rate
Labor force status:  Unemployment rate
Type of data:        Percent or rate
Age:                 16 years and over

latest_numbers_LNS14000000_2009_2019_all_period_M09_data.gif

Link to comment
Share on other sites

On 10/6/2019 at 8:08 AM, தமிழ் சிறி said:

கடந்த  2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2005 இல் அல்ல. 2010 ஜனாதிபதி தேர்தலில் என வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

2005 இல் அல்ல. 2010 ஜனாதிபதி தேர்தலில் என வர வேண்டும்.

சரியான தகவலுக்கு... நன்றி, லாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Selvam-MP.jpg

கட்சிக்கும் சிவாஜிலிங்கதிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை – அடைக்கலநாதன்

ஐனாதிபதித் தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை என்றும் அவரது முடிவிற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் இரண்டாம் சுற்றுச் சந்திப்பு யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இச்சந்திப்பின் முடிவில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. அவர் கட்சியில் எந்தவொரு முடிவையும் கேட்காமலே தான் போட்டியிடுகின்றார். நிச்சயமாக கட்சி கூடி அவருக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கின்றோம். எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பொது வேட்பாளர் என்ற ரீதியில் அவரும் பரிசீலிக்கப்படுவாரா என்பது தொடர்பாக எந்தவிதமான முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் சிவாஜிலிங்கம் எங்கள் கட்சியினுடைய வேட்பாளர் அல்ல. கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக கருத முடியாது” என்றார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் அரசியல் தலைவராக இருந்த சிவாஜிலிங்கம், ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததை அடுத்துகட்சியில் தான் வகித்த பதவிகளையும் இராஜினாமா செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு எதிராக கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைகயையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கட்சிக்கும்-சிவாஜிலிங்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இதுக்கு ட்ரம் ஒன்றும் பெரிதாக வெட்டி புடுங்கவில்லை 2010இல் இருந்து இது குறைந்துகொண்டுதான் 
வருகிறது  இது ஐந்து பத்து வருடம் முன்பே எதிர்கூவிய விடயம்தான் 

இப்போது ட்ரம் வெட்டி புடுங்கியது என்றால் வரிக்குறைப்பு என்பதை கொண்டுவந்தது 
இதையும் டிரம்புக்கு லஞ்சம் கொடுத்தும் பல வெளிநாட்டு நிறுவனங்கள்  குறிப்பாக ஜெர்மனி ஜப்பான் 
கார் உற்பத்தியாளர்கள் .... குறைந்த சம்பளம் மற்றும் பெனிபிட்ஸ்கள் இல்லை  ..... லீவு இல்லை போன்ற 
நன்மைகளை கருதி இங்கே விரிவாக்கம் செய்கிறார்கள் .... அவர்கள் இங்கு உற்பத்தி (அசெம்பிளி) செய்கிறார்களே தவிர  .. பொருளையும்  லாபத்தையும் தமது நாட்டுக்கு கொண்டு சென்று விடுவார்கள் 
நீண்ட காலத்தில் இது வெறும் புண்ணாக்கு வேலைதான்.
அவர்கள் மலிவான ஆட்கூலியையும்  ..... மலிவான உள்ளூர் கனிமவளங்களையும் சேர்த்து கார் ஆக்கிக்கொண்டு வெளியேறுகிறார்கள் ....... இதில் நாட்டுக்கு பெரும் நஷ்ட்டம்தானே தவிர லாபம் ஒன்றும் இல்லை. 
சூழல் மாசு அடைவது .... தண்ணீர் மற்றும் கனிமவள இழப்பு ...... வெறும் கூலியோடு மட்டும் வாழும் குடிமக்கள்.
போன்றவற்றை கொடுத்து .... கூடவே லாபத்தையும் அவர்கள் சொந்த நாட்டுக்கு கொண்டுபோய்விடுவார்கள். 

Data extracted on: October 7, 2019 (4:52:37 PM)

Labor Force Statistics from the Current Population Survey

Series Id:           LNS14000000
Seasonally Adjusted
Series title:        (Seas) Unemployment Rate
Labor force status:  Unemployment rate
Type of data:        Percent or rate
Age:                 16 years and over

latest_numbers_LNS14000000_2009_2019_all_period_M09_data.gif

மருதங்கேணி, நவீன பொருளாதாரத்தின் நெளிவு, சுழிவுகளை எல்லோரோடமும் எதிர்பார்க்க முடியாது.

சுருக்கமாக,  தற்போதையா வளர்ந்த நாடுகளின் வேலை புள்ளிவிபரம் மிகவும் தவறானது.
 
இப்போதைய வேலை என்பது gig அடிப்படை, அதாவது, அவ்வப்போது வேலை.

மற்றது, 2008 இல் இருந்து வேலை இழந்து, வேலை தேடுவதை கைவிட்டவர்களை உள்ளடக்கவில்லை.

மேலும், under employment, வேலை புள்ளிவிபரத்தில் முழு வேலையாக காட்டப்டுகிறது.

2008 இல் வந்த நெருக்கடி தள்ளிப் போடப்பட்டுள்ளதே தவிர, தீர்க்கப்படவில்லை. 

இப்பொது, மேட்ற்கு நாடுகளில் unproductive debt wealth ஆக காட்டப்படுகிறது. நீங்கள் இணைத்த chart இல் கூட mortgage கடனே ஆக கூடுதலாக உள்ளது.

கீழே உள்ள வீடியோ ஐ பாருங்கள், west எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாக சொல்கிறார்.   West இல் இருக்கும் 90-95% சனத்தொகைக்கு இது கூட தெரிய வாய்ப்பில்லை.  சீனாவை பொறுளாதார அடிப்படியில் எதிர் கொள்ள முடியாததிதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில் ஓர் வல்லரசு இருக்கும் போது, யுத்தத்திற்கான சாத்யகி கூறுகள் அதிகம். அதை வர்த்தகத்தில் இப்பொது யதார்த்தமாக காண்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுதான் காரணம்!: போட்டுடைத்தார் சிவாஜி

(இரா­ஜ­துரை ஹஷான்)

தமி­ழ­ருக்கு அர­சியல் ரீதியில் தீர்வு கிடைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்தேன். இத்­தீர்­மானம் கட்­சியின் கொள்­கைக்கு முர­ணாயின் முன்­னெ­டுக்­கப்­படும் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை எதிர்க் கொள்ள தயா­ராக இருக்­கின்றேன். தேர்­தலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­த­மை­யினால் உயி­ரச்­சு­றுத்தல் உள்­ள­தாக முன்னாள் வட மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

virakesari.jpg

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனு பத்­தி­ரங்­களை நேற்று  தேர்தல் ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பித்­ததன் பின்னர்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும்   தெரி­விக்­கையில்

ஜனா­தி­பதி தேர்­தலின் வெற்­றியை தொடர்ந்து தெற்கில் உள்ள அடிப்­படை பிரச்­சி­னைகள் மாத்­தி­ரமே கருத்திற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. வடக்கு , கிழக்கு  மற்றும் மலை­யகம் வாழ் தமிழ் மக்­கள்கள் தொடர்ந்து புநக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இந்­நிலைi முழு­மை­யாக மாற்­ற­ம­டைய வேண்டும்.

தமி­ழ­ருக்கு அர­சியல் ரீதியில் முழு­மை­யான தீர்வு கிடைக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் இருந்து  அர­சியல் ரீதியில் பல அழுத்­தங்­களை பிர­யோ­கித்­துள்ளேன். அதில் ஒன்­றா­கவே ஜனா­தி­பதி தேர்­தலின் போட்­டி­யிடும் தீர்­மானம் காணப்­ப­டு­கின்­றது.

டெலோ அமைப்பின் அடிப்­படை கொள்­கை­க­ளுக்கு ஒரு­போதும் முர­ணாக செயற்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் சுயா­தீ­ன­மான போட்­டி­யி­டு­வது எவ்­வித தவறும் கிடை­யாது.  இத்­தீர்­மா­னத்­திற்கு எதி­ராக கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாயின் அதனை எதிர்க் கொள்ள தயார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் சுய­மாக போட்­டி­யிட தீர்­மா­னித்­ததை தொடர்ந்து இரண்டு பிர­தான கட்­சி­க­ளிடம் இருந்து  நேற்று (07) வேட்புமனு தாக்கல் செய்யும் வரை உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/66421

Link to comment
Share on other sites

சிவாசிலிங்கம் கருத்து : ஜனா­தி­பதி தேர்­தலின் வெற்­றியை தொடர்ந்து தெற்கில் உள்ள அடிப்­படை பிரச்­சி­னைகள் மாத்­தி­ரமே கருத்திற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. வடக்கு , கிழக்கு  மற்றும் மலை­யகம் வாழ் தமிழ் மக்­கள்கள் தொடர்ந்து புநக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இந்­நிலைi முழு­மை­யாக மாற்­ற­ம­டைய வேண்டும்

எனது கருத்து : ஒற்றையாட்சி முறையின் கீழ் சிறுபான்மை புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. காலம் கடந்து சென்று கொண்டிருக்கையில், வேறு இதை விட சிறந்த வழியை நாம் காணும் வரை இந்த பாதையும் பயணமும் ஒரு வழிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

மருதங்கேணி, நவீன பொருளாதாரத்தின் நெளிவு, சுழிவுகளை எல்லோரோடமும் எதிர்பார்க்க முடியாது.

சுருக்கமாக,  தற்போதையா வளர்ந்த நாடுகளின் வேலை புள்ளிவிபரம் மிகவும் தவறானது.
 
இப்போதைய வேலை என்பது gig அடிப்படை, அதாவது, அவ்வப்போது வேலை.

மற்றது, 2008 இல் இருந்து வேலை இழந்து, வேலை தேடுவதை கைவிட்டவர்களை உள்ளடக்கவில்லை.

மேலும், under employment, வேலை புள்ளிவிபரத்தில் முழு வேலையாக காட்டப்டுகிறது.

2008 இல் வந்த நெருக்கடி தள்ளிப் போடப்பட்டுள்ளதே தவிர, தீர்க்கப்படவில்லை. 

இப்பொது, மேட்ற்கு நாடுகளில் unproductive debt wealth ஆக காட்டப்படுகிறது. நீங்கள் இணைத்த chart இல் கூட mortgage கடனே ஆக கூடுதலாக உள்ளது.

கீழே உள்ள வீடியோ ஐ பாருங்கள், west எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாக சொல்கிறார்.   West இல் இருக்கும் 90-95% சனத்தொகைக்கு இது கூட தெரிய வாய்ப்பில்லை.  சீனாவை பொறுளாதார அடிப்படியில் எதிர் கொள்ள முடியாததிதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில் ஓர் வல்லரசு இருக்கும் போது, யுத்தத்திற்கான சாத்யகி கூறுகள் அதிகம். அதை வர்த்தகத்தில் இப்பொது யதார்த்தமாக காண்கிறோம்.

நல்ல வீடியோ இணைப்பிற்கு நன்றி 

இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தாறுமாறாக பேஸ்புக்கில் லைக் பண்ணி 
பகிர்கிறவர்கள் ..... ஏன் நடக்கிறது என்று பார்க்க விரும்புகிறார்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை. ஆனாலும் விவேகமோ விவேகமில்லையோ ஒரே ஊரவளாக அறிந்த வரைக்கும் அவரின் துணிச்சல்  என்னைத் துணுக்குற வைத்திருக்கிறது. நமக்குள் நிச்சயமாக இப்படியான ஒருவர் தேவை. இந்த ஒருவர் எதிர்கால அமைவிற்கான மையப்புள்ளியாகக்கூட மாறக்கூடும். ஏன் இவரை மிதித்தேறி அரசியல் செய்யும் துணிச்சல்  உள்ளவர்கள் வெளியே வரக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வல்வை சகாறா said:

சிவாஜிலிங்கத்தை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை.

நீங்கள் இப்பவும் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ இலங்கை வாக்குரிமை வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

1 hour ago, வல்வை சகாறா said:

சிவாஜிலிங்கத்தை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை. ஆனாலும் விவேகமோ விவேகமில்லையோ ஒரே ஊரவளாக அறிந்த வரைக்கும் அவரின் துணிச்சல்  என்னைத் துணுக்குற வைத்திருக்கிறது. நமக்குள் நிச்சயமாக இப்படியான ஒருவர் தேவை. இந்த ஒருவர் எதிர்கால அமைவிற்கான மையப்புள்ளியாகக்கூட மாறக்கூடும். ஏன் இவரை மிதித்தேறி அரசியல் செய்யும் துணிச்சல்  உள்ளவர்கள் வெளியே வரக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

2010 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை பெற்றார்.

இவர் தனித்து களமிறங்குவது வாக்குகளை பிரிக்க மட்டுமே உதவும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இப்பவும் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ இலங்கை வாக்குரிமை வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்த நக்கல்தானே வேண்டாங்கிறது. நமக்கு இலங்கையில் வாக்குரிமையே இல்லை. உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். அப்படி இருக்க எப்படி வாக்களிப்பது? நாம சொல்வது தாயகத்தில் அக்கறையுள்ளவளாக மட்டுமே. ஆதரவு, எதிர்ப்பு என்பது அநேகமாக புலம் பெயர்ந்தவர்களின் எண்ணங்களோடு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது. தளத்தில் உள்ள எதனையும் எங்கள் எண்ணங்கள் புரட்டிப்போடாது. கருத்துச் சொல்வது மட்டுந்தான் தற்போது நம்ம கைவசம்.🙄

இன்னொரு உண்மையைச் சொல்லவா?

பொருளாதார ரீதியில் ஊருக்குள் உதவிகள் செய்திருந்தாலும் அங்குள்ள நல்லது கெட்டதில் நாம பேசமுடியாது. அங்குள்ளவர்கள் புலம்பெயர்ந்த சாதி என்று எங்களை ஒதுக்கிவைத்துவிட்டார்களப்பா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.