Jump to content

தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி - உருக்கமான நிகழ்வு


Newsbot

Recommended Posts

யானை File Photoபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புக்காக கோப்பு படம்

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன.

ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன.

ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆறு யானைகள் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைKHAO YAI NATIONAL PARK

1992ஆம் ஆண்டில் எட்டு யானைகள் விழுந்து உயிரிழந்தது தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சாலையை யானைகள் மறித்துள்ளதாகச் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆறு யானைகள் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைTHAILAND DNP

மூன்று மணி நேரம் கழித்து 3 வயது யானையின் உடல் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதே இடத்திற்கு அருகில் 5 யானைகளின் உடல்களும் இருந்தன.

மீதமுள்ள இரண்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த தேசிய பூங்காவின் தலைவர் கஞ்சித் ஸ்ரீனொப்பவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆறு யானைகள் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைTHAILAND DNP

அந்த இரண்டு யானைகளை மன ரீதியாகவும் இந்த சம்பவம் பாதிக்கும்.

"இது பாதி குடும்பத்தை இழப்பது போன்று" என்று தாய்லாந்து வனவிலங்குகள் அமைப்பின் நிறுவனர் எட்வின் வீக் தெரிவித்தார்.

"இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இது இயற்கை" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-49947072

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிகளை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது.
யானைகள்... கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றவை. 
ஒரு யானை இருந்தாலே... நீண்ட நாட்கள் சோகத்தில் இருக்கும்.
இதில் தப்பிய யானைகள் பாடு... பெரும் போராட்டமாக  இருக்கப்  போகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.