கிருபன்

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்

Recommended Posts

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்

by in செய்திகள்

Alliance-air-ATR-72-300x200.jpg

எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடையாளமாகவே, அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கவுள்ளது.

சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் மட்டக்களப்பு அனைத்துலக விமான நிலையங்களுக்கு சென்னையில் இருந்து சேவைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்புக்கான சேவைகள் விரிவாக்கப்படும் வரை சென்னை- யாழ்ப்பாணம் இடையில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, அலையன்ஸ் விமான நிறுவனம் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இன்னமும் வெளியிடவில்லை. அந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்கும் இடங்களின் பட்டியலில் இன்னமும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.net/2019/10/06/news/40440

Share this post


Link to post
Share on other sites

ஒரு நீண்ட திட்டமிடல் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் அவசர அவசரமாக நிறுவப்பட்டு  திறக்கப்படுவது சந்தேகத்தை தருகின்றது. 

ஒரு பொருளாதார வளர்ச்சியை தரலாம்  என நம்பவும் முடியாமல் உள்ளது. காரணம், எந்த பொருளாதார துறைக்கு தேவை உள்ளது? அதில் எந்த விதத்தில் இந்த விமான சேவை உதவும்? ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டனவா? என தெரியவில்லை.  

Share this post


Link to post
Share on other sites

இனி கொழும்பில் வந்து இறங்காமல் நேராக பலாலிக்கு வந்து போகும் நம்ம சனம்  அரசுக்கு நல்லாக ஏசிப்போட்டு கழுவுற மீனில நழுவிற மீன் போல வந்து போவார்கள் (சென்னையில் இருந்து பலாலிக்கு)

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பாவில் இருந்து... நேரடியாக பலாலிக்கு  வரும்  சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை.
இந்தியா வந்து, இந்திய அதிகாரிகளின் சந்தேகப் பார்வையிலும்,   விசர்கேள்விகளிலும்... தப்பி,
அங்கிருந்துதான்  பலாலிக்கு  வர முடியும்.

ஆசையாக வாங்கி வந்த பொருட்களை கூட....  இந்திய  சுங்க திணைக்களத்தினர்,
கண் முன்னாலேயே... ஆட்டையை போட்டு விடுவார்கள். 

அதிலும் பார்க்க... நேரடியாகவே,  கொழும்புக்கு வருவது பரவாயில்லை.

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி கொழும்பில் வந்து இறங்காமல் நேராக பலாலிக்கு வந்து போகும் நம்ம சனம்  அரசுக்கு நல்லாக ஏசிப்போட்டு கழுவுற மீனில நழுவிற மீன் போல வந்து போவார்கள் (சென்னையில் இருந்து பலாலிக்கு)

எனக்கு கொழும்பிலை இறங்கி அந்த சிங்கள காத்து பட்டால் தான் ஒரு திருப்தியும் சந்தோசமும் வரும்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கொழும்பிலை இறங்கி அந்த சிங்கள காத்து பட்டால் தான் ஒரு திருப்தியும் சந்தோசமும் வரும்.

சிங்களவனின் பேரை கேட்டாலே காற்சட்டைக்குள்ள உச்சா போன எங்கட பலர் கொழும்பில் flat வாங்க துடிப்பதை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தோன்றும், 5 கோடி கொடுத்து flat வாங்கி போட்டு; பிறகு வன்னிக்கு சென்று 50,000/= ( £ 225) ஒரு ஏழ்மையில் இருக்கும் மாணவருக்கு கொடுத்து போட்டு பண்ணுர பந்தா இருக்கே ......ஏதோ தாம் தான் தாயகத்தின் கல்வியை தாங்கி பிடிப்பது போல் ஒரு பில்ட் அப்பு😁😁😁

Edited by Dash
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
13 hours ago, ampanai said:

ஒரு நீண்ட திட்டமிடல் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் அவசர அவசரமாக நிறுவப்பட்டு  திறக்கப்படுவது சந்தேகத்தை தருகின்றது. 

ஒரு பொருளாதார வளர்ச்சியை தரலாம்  என நம்பவும் முடியாமல் உள்ளது. காரணம், எந்த பொருளாதார துறைக்கு தேவை உள்ளது? அதில் எந்த விதத்தில் இந்த விமான சேவை உதவும்? ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டனவா? என தெரியவில்லை.  

1 + 2 = 3 

இது சாத்தியமா என்று அறிய உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவைப்படலாம்.

காரணம்:

1 + 2 = 12 உம் சாத்தியம். + வை எப்படி விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இது சாத்தியமாகும்.

1 + 2 = -1

1 + 2 = 2

1 + 2 = 0.5 

1 + 2 = 1122

 

இப்படி பல வகையில் + பயன்படலாம்.

இந்த + பற்றிய நீண்டகால பொருளாதார ஆய்வு முடியும்வரை மாணவர்களுக்கு + ஐ படிப்பிப்பதை தடை செய்ய வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்?

 

 

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

Share this post


Link to post
Share on other sites

விமான சேவை ஆரம்பித்ததும் அவசரப்பட்டு விமானத்தில் ஏறாதீர்கள்.

தமிழர்கள் தானே என்று எங்காவது கொண்டு போய் மோதி விட்டு விமானத்தில் கோளாறு என்று சொல்லி முடித்து விடுவார்கள். 😀

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

விமான சேவை ஆரம்பித்ததும் அவசரப்பட்டு விமானத்தில் ஏறாதீர்கள்.

தமிழர்கள் தானே என்று எங்காவது கொண்டு போய் மோதி விட்டு விமானத்தில் கோளாறு என்று சொல்லி முடித்து விடுவார்கள். 😀

லாரா இதில் பயப்பட ஏதுமில்லை.
ஏனென்றால் இதில் கூடுதலாக பயணிக்கப் போவது இந்திய புலனாய்வுப் பிரிவினரே.

அதுவும் ஜனாதிபதி தேர்தல் நேரம் சொல்லவா வேண்டும்.

5 hours ago, MEERA said:

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

ஆரம்பத்திலேயே இதைப்பற்றி கூறும் போது நீங்கள் ஒரு பக்கத்தாலும் முன்னேற விடமாட்டீர்கள் என்று சிலர் கடிந்து கொண்டனர்.

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, MEERA said:

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

உது யார்? இங்க விமானங்கள் பற்றி கொஞ்சம் அறிவுள்ள ஆள் - மருதர் ஆனால் அவர் இப்படி சொல்லமாட்டார்? 

இந்த வருட ஆரம்பத்திலே இதுபற்றி உரையாடும் போது திட்டத்தை வரவேற்ற பலரும் விமானநிலைய வேலை வாய்ப்பில் எமக்கு பெரிதாக ஏதும் கிடைக்காட்டியும், அதனால் வணிகம் பெருகும் அது தொழில்வாய்ப்பை கூட்டும் என்றே கூறினர். நானும் உட்பட.

இங்கே எதிர்மறையாக கூறியவர்களின் கூற்றுப்படி அல்லாமல், பலாலியில் இருந்து சென்னைக்கும் விமானம் போகும் போல இருக்கே?

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, goshan_che said:

உது யார்? இங்க விமானங்கள் பற்றி கொஞ்சம் அறிவுள்ள ஆள் - மருதர் ஆனால் அவர் இப்படி சொல்லமாட்டார்? 

இந்த வருட ஆரம்பத்திலே இதுபற்றி உரையாடும் போது திட்டத்தை வரவேற்ற பலரும் விமானநிலைய வேலை வாய்ப்பில் எமக்கு பெரிதாக ஏதும் கிடைக்காட்டியும், அதனால் வணிகம் பெருகும் அது தொழில்வாய்ப்பை கூட்டும் என்றே கூறினர். நானும் உட்பட.

இங்கே எதிர்மறையாக கூறியவர்களின் கூற்றுப்படி அல்லாமல், பலாலியில் இருந்து சென்னைக்கும் விமானம் போகும் போல இருக்கே?

மானிப்பாயில் தொழில் நடத்திய ஒருவர்

Share this post


Link to post
Share on other sites

சர்வதேச விமானநிலையம் அமைவது அந்த பிரதேசத்தின்  பொருளாதாரத்தை உயர்த்துவதற்கேற்ற வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டியவர்கள் அங்கு வாழும் எமது மக்களே. முதலில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்த வாய்ப்புக்களுக்கான அடித்தளத்தை இட முடியும். அதை செய்ய வேண்டியவர்கள் அங்கு வாழும் மக்களே. மாகாண சபைக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. புலம் பெயர் முதலீட்டாளர்களும் இதற்கு அதிகளவு பங்களிப்பை வழங்கலாம். சுற்றுலா துறை வளர்ச்சி வர்த்தக துறைக்கான நகரமாக யாழ்பாணத்தை அடையாளம் காண வைக்கலாம். யாழ் மக்களின் உழைப்பு இதில் முக்கிய பங்கினை வகிக்கும். வாய்ப்புகள் எம்மவரால் சரியாக பயன்படுத்த  முன்பவராவிட்டால் அந்த இடங்களை  அந்நிய நிறுவனங்கள் நிரப்பும். இது உலக வழமை. இங்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்பது எனது கருத்து. 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, MEERA said:

மானிப்பாயில் தொழில் நடத்திய ஒருவர்

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

நான் நினைக்கிறேன் மீரா முன்பு யாழில் உறுப்பினாராக இருந்த சபேசன்36 என்பவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று.

7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்திலேயே இதைப்பற்றி கூறும் போது நீங்கள் ஒரு பக்கத்தாலும் முன்னேற விடமாட்டீர்கள் என்று சிலர் கடிந்து கொண்டனர்.

இப்பவும் சொலுறன் தாயகத்தில் நடக்கும் எந்த அபிவிருத்தியும் நோக்கம் வேறாக இருந்தாலும் அதை ஆதரிப்பது தான் நல்லது..இது தாயகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, goshan_che said:

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

அவரது பெயர் நினைவில் இல்லை, சிலவேளை சுவைப்பிரியன் குறிப்பிடும் நபராகவும் இருக்கலாம்....

Share this post


Link to post
Share on other sites

எடுத்ததற்கெல்லாம் சிங்களவனை குற்றம் சுமத்துவது தவறு.

இந்த வாய்ப்பை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் யாழில் நிறைய தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் உள்ளன மேசன், வெல்டர், கண்ணாடி வடிவமைப்பாளர்கள் ஆனால் இவற்றை யாழ் தமிழர்கள் விரும்பி செய்வதில்லை. சிங்களவர்கள்தான் இவற்றை எடுத்து செய்கின்றார்கள். 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, MEERA said:

அவரது பெயர் நினைவில் இல்லை, சிலவேளை சுவைப்பிரியன் குறிப்பிடும் நபராகவும் இருக்கலாம்....

நன்றி.

5 hours ago, colomban said:

எடுத்ததற்கெல்லாம் சிங்களவனை குற்றம் சுமத்துவது தவறு.

இந்த வாய்ப்பை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் யாழில் நிறைய தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் உள்ளன மேசன், வெல்டர், கண்ணாடி வடிவமைப்பாளர்கள் ஆனால் இவற்றை யாழ் தமிழர்கள் விரும்பி செய்வதில்லை. சிங்களவர்கள்தான் இவற்றை எடுத்து செய்கின்றார்கள். 

உண்மைதான். இப்பெல்லாம் உழவு வேலைக்கு யாழில் ஆள் எடுப்பதே கஸ்டம். தெரிஞ்ச ஒருவர், மிசினுக்கு கொடுக்கிறகாசை மனுசருக்கு கொடுக்கலாம் என்று தேடி, மிசினுக்கு கொடுப்பதிலும் 2 மடங்குக்கும் ஆள் இல்லாமல், மிசினை வச்சு வெட்டினவர்.

யாழ்பாணக் குடாநாடு, மட்டகளப்பு நகரம்- கரையோரமாக பொதுத்துவில் வரை இதுதான் நிலைமை.

வன்னி, படுவான்கரையில் மற்றமாரி.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, goshan_che said:

 

 

வன்னி, மற்றமாரி.

இங்கையும் மெல்ல மெல்ல மாறுது.எல்லாம் கண்ணை முடிக்கொண்டு உதவி என்ட பெயரில் அள்ளி வீசுவது தான்.கொஞசம் சிந்தியிங்கள் மக்களே.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Reconnecting Jaffna to southern India

Alliance Air is launching direct flights from the northern Sri Lankan city to Chennai and Tiruchi

It takes about eight hours by road to cover the 400 km distance from the northern city of Jaffna to the capital Colombo. There are trains that reach sooner but finding seats in the popular service is often a matter of luck. For people of northern Sri Lanka embarking on a journey abroad, the first leg to Colombo can be tiresome, expensive or both.

But soon, they will be able to fly out of Jaffna on flights connecting their city to select south Indian cities. And that would mean they no longer need to take the long journey southward to Colombo, only to fly back in the opposite direction. The new service is set to be launched this week, with a test flight from Chennai to Jaffna scheduled on Thursday, October 17.

For northern Tamils, this is a historic development in their region, which was badly affected by the civil war that spanned three decades until 2009. In addition to linking them to the Indian cities they frequent, the opening of an international airport also enhances business and trade prospects in the Jaffna peninsula.

The Palaly airport, some 20 km north of Jaffna town, has now been renamed Jaffna International Airport. Similar plans are afoot in the east as well, with Prime Minister Ranil Wickramasinghe recently visiting Batticaloa and renaming its airport the Batticaloa International Airport.

The Sri Lankan government has put in about LKR 3 billion (about ₹1.2 billion) to upgrade Palaly from a regional to an international airport, extending its runway up to 2.3 km, with a plan to further extend it by another kilometre in the next phase. A new Air Traffic Control room, terminal, taxiway and a parking apron have come up, according to Priyantha Kariyapperuma, Vice-Chairman of Airport and Aviation Services.

According to the initial buzz around the initiative, the new flight services were to connect Jaffna to New Delhi, Mumbai and Kochi. The early announcements sparked concern among northern residents who wondered why Tamil Nadu had been left out in the list of destinations, given their close links to the State — for religious visits, familial connections or business.

Modified plan

The plan appears to have been modified now, with authorities preparing to operate flights from Jaffna to Chennai, Tiruchi and Kochi. “It makes logical sense to begin with south Indian cities, because of the connections our people have there. But we couldn’t finalise the routes until the airline company gave us a confirmation,” Mr. Kariyapperuma told The Hindu.

Alliance Air, a subsidiary of Air India, has come forward to operate the services, beginning with Thursday’s test flight. It will likely run three flights a week and then add services depending on demand, according to Sri Lankan officials involved in the discussions.

Along with the development in Palaly, the government proposes to upgrade the other two regional airports — Ratmalana, located south of Colombo and Batticaloa — in the island to international airports. “We already have two — the Bandaranaike airport in Colombo and Mattala airport near Hambantota. Once this move takes off, the country will have five international airports,” Mr. Kariyapperuma added.

Simultaneously, aviation authorities are also reviewing the flight services between Colombo and Jaffna that is currently run by two domestic operators, with limited service. “Eventually, we must improve the service along that route so those visiting the country from abroad can come to Colombo and then fly to Jaffna if they wish to,” the official said. 

When residents of the north begin flying to Chennai or Tiruchi directly, it will mark the revival of a once-popular air service connecting the neighbours. Way back in the 1960s and even in the mid-1970s, northern Tamils took 45-minute flights to land in ‘Madras’ or Tiruchi. Some passengers even recall travelling in an Air Ceylon Dakota aircraft, as they flew across the Palk Strait for a quick temple visit or shopping trip.

The service stopped somewhere along the way, further complicated by the civil war that cut the north and east from the rest of the island, and the world. The only Indian flight that many Sri Lankans remember with reference to the north is that of the Indian Air Force that dropped food supplies in Jaffna in 1987 — a symbolic gesture that outraged many in the south of the island, who saw it as blatantly violating their country’s sovereignty.

Sri Lanka has moved on since, as have bilateral ties in many respects. With the revived flight, perhaps a new chapter in Indo-Lanka relations is about to take off.

https://www.thehindu.com/news/international/reconnecting-jaffna-to-southern-india/article29667745.ece/amp/ 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க இனத்தில் இருந்துதான் நீங்களும் வந்தீக..என அந்த குரங்கு நம்பை பார்த்து சொல்லாமல் சொல்லி காட்டும். அடிக்கடி குரங்கை பயணிகள் பார்ப்பதும், அதை சீண்டி பார்க்கவும் தவறமாட்டார்கள். அந்த குரங்காட்டி யார், எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்? என பயணிகள் சிலர் அவரது வாயை நோண்டினார். அப்போது அவர் தனது குரங்கு பற்றி சொன்ன கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், அவரை பயணிகள் சூழ்ந்து கொண்டு ருசிகர கதையை கேட்க தயாரானார்கள். சாமியோவ் நமக்கு ஆறுமுகநேரி பகுதிதாங்க சொந்த ஊர், ரொம்ப வருஷமா இந்த தொழில் உள்ளேன். நான் வளர்க்கும் குரங்கும் எனக்கு ஒரு செல்லப்பிள்ளைதான். அவனை விட்டு என்னால் பிரியமுடியாது. அவனும் என்னை விட்டு பிரியமாட்டான். நான் ஊர் ஊராக சென்று வித்தை காட்டி பிழைத்து வருகிறேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கிடைக்கும் வருமானத்தை பொறுத்து குவார்ட்டரோ, அதற்கும் மேலோ குடிப்பது வழக்கம். நான் குடிப்பதை என்னோடு குரங்கும் பார்த்துக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஒருநாள் குடித்து விட்டு பாட்டிலில் மீதி வைத்திருந்த மதுவை குடித்து விட்டது. அதன் ருசி..அதற்கு பிடித்து விட்டதோ என்னவே...தினமும் நான் குடிக்கும்போது அதை பிடிங்கி குடிக்க ஆரம்பித்தது. நான் பிடுங்கி பார்த்தும் முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி தினமும் நான் குடிக்கும்போது, அதற்கும் ஒரு குவார்டர் வாங்கி கொடுப்பேன். அது தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக அப்படியே ஒரு நொடியில் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி எறிந்து விடும். அதன் பிறகு கேட்கவேண்டாம். அதன் போதையில் நன்றாக வித்தை காட்டி குத்தாட்டம் போடுவான். நான் சொன்னபடி எல்லாம் செய்வான்.. அவனுடைய செய்கை எனக்கும் பிடித்து போகவே.. நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு பாட்டில் குடிக்க வைத்துதான் கூட்டிச்செல்வேன். இப்படி ரொம்ப வருஷமா நடக்குங்க சாமி.... ஒரு நாள் வாங்கி கொடுக்கவிட்டால் சும்மா விடமாட்டான் என்னை பிறாண்டி எடுத்து விடுவான். இப்படித்தான் ஒருநாள் குரும்பூரில் வித்தைக்காட்டி கொண்டிருந்தேன். அப்போது பேன்ட் சர்ட் அணிந்த இருந்த இருவர் வந்தனர். அவர்கள் பார்க்க போலீஸ்காரர்கள் மாதிரி தெரிந்தது. குரங்கின் வித்தையை ரசித்துக்கொண்டிருந்த அவர்கள். என்னை அழைத்து, ஏம்பா..குரங்கை வைத்து வித்தைகாட்டுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தப்பு என்பது உனக்கு தெரியுமா? நாங்கள் வனத்துறையினர். உனது குரங்கை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவோம் என்ற மிரட்டினர். சாமியோவ்...நீங்கள நல்லா இருக்கணும்.. இந்த குரங்கு என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியாதுங்கோ...அதனால் குடிக்காமல் இருக்கவும் முடியாது என்று அவர்களிடம் கெஞ்சினேன். அதற்கு அவர்கள், உன் குரங்கு குடிப்பதாய் சொல்கிறார். அது குடித்து விட்டால் குரங்ைகை விட்டு விடுகிறோம்..இல்லாவிட்டால் குரங்கை பிடித்து சென்றுவிடுவோம் என்றனர். நீங்கள் வாங்கி குடுங்க சாமி...அதற்கு பிறகு என்ன நடக்குன்னு பாருங்க..என்று நானும் கூறினேன். உடனே அவர்கள் அங்குள்ள டாஸ்மாக்கிற்கு சென்று இரண்டு குவார்ட்டர் பாட்டில் வாங்கி வந்தனர். ஒன்று உனக்கு..மற்றொன்னு உன் குரங்கிற்கு என கொடுத்தனர். நானும் மூடியை உடைத்து அதனிடம் நீட்டினேன். அதை வாங்கி என் செல்லப்பிள்ளை..மடக்..மடக் என்று குடித்து விட்டான். இதை பார்த்த வனத்துறையினர்..ஆச்சரியப்பட்டு, இப்போது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்..உன் குரங்கை நாங்கள் பிடித்து போனாலும் அது கண்டிப்பாக காட்டில் நிற்காது என கூறிவிட்டு சென்றனர். இப்படி நான் வளர்க்கும் இந்த பாசக்கார குரங்கால் அது பிழைப்பும், என்னோட பிழைப்பும் போய்க்கொண்டிருக்கிறது என அவர் தனது கதை கூறி முடித்தார். அதற்குள் அவர் இறங்கும் இடம் வந்ததும் இறங்கினார். அந்த குரங்கும் பயணிகளுக்கு டாட்டா காட்டி விட்டு பிரியாவிடை பெற்று சென்றது. மனிதன்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் விலங்குகளும் மதுவின் ருசியை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன என்பது  இந்த குரங்காட்டியின் குரங்கு சாட்சியாகும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541900
  • நன்றி குங்குமம் முத்தாரம் ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக் கும் முதல் விசயம் அதன் தூய்மை தான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்பதைத்தான். ஜப்பான் எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்ப தற்கான பின்னணியைப் பார்ப்போம். ஜப்பானின் தலைநகர்டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி. வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் சில வேலைகளைச் சொல்கிறார். ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்ளியின் தாழ்வாரம் மற்றும் மாடிப்படிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஐந்தாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆறாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் பள்ளியைச் சுற்றியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.’’ என்பதே ஆசிரியர் மாணவர்களுக்குச் சொன்ன வேலை.   மாணவர்களும் ஆசிரியர் சொன்னதற்கு மகிழ்ச்சியாக தலையாட்டுகின்றனர். இந்த வேலையை ஜப்பானில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விருப்பத்துடன் செய்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியின் வகுப்பறைக்குள்ளேயே ஒரு ரேக் இருக்கும். அதில் சுத்தம் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  பள்ளியை மட்டுமல்ல, தெருக்கள், சாலைகள் என தங்களுக்குப் பக்கத்தில் உள்ள இடங்களைக் கூட குழுவாக இணைந்து தூய்மை செய்கின்றனர் ஜப்பானிய குழந்தைகள். தான் இருக்குமிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணம் ஜப்பானியர்கள் குழந்தையாக இருக்கும்போதே கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் பயின்ற அந்தப் பாடத்தை அவர்கள்  எந்த  வயதிலும்  மறப்பதில்லை. அதனால் தான் ஜப்பானிய தெருக்களில் ஒரு குப்பையைக் கூட பார்க்க முடிவதில்லை. குப்பை இருந்தால் தானே குப்பைத்தொட்டி வேண்டும். அதனால் தெருக்களில் குப்பைத்தொட்டியும் இருக்காது. துப்புரவுத் தொழிலாளியும் இருக்க மாட்டார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541765
  • நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. பொழிப்புரை : நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் . http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60980   திருநாவுக்கரசரின் தேவாரம் தீடிரென்று நினைவு வந்தது.
  • சங்கரி ஐயாவுக்கு தமிழர்கள் தன்னை மதிக்கேல என்ற கவலை! அதோட வாழ்த்தையும் சொல்லுறார்.