• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு

Recommended Posts

தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம்,  அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

நீட்  தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து சமீபத்தில் தமிழக அரசின் குரூப் 2 வரை தமிழை மெல்ல மெல்ல கழற்றி விடும் போக்கு  தெளிவாக தெரிகிறது. இன்னொரு பக்கம் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட தமிழ் பாடங்கள் குறைக்கப்படுகின்றன.

கணியன் பூங்குன்றனார் பாடலை சொன்னதால் அமெரிக்காவில் தமிழ் மொழி பெருமை உணர்ந்தனர் மக்கள் என்று பிரதமர் மோடி பெருமிதப்பட்டு சொன்னார். ஆனால், அவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் செயல்பாடு வேறுவிதமாக இருக்கிறது என்ற ஆதங்கமும் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது.

இதில் இன்னொரு வேதனை என்ன தெரியுமா? கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் பண்பாடு என்று சொல்லக்கூடாது; பாரத பண்பாடு என சொல்ல வேண்டுமாம். தமிழக அமைச்சர் ஒருவரே இப்படிச் சொல்கிறார்.

தமிழ் மொழிக்கு, அதன் தொன்மைக்கு ஏற்பட்டு வரும் இழுக்கு, புறக்கணிப்பு  எல்லாம் எதிர்கால சந்ததியினருக்கு பெரும் இழப்பு என்பதை சுலபமாக சிலர் மறந்து விடுகின்றனர். எல்லா தேர்வுகளிலும் தமிழ் பங்கு குறைப்பு, புறக்கணிப்பு தொடர்ந்தால், தமிழ் இனி மெல்ல சாகடிக்கப்படுகிறது என்று தானே பொருள். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=531594

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this