Jump to content

ஐ.நாவுடன் முரண்டு! வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவுடன் முரண்டு! வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள்

Report us Subathra 14 hours ago

இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் ஐ.நாவிடம் இருந்து கடுமையான சவால் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்றது. ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருந்துது வருகின்றது.

கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலாளர் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐநாவின் முடிவை அறிவித்திருந்தார். போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் எதிர்விளைவாகவே ஐ.நா இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஐ.நா இந்த முடிவை தமக்கு தெரியப்படுத்தாமல், தம்முடன் கலந்துரையாடல் நடத்தாமலேயே எடுத்திருக்கின்றது என்பதே இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. அரசாங்கத்துக்கோ இராணுவத்துக்கோ இதுபற்றி ஐ.நா முறைப்படி அறிவிக்கவில்லை. இந்த விடயத்தில் ஐ.நா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்துவும் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், ஐ.நாவை சாடுகின்ற வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்டவர்கள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு இட்ட உத்தரவுக்கு அமையவே எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்ப்புக்களையும் கவலையையும் வெளியிட்ட போதும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மௌனமாகத் தான் இருந்தது.

அப்போதும் வெளிவிவகார அமைச்சைக் கொண்டு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது, உள்நாட்டு விவகாரம், ஜனாதிபதியின் உரிமை, நாட்டின் இறைமை என்றவாறு, அறிக்கையை வெளியிடச் செய்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதியே தற்போது எதிர் நடவடிக்கைகளை சமாளித்து வருகிறார். ஏனென்றால் இது அவரால் தான் தொடங்கி வைக்கப்பட்ட பிரச்சினை. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலமே ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கை படையினர் வெளியேற்றப்படும் நிலை உருவாகியிருக்கின்றது என்றும் அவரை இராணுவத் தளபதியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐ.நாவின் முன்னாள் நிபுணரும் தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூகா கூறியிருந்தார்.

எனவே தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நேரடியாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைக் கொண்டு இந்த விவகாரத்தை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஐ.நா பொதுச்சபையின் 74ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க சென்றிருந்த வெளிவிவகார செயலர் ரவிநாத் ஆரியசிங்க, ஐ.நாவின் அமைதிக்காப்பு நடவடிக்கைகளுக்கான திணைக்களத்தின் உதவி செயலர் Jean Pierre Lacrox வைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அதன்போது அவர் ஐ.நாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடாமல் ஐ.நா இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு அவர் கண்டனமும் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த முடிவை மறுபரசீலனை செய்ய வேண்டும் என்றும் ரவிநாத் ஆரியசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாகவோ அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தோ ஐ.நா தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிவித்த நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கவில்லை. எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த ஒரு நீண்ட அறிக்கையில் இந்த போச்சு தெடர்பாக சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தவறானது என்று நியாயப்படுத்தும் விடயத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் லெபனானில் உள்ள இலங்கைப் படையினர் மாத்திரமே ஐ.நா அமைதிப்படையில் இருந்து விலகிக் கொள்ளப்படுவர் என்றும் வெறும் 25 வீதம் மாத்திரமே என்றும் மேலதிக படையினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள் என்று ஐ.நாவின் அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான திணைக்களத்தின் உதவி செயலர் Jean Pierre Lacrox உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் மாத நிலைவரங்களின் படி ஆறு ஐ.நா அமைதிப்படை நடவடிக்ககைளின் 15 பெண் படையினர் உள்ளிட்ட 651 இலங்கை படையினர் பணியாற்றுகின்றனர். அவர்களில் லெபனானில் உள்ள 149 இலங்கை படையினரே இந்த மாதத்துடன் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இது வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்ட 25 வீத குறைப்புக்கு சமமானது. லெபனானில் நீண்ட காலமாக இலங்கை இராணுவம் பணியாற்றி வந்தது. அங்கிருந்து முற்றாக இலங்கை இராணுவம் இந்த மாதத்துடன் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக இந்தோனேஷிய இராணுவம் பணியில் அமர்த்தப்படவுள்ளது.

இது தவிர மாலியில் 203 படையினரும், தென் சூடானில் 173 படையினரும், மத்திய ஆபிரிக்க குடியரசில் 116 படையினரும் தான் அதிகபட்சமாக ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இது தவிர, அபேய் பிராந்தியத்தில் 6 இலங்கை படையினரும் மேற்கு சகாராவில் 4 பேரும் பணியாற்றுகின்றனர். லெபனானில் இருந்து இலங்கை படையினர் விலக்கப்படுவதை சுழற்சி முறையிலான ஒரு நடவடிக்கையாக காட்டி தப்பிக்க முனைகின்றது வெளிவிவகார அமைச்சும் இராணுவமும்.

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனை ஒரு வழக்கமான நடவடிக்கை போல இராணுவத்தினரையும் சிங்கள மக்களையும் நம்ப வைக்க முனைகின்றார். ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் வெளிநாட்டுப் படைகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கமான நடவடிக்கைதான்.

வெவ்வேறு நாடுகளின் படையினர் தேவைப்படும் இடங்களில் நிறுத்தப்படுகின்றனர். இது போன்ற நிலைமையை நாங்கள் ஏற்கனவே ஹெய்ட்டியிலும் சந்தித்திருக்கின்றோம். அங்கிருந்த இலங்கை படையினரை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்த ஐ.நா இறுதியில் முழுமையாகவே நீக்கியிருந்தது என்று அவர் அநுராதபுரத்தில் கடந்த செவ்வாயன்று கூறியிருந்தார்.

ஆனால் லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து இலங்கை இராணுவம் முற்றாக விலக்கப்பட்டிருப்பதற்கு ஐ.நாவின் சுழற்சி முறையிலான நடவடிக்கைதான் காரணமில்லை.

இந்தப் படைக்குறைப்புக்கான காரணத்தை ஐ.நா ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டது. லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனமே இதற்கு பின்னால் உள்ள காரணம் என்பதை ஐ.நா கூறியிருக்கின்றது. ஆனால் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று இந்த சிக்கலுக்கு தானே காரணம் என்ற எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஐ.நாவின் இந்த நடைமுறை வழக்கமான ஒன்றுதான் என உண்மையை மறைக்க முனைந்திருக்கின்றார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

இது ஐ.நாவின் வழக்கமானதொரு நடவடிக்கையாக இருந்தால் இலங்கை அரசாங்கம் அதற்கு ஏன் ஐ.நா உயர் அதிகாரிகளிடம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே ஹெய்டியில் இருந்து இலங்கை படையினர் இதுபோல வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்ற விடயத்தை லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஆனால் அது எப்படி நடந்தது என்பதை அவர் கூறவில்லை. ஹெய்டியில் சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் இலங்கை இராணுவத்தினர் பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்து பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதாக, பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து 117 இலங்கை படையினரைக் கொண்ட அணி முழுமையாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. அதற்குப் பின்னர் அங்கிருந்த இலங்கை படையினர் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றாகவே வெளியேற்றப்பட்டனர். தமது நாட்டில் பெண்கள், சிறுவர்களுக்கு அநீதி இழைத்த இலங்கை படையினர் தண்டிக்கப்படவில்லை என்று அண்மையில் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஐ.நாவில் ஹெய்டி முறையிட்டிருந்தது.

ஹெய்டியில் இருந்து இலங்கை படையினர் விலக்கப்பட்டது ஏன் என்ற உண்மையையும் இராணுவத் தளபதி மூடி மறைக்க முயன்றிருக்கின்றார். லெபனானில் இருக்கும் இலங்கை படையினரை வெளியேற்றுவது ஒரு வழக்கமான சுழற்சி முறையிலான நடவடிக்கை என்றால் ஐ.நாவுடன் எவ்வாறு பேச முடியும், இணக்கம் காண முடியும்?

இந்த விவகாரத்தில் ஐ.நாவின் மீது அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி கடும் சீற்றம் அடைந்திருக்கின்றார் என்பதை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐநா பொதுச்சபையின் பொது விவாதத்தில் நிகழ்த்திய உரையில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

அவர் அந்த உரையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட எவரும் ஐ.நாவை வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்திருந்ததுடன் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை ஐ.நா மதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்து இராணுவத் தளபதி நியமனம் குறித்த தமது உள்நாட்டு முடிவில் ஐ.நாவின் தீர்மானங்கள் தவறானவை என்பதை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருந்தன.

இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இந்த விவகாரத்தில் ஐ.நாவை தவறாக காட்ட முனைகின்றனவே தவிர இதன் பின்னால் உள்ள உண்மையான நிலவரங்களை மதிப்பிடத் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் இந்தப் பிரச்சினையில் இருந்து மீளுகின்ற வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கப்போவதே இல்லை.

https://www.tamilwin.com/articles/01/227896?ref=rightsidebar-article

Link to comment
Share on other sites

ஐ.நா. சிங்கள போர்க்குற்றவாளிகள் மீது தடையை, பிராயண, பொருளாதார  தடைகளை விதிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

 

ஐ.நா இந்த முடிவை தமக்கு தெரியப்படுத்தாமல், தம்முடன் கலந்துரையாடல் நடத்தாமலேயே எடுத்திருக்கின்றது என்பதே இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. அரசாங்கத்துக்கோ இராணுவத்துக்கோ இதுபற்றி ஐ.நா முறைப்படி அறிவிக்கவில்லை. இந்த விடயத்தில் ஐ.நா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்துவும் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா அரசாங்கமும்,  இராணுவமும்.... ஐ.நா. வையே... வெருட்டி காரியம் சாதித்து விடுவார்கள்.
அவ்வளவு... கிரிமினல், கில்லாடிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 7:16 PM, பெருமாள் said:

ஐ.நாவுடன் முரண்டு! வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள்

வெளிநாட்டிலையே அட்டகாசம்/அட்டூழியம் எண்டால் உள்நாட்டிலை எப்பிடியிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டிலையே அட்டகாசம்/அட்டூழியம் எண்டால் உள்நாட்டிலை எப்பிடியிருக்கும்?

புலியை இல்லாமல் பண்ணனும் என்று முடிவெடுத்த அந்த சக்திகள் தங்கள் இரனுவம்களை இறக்கி புலியுடன் நேருக்கு நேர் நின்று மோத வக்கத்து சூழ்ச்ச்சியுடன் செய்த காரியம் இலங்கை ராணுவ டிவிசன்களை பெருக்குவது அந்த நேரத்தில் இருந்த எதிர் கட்சி இப்படி ராணுவ மேலாண்மை கூடுவது இலங்கைக்கு கூடாது என்று பிரஸ்தாபிக்க கொடுத்த பதில் அப்படி மேலதிகமான படையணி ஐநாவில் சேர்க்கபட்டு அந்நிய செலவாணி மூலம் போரினால் பட்ட கடன்கள் இந்த மேலதிக படையணியின் சுமைகள் என்பன குறைக்கப்படும் என்று சொன்னார்கள் ஆனால் இப்ப நடப்பது ????????

எந்த நாடுமே தன்னை விட சக்தி  கூடியதாக வளர அண்டை நாடுகள்  விரும்பாது அது பிச்சைக்காரனாக இருந்தாலும் 

இந்த உண்மை சிங்கள மதனமுத்து அரசியல்வாதிகளுக்கு அல்லது எங்கள் தமிழ் கூட்டமைப்புகோ விளங்க போவதில்லை ஏனெனில் அவர்களுக்கு தேவை பணம் மட்டுமே . சம்பந்தன் சுமத்திர னுக்கு யார் செத்தும் அவர்கள் வாழனும் எனும் சுய நல வாதிகள் அவர்களிடம் இருந்து எஞ்சிய தமிழர்களும் தப்புவது கடினம் .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Lankan peacekeeping contingent to leave for Mali next week

5 November 2019

A Sri Lankan Army contingent of 243 military personnel will leave for Mali next Tuesday (Nov 12) for UN peacekeeping operations.

A formal military parade will be held prior to their departure with the attendance of Army Commander Lieutenant General Shavendra Silva, at the Army Camp in Kurunegala, tomorrow (Nov 6).

The contingent will comprise 20 officers and 223 personnel belonging to other ranks. Among them are a Lietuenant Colonel, three Captains and 15 Majors.

They will engage in peacekeeping operations in Mali for a period of one year starting from November 13.

The new contingent would replace the existing troop in which two personnel had been killed while on duty, this year. They were posthumously promoted as a Major and Sergeant respectively.

Incidentally, this is the first peacekeeping contingent to be sent from Sri Lanka after the UN said it would reduce future deployments, citing concern over the appointment of the country's Army Commander Lt. Gen. Silva.

Military Spokesman Major General Sumith Atapattu told Times Online, that the UN had not objected towards the current deployment.

He noted that about 450 Sri Lankan troops are currently engaged in UN peacekeeping operations.

http://www.sundaytimes.lk/article/1108320/lankan-peacekeeping-contingent-to-leave-for-mali-next-week

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.