Sign in to follow this  
பெருமாள்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்

Recommended Posts

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்

ரஃபால்படத்தின் காப்புரிமை ANI

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ரஃபால்படத்தின் காப்புரிமை ANI

பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ராஜ்நாத்படத்தின் காப்புரிமை ANI

பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

விமானங்களில் ஆர்பி - 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் பாதூரியாவின் பெயரைக் குறிப்பதாகும். அவர்தான் 60,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முக்கியப் பங்காற்றியவர்.

திங்களன்று மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற ராஜ்நாத் சிங், இந்த பயணத்தின் மூலம் தற்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள தந்திரோபாயக் கூட்டணி மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரான்ஸ் அதிபர் மக்ரூங்கை சந்தித்தார் ராஜ்நாத் சிங்.

இந்த சந்திப்பு பயனுள்ள ஒரு சந்திப்பு என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சந்திப்பு இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் எனவும், குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?  எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும்.  இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 
  • ஊரில் நவரத்திரி பூசைக்கு நாங்கள் சிறு வயதில் நாடகம் எழுதி நடிப்பது வழக்கம். ஏதிர்பார்த்தேன் இளங்கிளியை என்னும் பாடலுக்கு நானும் எனது நண்பனும் (பொண் வேடம்) ஆட வேண்டும்.  ஒரு கட்டத்தில் அவனை தூக்கி ஆட வேண்டும், அவனோ என்னைவிட பாரம் கூட, இந்த பாட்டை கேட்கும் பொழுது , ஊர் கூடி சந்தோஷமாக கொண்டாடிய தினங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்    
  • நிதி அறிக்கைகள் டாலர் பெறுமதியில் மொத்த தேசிய உற்பத்தியை (GDP) கணக்கு காட்டுகின்றன. அதாவது, உலக உற்பத்தியில், கணணிகளும், கணணி-தொலைபேசிகளும், விமானங்களும், வாகனங்களும், குளிர்சாதன கருவிகளும், மருத்துவ உபகரணங்களும் பணத்தை புரட்டி தருவது போல, கத்தரிக்காயும், வாழைப்பழமும் பணத்தை புரட்டி தராது என்பதையே இந்த 7வீதமும் 27 வீதமும் காட்டுகின்றன. கத்தரிக்காய் உழைத்து தருவது 7 வீதம், வாகனங்களின் இலாபம் 27 வீதம், முகப்புத்தகமும் கூகிளும் விளம்பர சேவையில் உழைத்து தருவது 65 வீதம். ஆனால், உலகில் பெரும்பாலான மக்கள் என்ன தொழில் செய்து வருமானம் பெறுகிறார்கள்? பெருமளவு நிலம் என்ன வருமானத்துக்கு பயன்படுகிறது என்ற புள்ளிவிபரங்களே எவ்வளவு மக்கள், மற்றும் எவ்வளவு நிலம் விவசாய உற்பத்திக்கு. பயன்படுகிறது என்பதை காட்டும். 
  • 1) உங்கள் யூகம் (?) மேலெழுந்தவாரியானது. எந்த தரவின் அடிப்படையில், எவற்றினை மனதிலிறுத்தி  எழுதினீர்கள் என புரியவில்லை.  2) குர்றானில் உங்களுக்குளள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. ஆனாலும் உலக வரலாற்றில் பொருளாதார வளர்ச்சி / வீழ்ச்சி என குறிப்பிட்டுள்ளீர்கள். குர் ஆன் எழுதப்பட்ட காலத்தில் உலக பொருளாதார வரலாற்றை, வீழ்ச்சியை, எழுச்சியை தரக்கூடிய நம்பகரமான வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றதா ?  செழிப்பு அல்லது வறட்சி என்பதனை பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி எனக் குறிப்பிடுகிறீர்கள் என ஐயுறுகிறேன். 4) நீங்கள் இலங்கையை குறிப்பிட்டு எழுதுகிறீர்கள் என நம்புகிறேன். இலங்கை போன்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுள்ள சிறிய நாடு  விவசாயத்துறையில்  பெருமளவு  முதலீடு செய்தல் என்பது பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கையாக அமையும்.  5) வளங்களின் சம பங்கீடு என்பது கற்பனைக்கு சரியானதாக இருக்கலாம். பலர் அதனை விரும்பலாம். ஆனால் நிச்சயமாக இந்தப் பொருளாதாரக் கொள்கை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதல்ல.   
  • இவங்களுக்கு கணவன், மனைவி, குழந்தை குட்டிகள் இல்லையா..? யாரும் யாரோடையும் எப்பொழுதும் போகலாமென்ற கற்கால வாழ்க்கையில் என்ன பெருமை இருக்கிறது..? கீழே செய்தியிலுள்ள காதலுக்கும், இவர்கள் கற்பிக்க முனையும் காதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தோன்றுகிறது.