• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

மெல்ல கொல்லும் மது

Recommended Posts

இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும்  உடல் உள ஆரோக்கிய  பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால் செலவழிக்கப்படுகின்றது. மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இளவயதிலேயே விதவையாக்கப்பட்டு பிள்ளைகள் அநாதைகளாகின்றனர்.

a1.png?itok=TUuB-bEm

 

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தொகையாகும். அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக் கொடுக்கும் இலாபம். சில கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோருக்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2/3பங்கு மதுசாரத்திற்கே செலவழிக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் உணவிற்கும், வெவ்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூலித்தொழில் செய்பவர்களாகவே உள்ளனர்.  

இந்நாட்டில் மதுசார நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருடமொன்றிற்கு 60பில்லியன் ரூபாய் வரித்தொகையாக கிடைக்கப்பெற்றாலும் 212.6பில்லியன் ரூபாய் மதுசார பாவனையினால் ஏற்படும் நோய்களிற்கும், பிரச்சினைகளுக்கும் செலவிட வேண்டியுள்ளது. இதனால் அரசாங்கம் வருடாவருடம் நஷ்டத்தையே தழுவுவதாக சுகாதார அமைச்சும் மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிபார சபையின் தலைவரும் தெரிவித்துள்ளனர்.  

மதுசாரம் தொடர்பில் பல்வேறு மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் திணித்து இந்நவீன காலத்திலும் அதனை நம்பவைக்குமளவு சதித்திட்டங்களை வகுத்து மதுசார பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்நாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உதாரணமாக மதுசாரம் உடற்களைப்பை நீக்கும் என்கின்றனர். ஆனால் அதனை அருந்துவோரின் உடற்களைப்பு மதுசாரம் அருந்தியதன் பின்னர் குறைவடைகின்றதா? என ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.  

மதுசார வகைகள் மூளைதிறன் விருத்தியை குறைக்கக்கூடியது (Depressant), அது ஒரு ஊக்கியல்ல (Stimulant) என்று மருத்துவம் கூறுகின்றது. மேலும் மதுசாரம் உடலினுள் செல்லும் அளவு அதிகரிப்பிற்கேற்ப ஒருவிதமான உடல் அசௌகரியமும், உடல் சோர்வும் மாத்திரமே ஏற்படும். பல்வேறு சூழற்காரணிகளினாலேயே மதுசாரம் விரும்பத்தக்க ஒரு பானமாக விளங்குகின்றது. அதாவது எந்தவொரு பொருளும் உடலினுள் சென்று அதன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சில நேர இடைவெளி தேவைப்படும். குறிப்பாக மதுசாரம் உடலினுள் சென்று விளைவை ஏற்படுத்துவதற்கு சுமார் 20நிமிடங்கள் தேவைப்படுகின்றது என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது மதுசார போத்தலைக் கண்டவுடன் அல்லது ஒரு குவளையை குடித்த மறுகணமே அருந்தியவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு மாறும்?  

அதாவது சிறிய வயதிலிருந்தே ஊடகங்களின் மூலம் குறிப்பாக திரைப்படங்களின் மூலம் சாராயம், பியர் என்பன சந்தோசமான ஒன்றாகவும், மதுசாரம் அருந்தியவுடன் அந்த நபரின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இளைஞர்களின மனதில் பதிந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பியர், சாராயம் போன்ற மதுசாரக் கம்பனிகளும் நேரடியாக விளம்பரங்கள் செய்து இது போன்ற போலியான நம்பிக்கைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தோடு சமூகத்தில் காணும் ஒவ்வொரு காட்சிகளும் இது போன்ற மூடநம்பிக்ககைளை சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதனால் மதுசாரம் அருந்துவோர் அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், உடற்கஷ்டங்கள் நீங்குவதாகவும், பல்வேறு பிரச்சினைகளை மறக்கச் செய்வதாகவும் எண்ணிக்கொண்டுள்ளனர்.  

எனவே சாராயம், பியர் போன்றன நாற்றமான, கசப்பான, எரிவான, வாந்திபோகும் உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அதைச் சூழ ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கைகள், அடையாள அறிகுறிகள், கவர்ச்சிகரமான வசனங்கள், குடிக்கும் முறை, குடிக்கும் இடம், குடிக்கும் சந்தர்ப்பம் போன்றவைகளினால் உண்மை மறைக்கப்பட்டு போலியான மூடநம்பிக்கையில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  

இவ்வாறான சூழலில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டின் தனிமனித மதுசார பாவனையானது ஒப்பீட்டளவில் குறைவாகும். 2.5லீற்றர் தொடக்கம் 3லீற்றர் வரையான அளவே இந்நாட்டின் தனிநபர் மதுசார பாவனையென கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பியா, பின்லாந்து ஆகிய நாடுகளின் தனிமனித மதுசார பாவனையானது 10லீற்றர்களாக உள்ளது-.அதாவது மதுசாரம் அருந்துவோரில் தனிமனிதன் அருந்தும் வீதம் அதிகமாகும்.  

என்றாலும் எந்தவொரு பொருளிற்கும் தாராளத்தன்மை அதிகமாக இருந்தால் அதற்கான கேள்விகளும் அதிகரிக்கும். அதேவேளை,பொருளின் கேள்வி குறைவடையும் போது அதன் விற்பனை எந்தவிதமான அழுத்தங்களும் இன்றி குறைவடையும் என்பது பொருளியல் நியதி. மதுசாரசாலைகளின் அளவும் மதுசார பாவனையை தீர்மானிக்கும் சக்திகளில் பிரதான ஒன்றாகும், நிலையான மாற்றங்களை நோக்கி செல்லும் போது மதுசாரத்திற்கான கேள்வியைக் குறைக்கும் செயற்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவது மிகவும் பயனுள்ள வழிமுறையாகும்.  

01. பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective Policies)

02. பழகும் முன் காத்தல் (Prevention)

03. உளவியல் சிகிச்சைமுறை (Counseling)

04. பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective Policies)

பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல்  

மதுசார பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இம்முறை பாவிக்கப்படுகின்றது.  

 

சரியான முறையில் மதுசார வகைகளின் விலையை அதிகரித்தல் மற்றும் வரி அறவீடு செய்தல்.  

மதுசாரம் மற்றும் மதுசார பாவனை கவர்ச்சியாகும் விதங்களை கண்டறிந்து அதனை பலமிலக்கச் செய்தல்.  

பழகும் முன் காத்தல்  

மதுசார பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப் பயன் கூடியதும், இலகுவானதுமான முறையாகும்.  

மதுசார பாவனையினால் ஏற்படும் இணங்காணக்கூடியத் தாக்கங்களை சிறுவர், இளைஞர்களுக்கு புரிய வைத்தல்.  

இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாக தெளிவூட்டல். அவ்வாறான விளம்பரங்களில் ஏமாறாமலிருப்பதற்குரிய உத்திகளை தெளிவுப்படுத்தி வழிகாட்டுதல்.  

மதுசார பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் தெளிவுப்படுத்தல்.  

உளவியல் சிகிச்சைமுறை  

தற்போது மதுசாரம் பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்சை முறை பாவித்தல்.  

உளநல வைத்திய ஆலோசனையின்படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற்கொள்ளலாம்.  

01. மதுசார பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானித்தல்.  

02. இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடல்.(மனைவியிடம், பிள்ளைகளிடம், நண்பர்களுடன், அயலவர்களுடன்)  

03. இறுதியில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்தித்தல். (மதுசார பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களிடமிருந்து கிடைக்கவிருக்கும் தாக்கங்கள், விசேட தினங்களின் போது நடந்துக்கொள்ள வேண்டிய முறை குறித்து திட்டமிடல்)  

04. மதுசார பாவனையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் மதுசார பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாரால் (உதாரணமாக நான் மதுசாரம் அருந்துவதை நிறுத்திவிட்டேன் என்னை பலவந்தப்படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்). 

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மதுசாரப் பாவனையிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவதோடு அதன் பாவனையின் விளைவாக தோற்றம் பெறுகின்ற உடல் உள ரீதியான ஆரோக்கியப் பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.  

நிதர்ஷனா செல்லதுரை ...
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

https://www.thinakaran.lk/2019/10/05/சுகாதாரம்/41495/மெல்ல-கொல்லும்-மது

 

Share this post


Link to post
Share on other sites

நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா.    
 
குடிமகன் :  உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூறஅனுமதிக்க  வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில்  ஒருவன்.                 ஆனால் என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும் My Lord. அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும் your Honour.                              

  நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா.            

குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் my Lord...  

நீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்..

😃😃😃😃

Edited by tulpen
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்   நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 09,  2020 05:00 AM புதுடெல்லி,  பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும். இதுபோல், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆகஸ்டு மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும். “உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது இல்லை. பிரிவினைக்கு பின்னர் இத்தகைய திடட்ம் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை“ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் சலுகை, கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இச்சலுகையை செப்டம்பர் மாதம்வரை நீட்டிக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் 7 கோடியே 40 லட்சம் ஏழை பெண்களுக்கு மேலும் தலா 3 இலவச சிலிண்டர்கள் கிடைக்கும். வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் 12 சதவீத பங்களிப்புத்தொகையை மத்திய அரசே செலுத்தும் சலுகையை ஆகஸ்டு மாத சம்பளம்வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதனால், 72 லட்சம் பணியாளர்களும், 3 லட்சத்து 67 ஆயிரம் நிறுவனங்களும் பலனடையும். மத்திய அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 860 கோடி செலவாகும். நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 450 கோடி மூலதனம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் மலிவான வாடகை குடியிருப்புகள் உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஏற்கனவே காலியாக உள்ள அரசாங்க குடியிருப்புகள், மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக, 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09034400/The-Union-Cabinet-has-approved-the-provision-of-free.vpf
  • இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு   இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது. பதிவு: ஜூலை 09,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 22 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது. இதே 24 மணி நேரத்துக்குள் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக 482 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 642 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் 9,250 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121 ஆக இருக்கும் நிலையில், இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துவிட்டனர். தமிழகத்தில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 74 ஆயிரத்து 167 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 831 ஆகவும், பலி எண்ணிக்கை 3,165 ஆகவும் உள்ளது. அங்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 26,815 பேரும், ஆந்திராவில் 21,197 பேரும், கேரளாவில் 5,894 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடகாவில் 416 பேரையும், ஆந்திராவில் 252 பேரையும், கேரளாவில் 27 பேரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. புதுச்சேரியில் 930 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கும் வேளையில், அங்கு 14 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09031338/Corona-damage-affecting-7-lakhs-in-India.vpf
  • மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். பதிவு: ஜூலை 09,  2020 05:45 AM சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆகவும், சென்னையில் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 64 பேர் பலி ஆனார்கள். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழந்த 64 பேரில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் வரை சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. பெருந்தொற்று நோயான கொரோனா அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவராகவே கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் தனது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்த நேரத்தில்தான், கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணியையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 10 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. அமைச்சர் பி.தங்கமணி கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ரூ.5 கோடியை வழங்கினார். மத்திய எரிசக்தித் துறை இணை மந்திரி ராஜ்குமார் சிங், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிகழ்ச்சியிலும், அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட மருத்துவ அறிக்கை கிடைத்ததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார். அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுஉள்ளது. சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசி இருக்கிறார். இதேபோல், மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 6-ந் தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே, இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09052402/To-Minister-ThangamaniCorona-Intensive-care-in-Chennai.vpf
  • சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 2 வழக்குகள் உடனடியாக பதிவு சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உடனடியாக தொடங்கியது. சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். பதிவு: ஜூலை 09,  2020 05:30 AM சென்னை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். நேற்று 2-வது கட்டமாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு சூப்பிரண்டு தன்மயா பெரா தலைமையில் சி.பி.ஐ. போலீசார் விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். ஏற்கனவே வியாபாரி ஜெயராஜ் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மரணம் அடைந்தது தொடர்பாகவும், அவரது மகன் பென்னிக்ஸ் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்ததையொட்டியும் 2 வழக்குகளை தனித்தனியாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்திருந்தனர். இந்த 2 வழக்குகளும் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த 2 வழக்குகளையும் சி.பி.ஐ. போலீசார் தங்களது பாணியில் தனித்தனியாக பதிவு செய்தனர். குற்றவியல் நடைமுறை சட்டம் 176(1)(ஏ)(1) (மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு) என்ற பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்கை பதிவு செய்து உள்ளது. கோவில்பட்டி கிழக்கு போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் தான் முதலில் மேற்கண்ட 2 வழக்குகளையும் பதிவு செய்திருந்தார். வியாபாரி ஜெயராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பதிவு செய்திருந்த வழக்கில் கூறியிருப்பதாவது:- ஜூன் மாதம் 23-ந்தேதி காலை 6.45 மணிக்கு நான் பணியில் இருந்தேன். அப்போது கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டு மு.சங்கர் போலீஸ்நிலையத்தில் வந்து ஆஜராகி புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஜூன் 20-ந்தேதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஜெயராஜ் என்பவர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜூன் 22-ந்தேதி அன்று இரவு 10.20 மணிக்கு தனக்கு காய்ச்சல் இருப்பதாக சிறைக்காவலரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறையின் முதன்மை தலைமை காவலர் அழகர்சாமி, 2-ம் நிலை காவலர் செந்தூர்ராஜா ஆகியோர் இரவு 10.30 மணிக்கு ஜெயராஜை மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 23-ந்தேதி அன்று அதிகாலை 5.40 மணிக்கு ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சூப்பிரண்டு சங்கர் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கண்டவாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் அடுத்தகட்டமாக சாத்தான்குளத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா இந்த வழக்கு விசாரணையை முன்னின்று நடத்துவார் என்று சி.பி.ஐ. தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09051747/Chathankulam-incident-CBI-probe-The-investigation.vpf