• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

Recommended Posts

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-dd.jpg

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில் ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவினால் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்காப்பு நடவடிக்கைகளை ஒரு விவகாரமாக முன்னெடுத்தால், வடகொரியா அமைதியாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனை மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை வடகொரியா 6 அணு ஆயுத சோதனைகளை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்கா-இங்கிலாந்து-ப/

Share this post


Link to post
Share on other sites

இயற்கை தன்னை தானே தகவமைத்து கொள்ளதக்கது . . புயல்,வெள்ளம்,பூகம்பம், நிலநடுக்கம் போன்றவை ஊடாக தன்னுடைய பாரத்தை பூமி நேர் செய்து கொண்டாலும் அதிக படியானதை மனித மனங்களின் வாயிலாகவே செய்து முடிக்கிறது..👌

டிஸ்கி :

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

வள வளனு கதைக்காமல் சட்டு புட்டுன்னு ஆரம்பிக்க வேண்டியதை ஆரம்பியுங்கப்பா..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this