Jump to content

கார் பந்தயப் போட்டியாளர்களால் புதல்வர்களை இழந்த பிரித்தானிய தம்பதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

britain-india-orgin-720x450.jpg

கார் பந்தயப் போட்டியாளர்களால் புதல்வர்களை இழந்த பிரித்தானிய தம்பதி!

பிரித்தானியாவில் பரபரப்பான வீதியொன்றில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட சில இளைஞர்களால் தமது இரண்டு புதல்வர்களையும் பறிகொடுத்த தம்பதியொன்று முதன் முறையாக ஊடகங்களிடம் மனம் திறந்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய தம்பதியினர் வொல்வர்ஹம்டன் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத் தலைவியான ஆரதி நேஹர் (43) தகவல்களை வௌியிட்டுள்ளார்.

கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரண்டு கார்கள், தங்களின் கார் மீது மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு இளைஞர்களும் வீதியில் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமது வாகனத்தின் மீது மோதியதாக குறிப்பிட்டார்.

அசுர வேகத்தில் சென்ற கார் ஒன்றை பிறிதொரு கார் துரத்தி வந்த நிலையில், விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 வயதான சஞ்சய் மற்றும் 23 மாதங்கள் நிரம்பிய பவன்வீர் என்ற சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாம், சிகிச்சைக்கு பின்னர் மயக்கம் தௌிந்த நிலையில், பிள்ளைகள் இருவரும் இறந்த செய்தியை அறிந்து கொண்டதாக ஆரதி நேஹர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும், பிரித்தானியா பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கையிருப்பதாகவும் அவர்கள் வழக்கை உரிய முறையில் விசாரிப்பார்கள் என்றும் நம்புவதாக ஆரதியின் கணவர் ஜஸ்விந்தர் சிங்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்தக் கொடூர சம்பவத்தின் பின்னர் உலகமே ஸ்தம்பித்து விட்டது போன்று உணர்ந்ததாகத் தெரிவித்துள்ள ஆரதி, முதுகெலும்பு முறிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கார்பந்தய-போட்டியாளர்கள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.