Jump to content
nunavilan

அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க மைத்திரி முடிவு

Recommended Posts

அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க மைத்திரி முடிவு

maithri-slfp-1-300x200.jpg

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தல் முடியும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கவும், அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவும் முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதையடுத்து. அதிபர் தேர்தல் முடிவடையும் வரை- நொவம்பர் 17ஆம் நாள் வரை, பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாசவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராகவும் அவர் நியமித்துள்ளார்.

பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாச, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கான ஒழுங்குகளை  கவனிப்பார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே மேற்கொள்ளும், எனினும் பொதுஜன பெரமுனவின் மேடையில் பரப்புரைகளை மேற்கொள்ளாது.

எனினும் இன்று அனுராதபுரவில் நடக்கும் கோத்தாபய ராஜபக்சவின் முதல் பரப்புரைக் கூட்டத்தில், துமிந்த திசநாயக்கவும், வீரகுமார திசநாயக்கவும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த  எதிர்பாராத முடிவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/10/09/news/40510

Share this post


Link to post
Share on other sites

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார்.

அரசியலில் நடுநிலை இல்லை மிஸ்டர் மை3. கட்சியையும் முடித்தாகிவிட்டது. மை3 இன் அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. 

ஆனால், சந்திரிக்கா என்ற போர்க்குற்றவாளி நாளை வருவா. கட்சியை கட்டி எழுப்புவேன் என்பார். 

 

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே மேற்கொள்ளும், எனினும் பொதுஜன பெரமுனவின் மேடையில் பரப்புரைகளை மேற்கொள்ளாது.

விழுந்துள்ளார்கள், ஆனால் மீசை அப்படியே உள்ளது, மண்ணை காண முடியாது 🙂

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

எனினும் இன்று அனுராதபுரவில் நடக்கும் கோத்தாபய ராஜபக்சவின் முதல் பரப்புரைக் கூட்டத்தில், துமிந்த திசநாயக்கவும், வீரகுமார திசநாயக்கவும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EGb3hwZXkAU6CE-?format=jpg&name=large

Share this post


Link to post
Share on other sites

கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்து சந்திரிக்கா நாடு திரும்பியதும் பேசுவோம் - மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியவுடன் அவருடன் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கோத்தாபயவுக்கு ஆதரவளிப்பதற்கு சு.கவின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சந்திரிகா குமாரதுங்கவும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறாரா என்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றார். எனினும் அவர் எமது இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ இது வரையில் கூறவில்லை என்றும் அவர் கூறினார். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வாசிப்பு-மாதத்தை-முன்னிட்டு-போட்டிகள்-நடத்த-ஏற்பாடு/71-239721

Share this post


Link to post
Share on other sites

’வடக்கு மக்களுக்கு ஏமாற்றம்: தெற்கு மக்களுக்கு வெறுப்புணர்வு’

கடந்த நான்கரை வருடகால ஆட்சியில், நான்கு வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பணத்தைச் செலவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்பு வல்லுநர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அக்குழு, வட மாகாண மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வைப் பரவச் செய்ததாகவும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (30) முத்தவெலி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின், யாழ். மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும், இந்தக் குற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு, தற்போதைய அரசாங்கத்துக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

2020ஆம் ஆண்டில், ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம், நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், மேற்குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுமாறு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றம் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

19ஆவது திருத்தச் சட்டத்தால், அரசமைப்பினூடாக, நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு, ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து, சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

மூன்று தலைவர்களுக்கு, ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட வேலைத்திட்டமொன்றை, எதிர்வரும் மாதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த காலங்களில் பாதுகாப்புத்துறையினர் அபகரித்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு, அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு மீதமுள்ள காணிகளையும் அடுத்த மாதமளவில் முழுமையாக விடுவிப்பதற்கு தான் பணிப்புரை விடுப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கு-மக்களுக்கு-ஏமாற்றம்-தெற்கு-மக்களுக்கு-வெறுப்புணர்வு/71-237632

இது பழைய செய்து என்றாலும் இதில் மைத்திரி பல உண்மைகளை கூறி உள்ளார்.

இன்றைய அரசியல் யதார்த்தை புரிய வைத்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தற்போதைய அரசாங்கத்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் தான் பதவியேற்ற நாளே விடுதலை செய்வேன் என இன்றைய கூட்டத்தில் கோத்தா கூறியுள்ளார்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

தற்போதைய அரசாங்கத்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் தான் பதவியேற்ற நாளே விடுதலை செய்வேன் என இன்றைய கூட்டத்தில் கோத்தா கூறியுள்ளார்.

கோத்தாவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க இரகசியமாக கோரலாம் .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் கூட்டம் நாளை ; சு.க முக்கியஸ்தர் சிலர் மேடையேறும் சாத்தியம் 

(நா.தனுஜா)

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக நாளை கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெறவுள்ளது. 

ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ இன்று தனது தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்திருந்தார்.

அவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் நாளை கொழும்பு காலிமுகத்திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

https://www.virakesari.lk/article/66555

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

கோத்தாவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க இரகசியமாக கோரலாம் .

கோத்தாவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கோரலாம். ஆனால் அப்படி கோரக்கூடிய ஆட்கள் இல்லை. பலர் சேர்ந்து மக்களை அழித்தவர்கள்.

வியாழேந்திரன் போன்ற யாரும் என்றால் கோரலாம். ஆனால் வியாழேந்திரன் இப்பொழுது ஐதேக பக்கம் என நினைக்கிறேன்.

இன்றைய கூட்டத்தில் கோத்தா யுத்தத்தை நிறைவு செய்து தம்மால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரத்தை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்து விட்டது என்று இப்பொழுதும் யுத்த  வெற்றி பற்றி கதைத்திருக்கிறார்.

தானே ஒரு இனப்படுகொலையாளி என்பதால் இராணுவத்தினர் செய்த குற்றங்களை கூட ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என கூறி அனைவரையும் விடுதலை செய்வார்.

தமிழ் அரசியல் கைதிகள் நிலை வேறு.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, ampanai said:

அரசியலில் நடுநிலை இல்லை மிஸ்டர் மை3. கட்சியையும் முடித்தாகிவிட்டது. மை3 இன் அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. 

ஆனால், சந்திரிக்கா என்ற போர்க்குற்றவாளி நாளை வருவா. கட்சியை கட்டி எழுப்புவேன் என்பார். 

இந்த படத்தை பார்த்ததும் உங்கள் கருத்து தான் நினைவுக்கு வந்தது. 😀

EGUh6S5XYAEB0K9?format=jpg&name=900x900

Share this post


Link to post
Share on other sites

ஜனநாயகத்தையும் , சுதந்திரத்தையும் நோக்கிய போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் தவிர்க்க முடியாததொன்றாகும் - ராஜித சாடல்

ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நோக்கிய போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் என்பது தவிர்க்க முடியாததொன்றாகும் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித் சேனாரத்ன, பெரும்பாலான போராட்டங்களின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை முன்நிறுத்தி காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெறுகின்றன என்றும்  குறிப்பிட்டார்.

 

சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருப்பதுடன், அவர் தலைமையிலான அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவையும், எம்மையும் முன்நோக்கி வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றவர்கள் சிவில் சமூகத்தினரும், தொழிற்சங்கத்தினருமே ஆவர். அந்த சிவில் சமூக அமைப்புக்களை வழிநடத்திய வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரும் இன்று இல்லை. மைத்திரிபால சிறிசேனவும் இன்றில்லை.

சோபித தேரர் அவராக விரும்பி எம்மிடமிருந்து விலகிப்போகவில்லை. ஆனால் மைத்திரிபால சிறிசேன அவராகவே விலகிச்சென்று விட்டார்.

எனினும் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நோக்கிய இத்தகைய போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் என்பது தவிர்க்க முடியாததொன்றாகும். பெரும்பாலான போராட்டங்களின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை முன்நிறுத்தி காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66603

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
    • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
    • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
    • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
    • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!
×
×
  • Create New...