Jump to content
nunavilan

சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் : அடைக்கலநாதன்

Recommended Posts

சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் : அடைக்கலநாதன் 

 

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் பேசிய பின்னரே பிரதான வேட்பாளர்களிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

selvam.jpg

இம்முறை ஜனாதிபதி தேர்தல் எமக்கு சாதகமாக அமைய வேண்டும் எனவும் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயரிய அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

பிரதான அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும் வினவிய போதே அவர் இவற்றைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதன்போது ஜனாதிபதி தேர்தலில் நாம் என்ன செய்யவேண்டும் என்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.

 இதில் இத்தனை காலமாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற கோரிக்கைகள் மற்றும் தற்போதுள்ள புதிய பிரச்சினைகள் என்பன குறித்து தமிழ் தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தனித்தனி நிலைபாடுகளை ஆராய்ந்த  பின்னர் கூட்டமைப்பாக நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சகலருடனும் பேசுவதாக தீர்மானம் எடுத்தோம். 

சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம். இந்த பேச்சுவார்த்தைகளில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் வாக்குறுதிகளை வழங்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நாட்டு மக்கள் முன்னிலையிலும் வாக்குறுதிகளை வெளிப்படுத்துகின்ற நிலையில் நாம் அந்த தரப்பை ஆதரிக்க முடியும்.

 கடந்த காலங்களில் நாம் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டுள்ளோம் ஆனால் இம்முறை தேர்தலில் அது நடக்கக் கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66518

Share this post


Link to post
Share on other sites

கடந்த காலங்களில் நாம் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டுள்ளோம் ஆனால் இம்முறை தேர்தலில் அது நடக்கக் கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் ஏமாற்றங்களால்  மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது மக்களே. அரசியல்வாதிகள் அல்ல.

இந்த அரசியல்வாதிகளால் எந்த தீர்வையும் பெற்றுதரும் திறமை இல்லை. அடுத்த இளைய தலைமுறையிடம் தலைமைகளை ஒப்படைத்து இளைப்பாறுவதே நன்று.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் பேசிய பின்னரே பிரதான வேட்பாளர்களிடம் பேசவுள்ளதாக

ஆளாளுக்கு தாம் யாருக்கு ஆதரவு என கூறி வருகிறார்கள். இவர்கள் இனித்தான் பங்காளிக்கட்சிகளுடன் பேசி அதன் பின் வேட்பாளர்களுடன் பேசி அதற்கும் பின் தான் முடிவு சொல்லவுள்ளார்களாம். :grin: 

இம்முறை சஜித்துக்கு ஆதரவளிக்காமல் வேறு எந்த முடிவெடுத்தாலும் அது கோத்தாவுக்கு சாதகமாகி விடும்.

எப்ப முடிவு சொல்வார்கள் என பார்ப்போம். 😎

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

கடந்த காலங்களில் நாம் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டுள்ளோம் ஆனால் இம்முறை தேர்தலில் அது நடக்கக் கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் ஏமாற்றங்களால்  மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது மக்களே. அரசியல்வாதிகள் அல்ல.

இந்த அரசியல்வாதிகளால் எந்த தீர்வையும் பெற்றுதரும் திறமை இல்லை. அடுத்த இளைய தலைமுறையிடம் தலைமைகளை ஒப்படைத்து இளைப்பாறுவதே நன்று.

நெடுகவும் அடுத்த தலைமுறை தலைவர்கள் எண்டு ஒரு கருத்தை முன்வைக்கிரீர்கள் அம்பனை.

இந்த அடுத்த தலைமுறை தலைவர்கள் ஒரு 5 பேரை பட்டியல் இட முடியுமா?

 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, goshan_che said:

நெடுகவும் அடுத்த தலைமுறை தலைவர்கள் எண்டு ஒரு கருத்தை முன்வைக்கிரீர்கள் அம்பனை.

இந்த அடுத்த தலைமுறை தலைவர்கள் ஒரு 5 பேரை பட்டியல் இட முடியுமா?

பல, கட்சிகளில், தமிழரசு கட்சி உட்பட, இளையோர் அமைப்பு உண்டு. அதன் தேவையே இது தான் (succession plan)  

இப்போது உள்ள தலைவர்கள் நாளை இறந்துவிட்டால் இந்த கட்சிகளும் முடிந்து விடுமா? இல்லை. 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, ampanai said:

பல, கட்சிகளில், தமிழரசு கட்சி உட்பட, இளையோர் அமைப்பு உண்டு. அதன் தேவையே இது தான் (succession plan)  

இப்போது உள்ள தலைவர்கள் நாளை இறந்துவிட்டால் இந்த கட்சிகளும் முடிந்து விடுமா? இல்லை. 

உங்களுக்கு நாட்டோடு சுத்தமாக தொடர்பில்லையா? இக்கட்சிகளின் இளையோர், தலைவர்களுக்கே தீத்துவார்கள்.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, goshan_che said:

உங்களுக்கு நாட்டோடு சுத்தமாக தொடர்பில்லையா? இக்கட்சிகளின் இளையோர், தலைவர்களுக்கே தீத்துவார்கள்.

இல்லை சுத்தமாக இல்லை. தகவலுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

பரவாயில்லை. ஆனால் ஊரில் என்ன நடக்கிறது என்ற ஒரு ஐடியா ஒரு துளி கூட  இல்லமால், அடுத்த தலை முறை தலைவர்கள் யார் என ஒரு பெயரை கூட சொல்லத்தெரியாமல் - அடுத்த தலைமுறையிடம் கட்சியை கொடுங்கள் போன்ற அபத்தங்களை உதிர்ப்பது உங்கள் உரிமை.

ஆனால் இந்த அபத்தங்கள் போட்டுடை படும்.

Share this post


Link to post
Share on other sites

TNA to hold talks with Gota: Sumanthiran

9 October 2019 11:36 pm

The Tamil National Alliance (TNA) will hold talks with the presidential candidate of Sri Lanka Podujana Peramuna (SLPP) Gotabaya Rajapaksa shortly, a party official said today.

Jaffna district TNA parliamentarian M.A.Sumanthiran told Daily Mirror yesterday that Mr. Rajapaksa had sought a meeting with him. Gotabhaya Rajapaksa will be accompanied by Opposition Leader Mahinda Rajapaksa and SLPP National Organizer Basil Rajapaksa.

Mr. Sumanthiran said the TNA had held talks with UNP candidate Sajith Premadasa and briefed him about the party’s position.

“We will inform him of our position. We want the constitution-making process to be taken forward. Also, we have a number of other issues such as the release of land and those held under the Prevention of Terrorism Act. We will look at Mr. Premadasa’s election manifesto and decide,” he said. (Kelum Bandara)

http://www.dailymirror.lk/breaking_news/TNA-to-hold-talks-with-Gota-Sumanthiran/108-175889

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...