colomban

கோட்டா வெற்றிபெற நாக காளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜை செய்த முன்னாள் எம்.பி!

Recommended Posts

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி அக்கரைப்பற்று சின்ன பனங்காடு நாக காளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜை ஆலயத் தலைவர் ஆறுமுகம் கந்தையா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் இடம்பெற்றது.

ஆலய உற்சவ காலத்தில் தொடர்ந்து நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களும் இந்த யாக பூஜையில் கலந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாக பூஜையின் நிறைவாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று யாகத்தினை செய்து வருகின்றோம். இது சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் நிச்சயம் எங்கள் வேண்டுதல் பலிக்கும்.

வரப்போகும் தேர்தலில் நாட்டிற்கு நல்ல தலைவனை மாத்திரமல்ல நல்ல ஒரு தந்தையை தேர்ந்தெடுக்க போகின்றோம்.

இந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் படும் இன்னல்களை யாவரும் அறிவர் .இவ்வாறான அவஸ்த்தையிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை சுபீட்சமான பாதைக்கு இட்டுச்செல்லக்கூடிய தலைவர் கிடைத்திருக்கிறார் .

கோட்டாபய ராஜபக்ச சனாதிபதியாக வருவார் என்ற நல்லெண்ண அடிப்படையில் மன்றாட்டமாக வேண்டுதலை முன்வைத்து வருகின்றோம் அது நிச்சயம் நடக்கும். அதற்கு பிராயச்சித்தமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களை புனரமைக்க உள்ளோம் என தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpghttps://www.ibctamil.com/srilanka/80/129196

Share this post

Link to post
Share on other sites

தமிழ் மக்கள் கோத்தாவை ஆதரித்தால் :
- சஜித் உட்பட்ட ஐ.தே.க. ஒரு ஏமாற்றும் கட்சி, முதுகில் குத்தும் கட்சி
- சஜித் யார் என்று தமிழர் தரப்பிற்கு தெரியாது
- வருங்கால தேர்தலுக்கு ஐ.தே.க ஒரு பாடம் படித்ததாக இருக்கும்

கோத்தா சனாதிபதியானால் :
- தமிழர் தரப்பின் அழிவு துரிதமாக்கப்படலாம், அதுவே மக்களை சனநாயக வழியில் போராட செய்யும் 
- ஒரு போர்க்குற்றவாளி தலைவரானதை உலகறியும்
- சீன நெருக்கத்தை அதிகரித்தால், இந்திய (அமெரிக்க) தலையீடு அதிகரிக்கும் வாய்ய்பு உள்ளது

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, ampanai said:

அம்பனை, இதை நீங்களே ஒரு தடவை முள்ளிவாய்க்காலில் தப்பிய வன்னி மக்களிடம் நேரில் போய் ஒரு தடவை சொல்லி விட்டு வர முடியுமா? 2005 இல் இதே pipe dream ஐ யாரோ பரப்பி விட நடந்ததன் விளைவை மறந்து விட்டு இப்படி சொல்லிக் கொண்டு திரிய உங்கள் போன்ற ஆட்களுக்கு வெட்கமில்லையா ஐயா? எலி பூனைக்குக் கூட ஆபத்தை விட்டு நகரச் செய்யும் learning capacity இருக்கிறதே? உங்கள் போன்ற ஆட்களுக்கு இல்லையா?

 • Like 1

ஜஸ்ட்டின்,
திரியின் தலைப்பை பாருங்கள். யார் யாருக்கு எங்கு ஆதரவை வேண்டுகிறார்கள் என்று.

தாயக மக்களில் ஒரு பகுதியினர் கோத்தாவின் வெற்றியை வேண்டுகிறார்கள் என்பதே செய்தி. அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றியதே என் கருத்து. நான் அவர்களை யாருக்கும் வாக்கு போடா சொல்லவில்லையே?

( பின் குறிப்பு : வழமை போல் ஆட்டுக்குள் மாட்டை சொருகும் உங்கள் பாணி வெட்கப்பட வேண்டியதும் நீங்கள்  கருத்தாடும் நாகரீகத்தையும் கற்கவேண்டியது நீங்களே  )

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, ampanai said:

மக்களாகத் தெரிவு செய்வதை நான் எதுவும் சொல்லப் போவதில்லை!ஆனால் இந்த யாகவாதிகளின் தெரிவு ஏதோ வெகுஜனத் தெரிவென்பது மாதிரிக் கதை பரப்புவது fake news இன் ஒரு தந்திரம் தான்!
"மக்களின் அழிவு துரிதப்படும், அதனால் ஜனநாயகப் போராட்டம் துரிதமாகும்" என்பதை ஒரு நன்மையாகப் பார்ப்பதும் பரப்புவதும் மிகவும் நாகரீகமான செயல் அம்பனை! இதை ஒரு உதாரணம் மூலம் சுட்டிக் காட்டுவது தான் அநாகரீகம் இந்தக் காலத்தில்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

தமிழ் மக்கள் கோத்தாவை ஆதரித்தால் :
- சஜித் உட்பட்ட ஐ.தே.க. ஒரு ஏமாற்றும் கட்சி, முதுகில் குத்தும் கட்சி
- சஜித் யார் என்று தமிழர் தரப்பிற்கு தெரியாது
- வருங்கால தேர்தலுக்கு ஐ.தே.க ஒரு பாடம் படித்ததாக இருக்கும்

கோத்தா சனாதிபதியானால் :
- தமிழர் தரப்பின் அழிவு துரிதமாக்கப்படலாம், அதுவே மக்களை சனநாயக வழியில் போராட செய்யும் 
- ஒரு போர்க்குற்றவாளி தலைவரானதை உலகறியும்
- சீன நெருக்கத்தை அதிகரித்தால், இந்திய (அமெரிக்க) தலையீடு அதிகரிக்கும் வாய்ய்பு உள்ளது

கோத்த ஜனாதிபதி ஆவதில் நன்மை உண்டு 
ஆனால் அது  தமிழர்களின் வாக்குகளினாலோ அல்லது இப்படியான 
கோமாளித்தனங்களாலோ நடக்க கூடாது. கோத்த என்றும் எம்மினத்தின் வெளிப்படையான 
எதிரிதான் .... இதில் சாதகமாக அமைய கூடியது மூன்றாவது சக்திகள்தான்.

நாம் கோத்தாவை ஆதரிப்பதுபோல் தலையில் மண் அள்ளிப்போடும் வேலை 
வேறு ஒன்றும் இருக்க முடியாது 
தமிழர்கள் ஆதரித்தால் .. கோத்தாவின் இனப்படுகொலை அனைத்தும் சரி என்று ஆகிவிடும்.

மேலே படத்தில் இருப்பது ஈப்பிடிப்பி சார்ந்தவர்கள் 
இவர்களுக்கும் அறிவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில் 
துரதிஷ்டவசமாக மாட்டியவர்கள் ... அவர்கள் மேல் தவறு இல்லை 
சூழ்நிலை அவ்வாறு அமைந்து விட்டது. 
 
Share this post

Link to post
Share on other sites

மருது,

ராஜபக்சேக்கள் வருவதால் ஒன்றும் ஆகபோவதில்ல. யூஎஸ் நினைத்திருந்தால் -கோட்டவின் குடியுரிமை விலகலை தாமதப்படுத்தி இருக்கலாம்.

மகிந்த இப்பவும் இந்தியாவை தொடர்பில் வைத்தே எல்லா நகர்வும் செய்கிரார்.

ஒரு காலத்தில், ஒபாமா கப்பல் அனுபுறார், கருணாநிதியும், சிதம்பரமும் போரை நிறுத்த பாடுபடுகிறனர் என பரவிய செய்திகள் நியாபகம் இருக்கும். அதை போலவே இதுவும் முடியும்.

கோட்ட வந்தால் இன்னொரு இனவொழிப்பு நிகழாது, ஆனால் நாளொரு விதமாக எம்மக்களை சித்திரவதை செய்வார்கள். 

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மீண்டும் புலநாய்வினரின் கட்டுப்பாட்டில் வருவார்கள். சாவு அல்லது சொல்படி நட என்பதே அவர்களுக்கான தெரிவாக இருக்கும்.

இந்த அடக்குமுறையால் எதிர் விளைவு கிளம்பும் என அம்பனை நினைப்பது போல நடக்காது. கஸ்மீரை, திபெத்தை போல, ஒடுக்கி, ஆனல் திருப்பி அடிக்க முடியாத அளவில் எம்மக்களை மடக்கி வைத்திருப்பார்கள்.

இதை மிகதிறமையாக தாம் செய்ய வல்லவ்ர்கள் என்பதையும் முன்பே நிறுவியும் உள்ளார்கள்.

அம்பனை,

1. இந்த பியசேன யார் என தெரிந்துதான் எழுதுகிறீர்களா ?

தமிழரை மணந்து நான் தமிழர்கள் பக்கம் நியாயம் உள்ளதை உலகுக்கு சொல்லுவேன் என சம்பந்தரை மட்டும் அல்ல மொத்த அம்பாறை வாழ் தமிழ் இனத்தையே மொட்டை அடித்து விட்டு, மகிந்தவுடன் சேர்ந்து போர்குற்றம் ஈராறக அத்தனை அநியாயத்துக்கும் வெள்ளை அடித்த ஆள்.

இவரை காட்டி- தமிழ் மக்கள் கோட்டவை விரும்புகிறார்கள் என நீங்கள் எழுதுவதை பார்க்க, நீங்கள் இன்னொரு பியசேனவா எனவும் ஐயம் எழுகிறது.

2. தமிழ் மக்களின் அழிவு துரிதமாகும் அதனால் ஜனநாயகப் போராட்டம் துரிதமாகும்- இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? அழிவு துரிதமாகும் போது அதில் ஒரு துளியேனும் நீங்கள், உங்கள் பிள்ளைகள், உடமை பாதிப்படையா வண்ணம் வெளிநாட்டில் வந்து பதுங்கி கொண்டு, எவன் வீட்டுப் பிள்ளைகளை வைத்து கேம் விளையாட நீங்கள் யாரையா? வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் இப்படி ஊரில் இருக்கும் மக்களை cannon fodder போல பாவிப்பதால்தான், புலம்பெயர் ஆட்களையே தீண்டதகாதவர்களாக இப்போ நாட்டில் சனம் ஒதுக்குது.

1 hour ago, Maruthankerny said:

,  

2 hours ago, ampanai said:

அம்பனை, இதை நீங்களே ஒரு தடவை முள்ளிவாய்க்காலில் தப்பிய வன்னி மக்களிடம் நேரில் போய் ஒரு தடவை சொல்லி விட்டு வர முடியுமா? 2005 இல் இதே pipe dream ஐ யாரோ பரப்பி விட நடந்ததன் விளைவை மறந்து விட்டு இப்படி சொல்லிக் கொண்டு திரிய உங்கள் போன்ற ஆட்களுக்கு வெட்கமில்லையா ஐயா? எலி பூனைக்குக் கூட ஆபத்தை விட்டு நகரச் செய்யும் learning capacity இருக்கிறதே? உங்கள் போன்ற ஆட்களுக்கு இல்லையா?

ஜஸ்ட்டின்,
திரியின் தலைப்பை பாருங்கள். யார் யாருக்கு எங்கு ஆதரவை வேண்டுகிறார்கள் என்று.

தாயக மக்களில் ஒரு பகுதியினர் கோத்தாவின் வெற்றியை வேண்டுகிறார்கள் என்பதே செய்தி. அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றியதே என் கருத்து. நான் அவர்களை யாருக்கும் வாக்கு போடா சொல்லவில்லையே?

( பின் குறிப்பு : வழமை போல் ஆட்டுக்குள் மாட்டை சொருகும் உங்கள் பாணி வெட்கப்பட வேண்டியதும் நீங்கள்  கருத்தாடும் நாகரீகத்தையும் கற்கவேண்டியது நீங்களே  )

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
21 minutes ago, goshan_che said:

அம்பனை,

1. இந்த பியசேன யார் என தெரிந்துதான் எழுதுகிறீர்களா ?

தமிழரை மணந்து நான் தமிழர்கள் பக்கம் நியாயம் உள்ளதை உலகுக்கு சொல்லுவேன் என சம்பந்தரை மட்டும் அல்ல மொத்த அம்பாறை வாழ் தமிழ் இனத்தையே மொட்டை அடித்து விட்டு, மகிந்தவுடன் சேர்ந்து போர்குற்றம் ஈராறக அத்தனை அநியாயத்துக்கும் வெள்ளை அடித்த ஆள்.

இவரை காட்டி- தமிழ் மக்கள் கோட்டவை விரும்புகிறார்கள் என நீங்கள் எழுதுவதை பார்க்க, நீங்கள் இன்னொரு பியசேனவா எனவும் ஐயம் எழுகிறது.

2. தமிழ் மக்களின் அழிவு துரிதமாகும் அதனால் ஜனநாயகப் போராட்டம் துரிதமாகும்- இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? அழிவு துரிதமாகும் போது அதில் ஒரு துளியேனும் நீங்கள், உங்கள் பிள்ளைகள், உடமை பாதிப்படையா வண்ணம் வெளிநாட்டில் வந்து பதுங்கி கொண்டு, எவன் வீட்டுப் பிள்ளைகளை வைத்து கேம் விளையாட நீங்கள் யாரையா? வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் இப்படி ஊரில் இருக்கும் மக்களை cannon fodder போல பாவிப்பதால்தான், புலம்பெயர் ஆட்களையே தீண்டதகாதவர்களாக இப்போ நாட்டில் சனம் ஒதுக்குது.

1. இந்த பியசேன யார் என தெரிந்துதான் எழுதுகிறீர்களா ?

இல்லை. பொதுவாக எழுதினேன். இவர் மட்டும் தான் கோத்தாவை ஆதரிக்கும் தமிழர் இல்லை. அந்த ரீதியில், பொதுவாக ஆதரிக்கும் எல்லாரையும் சேர்த்தே எழுதினேனான், எழுதுவேன். சஜித்தை ஆதரிப்பவர்கள் பற்றியும் எழுதினேன், எழுதுவேன். 

2. இவரை காட்டி- தமிழ் மக்கள் கோட்டவை விரும்புகிறார்கள் என நீங்கள் எழுதுவதை பார்க்க, நீங்கள் இன்னொரு பியசேனவா எனவும் ஐயம் எழுகிறது.

உங்கள் சந்தேகங்கள் நியாயமானவை  தொடர்ந்தும் எனது பதிவுகளை கவனித்து விழிப்பாக இருங்கள், நன்றிகள் 

3. தமிழ் மக்களின் அழிவு துரிதமாகும் அதனால் ஜனநாயகப் போராட்டம் துரிதமாகும்- இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

உங்களுக்கு கேள்வி கேட்க்கும் உரிமை உள்ளது. எனக்கு எனது கருத்தை சொல்லும் உரிமையும் உள்ளது. தொடந்து நில, மொழி, உரிமை மற்றும் உயிர் இழப்புக்கள் நடக்கின்றன. அவை துரிதமாக்கப்படும் என கூறியது கோத்தாவின் ஆட்சியில். அப்பொழுதுதான் எமது தாயக மக்களின் போராடும் உணர்வும் கூடும் என்பதே அந்த கருத்து.

நீராவியடி பிரச்சனை, கல்முனை பிரச்சனை, கன்னியா பிரச்சனை என பல பிரச்சனைகளை யாராலும் முடிக்க முடிந்ததா? இல்லை. இப்படி பல நூறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து நாளாந்தம் மக்கள் இறக்கின்றார்கள்.   

4. அழிவு துரிதமாகும் போது அதில் ஒரு துளியேனும் நீங்கள், உங்கள் பிள்ளைகள், உடமை பாதிப்படையா வண்ணம் வெளிநாட்டில் வந்து பதுங்கி கொண்டு, எவன் வீட்டுப் பிள்ளைகளை வைத்து கேம் விளையாட நீங்கள் யாரையா? வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் இப்படி ஊரில் இருக்கும் மக்களை cannon fodder போல பாவிப்பதால்தான், புலம்பெயர் ஆட்களையே தீண்டதகாதவர்களாக இப்போ நாட்டில் சனம் ஒதுக்குது.

முற்றிலும் உண்மை. நீங்களும் நாமும் இதே வீட்டில் தான் இருக்கின்றோம். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, ampanai said:

1. முதலில் பியசேன போன்றவர்களை பற்றி தெரியும் அளவுக்காவது எமது போராட்டத்தின் நீண்ட வரலாற்றையும் அதன் தோல்விமுகங்களையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தை பொறுத்தவரை நீங்கள் கூறும் கோட்டவை வெல்ல வைக்கும் உத்தி எல்லாம் ரொம்ப பழசு. நீங்கள் பியசேனவை பற்றியே தெரியாமல், இதை ஏதோ புதிதாக கண்டு பிடித்த மாரி இங்கே வந்து எழுதுகிறீகள். For us, you are re inventing a wheel that we have tried many times before and found to be useless. 

2. நிச்சயமாக - ஜோய் மகேசன் முதல், எமில் காந்தன் வரை எமது மக்கள் மீது பெரும் பற்று கொண்டவர்களாக நடித்து எம்மக்களை பாழும் கிணற்றில் தள்ளிய பலரை முன்னமே இனம் கண்ட தளம் இது. உங்கள் மீதும், யார் மீதும் இந்த அவதானம் இருக்கும்.

3. உங்களுக்கு என்ன எழுதவும் உரிமை உண்டு, ஆனால் மக்கள் அழிவு துரிதமாகவேண்டும் என எழுதும் அருகதை இல்லை.

4. எனக்கும் இல்லை. உங்களை போலவே நானும் வெளிநாட்டில் வசிப்பதால்தான் - அங்கே இருக்கும் மக்களை காவு கொடுக்க வேண்டும் என சொல்லும் அருகதை எனக்கும் இல்லை. நான் சொல்வதும் இல்லை.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

கோத்தா ஒரு போர்க்குற்றவாளி. சர்வதேசத்தாலும், மனிதவுரிமை அமைப்புகளாலுல் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்தவன் என்கிற பெயரைப் பெற்றவன். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு இனவெறி பிடித்த சிங்கள பெளத்த அரக்கன்.

இப்படியான ஒருவனை தமிழர்களே ஆதரிப்பதென்பதும், ஜனாதிபதியாக்கி அழகுபார்க்க நினைப்பதும் கேவலம். எம்மில் ஒருலட்சம் பேரையாவது கொன்று, எமதினத்தின் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கி, மக்களை நடைபிணங்களாக வைத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியவனை நாமே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துவிட்டு, எந்த முகத்துடன் சர்வதேசத்தின் முன்னால்ப் போய் அவனுக்கெதிராக வழக்குத் தொடருங்கள் என்றோ, நீதி தாருங்கள் என்றோ கேட்கப்போகிறோம்? சர்வதேசம் எம்மீது காரித் துப்பாது?

அடுத்தது, ஒரு போர்க்குற்றவாளியை பதவியில் அமர்த்தி, எம்மக்கள் மீது இன்னும் இன்னும் அழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவார்கள் என்று நினைப்பது சுத்த முட்டாள்த்தனம். இதுவரை பொங்கியெழுந்த மக்கள் பட்ட அவலங்களை எப்படி மறந்தோம்? ஒன்றிற்குப் பலமுறை பொங்கியெழுந்ததன் விளைவுகளை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இனிப் பொங்கியெழுந்து இழப்பதற்கு மீதம் என்னவிருக்கிறது? அவன் வருவதைத் தடுத்தாலே இன்னும் இன்னும் ஏற்படவிருக்கும் அழிவுகளைத் தடுத்துவிடலாம் என்கிற சிந்தனை கூடவா இல்லாமல்ப் போனது?

அவன் வந்தாலென்ன, விட்டலென்ன, ஆனால், எமது வாக்குகளால் அவன் தெரிவுசெய்யப்படக் கூடாது. எம்மை அழித்தவனை நாமே தெரிவுசெய்துவிட்டு, பின்னர் குத்துகிறான், குடைகிறான் என்று அழுதால், ஏன் நாயே என்று கூட எவனும் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. 

 • Like 3
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தமிழின படுகொலை என்பது 1948இல் இருந்தே நடக்கின்றது. 2009இல் ஆயுத போராட்டம்  மௌனிக்கப்பட்டுவிட்டது. பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. இன்றும் ஒரு பத்தாண்டுகளில், கிழக்கும் மன்னாரும் முழுமையாக போய்விடலாம். மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் வவுனியா, முல்லைத்தீவு பறிபோய்விடும்.

சிங்கள சனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.   

ஒன்றில் நாம் ஒரு இனமாக சிங்கள நாட்டின் தேர்தலில் பங்கெடுப்பு செய்யவேண்டும் இல்லை அதை நிராகரிக்கவேண்டும். அப்படி நிராகரிக்க விரும்புவர்களுக்கும் தெரிவு உண்டு.

வாக்களிக்க விரும்பினால், அந்த ஒவ்வொரு வாக்கிற்கும் இரண்டு முக்கிய தெரிவுகள் உள்ளன. அதில் ஒன்று ஐ.தே.க. சார்ந்தது. பெரும்பாலானோர் ஆதிரிக்க விரும்பதற்கு உள்ள ஒரே காரணம் - மற்றையவர், அதாவது கோத்தா என்ற போர்க்குற்றவாளி, எமது இனத்தை அழித்தவன், அழிக்க கூடியவன். மாற்று கருத்து இல்லை (எமக்கு கோத்தா மீது கொஞ்சம் அதிகம் ஆத்திரம்). ஆனால், இரணிலும் அவர் சார்ந்த சஜித்தும் அழிக்க மாட்டார்களா? என்றால், அவர்களும் அழித்தவர்கள் தான். அவர்களும் போர்க்குற்றவாளிகள் தான். அவர்களும் அழிப்பார்கள் தான்.

எனவே, யாரை ஆதரித்தாலும் அதில் ஒரு சந்தோசம், திருப்தி இருக்காது. எனவே, இருவரும் ஒருவரே என கொள்ளலாம். 

அப்படி இருக்கையில் கட்டாயம் வாக்களித்து இந்த இரண்டு இனவழிப்பாளர்களில் யாரை தமிழர் தரப்பு வெல்ல வைக்கவேண்டும்? அதனால் எவ்வாறு எமது இனவழிப்பை தாமதிக்கலாம்? என்பதே யதார்த்தபூரவமாக சிந்திக்க வேண்டிய விடயம்.

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, ampanai said:

அப்படி இருக்கையில் கட்டாயம் வாக்களித்து இந்த இரண்டு இனவழிப்பாளர்களில் யாரை தமிழர் தரப்பு வெல்ல வைக்கவேண்டும்? அதனால் எவ்வாறு எமது இனவழிப்பை தாமதிக்கலாம்? என்பதே யதார்த்தபூரவமாக சிந்திக்க வேண்டிய விடயம்.

கோத்தா வந்தால் இது அதிகம் நடக்கும்.

EGV6-UDUcAAGHWu?format=jpg&name=large

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

3. உங்களுக்கு என்ன எழுதவும் உரிமை உண்டு, ஆனால் மக்கள் அழிவு துரிதமாகவேண்டும் என எழுதும் அருகதை இல்லை.

அது எனது தனிப்பட்ட கருத்து, அதன் உண்மையான நோக்கம் எனது மக்கள், எனது தாயகம் அழிக்கப்படவேண்டும் என்பது அல்ல.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தொடரும் அழிவை யாராலும் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தால் வந்த கருத்து.

எமது தாயக நிலைமை சிறக்க, பல நூறு படிகள் முன்னேற சில பத்து படிகள் பின்னே செல்ல வேண்டிய அரசியல் நிலைமை உள்ளதாக நான் கருதுகின்றேன்.

மற்றைய படி, சஜித் வென்று அதனால் எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை நிம்மதியாக சொந்த மண்ணில் சகல உரிமையுடனும் வாழ முடிந்தால் உங்களைப்போலவே நானும் நிறைவு காண்பேன்.

மற்றும் படி நீங்கள் கூற முனைப்பது போன்று நான் ஒரு இனத்துரோகியோ இல்லை யாரிடம் இருந்து பணமோ பெறுபவன் அல்ல.   

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

அது எனது தனிப்பட்ட கருத்து, அதன் உண்மையான நோக்கம் எனது மக்கள், எனது தாயகம் அழிக்கப்படவேண்டும் என்பது அல்ல.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தொடரும் அழிவை யாராலும் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தால் வந்த கருத்து.

எமது தாயக நிலைமை சிறக்க, பல நூறு படிகள் முன்னேற சில பத்து படிகள் பின்னே செல்ல வேண்டிய அரசியல் நிலைமை உள்ளதாக நான் கருதுகின்றேன்.

மற்றைய படி, சஜித் வென்று அதனால் எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை நிம்மதியாக சொந்த மண்ணில் சகல உரிமையுடனும் வாழ முடிந்தால் உங்களைப்போலவே நானும் நிறைவு காண்பேன்.

மற்றும் படி நீங்கள் கூற முனைப்பது போன்று நான் ஒரு இனத்துரோகியோ இல்லை யாரிடம் இருந்து பணமோ பெறுபவன் அல்ல.   

1. அவ்வாறு தொனிப்பட எழுதியமைக்கு உங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் இந்த நோக்கில்தான் எழுதினீர்கள் என நீங்கள் சொல்லும்போது அதை நான் மறுப்பதற்கில்லை. நல்

2. ஆனால் நீங்கள் ஏன் தொடர்ந்தும் இப்படியாக கோட்டவை ஆதரிக்கும் வண்ணம் செய்திகளை இணைத்து, முதல் ஆளாக வந்து கருத்தும் எழுதுகிறீர்கள் என நினைக்கும் போது, எமது வரலாற்றில் நாம் சந்தித்தவற்றை மீள் மீட்டி பார்க்கும் போது, இந்த தேர்தலை மையமாக வைத்து தமிழ் ஊடகங்கள் மீது தொடுக்கப்படும் ஒரு யுக்தியின் வெளிப்பாடா இது எனும் சந்தேகம் இயல்பாக எழுவது தவிர்கவியலாதது. இந்த இயல்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றும்படி உங்களுக்கு துரோகி, உளவாளி பட்டம் கட்டுவது என் நோக்கமல்ல.

3. இனியும் கீழே போகமுடியாத பாதாளத்தில்தான் எம்மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் theoretical ஆக எதிர்பார்ப்பது போல கீழே அமிழ்த்த திமிறி எழும் வலுவோ, தீர்க்கமோ, மனோதிடமோ, தக்க தலைமையோ எம் மக்களிடம் இப்போ இல்லை. இவை எதுவும் இல்லாமல் அவர்களை தொடர்ந்தும் மிக கொடியவர்களின் ஆட்சிக்குள் தள்ளுவது - அவர்களிடம் இருக்கும் சொற்ப வலிமையையும் சூறையாடி திபெத்தியர்கள் போல் ஒரு நிரந்தர அடிமை சமூகமாகவே அவர்களை மாற்றும்.

தவிரவும் ராஜபக்சேக்கள் கோது இருக்க பழத்தை உண்பவர்கள். சர்வதேசம் அவர்களை கண்டிக்கும். சீனா அமேரிக்க யுத்தம் ஏற்படும் என்பதெல்லாம் வெறும் கற்பனாவாதங்கள்.

உயிரை கொடுத்து போராடிய free Syrian army, குர்திய போராளிகளுக்கு வட சிரியாவில் டிரம்ப் செய்யும் உபசாரத்தை பாருங்கள். தோளோடு தோள் நின்று ஐஎஸ் சை அழிக்க உதவிய படைகளையே துருக்கியிடம் கைகழுவி விட்டது மேற்குலகு.

இவர்கள் சீனாவுடன் இலங்கையுடன் டீல் போடுவார்களே தவிர, எம்மை தம் பங்காளிகளாக ஏற்க மாட்டார்கள்.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, goshan_che said:

மருது,

ராஜபக்சேக்கள் வருவதால் ஒன்றும் ஆகபோவதில்ல. யூஎஸ் நினைத்திருந்தால் -கோட்டவின் குடியுரிமை விலகலை தாமதப்படுத்தி இருக்கலாம்.

மகிந்த இப்பவும் இந்தியாவை தொடர்பில் வைத்தே எல்லா நகர்வும் செய்கிரார்.

ஒரு காலத்தில், ஒபாமா கப்பல் அனுபுறார், கருணாநிதியும், சிதம்பரமும் போரை நிறுத்த பாடுபடுகிறனர் என பரவிய செய்திகள் நியாபகம் இருக்கும். அதை போலவே இதுவும் முடியும்.

கோட்ட வந்தால் இன்னொரு இனவொழிப்பு நிகழாது, ஆனால் நாளொரு விதமாக எம்மக்களை சித்திரவதை செய்வார்கள். 

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மீண்டும் புலநாய்வினரின் கட்டுப்பாட்டில் வருவார்கள். சாவு அல்லது சொல்படி நட என்பதே அவர்களுக்கான தெரிவாக இருக்கும்.

இந்த அடக்குமுறையால் எதிர் விளைவு கிளம்பும் என அம்பனை நினைப்பது போல நடக்காது. கஸ்மீரை, திபெத்தை போல, ஒடுக்கி, ஆனல் திருப்பி அடிக்க முடியாத அளவில் எம்மக்களை மடக்கி வைத்திருப்பார்கள்.

இதை மிகதிறமையாக தாம் செய்ய வல்லவ்ர்கள் என்பதையும் முன்பே நிறுவியும் உள்ளார்கள்.

அம்பனை,

1. இந்த பியசேன யார் என தெரிந்துதான் எழுதுகிறீர்களா ?

தமிழரை மணந்து நான் தமிழர்கள் பக்கம் நியாயம் உள்ளதை உலகுக்கு சொல்லுவேன் என சம்பந்தரை மட்டும் அல்ல மொத்த அம்பாறை வாழ் தமிழ் இனத்தையே மொட்டை அடித்து விட்டு, மகிந்தவுடன் சேர்ந்து போர்குற்றம் ஈராறக அத்தனை அநியாயத்துக்கும் வெள்ளை அடித்த ஆள்.

இவரை காட்டி- தமிழ் மக்கள் கோட்டவை விரும்புகிறார்கள் என நீங்கள் எழுதுவதை பார்க்க, நீங்கள் இன்னொரு பியசேனவா எனவும் ஐயம் எழுகிறது.

2. தமிழ் மக்களின் அழிவு துரிதமாகும் அதனால் ஜனநாயகப் போராட்டம் துரிதமாகும்- இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? அழிவு துரிதமாகும் போது அதில் ஒரு துளியேனும் நீங்கள், உங்கள் பிள்ளைகள், உடமை பாதிப்படையா வண்ணம் வெளிநாட்டில் வந்து பதுங்கி கொண்டு, எவன் வீட்டுப் பிள்ளைகளை வைத்து கேம் விளையாட நீங்கள் யாரையா? வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் இப்படி ஊரில் இருக்கும் மக்களை cannon fodder போல பாவிப்பதால்தான், புலம்பெயர் ஆட்களையே தீண்டதகாதவர்களாக இப்போ நாட்டில் சனம் ஒதுக்குது.

,  

நீங்கள் சொல்ல வருவது எல்லாம் உண்மைதான் 
ஆனால் பொருளாதார ரீதியான பார்வை குறைவாக இருக்கிறது 
மகிந்த அண்ட் கோ இந்தியாவையோ அமெரிக்காவையே எதிர்க்கும் நிலையில் இல்லை 
எதிர்க்க போவதும் இல்லை.

ஆனால் சீனாவுடன் சேர வேண்டியது என்பது தவிர்க்க முடியாதது 
இவர்கள் ஜனாதிபதியாக துடிப்பதே பணத்துக்குத்தான் ... நீங்கள் ஒருவரும் 
இவர்களிடம் சிக்குண்டு கிடக்கும் கறுப்பு பணம் பற்றி சிந்திக்கிறீர்கள் இல்லை 
இவர்களுடைய நிலை வர வர மோசமாகிக்கொண்டே போகிறது ... எந்த பணத்தையும் 
வெள்ளையாக்க கூடிய மாதிரி சூழல் இவர்களுக்கு அமையவில்லை 
ஒரு சிறு தொகையை லைக்கா போன்ற நிறுவனங்கள் ஊடாகவும் சில சீனாவின் சிலுமிச்சங்காளாலும் 
வெள்ளையாக்குகிறார்கள். பணம் முதலீடு இன்றி தேங்கி கிடப்பது என்பதும் நஷ்ட்டத்துக்கு 
சமமானதுதான் காரணம் காலம் ஓடிக்கொண்டே இருக்கும், ஆட்டையை போட்ட பணம் என்றாலும் 
இனி அது அவர்களுடைய சொத்து .. அதில் கண்ணும் கணக்குமாகவே இருப்பார்கள். 

இன்னொரு உலக பொருளாதார சரிவு என்பதும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது 
இவை எல்லாம் எமக்கு சாதகமாக அமையலாம் என்பதே எனது கணிப்பு.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

மகிந்த அண்ட் கோ இந்தியாவையோ அமெரிக்காவையே எதிர்க்கும் நிலையில் இல்லை 
எதிர்க்க போவதும் இல்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் கூட மகிந்த & கோவை எதிர்க்கப்போவது இல்லை. ஏனெனில் கோத்தா வேட்பாளரானதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது.

கோத்தா வேட்பாளர் என அறிவிக்கப்பட சற்று முன் அலிஸ் வெல்ஸ், அலைனா டெப்லிட்ஸ் மகிந்தவை சந்தித்திருந்தார்கள். ஆசீர்வாதம் வழங்கியிருப்பார்கள். 😀

http://www.dailymirror.lk/breaking_news/Alice-Wells-meets-MR/108-172675

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, goshan_che said:

தவிரவும் ராஜபக்சேக்கள் கோது இருக்க பழத்தை உண்பவர்கள். சர்வதேசம் அவர்களை கண்டிக்கும். சீனா அமேரிக்க யுத்தம் ஏற்படும் என்பதெல்லாம் வெறும் கற்பனாவாதங்கள்.

உயிரை கொடுத்து போராடிய free Syrian army, குர்திய போராளிகளுக்கு வட சிரியாவில் டிரம்ப் செய்யும் உபசாரத்தை பாருங்கள். தோளோடு தோள் நின்று ஐஎஸ் சை அழிக்க உதவிய படைகளையே துருக்கியிடம் கைகழுவி விட்டது மேற்குலகு.

இவர்கள் சீனாவுடன் இலங்கையுடன் டீல் போடுவார்களே தவிர, எம்மை தம் பங்காளிகளாக ஏற்க மாட்டார்கள்.

உலகில் போர்களை உருவாக்கி மக்களை கொன்று குவிப்பவர்கள் ஒரு நாளைக்கு சீன, அமெரிக்க போரையும் நடத்துவார்கள். ஆனால் அதற்கு காலம் உள்ளது. அதற்கான காய் நகர்த்தல்கள் தற்போது நடக்கிறது.

ஆனால் கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நிலை எடுக்கப்போவதில்லை.

ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னரே தான் சிரியாவிலுள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெற்றுக்கொள்வேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது.

எனவே குர்திஷ் காரருக்கு துருக்கி பிரச்சினை கொடுப்பதற்காக அந்நிலையை ட்ரம்ப் மாற்ற வேண்டும் என்றில்லை. ட்ரம்ப் ஒரு globalist அல்ல, nationalist. துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, goshan_che said:

உயிரை கொடுத்து போராடிய free Syrian army, குர்திய போராளிகளுக்கு வட சிரியாவில் டிரம்ப் செய்யும் உபசாரத்தை பாருங்கள். தோளோடு தோள் நின்று ஐஎஸ் சை அழிக்க உதவிய படைகளையே துருக்கியிடம் கைகழுவி விட்டது மேற்குலகு.

இவர்கள் சீனாவுடன் இலங்கையுடன் டீல் போடுவார்களே தவிர, எம்மை தம் பங்காளிகளாக ஏற்க மாட்டார்கள்.

இதுதான் யதார்த்தம்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதம் எப்போதுமே தனக்கென்று நண்பர்களைக் கொண்டிருப்பதில்லை. தனது சொந்த நோக்கங்களும், சொந்த லாபங்களும், தனது பெருத்த ஆயுத, உபகரண வர்த்தகமுமே அதன் முக்கிய விடயங்கள். 

ஆப்கானிஸ்த்தானில் ரஷ்ஷியப் படைகள் வெளியேறியவுடன், ரஷ்ஷியாவுக்கெதிராக தம்முடன் சேர்ந்து, தமது சொந்த லாபத்திற்காக ( கம்மியூனிஸத்தை உலகில் பரவ விடாது செய்தல்) போராடிய முஜாஹிதீன்களை அப்படியே விட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் அமெரிக்கா வெளியேறியது. போரில் தம்மக்குதவியவர்கள் பற்றியோ, போரில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ அமெரிக்கா எப்போதுமே கவலைப்பட்டதில்லை.

இவ்வாறே வியட்னாமில், வடக்கு வியட்னாம் மற்று சீன - ரஷ்ஷிய கம்மியூனிஸ் பரவலுக்கெதிராக, தம்முடன் சேர்ந்து போராடிய தென் வியட்னாமிய மக்களை வியட்கொங் படைகளிடம் விட்டுவிட்டு அன்று அமெரிக்கா வெளியேறியது.

அண்மையில்க் கூட ஈராக்கில், ஐஸிஸ் பயங்கரவாதிகளுக்கெதிராகத் தம்முடன் சேர்ந்து போராடிய ஈராக்கிய குர்திஷ்கள் தமக்கென்று சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பினை நடத்தி, சுதந்திர மாகாணமாக தமது பிராந்தியத்தை அறிவித்தபோது, ஈராக்கிய மத்திய ராணுவம் அதனை நிராகரித்து அப்பிராந்தியத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துக்கொண்டபோது, அமெரிக்கா மூச்சே விடவில்லை.

முழு மத்திய கிழக்கிலும் மத அழுத்தமற்ற, மேற்குலகிற்குச் சார்பான ஜனநாயக மரபுகளைக் கொண்ட குர்திஸ்களைப் போன்றதொரு தோழர்கள் அமெரிக்காவிற்கு ஒருநாளுமே கிடைக்கப்போவதில்லை. ஆனாலும்கூட, இறுதிவரை அமெரிக்காவின் தேவைகளுக்காகவே பாரிய அழிவுகளுக்கு மத்தியிலும், ஐஸிஸ் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு அழித்த சிரிய குர்திஸ்களை இன்று துருக்கிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கைகளில் கொடுத்துவிட்டுக் கைகழுவி நழுவிச் செல்கிறது அமெரிக்கா. 

அமெரிக்கா ஒருபோதுமே பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கவுமில்லை, செயற்பட்டதுமில்லை. அமெரிக்காவினைப் பொறுத்தவரை நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை, எல்லாமுமே அதனது சொந்த லாபங்களும், வியாபாரமும்தான். 

அமெரிக்கர்கள் - நம்பமுடியாதவர்கள்.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Lara said:

இந்தியாவும் அமெரிக்காவும் கூட மகிந்த & கோவை எதிர்க்கப்போவது இல்லை. ஏனெனில் கோத்தா வேட்பாளரானதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது.

கோத்தா வேட்பாளர் என அறிவிக்கப்பட சற்று முன் அலிஸ் வெல்ஸ், அலைனா டெப்லிட்ஸ் மகிந்தவை சந்தித்திருந்தார்கள். ஆசீர்வாதம் வழங்கியிருப்பார்கள். 😀

http://www.dailymirror.lk/breaking_news/Alice-Wells-meets-MR/108-172675

இது எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும் இது அன்றாட நிகழ்வுகள் 
மகிந்த இந்தியா சென்று தேங்காய் உடைப்பது மோடியை கட்டிப்பிடிது 
என்பவை பொருளாதார நிலைக்கு முட்டுக்கொடுக்க உதவாது.

இதில் நீங்கள் பார்க்க தவறுவது ....
கோத்த அமெரிக்க -இந்திய  வை எதிர்த்தாலும் எமக்கு அது சதகம் 
கோத்த ஆதரவு நிலைகொண்டு சென்றாலும் எமக்கு சாதகம்.
இரண்டிலுமே உள்ளூர் பொருளாதாரம் ஆட்டம் காணும் என்பதே உண்மை 
எல்லா நாடும் மகிந்த அண்ட் கோ வைத்தான் விரும்பும் .... காரணம் ஊழல் மோசடிக்கு 
இவர்களை விட்டால் இப்போ இலங்கையில் தேடிப்பிடிக்க ஆட்கள் இல்லை.
மற்றவர்களுக்கு ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஆசை இருக்கும் ... ஆனால் தமிழரோ சிங்களவரோ 
மக்களின் வாயை அடைத்துவிட்டு அதிகார போக்கில் ஊழல் செய்ய கோத்தத்தான் சிறந்த தெரிவு. 

இலங்கையே ஒன்றில் மொத்தமாக சீனாவுக்கு குத்தைக்கு போகும் 
அல்லது பகுதி பகுதியாக மூன்றாக பிரித்து குத்தகையாகும்.
தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பம் போல மஹிந்த அண்ட் கோ பெருத்த செல்வந்தர்கள் ஆவதோடு 
இலங்கையின் பல தொழில்துறைகளில் அவர்களின் ஆதிக்கமும் முதலீடும் இருக்கும்.   

Share this post

Link to post
Share on other sites

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? யாருக்கு வாக்களிக்காமல் விடுவது? – என்ற கேள்விகள் நாட்டு மக்கள் மனங்களில் உரமாக எழுந்து நிற்கின்றன.

ஜனா­தி­பதித் தேர்­தலின்போது தாம் வாக்­க­ளித்த வேட்­பாளர் வெற்றி பெற்­றாலும் சிறு­பான்­மை­யினர் எவ்­வித நன்­மை­க­ளையும் அடையப் போவ­தில்லை. தோற்­று­விட்டால் நிலைமை இன்னும் மோச­மா­கி­விடும் -  முன்னாள் அமைச்சர் பஷீர் ஷேகு­தாவுத்

திரிசங்கு நிலைமையில் ஆக்கபூர்வமான முடிவெடுப்பதில் தமிழ் அரசியல் கட்சிகளும் தடுமாறிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் மூலம் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்கான ஒரு பொது வெளியும் சந்தர்ப்பமும் கிட்டியிருக்கின்றன. இந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும் - பி.மாணிக்கவாசகம்

நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன - மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம்

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, Maruthankerny said:

நீங்கள் சொல்ல வருவது எல்லாம் உண்மைதான் 
ஆனால் பொருளாதார ரீதியான பார்வை குறைவாக இருக்கிறது 
மகிந்த அண்ட் கோ இந்தியாவையோ அமெரிக்காவையே எதிர்க்கும் நிலையில் இல்லை 
எதிர்க்க போவதும் இல்லை.

ஆனால் சீனாவுடன் சேர வேண்டியது என்பது தவிர்க்க முடியாதது 
இவர்கள் ஜனாதிபதியாக துடிப்பதே பணத்துக்குத்தான் ... நீங்கள் ஒருவரும் 
இவர்களிடம் சிக்குண்டு கிடக்கும் கறுப்பு பணம் பற்றி சிந்திக்கிறீர்கள் இல்லை 
இவர்களுடைய நிலை வர வர மோசமாகிக்கொண்டே போகிறது ... எந்த பணத்தையும் 
வெள்ளையாக்க கூடிய மாதிரி சூழல் இவர்களுக்கு அமையவில்லை 
ஒரு சிறு தொகையை லைக்கா போன்ற நிறுவனங்கள் ஊடாகவும் சில சீனாவின் சிலுமிச்சங்காளாலும் 
வெள்ளையாக்குகிறார்கள். பணம் முதலீடு இன்றி தேங்கி கிடப்பது என்பதும் நஷ்ட்டத்துக்கு 
சமமானதுதான் காரணம் காலம் ஓடிக்கொண்டே இருக்கும், ஆட்டையை போட்ட பணம் என்றாலும் 
இனி அது அவர்களுடைய சொத்து .. அதில் கண்ணும் கணக்குமாகவே இருப்பார்கள். 

இன்னொரு உலக பொருளாதார சரிவு என்பதும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது 
இவை எல்லாம் எமக்கு சாதகமாக அமையலாம் என்பதே எனது கணிப்பு.  

பணத்தை வெள்ளையாக்குவதை விட முக்கியம் பவர் மருது. அதுக்காகதான் இத்தனை அலைசலும்.

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, Lara said:

உலகில் போர்களை உருவாக்கி மக்களை கொன்று குவிப்பவர்கள் ஒரு நாளைக்கு சீன, அமெரிக்க போரையும் நடத்துவார்கள். ஆனால் அதற்கு காலம் உள்ளது. அதற்கான காய் நகர்த்தல்கள் தற்போது நடக்கிறது.

ஆனால் கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நிலை எடுக்கப்போவதில்லை.

ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னரே தான் சிரியாவிலுள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெற்றுக்கொள்வேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது.

எனவே குர்திஷ் காரருக்கு துருக்கி பிரச்சினை கொடுப்பதற்காக அந்நிலையை ட்ரம்ப் மாற்ற வேண்டும் என்றில்லை. ட்ரம்ப் ஒரு globalist அல்ல, nationalist. துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.

டிரம்ப் நேசனலிஸ்ட் என்பதை விட, isolationist. ஆனால் என்னை பொறுத்தவரை டிரம்ப் ரஸ்யாவின் கைப்பொம்மை. உலக அளவில் எடுக்கும் எல்லா நடவடிக்கையும் அமெரிக்காவின் மவுசை, வகிபாகத்தை குறைக்கும் படியே இருக்கு. சோவியத்தில் கோபர்சேவ், அமெரிக்காவில் டிரம்ப்.

டிரம்ப் தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததும், அதை நடைமுறைப்படுத்துவதும் ரெண்டுமே, அமெரிக்காவை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு நல்ல உதாரணங்கள். அதையே நான் சொல்லவந்தேன்.

70 ஆண்டுகளாக வராத உலகப்போர் அடுத்த 8 ஆண்டில் வருமாப்போல் எனக்குப் படவில்லை. 

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, goshan_che said:

நான் ட்ரம்பை அமெரிக்காவின் ஏனைய ஜனாதிபதிகளை விட்டு வேறு விதமாக பார்ப்பதுண்டு. ட்ரம்பை மக்கள் தெரிவு செய்ய பல காரணங்கள் இருந்தது என முன்னர் வேறு திரிகளில் எழுதியிருக்கிறேன்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்ததில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பங்கும் இருந்தது என்றும் முன்னர் எழுதியிருக்கிறேன்.

ட்ரம்ப் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்றும் முன்னர் எழுதியிருக்கிறேன்.

கடந்த தேர்தலில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வராமல் ஹிலாரி ஜனாதிபதியாக வந்திருந்தால் மக்கள் அழிவு பெருமளவில் இருந்திருக்கும்.

சற்று முன்னர் ட்ரம்பின் twitter பதிவு.

We defeated 100% of the ISIS Caliphate and no longer have any troops in the area under attack by Turkey, in Syria. We did our job perfectly! Now Turkey is attacking the Kurds, who have been fighting each other for 200 years....

....We have one of three choices: Send in thousands of troops and win Militarily, hit Turkey very hard Financially and with Sanctions, or mediate a deal between Turkey and the Kurds!

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் போர் அடுத்த 8 அல்லது 10 ஆண்டுகளுக்குள் வரும் என நான் கூறவில்லை. ஆனால் ஒரு நாள் வரும்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, Lara said:

நான் ட்ரம்பை அமெரிக்காவின் ஏனைய ஜனாதிபதிகளை விட்டு வேறு விதமாக பார்ப்பதுண்டு. ட்ரம்பை மக்கள் தெரிவு செய்ய பல காரணங்கள் இருந்தது என முன்னர் வேறு திரிகளில் எழுதியிருக்கிறேன்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்ததில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பங்கு இருந்தது என்றும் முன்னர் எழுதியிருக்கிறேன்.

ட்ரம்ப் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்றும் முன்னர் எழுதியிருக்கிறேன்.

கடந்த தேர்தலில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வராமல் ஹிலாரி ஜனாதிபதியாக வந்திருந்தால் மக்கள் அழிவு பெருமளவில் இருந்திருக்கும்.

சற்று முன்னர் ட்ரம்பின் twitter பதிவு.

We defeated 100% of the ISIS Caliphate and no longer have any troops in the area under attack by Turkey, in Syria. We did our job perfectly! Now Turkey is attacking the Kurds, who have been fighting each other for 200 years....

....We have one of three choices: Send in thousands of troops and win Militarily, hit Turkey very hard Financially and with Sanctions, or mediate a deal between Turkey and the Kurds!

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் போர் அடுத்த 8 அல்லது 10 ஆண்டுகளுக்குள் வரும் என நான் கூறவில்லை. ஆனால் வரும்.

டிரம்ப் ஜனாதிபதியானது யாருக்கு நல்லதோ கெட்டதோ, ரஸ்யாவுக்கு மிக நல்லது. அமேரிக்காவிற்கு நீண்ட நோக்கில், அமெரிக்க பேரரசின் வீழ்சியின் முதல்படி என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு கெட்டது.

இன்னொரு விடயம் டிரம்ப் வெறும் வாய்சவாடல்தான். வட கொரியா, ஈரான், இங்கே எல்லாம் சும்மா மிரட்டுவதோடு சரி. யுத்ததுக்கு போனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள டிரம்புக்கு திராணி இல்லை.

அமெரிக்காவின் நீண்டகால நட்புநாடுகளை கடுப்பாக்கி அமெரிக்காவை தனிமை படுத்தியதில் டிரெம்ப் அளவுக்கு ஒருவரை நான் காணவில்லை.

உலகயுத்தம் 8 வருடத்தில் வரும் என என நீங்கள் கூறியதாக நான் சொல்லவில்லை.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, goshan_che said:

ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்தது அமெரிக்காவுக்கு நல்லது.

வடகொரியா, ஈரானுடன் ட்ரம்ப் யுத்தத்துக்கு போனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள அவருக்கு திராணி இல்லாமல் அவற்றுடன் போர் தொடங்காமல் இருக்கவில்லை. 

ட்ரம்புக்கு போர் தொடங்க விருப்பமில்லை. ஆனால் பின்னால் போர் தொடங்க அழுத்தம் கொடுக்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
  • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
  • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
  • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
  • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!