Jump to content

தமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலுள்ளனர்’


Recommended Posts

“தமிழ்த் தலைமைகள் ஒரு குழப்பகரமான நிலையிலிருப்பதால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டுமென இற்றைவரை உறுதியாகக் கூறாது மௌனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.

கல்லடி, கிறீன் கார்டன் ஹோட்டலில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

image_da577dd07d.jpg

 

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் கையை விரித்ததனால், நாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டோமென, சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமைத்துவமின்மையைக் காட்டுகின்றது” என்றார்.

“தமிழ் மக்கள், உரிமை ஆணை கொடுத்து நாடாளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு, நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ் மக்களிடம் எவ்வாறு முகங்கொடுப்பது என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு, அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” எனக் கூறிய அவர், தமிழ் மக்களுக்கு என்ன நன்மையான விடயங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் வாக்களிப்புக்கு முன்னதாக பேசி பெற்றுக்கொண்டு, தகுதியான வேட்பாளரைத் தெரிவுசெய்வது புத்திசாலித்தனமானது” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழ்த்-தலைமைகள்-குழப்பகரமான-நிலையிலுள்ளனர்/73-239743

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் கையை விரித்ததனால், நாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டோமென, சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமைத்துவமின்மையைக் காட்டுகின்றது” என்றார்.

அண்மைக்காலத்தில் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிலைமை பற்றிய ஒரு தெளிவான கூற்று !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.