Jump to content

ரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: "அமேசான் - பிளிப்கார்ட் விற்பனை போரால் சேர்ந்த பணம்" - ஆனந்த் சீனிவாசன் கருத்து


Recommended Posts

தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன.

 

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.

அந்த நேர்க்காணலில் இருந்து:

கேள்வி:இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பதால் பல தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் வெறும் ஆறு நாட்களில் சுமார் ரூ.19,000 கோடி அளவுக்கு ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்கி குவித்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பொருளாதர மந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டோமா? இந்த விற்பனை எப்படி சாத்தியமானது?

பதில்:பொருளாதார மந்த நிலைக்கும் இந்த விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை. பொருளாதாரத்தில் மந்த நிலை இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இது புது விற்பனை கிடையாது. ஆன்லைன் நிறுவனங்கள் பெரிய தள்ளுபடி விலை கொடுக்கிறார்கள். உலக அளவில் ஆன்லைன் விற்பனை செய்யும் இரண்டு பெரிய நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் போட்டி இது.

2001ல் அமெரிக்காவில் ஆன்லைன் மொத்த சில்லறை விற்பனையில் 17 சதவீதத்தை அமேசான் கையாண்டது. தற்போது அது 45 சதவீதமாக மாறியுள்ளது. இதுபோலவே இந்தியாவில் உள்ள ஆன்லைன் விற்பனை சந்தையை ஆக்கிரமிக்க ஆன்லைன் நிறுவனங்கள் தள்ளுபடி கொடுக்கிறார்கள். இந்திய சந்தையை பிடிப்பதற்கு தொடக்கத்தில் ஒரு பங்கு பணத்தை செலவு செய்ய அமேசான் பணம் ஒதுக்கியுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கியது இந்தியர்களாக இருந்தாலும், தற்போது பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகளவில் அமேசான் நிறுவனத்திடம் தனது விற்பனையை பறிகொடுத்துள்ள வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அந்த விற்பனையை பிடிக்க போட்டி போடுகிறது.

நேரடியாக அமேசான் - பிளிப்கார்ட் இடையே நடக்கும் விற்பனை போர்தான் இந்த 'சலுகை சேல்ஸ்'. எடுத்துக்காட்டாக ரூ.10,000 விற்கும் பொருளை ரூ.5,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுதான் காரணம்.

 

கேள்வி: கடந்த இரண்டு மாதங்களில் பல பொருளாதார நிபுணர்களும் இந்தியாவில் வாங்கும் சக்தி குறைந்துள்ளது என தெரிவித்தார்கள். நீங்கள் கூட ஒரு வீடியோவில் மக்கள் பிஸ்கட், உள்ளாடை போன்றவற்றை வாங்ககூட யோசிக்கவேண்டும் என கூறினீர்கள். பொருட்களின் விலையை நிறுவனங்கள் குறைத்தாலும், அந்த செலவை செய்வதற்கான பணம் எங்கிருந்து வந்ததது?

பதில்: பொருட்களை வாங்கவேண்டும் என எண்ணத்தில் இருப்பவர்கள் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரம் என்பது பூஜ்ய நிலையை அடையாது. பொருளாதாரம் என்ற வண்டி முழுமையாக நிற்கவில்லை. ஆனால் அது ஓடக்கூடிய வேகம் குறைந்துள்ளது. இந்தியாவில் சமீபமாக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரித்துள்ளது. முன்னர் மக்கள் பணத்தை சேர்த்துவைத்து பொருட்களை வாங்கினார்கள். அதனால் அதனை முழுமையாக பயன்படுத்தினார்கள்.

தற்போது கிரெடிட் கார்ட் மூலம் தன்னிடம் சேராத பணத்தை செலவு செய்கிறார்கள். தங்களுக்கு சம்பளம் வரும் முன்னனரே பணத்தை செலவிட்டுவிடுகிறார்கள்.

பணம் என்னிடம் உள்ளதா என்பதைவிட கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்யலாம் என்ற பழக்கம் அதிகமாகிவிட்டது. இல்லாத பணத்தை மக்கள் செலவு செய்வதால், பொருளாதாரம் சீராகி இந்த விற்பனை நடந்துள்ளது என தவறாக எண்ணக்கூடாது.

கிரெடிட் கார்ட் வட்டிவிகிதம் 36 முதல் 60 சதவீதம் வரை வாங்குகிறார்கள். கந்துவட்டி வாங்குபவர்கள் மீது சட்டம் பாய்கிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்ட் வட்டி விகிதத்தை யாரும் கேள்வி கேட்பதில்லை.

மக்கள் வாங்கும் சக்திக்கு மீறி பணம் செலவு செய்கிறார்கள். இது எப்படி வளர்ச்சி ஆகும்?

கேள்வி: தீபாவளியில் தொடங்கும் பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை, ஆன்லைனில், பெரும்பாலானவர்கள் மொபைல் போன் வாங்கியுள்ளார்கள். மொபைல் போனின் அதீத விற்பனைக்கு காரணம் என்ன?

பதில்: பலரும் தன்னிடம் போன் இருந்தாலும், லேட்டஸ்ட் மாடல் தேவை என ஆசைப்படுவதால், மற்றவர்களிடம் உள்ள ஸ்மார்ட்போன் தன்னிடம் இல்லை என கருதி, வாங்குகிறார்கள். ஒரு செல்போனை குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்குள் லேட்டஸ்ட் மாடல் வாங்கிக்கொள்ளலாம் என எண்ணுகிறார்கள். குறைந்த இஎம்ஐ கட்டினால் போதும் என்ற விளம்பரத்தை மக்கள் நம்புகிறார்கள். கிரெடிட் கார்ட் இருப்பது ஒரு முக்கிய காரணம். இந்த திருவிழா சேல்ஸ் தள்ளுபடியில் ரூ.10,000த்திற்கு கிடைக்கும் பொருள் ரூ.5,000க்கு கிடைக்கிறது என விளம்பரம் வருகிறது. இது வாங்கவேண்டும் என ஆசையை தூண்டுகிறது. கிரெடிட் கார்ட் இருப்பதால், வாங்கிவைக்கலாம் என தன்னிடம் இல்லாத காசை வைத்து, அல்லது கிரெடிட் கார்ட் கடன் மூலமாக பொருளை வாங்குகிறார்கள். ஆனால் வட்டி எவ்வளவு செலுத்துகிறோம் என பார்ப்பதில்லை.

கேள்வி: இந்தியாவில் பெருநகரங்களை காட்டிலும், சிறிய ஊர்களில், இரண்டம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது என ரெட் சீர்(redseer) நிறுவனம் கூறுகிறது. சிறிய நகரங்களில் கூட மக்கள் பொருட்களை வாங்குவதில் இந்த மற்றம் எப்படி நிகழ்தது?

பதில்: சிறிய ஊர்களில் நேரடி கடைகளில் எல்லா மாடல் நுகர்வு பொருட்களும் இருக்குமா என தெரியாது என்பதால், ஆன்லைனில் பொருளை வாங்க மக்கள் விருப்பப்படுகிறார்கள். சிறிய கிராமங்களில் உள்ள கடைகளை அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முகவர்களாக பதிவு செய்கிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருளை சிறிய கிராமத்திலும் சென்று சேர்க்கிறார்கள். பொருள் பிடிக்கவில்லை என்றால் உடனே அதனை திரும்ப பெற்றுக்கொள்ள சிறிய கடையில் திருப்பிக்கொடுக்கலாம். பொருளை பார்த்துவிட்டு பணம் கொடுக்கலாம் என்பதால், மக்கள் ஆன்லைன் கடையை விரும்புகிறார்கள்.

அதேபோல முந்தைய காலங்களை போல, பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்கவேண்டாம். ஆன்லைனில் ஒரு மாடல் பொருளுக்கு எந்த பிராண்ட் சிறந்ததது, விலை குறைவு, இதற்கு முன்னர் வாங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள் என முழு தகவலும் கிடைக்கிறது என்பதால் ஆன்லைனில் வாங்குகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-49986972

 

கேள்வி: கடந்த ஆண்டை விட பண்டிகை கால விற்பனை ஆன்லைனில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ரெட் சீர் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் விற்பனை அதிகரிக்கிறது என்பதால், வரும் ஆண்டுகளில்நேரடி விற்பனை எந்த அளவு குறையும்?

பதில்: ஆன்லைன் விற்பனை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். அதன் அளவு கூடும். ஆனால் முழுவதுமாக நேரடி கடைகள் இருக்காது என்ற நிலை ஏற்படாது. 60 ஆன்லைன், 40 சதவீதம் நேரடி கடை விற்பனை என்றோ, இரண்டும் 50 சதவீதம் என்ற அளவிலோ இருக்கும். முற்றிலுமாக ஆன்லைன் விற்பனை தற்போது சாத்தியம் இல்லை. நேரடியாக பொருட்களை வாங்கும் மக்கள் ஒரு பகுதி இருக்கிறார்கள். அவர்கள் இணையத்தில் வாங்குவதை விட, நேரடியாக வாங்குவதை விரும்புவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்து வருடங்களில் பெருந்தெருக்களில் உள்ள விற்பனை நிலையங்கள் காணாமல் போய் விடும் உலகம் ஒன்லைன் உலகமாகி விடும் என்கிறார்கள் .

இங்கும் பத்து வருடங்களுக்கு முன்பு முக்கிய 24 கடைகளுக்கு மேல் தமிழர் வாழும் பகுதிகளில் வீடியோ கடைகள் இருந்தன ஒரு கடையின் வருமானம் கிழமைக்கு குறைந்தது 15௦௦ என்று வைத்தாலும் கிழமைக்கு 36௦௦0 பவுண்டுகள் வருடம் ஒன்றுக்கு இரண்டு மில்லியனுக்கு கிட்டவாக நம்ம ஆட்களின் உழைப்பு போனது சிமார்ட் போன்களின் வருகை இந்த கடைகளை மூடவைத்து விட்டது அப்போதும் மக்கள் தேவையில்லாமல் இந்த சிமார்ட் போன்களுக்கு சிலவு செய்கிறார்கள் என்று எண்ணியது உண்டு ஆனால் இந்த விடையங்களில் மக்கள் புத்திசாலிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.