Sign in to follow this  
ampanai

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்பட பேச்சுவார்த்தை

Recommended Posts

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.

நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதெனிய விமான நிலையத்தில் வரவேற்றார்.

அதன்பின், மாலைதீவு உயர் கல்வி அமைச்சர் கலாநிதி இப்றாஹிம் ஹஸனை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவும் கலந்துகொண்டார்.

Speaker-Meeting.jpg?itok=bezNBsCi

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தகுதியான மாலைதீவு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழங்களில் உள்ளீர்ப்பது குறித்தும், எதிர்காலத்தில் உயர் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

அதனையடுத்து இன்று (09) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டுடன் பூர்வாங்க கலந்துரையாடலொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2019/10/09/உள்நாடு/41757/இலங்கை-–-மாலைதீவு-பாராளுமன்றங்களை-ஒருங்கிணைத்து-செயற்பட-பேச்சுவார்த்தை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
    • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
    • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
    • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
    • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!