• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

ஆண் ஆதிக்கம்-பா.உதயன்

Recommended Posts

 


எமது உடலின்
சதைகளை மட்டும்
உண்டு விட்டு 
எங்களின் எலும்புகளை 
எறிந்து விட்டு 
மதம் என்ற 
போர்வைக்குள் 
போய் ஒளிந்து கொள்கின்றன 
ஆண் ஆதிக்கம் 
என்னும் மனித மிருகங்கள் 
அன்பே சிவம் 
என்று அறியாதவர் 
ஆயிரம் முறை 
ஆண்டவனை தொழுது 
என்ன பயன் .

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மிகக் கொடுமையான கவிதை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்! August 7, 2020 யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது. யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் வாக்கெண்ணும் மையத்திற்கு சென்றார். இதன்போது, அங்கு குவிந்திருந்த பலரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வெறு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர்.   கோட்டாபய ராஜபக்சவின் விசேட உத்தரவில் அண்மையில் எம்.ஏ.சுமந்திரனுக்கு மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பெரும் படைப்பாதுகாப்புடனேயே சுமந்திரன் அங்கு சென்றார். கூட்டத்தின்பெரும் எதிர்ப்பிலிருந்து சுமந்திரனை பாதுகாத்து அதிரடிப்படை பெரும் அரண் அமைத்தது. அத்துடன், கூட்டத்தினரை கலைந்து செல்ல பணித்தனர். எனினும், இளைஞர்கள் அங்குகுழுமியிருந்தனர். இதையடுத்து நிலைமை கட்டுமீறி செல்ல, இளைஞர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்பு அதிரடிப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனையும் அதிரடிப்படையினர் பிடித்து கொடூரமாக தாக்கினர்.   தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து சுமந்திரனை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர். எனினும், இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று துரோகி என குரல் எழுப்பினர்.   எனினும், இளைஞர்கள் நெருங்காமல் சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் அரண் அமைத்திருந்தனர்.   http://www.pagetamil.com/139083/
    • இல்லை, தன் அரசியலுக்காக ஒரு இனத்தை அழித்தவர் அதன் விளைவை அறுக்க உயிரோடு  இருக்கவேண்டும். இந்த தோல்வியோடு தர்மம் போதித்துக்கொண்டு வருவார், மறுபடி கதிரையேற. சந்திரிகா அம்மையாரின் நிலையில். 
    • யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தோல்வி? சித்தார்த்தனின் நிலை என்ன? August 7, 2020   தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும், மாவை தோல்வியடைந்திருப்பதை செயலக வட்டாரங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்தன.   கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவானதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் யார் என்பது இன்று அதிகாலை உரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எஸ்.சிறீதரன் வெற்றிபெற்றிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைவிட த.சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. சித்தார்த்தன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் நான்காது இடத்தில் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   அவர் நான்காவது இடத்துக்கு வந்தது எப்படி என? யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை 2.00 மணிவரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.   http://thinakkural.lk/article/60589
    • யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி  Editorial   / 2020 ஓகஸ்ட் 07      யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026 யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி) August 7, 2020     யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார். அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.         http://thinakkural.lk/article/60600
    • தாம் தோற்றதற்கான பழியை இன்னொருவர் மேல தூக்கி போட்டுவிட்டு, மார்தட்டிக் கொண்டு வருவார் மாவையர்.