• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
poet

இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

 

இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன்

1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று

காட்டை வகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
.
தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது:
இதயத்தைக் கொள்ளையிட
வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையே தூதனப்பி
கண்சிமிட்டும்.

அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.

ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.

 

.

Image may contain: 1 person, smiling, close-up

.

.

Share this post


Link to post
Share on other sites

1970பதில் இராணுவ புவியியல் அடிப்படையில்  தமிழரது போராட்டங்கள் வன்னியில் மையங்கொள்ளும் என்கிற கருத்தை பேசவும் கவிதைகளில் எழுதியும் வந்தேன். அந்தவகையில் ”பண்டார வன்னியனின் படை நடந்த அடிச்சுவடு, இன்றும் இம் மண்ணில் இருக்கவே செய்யும்” என பாடிய ”நகர்கிறது பாலியாறு” கவிதை முக்கியமானது.  ஒரு வரண்ட கோடையை பாடி “என்றாலும், எங்கோ வெகுதொலைவில் மாரிதனைப் பாடுகிறான் வன்னிச் சிறான் ஒருவன்” கவிதையும் முக்கியமானது. அதே வரிசையில் எழுதிய கவிதைதான் ”இளவேனிலும் உழவனும்”காட்டைப்பாடி காட்டு விவசாயியைப் பாடி ”அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.

ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.

என முடியும் இக்கவிதையும் வன்னி எளுச்சி பற்றிய பாடல்தான்.

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்கு!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this