Sign in to follow this  
ampanai

ஷி ஜின்-பிங் - மோதி சந்திப்பு: மாமல்லபுரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

Recommended Posts

சீன அதிபர் ஷி ஜின்-பிங் சென்னைக்கு வருவதையொட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகைக்கான ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

சீன அதிபர் ஷி ஜின்-பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்லும் ஷி ஜின்-பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாமல்லபுரத்திற்குச் செல்லும் வழியில் 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.

மாலை 4.55 மணி அளவில் சீன அதிபர் மாமல்லபுரம் வந்தடைவார். அங்கு அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்கிறார். இதன் பிறகு இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில்கள் ஆகியவற்றை ஒன்றாகப் பார்வையிடுகின்றனர்.

மாலை 6 மணியளவில் கடற்கரைக் கோயிலிலேயே கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாலை 6.45 மணியளவில் இந்தியப் பிரமதர் சீன அதிபருக்கு விருந்து ஒன்றை அளிக்கிறார்.

அதற்கு அடுத்த நாள், சனிக்கிழமையன்று காலை 9. 50 மணியளவில் கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் நரேந்திர மோதியும் ஷி ஜின்-பிங்கும் தனியே சந்தித்து உரையாடுகின்றனர். 10.50 மணியளவில் அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

11.45 மணியளவில் சீன அதிபருக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது. அந்த விருந்தை முடித்துக்கொண்டு 12.30 மணியளவில் சென்னைக்குப் புறப்படும் சீன அதிபர், ஒன்றரை மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து அவர் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

சீன அதிபருக்கு முன்பாகவே, அதாவது 12.30 மணியளவில் இந்தியப் பிரதமர் தில்லியிலிருந்து சென்னையை வந்தடைவார். 12.35க்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்குப் புறப்படுகிறார். 12.55க்கு கோவளத்தில் உள்ள ஹோட்டலில் தங்கும் அவர், மாலை 5 மணிக்கு சீன அதிபரை வரவேற்க மாமல்லபுரம் சென்றடைவார்.

சனிக்கிழமையன்று சீன அதிபரை வழியனுப்பிய பிறகு பிற்பகல் 2.05க்கு பிரதமர் நரேந்திர மோதி சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

https://www.bbc.com/tamil/india-50003239

 

 

Share this post


Link to post
Share on other sites

12.jpg

ஏழாம் அறிவுக்கு பிறகு அல்லாரும் போதி தர்மனை ஆராய வெளிக்கிட்டினம் ..👍

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தெரியாத சீனர்களால் மாமல்லபுரம் தெரிவு செய்யப்பட்டு இருக்கலாம். இருவரும் தனிமையில் உரையாடிய பொழுது ஒருவரே இருந்துள்ளார். அவரும் பீகிங்கில் உள்ள இந்திய அதிகாரி. சென்னையில் சீன உப தூதரகம் இருந்திருந்தால் மாமல்ல புறம் தெரிவு செய்யப்பட்டு இருக்காது போயிருக்கலாம். 

மேலைத்தேய சனநாயக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும். திபெத்திய எதிர்பாளர்களுக்கு இந்திய சனநயாகத்தில் இடமில்லை. ஆனால், சீன கொடிகளை வைத்திருந்தோருக்கு மட்டும் அனுமதி இருந்தது.  இன்னும் இந்திய சனநாயகம் பயணிக்கவேண்டிய பாதை நீளமாகவே உள்ளது. 

குப்பை பொறுக்கியதும் ஒரு திட்டமிட்ட நிகழ்வே. படங்களில் ஏற்கனவே பல குப்பை சேகரிக்கப்பட்ட பொதிகள் இருந்தது அவதானமாக பார்க்கப்பட்ட பொழுது தெரிகின்றது. 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா சீனாவின் பொருளாதாரத்தை நெருக்கடி செய்ய முயல்கிறது. அதுக்கு பதிலடியாக நானும், இவனும் ஒன்று என நாடகம் போடுது சீனா. 🤔

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this