Jump to content

உலகின் வறுமையான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 36 ஆவது இடம்


Recommended Posts

 

உலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எக­னொமிக்ஸ் (Focus Economics) என்ற பொரு­ளா­தார ஆய்வு நிறு­வ­னத்தின் அறிக்­கைக்கு அமைய  வெளி­யிடப்பட்­டுள்­ளது.

126 நாடு­களின் மொத்த தேசிய உற்­பத்­தியை ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி இந்த ஆய்­வ­றிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கைக்கு அமைய உலகின் வறு­மை­யான நாடு­களின் பட்­டி­யலில் கொங்கோ குடி­ய­ரசு முத­லி­டத்தைப் பெற்­றுள்­ளது. அதேவேளை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்­கள் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் பெற்­றுக்­கொண்­டுள்­ளன.

focuseconomics_poorest_countries_nov_201

இந்­தப்­பட்­டி­யலில் இலங்கை 36 ஆவது இடத்தில் காணப்­ப­டு­கி­றது. 2017 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யின்­ப­டியும், இலங்கை 36 ஆவது இடத்­தையே பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இதே­வேளை, இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தப் பட்­டி­யலில் முறையே 19 மற்றும் 12 ஆம் இடங்­களைப் பிடித்­துள்­ளன.

மேலும் ரஷ்யா 71 ஆவது இடத்­தையும்  சீனா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் முறையே 69 மற்றும் 121 ஆவது இடங்­களை பிடித்­துள்ள அதே­வேளை, ல­க்ஷம்பர்க் இறுதி இடத்தை பிடித்­துள்­ள­மை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/66650

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.