Jump to content

ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் வரவேற்றார் மோதி - தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர்


Recommended Posts

மோதி - ஷி

படத்தின் காப்புரிமை ANI

 

மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி.

இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடவிருக்கிறார் சீன அதிபர். இந்தத் தருணத்தில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்றுத் தூரத்திலேயே இருப்பார்கள்.

இது இந்தாண்டில் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாவது முறையாக சந்தித்து கொள்கிறார்கள்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்."

மேலும் பிரதமர் நரேந்திர மோதியின் ட்விட்டர் பக்கத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-50016032

Link to comment
Share on other sites

மாமல்லபுரம் புராதான சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி

சென்னை: மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைக்கிறார். பிரதமர் மோடி, சீன  அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்  ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.  இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு தலைவர்கள்:

இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடி சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர்   எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடி   ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், மதியம் 1.30 மணிஅளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை   வந்திறங்கினார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து பிரத்யேகமாக   வரவழைக்கப்பட்ட காரில் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டு சென்றார்.

புராதான சிறபங்களை பார்வையிட்ட இரு தலைவர்கள்:

கிண்டி ஐடிசி ஓட்டலில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணியளவில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பிரதமர் மோடியும் கோவளத்தில்   இருந்து மாமல்லபுரத்திற்கு சென்றார். மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி,  சட்டை, தோளில் துண்டு அணிந்து வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசினர். முதலில் அர்ஜூனன் தபசு  என்ற இடத்தில் பார்வையிட்டனர். அர்ஜூனன் தபசு பெருமைகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.  மேலும், இருவரும் அர்ஜூனன் தபசு முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ச்சியாக, வெண்ணெய் உருண்டை கல்லிலை பார்வையிட்டனர். அப்போது, வெண்ணெய் உருண்டை கல்லின் தனித்துவத்தை பிரதமர் மோடி சீன  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார். மேலும், வெண்ணெய் உருண்டை கல் முன்புறம் இருவரும் கை உயர்த்தி புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து, ஐந்து ரதங்களின் சிற்பங்களை கண்டு களித்து வருகின்றனர். கடற்கரை கோவிலுக்கு சென்றும் பார்வையிட உள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532666

 

 
 
EGmLJv2UEAE03Ke.jpg:large
Previous
 

View image on Twitter

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் வாக்குப்பெற மோடி வேட்டி சால்வை அணிந்தாரா? இல்லை உண்மையிலேயே தமிழக மக்களுக்கு மரியாதை கொடுத்தாரா? இதை நெட்டிசன்கள் வறுத்து எடுப்பர்.

எனது கருத்து வாக்கு வங்கியே இதன் குறி. காரணம், தமிழகம் தமிழ் வளர உடுப்பு இல்லை தேவை, செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வேட்டிய மடிச்சு கட்ட சொல்லி தாங்கப்பா..☺️

Dhoni_Prabhudeva_veshti-screenshot-300x2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

உஸ்ஸ் இது மோப்ப நாயுங்கோ.

EGmGg4KUcAEFblV?format=jpg&name=small

இரண்டு பேரும் நிற்கிற கம்பளத்தைப் பார்த்தா யாருடைய வீட்டு வாசலில் போடப்பட்டிருந்தது போல இருக்கு.

சரி விரலுக்கேற்ற வீக்கம்.

EGmLJv2UEAE03Ke.jpg:large

தமிழ்நாட்டில் செவ்விளநீர் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

என்னதான் இருந்தாலும் அவர் பாரதப் பிரதமர் 😂

Link to comment
Share on other sites

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு

சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்படத்தின் காப்புரிமை NARENDRA MODI / TWITTER Image caption சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.படத்தின் காப்புரிமை Twitter Image caption இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர் விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதிபடத்தின் காப்புரிமை ANI Image caption மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர் இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள் இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.படத்தின் காப்புரிமை Twitter Image caption இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார். கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.படத்தின் காப்புரிமை ANI Image caption மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர். மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை ANI மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?படத்தின்

https://www.bbc.com/tamil/india-50018951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.

அரசியலுக்கு அப்பால்... உலகின் முக்கிய தலைவரான,  சீனப் பிரதமரை...
இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி, வேட்டி  சால்வையுடன்... 
தமிழ் நாட்டில்  வரவேற்கும்  படங்கள் அழகாக இருந்தன. :)

1956´ம் ஆண்டு..சீனப்  பிரதமாராக இருந்த....
சூ  என்லாயும், நேருவும்... தமிழ் நாட்டில்தான்...
சந்தித்தவர்கள் என்று,  ஒரு காணொளியில் பார்த்தேன். 

பிற் குறிப்பு:  பிரதமர்  மோடி.. காவி சால்வை போடாமல், 
கறுப்பு  சால்வை போட்டுக் கொண்டு வந்ததிலும்...  😎
நிறைய காரணங்கள் உண்டு என்பதை... மறுப்பதற்கில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய் இமாச்சல எல்லையோரம் உங்களுக்கு ரத்த பொரியல் செய்து தருவார்..☺️

71937694_2985126268216228_30948947127047

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுத்த பிரதமர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. கோவளம் பீச்சா இது.. ரொம்ப கேவலம்!

modi935657-1570862415.jpg

சென்னை: கையில் குவார்ட்டர் பாட்டிலை, மோடி கையில் எடுத்ததுமே கோவளம் பீச்சில் இருந்த அதிகாரிகளுக்கு அள்ளு கிளம்பிவிட்டது!நம்ம இடத்தை நாம தான் சுத்தமா வெச்சிக்கணும் என்பது இயல்பான, அவசியமான விஷயம். ஆனால் இதற்குகூட மத்திய அரசு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்ததே மக்களுக்கு ஒருவகையில் அசிங்கம்தான். ஆனால், அதையும் கடைப்பிடிக்காதது அதைவிட அசிங்கமாக உள்ளது.

அப்படித்தான் இன்றைக்கு கோவளம் பீச்சில் அசிங்கப்பட்டு நிற்கிறோம். கோவளத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளதால், இங்குள்ள பீச்சில் இன்று காலை வாக்கிங் சென்றார்.கையில் கிளவுஸ் இல்லை..

லட்சணம்

பீச் தானே.. எப்படியும் சுத்தமான மணலில் காலாற நடக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். அதனால்தான் கையில் கிளவுஸ், காலில் செருப்புகூட இல்லாமல் நம்பி காலை வைத்திருக்கிறார். ஆனால், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தபோதுதான், நம்ம ஆட்கள் செய்து வைத்த லட்சணம் அங்கே தெரிந்தது. மணல் முழுக்க பரவி கிடந்த குப்பைகளை அள்ள ஆரம்பித்தார். முக்கால்பாகம் பிளாஸ்டிக் குப்பைகள்தான்.. அங்கங்கே மது பாட்டில்களும் விழுந்து கிடந்தன.

குவார்ட்டர் பாட்டில்

நம் ஆட்கள் பீச்சில் கும்மாளமிடுவது, அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு, குப்பைகளையும் போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் சென்றிருப்பதுதான், காலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பாட்டிலையும் பிரதமர் கையிலேயே எடுத்து கவருக்குள் போடுகிறார். கையில் குவார்ட்டர் பாட்டிலை கூச்சமே இல்லாமல் ஒரு பிரதமர் எடுப்பதை பார்த்துமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

இதற்கு என்ன பதிலும் சொல்ல முடியாமல் விழித்து கொண்டு அதிர்ந்து நின்றனர். ஐநாவில் முழக்கம் ஐநாவில் முழக்கம் ஐநாவில் முழக்கம் ஆனால், பிரதமர் எதையுமே முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பது மோடியின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று.

அது மட்டுமில்லை.. இந்த பிரச்சாரத்தை ஐநா பொதுக்குழு கூட்டத்திலும் மோடி முன் வைத்திருந்தார். மதிப்பீடுகள் மதிப்பீடுகள் ஆனால் காலையில் 30 நிமிடத்துக்கு இந்த பிளாஸ்டிக்கை அள்ளியபோது நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுக்கும்போதும் நம் மீதான மதிப்பீடுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே மகா வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது.

முன்வருவார்களா?

இனியாவது கடற்கரையை நம் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தாமல் தடுப்பார்களா? கொஞ்சமாவது தூய்மையை கடைப்பிடிக்க முன்வருவார்களா? பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க மக்கள் மனசார நினைப்பார்களா?

https://tamil.oneindia.com/news/chennai/pm-modi-removes-debris-from-kovalam-beach-today-365407.html

டிஸ்கி:

டாஸ்மார்க்குக்கு ஆப்பு வைப்பாரா..?  பிரதமர் 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.