Jump to content

தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோத்தா!

Recommended Posts

தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் கோத்தபாய என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பதினேழாம் திகதி சிறையில் உள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக இனவாத பேச்சுடன் அனுராதபுரத்தில் தனது பரப்பரையை ஆரம்பித்திருக்கிறார் கோத்தபாய.

பல்லின மக்கள் வாழும் இலங்கை தேசத்தில் ஒரு ஜனாதிபதியானவர் அனைத்து இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்காக போராடி அரசியல் கைதிகளாக இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை புறக்கணித்து சிங்கள இராணுவத்திற்காக மனமிரங்கி பேசும் கோத்தபாயாவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது?

கோத்தபாயாவினது வருகை தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

சிறையில் உள்ள சிங்கள இராணுவத்தினர் பல சமூக குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறும் கோத்தபாய ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து தெரிகிறது சிங்கள ஆட்சியாளர்களின் இதயம் இரும்பினால் ஆனதென்று. தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதை அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் தமிழ் மக்களை புறக்கணித்து சிங்கள ஆட்சியாளர்களால் ஒருபோதும் தனித்து ஆட்சி அமைத்துவிட முடியாது. அது எவராக இருந்தாலும் சரி.

உங்கள் குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். இனவாத விஷத்தை உமிழாத ஒருவரையே தமிழ் மக்களும் விரும்புவார்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/129293?ref=rightsidebar

Link to comment
Share on other sites

34 minutes ago, போல் said:

சிறையில் உள்ள சிங்கள இராணுவத்தினர் பல சமூக குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறும் கோத்தபாய ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை

நியாயமான, கேட்கப்பட வேண்டிய கேள்வி. கோத்தாவை ஆதரிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இதற்கான பதிலை கூற வேண்டிய தார்மீக கடமை உள்ளது.

அதேவேளை, மற்றைய வேட்பாளர்கள் கூட தமிழ் அரசியல் கைதிகள் பற்றியோ இல்லை வேறு எந்த கேள்விகளுக்கோ பதில் கூறவில்லை. எனவே, அவர்களும் இவ்வாறான, தமிழின விரோத கொள்கைகளையே கொண்டுள்ளார்கள்.   

----------------------------

எமது  மக்களின் கோரிக்கைகள் - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார்

1.   அரசியல் தீர்வுக்கானது

இலங்கைத்தீவானது பல்லினச் சமூகங்களை உள்ளடக்கிய வாழிடப்பரப்பு என்ற அடிப்படையில் தமிழ்மொழிச் சமூகத்தினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல். அவற்றின் பாதுகாப்பு, நிலம், பண்பாடு, பொருளாதார அபிவிருத்திக்கான சுயாதீனம், மரபுரிமை உள்ளிட்ட அடையாளங்களைப் பேணும் சட்டவரைபையும் நடைமுறையையும் ஏற்படுத்துதல்.

2.   அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பானது (இயல்புவாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைகள்)

(அ) குறுகிய கால அடிப்படையில் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.

(ஆ) யுத்தக்குற்ற விசாரணைக்கூடாக் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்வு காணுதல்.

(இ) மக்களின் இயல்பு (சிவில் – civil) வாழ்வில் இராணுவத்தலையீடுகளையும் நெருக்கடிகளையும் இல்லாமற் செய்தல்.

(ஈ) படைத்தரப்பின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்தல்.

(உ) இன, சமூக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலான மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தல்.

(உ) கடல், நிலம் சார்ந்த தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலான எல்லை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்.

(ஊ) யுத்தத்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தொழில்துறை மேம்பாட்டை விருத்தி செய்தல். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

(எ) பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர், யுத்தத்தின்போது பெற்றோரை இழந்த சிறுவர்கள், மாற்றுவலுவுடையோர் ஆகியோருக்கான விசேட நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பு வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

சில திறமைகளைக் கொண்ட முருகேசு சந்திரகுமார் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தும் கோரிக்கைகள் நல்ல கோரிக்கைகள் தான்!

டக்ளஸ் கும்பலுடன் நீண்ட காலம் இருந்து, சில வருடங்களின் முன்னர் அந்தக் கும்பலில் இருந்து வெளியேறி தனியாக அரசியல் செய்யும் முருகேசு சந்திரகுமார் கடந்த சில மாதங்களில் 4, 5 தரம் போர்க்குற்றவாளிகளான மஹிந்தவையும் கோட்டாபயவையும் சந்தித்துள்ளார்!  இவரது சந்திப்பின் போது இவரது மேற்படி நல்ல கோரிக்கைகள் தொடர்பில் போர்க்குற்றவாளிகளான மஹிந்தவும் கோட்டாபயவும் என்ன கருத்துக்களை முன்வைத்தனர் என்றும் தமிழ் மக்களை தெளிவுபடுத்தினால் நல்லது!

Link to comment
Share on other sites

ஆட்சிப் பீடம் ஏறினால் இராணுவத்தினர் விடுதலை-கோட்டா! ஞானசாரர் விடுத்துள்ள கருத்து!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றமிழைக்காமல் சிறைக்குச் சென்ற இராணுவத்தினரை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில், எம் அனைவருக்கும் இராணுவம் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது. இராணுவத்தினர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாமும் இருக்கிறோம்.

இதனை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கூட இதனை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக மக்கள் சிந்தித்தே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டுக்கு எவரால் குறைவான அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை சிந்தித்தே செயற்படவேண்டும்.

தற்போது கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தான் ஜனாதிபதியானால், இராணுவத்தினரை விடுவிப்பதாக அவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிறகே நாம் இறுதி முடிவை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/129376

Link to comment
Share on other sites

சட்டத்தை மீறியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்! சிக்கலில் கோத்தபாய

இராணுவ அதிகாரிகளின் படங்களை தமது அறிக்கைகளில் பிரசுரிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சட்டத்தை மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

சிஎம்இவி என்ற தேர்தல்கள் கண்காணிப்பு மையம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர்.

எனினும் பத்திரிகை விளம்பரங்களில் அவர்கள் இந்த ஒழுங்குகளை மீறி வருகின்றனர். முப்படைகளின் தளபதிகளை தாங்கிய கோத்தபாய ராஜபக்சவின் விளம்பரங்கள் மூன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக 2009ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அன்று விடுத்த அறிக்கை ஒன்று இந்த விளம்பரங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதையும் சிஎம்இவி சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/228526?ref=rightsidebar

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.