Jump to content

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாட விரும்புகின்றோம். அனுரகுமார


Recommended Posts

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

anurakumara.jpg 

எமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நலன்களில் பிரதான பங்கினை வகிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய ரீதியிலான நகர்வுகள் குறித்து  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில். 

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த அழிவுகள் இன்றும் எமக்கு நினைவில் உள்ளது. யாழ்தேவி புகையிரத குண்டுவெடிப்பில் எனது நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவர்களை இழந்த துயரம் இன்றும் எனக்கு உள்ளது. அதேபோல் 1988,1989 ஆண்டுகளில் இந்த நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் எனது பாடசாலை மாணவர்கள் பலரை நான் இழந்துள்ளேன். 

இந்த வேதனைகளுக்கு நாம் எவ்வாறு முகம்கொடுத்து வாழ்கின்றோமோ அதேபோல் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புகள் அதிகமாகும். 

எம்மை விடவும் தமிழ் மக்கள் இழந்தவையும், அனுபவித்த வேதனைகளும் அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.  மிகப்பெரிய யுத்தம் ஒன்றை உருவாக்கினர். 

ஆனால் எமது பிரதேசத்தில் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இருந்தார். அருகாமையில் உள்ள வீடுகளில் தமிழர்கள் வாழ்ந்தனர். கிராமங்களில் தமிழ் சிங்கள திருமணங்கள் இடம்பெற்றது. ஆனால் அனாவசியமான யுத்தம் ஒன்றினை உருவாக்கி தமிழ் சிங்கள மக்கள் இடையில் அனாவசிய பிரிவினை உருவாக்கி நாட்டினை சுடுகாடாக மாற்றினர். இதனை எல்லாம் யார் விரும்பியது. யாருக்கு இந்த யுத்தம் தேவைப்பட்டது.

 இனியும் தமிழர் சிங்கள மக்கள் மத்தியில் நிரந்தரமாக ஒரு பிரிவு அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. 

அவ்வாறான ஒரு பிரிவுக்கு நாம் இடமளிக்க கூடாது. அனாவசியமாக தமிழர் தண்டிக்கப்படவோ நிராகரிக்கப்படவோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66731

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

என்ன தீர்வு என்று சொல்லும் தைரியம் இருக்கா?

இல்லாதபடியால் இதுவும் இன்னொரு சிங்கள இனமதவெறிப் போக்கிற்கு ஆதரவான ஒருவரின் தேர்தல்கால சரவெடியாகவே இருக்கும்!

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதாக 2015ஆம் ஆண்டு    ரணில் விக்கிரமசிங்க  வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கேள்வி அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?

பதில் நாங்கள் ஜனாதிபதி  தேர்தலில் வெற்றிபெற்றால் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். நான்கரை வருடங்ளில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானால் குறித்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை  கலைத்து தேர்தலுக்கு சென்று  புதிய அரசை அமைக்க முடியும்.  நிபுணர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உருவாகும்.

 

கேள்வி: இதனூடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்  உங்கள் அணுகுமுறை எவ்வாறிருக்கும்?

பதில்: மிகத் தெளிவாக இந்த நாட்டின் தமிழ், சிங்கள முஸ்லிம், மற்றும்   பௌத்த இந்து , கிறிஸ்தவ,  இஸ்லாம்,  வித்தியாசமின்றி அனைத்து மக்களினதம் உரிமைகளை   நாம் பாதுகாப்போம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும்.  அனைத்து மக்களையும் சமமாக பார்ப்போம்.அந்த கோட்பாடுகளை  அடிப்படையாக  கொண்டு  தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம். அதனை எமது தேசிய சக்தியின்  ஊடாக மட்டுமே செய்யமுடியும். மாறாக இரண்டு பிரதான கட்சிகளினால் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

 

கேள்வி: மேலும் இதில் சில விடயங்கள் உள்ளன. அதிகாரப்பகிர்வு, அரசியல் அதிகாரம், போன்றன உள்ளன. இவை தொடர்பில்?

பதில்:  மக்களுக்கு அதிராத்தைப் பகிரும் கொள்கையையே நாம் கொண்டுள்ளோம்.  கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ளவருக்கும் அம்பாந்தோட்டை சூரியவெவில் உள்ளவருக்கும்  ஒரே சமமான அதிகாரம் கிடைக்கவேண்டும்.  ஒருவர் தமிழர் என்பதால் குறைந்த அதிகாரமும்,  மற்றொருவர் சிங்களவர் என்பதால் கூடிய அதிகாரமும் வழங்கப்பட முடியாது.  பிரஜைகளைப் பலப்படுத்தும் கொள்கை எம்மிடம் உள்ளது. 

 

கேள்வி: இப்படி ஒரு தீர்வைக் கொடுப்போம் என்று கூறாமல் முன்னெச்சரிக்கையாக  பேசுகின்றீர்களா?

பதில்: அவ்வாறு இல்லை. நாம் பொய் கூறவில்லை.  வாக்குகளைப் பெறுவதற்காக பொய்களை கூற முடியாது. 2015ஆம் ஆண்டு  வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவ்வாறான பொய்த்தனமான வேலைகளை நாம் செய்யமாட்டோம். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

  நிபுணர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உருவாகும்.

ஜேவிபி யின் நிபுணர்களும் மிக மோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களே!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

நான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் என்னை சந்தித்தான். அவர் 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  தமீழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்தமைக்காகவே தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் யார் கையொப்பமிட்டது என கேட்டேன். தயா மாஸ்டர் என அவர் பதிலளித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையில் கையொப்பம் இட்டவர் வெளியிலும் அதனை வைத்திருந்தவர் சிறையிலும் உள்ளனர்.

 

வவுனியாவில் உள்ள மெனிக் பாரம் முகாம் உள்ள பகுதிக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் கூறினார், நானும் குடும்பமும் போரின் போது சரணடைந்து பாலத்துக்கு அருகில் சென்றிருந்த போது அங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தனது மனைவியும் மகளும் கொல்லப்பட்டதாக கூறினார்.  இதனை யார் செய்தது என்பது தெரியாது. அந்த பாலத்துக்கு அருகில் சென்று அழவேண்டும் என்று தோன்றுவதாக  அவர் என்னிடம் கூறினார். இதுதான் வேதனையின் வடிவம். இந்த வேதனை என்னவென்பது எனக்கும் நன்றாக தெரியும். ஏனெனில் எனது சகோதரரும் காணாமல் போனதால் எனக்கும் அந்த வலி உள்ளது.  காணமால் போனவர் வருவார் என பத்து வருடங்களாக எதிர்பார்த்து இருக்கக்கூடிய அந்த வேதனையை யாராலும் சொல்லிவிட முடியாது. காணமால் போன உறவுகள் எப்போதாவது வருவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காணமால் போனோர் விடயத்தில் அரசாங்கத்தால் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். அது காலம் தாழ்த்தப்படாத செயலாக இருக்க வேண்டும். அதுதான் எதிர்பார்ப்பு.

 

 

 

*** கட்டணம் செலுத்தப்பட்டது ***

https://www.virakesari.lk/article/68754

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.