Sign in to follow this  
ampanai

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு

Recommended Posts

கனகராசா சரவணன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ரா ராஜபக்‌ஷவை ஆதரிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, கட்சியின் செயலளார் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில், இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம், நிர்வாகம், பொருளாதாரம், நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில், கிழக்கு மாகாணத்தைக் கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையிலேயே, இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, கோட்டாபய ராஜபக்ஷ ஒரு இணக்கப்பட்டுக்கு வந்துள்ளார் என்றும் அவர் வெளிநாட்டிலிருந்து வந்த பின்னர், இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழ்-மக்கள்-விடுதலை-புலிகள்-கட்சி-கோட்டாவுக்கு-ஆதரவு/73-239913

Share this post

Link to post
Share on other sites

காட்டிக்கொடுப்பாளர்களும்.. கூட்டுப்படுகொலையாளர்களும் கூட்டணி சேர்வதில் என்ன தடங்கல் வரப்போகுது. 

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, nedukkalapoovan said:

காட்டிக்கொடுப்பாளர்களும்.. கூட்டுப்படுகொலையாளர்களும் கூட்டணி சேர்வதில் என்ன தடங்கல் வரப்போகுது. 

நீங்க  வேற..

அவர்களது  கறிக்கோளே மண்ணைக்காக்கத்தானாம்??

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம், நிர்வாகம், பொருளாதாரம், நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில், கிழக்கு மாகாணத்தைக் கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையிலேயே, இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, விசுகு said:

அவரவர் தம் பிழைப்புக்கு இருப்புக்கு எதையும் சொல்லலாம். கேட்கும் மக்கள்.. தெளிவாக இருந்தால் அன்றி.. இவர்களின் பாதையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல.. இவர்களின் சாவு வரை. 

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, nedukkalapoovan said:

அவரவர் தம் பிழைப்புக்கு இருப்புக்கு எதையும் சொல்லலாம். கேட்கும் மக்கள்.. தெளிவாக இருந்தால் அன்றி.. இவர்களின் பாதையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல.. இவர்களின் சாவு வரை. 

பாதையை மாற்ற  மக்கள் தானே  மயலவேண்டும்

அல்லதுவிடில்  இவர்கள்  தானே அவர்களுக்கிருக்கும்  தெரிவு??

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ரா ராஜபக்‌ஷவை ஆதரிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, கட்சியின் செயலளார் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மக்கள் வேலை, குடும்பம், வாழ்க்கை என ஓடிய வண்ணம் இருப்பார்கள். அரசியல் கட்சிகள் மக்களை வழி நடத்தவேண்டும்.

முழு நேர அரசியலில் ஈடுபடும் தலைவர்கள் நாட்டின் நிலமை, அரசியல் எதிர்காலம், மக்களின் தேவைகள், இனத்தின் பலம் மற்றும் பலவீனங்களை முன் வைத்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

இங்கே, கூட்டமைப்பு இன்றும் முடிவை எடுக்காமல் இருப்பது மற்றைய தமிழ் கட்சிகளுக்கு சாதகமாய் உள்ளது. கூட்டமைப்பு ஓரளவிற்கு யார் வேட்ப்பாளர்கள், கட்சிகளின் நிலைப்பாடு எல்லாம் தெரிந்திருந்திருந்தும் முடிவை எடுக்க முடியாமல் உள்ளது ஒரு பெரிய குறைபாடு.  

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ampanai said:

ஓனர் சொன்னால்தான் தோழர்..👍

paruthi_veeran_chitappu_wife_talk_about_

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
    • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
    • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
    • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
    • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!