• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்

Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராகி இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்திலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில், தேசிய இனப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், கைதிகள் விவகாரம், வடக்கு - கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பாக, முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் உரையாடவேண்டும் என்றும் இதன்பின்னரே, எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும் என்றும் கூறினார்.

தற்போது அரசியலில் கோமாளி வித்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும்  இந்தியாவில் சில அரசியல் கோமாளிகள் இருப்பது போன்று இலங்கையிலும் அரசியல் கோமாளித்தனம் இப்போது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

எனவே, தமிழ் மக்கள், ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள் என்றும் ஏமாற்றுவபர்களுக்கு, தமிழ் மக்கள் மத்தியில் ஒருபோதும் இடமில்லை என்றும் கூறினார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/திறந்த-மனதுடன்-பேச்சுவார்த்தை-நடத்தத்-தயார்/73-239916

Share this post


Link to post
Share on other sites

அப்ப இவ்வளவு நாளும்.. மூடின மனசோடுதான் பேசுனீர்களோ..??!

தமிழ் மக்கள் உங்களைப் புறக்கணிக்காதவரை அவர்களுக்கு அரசியல்.. விடிவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

1947இல் இந்தியா 'உருவாக்கப்பட்ட' பொழுது அந்த 'கோமாளிகள்' தமக்கென ஒரு மாநிலத்தை பெற்றுவிட்டார்கள். அதனால், அவர்கள் ஒப்பீட்டளவில் தமது நிலம், மொழியை பாதுகாத்து வருகின்றனர்.

எங்கள் 'புத்திசாலிகள்' 1948இல் ஒற்றையாட்சிக்கு இணங்கி....  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this