Jump to content

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? - யதீந்திரா 

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு கையாளுவது? இதற்கான சில முயற்சிகள் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றிருந்தன. அரசியல் ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என ஒரு தரப்பினர் இதற்காக இரவு பகலாக உழைத்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டிருந்தது. தமிழ் மக்கள் சார்பில், ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதே அனைவரதும் ஒருமித்த நிலைப்பாடாக இருந்தது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவின் செயலாளர் சிறிகாந்தா ஆகியோரை மேற்படி பேரவையின் குழுவினர் சந்தித்திருந்தனர். இந்தக் குழுவினர் குறித்த அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னர், தமிழ் கருத்தருவாக்கங்களில் செல்வாக்குச் செலுத்திவரும் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

இதன் போது பிரதான வேட்பாளர்களான கோட்டபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமாதச ஆகியோர் சிங்கள –பௌத்த தேசியவாதத்திற்கு தலைமை தாங்குபவர்கள்- எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் எவையும் நிற்கப்போவதில்லை. அந்த வகையில் இருவருக்குமிடையில் அடிப்படையான வேறுபாடுகள் எதுவுமில்லை – என்பதில் அனைவருமே உடன்பட்டிருந்தனர். அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன என்னும் கேள்விக்கான பதிலாகவே, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அபிப்பிராயம் மேலெழுந்தது. ஒரு வேளை, அது சாத்தியமாகாத பட்சத்தில், தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, குறித்த குழுவினர், கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். எனினும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் கட்சிகள் உடன்படவில்லை. இந்தப் பின்னணியில் பேரவையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் தமிழ் பொது வேட்பாளர் முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது? – என்பது பற்றி இதுவரை குறித்த குழுவினர் மக்களுக்கு விளக்கமளிக்கவில்லை. அது கட்டாயாம் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டியதில்லை என்னும் வாதத்தின் அடிப்படையில்தான், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனவே அந்த முயற்சி தோல்வில் முடிந்திருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்பது தொடர்பில் குறித்த குழுவினர் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் குறித்த குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுமாறு தமிழ் மக்களை இனி கோர முடியாது. அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு கண்ட தமிழ் கருத்துருவாக்கிகள் எவருமே ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுமாறு கட்டுரைகளை எழுத முடியாது. அவ்வாறு செயற்பட்டால் அது ஒரு சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்படும். எனவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று வாதிட்ட கருத்துருவாக்கிகள் மற்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் பேரவை, அதன் சார்பில் இயங்கிய சிவில் சமூக பிரமுகர்கள் – அனைவருக்கும் முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள்தான் உண்டு. அதில் ஒன்று, மிகவும் வலுவான எழுத்து மூல உடன்பாடு ஒன்றின் அடிப்படையில் ஒருவரை தெரிவு செய்வது. அந்த உடன்பாடு கட்டாயமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். அது சாத்தியப்படாத நிலையில், தேர்தலை முற்றிலுமாக பகிஸ்கரிக்குமாறு மக்களை கேட்பதுதான் இறுதியான தெரிவு. அதற்காக களத்தில் இறங்கி பணியாற்றுவது.

இதற்கு அப்பாலும் ஒரு தெரிவுண்டு. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் கூட, தற்போது களத்தில் ஒரு தமிழ்த் தேசிய பின்புலம் கொண்ட ஒரு வேட்பாளராக டெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவாஜலிங்கம் இருக்கிறார். அவரை ஒரு பொது வேட்பாளராக தத்தெடுக்கலாமா என்பது தொடர்பிலும் பேரவையின் குழுவினர் யோசிக்கலாம்தானே என்றும் சிலர் வாதிடுகின்றனர். சில அரசியல் செயற்பாட்டாளர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் இதனை வலியுறுத்தினர். இந்த வாதத்தையும் அவ்வளவு இலகுவாக நிராகரிக்க முடியாதுதான். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாடிய தமிழ் மக்கள் பேரவையின் குழுவினர், தங்களுடைய வேட்பாளர் தெரிவில் பிரபலமான நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. நபர்கள் என்பதை ஒரு குறியீடாக நோக்க வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. கட்சிகளுடனான சந்திப்பின் போது அவர்கள் பலருடைய பெயர்களை குறிப்பிட்டிருக்கின்றனர் அதில் ஒருவர், திருகோணமலையை சேர்ந்த ஒரு சாதாரண பெண்மணி. அவரது பெயரை குறிப்பிட்ட போது எவருக்குமே அவரை தெரிந்திருக்கவில்லை. அவ்வாறாயின் தமிழ் மக்கள் பேரவையும், குறித்த குழுவினரும் சிவாஜிலிங்கத்தை ஏன் ஒரு குறியீட்டுத் தெரிவாக அங்ககீரிக்கக் கூடாது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சூழலில், மேற்படி வாதத்தையும் இலகுவாக நிராகரிக்க முடியவில்லை. ஏனெனில் பேரவையின் குழுவினர் நபர்களை எங்குமே முதன்மைப்படுத்தியிருக்கவில்லை.

sajith and gota

இவ்வாறான பினபுலத்தில்தான், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிறிதொரு முயற்சியை தொடங்கியிருக்கின்றனர். அதாவது, தமிழ் தேசிய நிலைப்பாடு கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒரு பொது உடன்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முயல்கின்றனர். பேரவையின் குழுவினர் எந்த கட்சிகளுடன் பேசியிருந்தனரோ, அந்த கட்சிகள் அனைத்தும் இதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்துவது, அதன் பின்னர் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றுடன் பிரதான வேட்பாளர்களான கோட்டபாய மற்றும் சஜித் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இந்த முயற்சியின் இலக்கு. எந்த வேட்பாளர் கோரிக்கைகளுக்கு உடன்படுகின்றாரோ, அவருக்கு ஆதரவு வழங்குவது. ஆனால் இங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது. எழுத்து மூல உடன்பாட்டிற்கு இணங்காத பட்சத்தில் அடுத்துள்ள தெரிவு என்ன? தமிழ் பொது வேட்பாளர் முயற்சியில் ஈடுபட்டு தோல்விகண்ட குழுவினர் எதிர்கொள்ளும் அதே பிரச்சினையைத்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்கொள்ளப் போகின்றனர். மாணவர்கள் எவருடைய வழிகாட்டலில் இதனை முன்னெடுக்கின்றனர் என்று தெரியாவிட்டாலும் கூட மாணவர்களுக்கும், மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் கடப்பாடுண்டு. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுப்பதற்கான தகுதியை இழந்தவிடுவர்.

இதற்கிடையில், இதில் பங்குபற்றவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமர் பொன்னம்பலம் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றார். ஒருபுறம் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றிக் கொண்டே இன்னொரு புறமாக தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பில் அறிவிப்பதானது ஒரு முரண்பாடான விடயமாயே நோக்கப்படுகின்றது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில் சிங்கள வேட்பாளர்கள் எவரையுமே அவரால் ஆதரிக்க முடியாது. அவ்வாறு ஆதரித்தால் அவர் இதுவரை சொல்லிவந்த நிலைப்பாடுகள் அனைத்தையும் அவர் கைவிடநேரிடும். பேரவையின் குழுவினருடனான சந்திப்பின் போதும் கஜேந்திரகுமார் தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பிலேயே பேசியிருக்கின்றார் ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பங்குகொண்டவாறு கஜன் இவ்வாறு அறவிப்பதுதான் தவறானது. பகிஸ்கரிப்புத்தான் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு எனின் குறித்த கலந்துரையாடலில் முன்னணியினர் பங்பற்றியிருக்கக் கூடாது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் அதிகம் பங்குபற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று கணிக்கின்றார் எனவே பகிஸ்கரிப்பிற்கு தலைமை தாங்கியது தனது கட்சியே என்பதை அவர் பதிவு செய்ய விரும்புகின்றார் போலும் தெரிகிறது. ஆனால் கஜேந்திரகுமார் ஒரு விடயத்தை கவனிக்க மறந்துவிட்டார். அதாவது, பிரதான வேட்பாளர்கள் எவருமே எழுத்து மூல உடன்பாட்டிற்கு உடன்படப் போவதில்லை. எனவே இன்னும் சற்று பொறுமையாக இருந்திருந்தால் பெரும்பாலான கட்சிகள் முன்னணியின் பகிஸ்கரிப்பு நிலைப்பாட்டை நோக்கியே திரண்டிருக்கும். ஏனெனில் இரண்டு வேட்பாளர்களுமே சிங்கள – பௌத்த வாக்குகளை கவரும் உத்திகள் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர். எனவே எந்தக் கோணத்தில் விவாதித்தாலும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரையும் ஆதரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் தமிழ் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் இல்லை. உண்மையில் இந்தத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. ஆனால் ஒரு நெருக்கடி நிலையை கையாளுவதில்தான், ஒரு தலைமையின் துனிவும் ஆற்றலும் வெளிப்படும். எவ்வாறான நிலைப்பாடு என்றாலும் அதனை துனிவாக முன்னெடுக்க வேண்டியதே இன்றைய தேவை. 2005இல் விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறானதொரு முடிவைத்தான் எடுத்திருந்தது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலை-தமிழ்-த/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.