சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
Sign in to follow this  
போல்

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை அறிந்தேன் – சுரேன் ராகவன்

Recommended Posts

Suren-Ragavan.jpg

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தடைகளை உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தமிழ் தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில், “நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்மா இன்னும் தமிழனான இருக்கிறது என்பதை இந்த நாதஸ்வர வித்துவான்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். நான் அடிப்படையாக தமிழனாக இருக்கின்றேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்ற நினைவு எனக்கு வந்தது.

இன்று ஒரு அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு வரலாறு எங்களை தள்ளியிருக்கின்றது. நீதி, நியாயம், தர்மம் எங்கு இல்லலையோ, இந்த அப்பாவி மக்களை பாதுகாக்ககூடிய அரசு, அரசாங்கம், அரசன் எங்கு இல்லையோ அந்த நாடு ஒருநாளும் விடிவடையாது.

எனவே இந்த நாட்டில் சமத்துவமான, சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும். இது தான் எங்களுடைய ஆதங்கம். இதற்காக தான் 72 வருடங்களாக எமது ஆவனைகளையும், வேதனைகளையும் வித்தியாசமான முறையிலே முன்வைத்துள்ளோம்.

நான் கொழும்பு போகும் போது என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி தமிழர்களது வாக்குகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் சொல்லுங்கள் என்று. தமிழர்களுடைய வாக்கு சுப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றது என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லும் ஒரே பதில் உங்கள் அரசாங்கம், அரசு, அரசியல் 72 வருடங்களாக நாம் வேண்டுவதை புரிந்துகொள்ளாமல் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். தமிழர்கள் கேட்பது ஒரே ஒரு விடயம். எமது கலை, கலாசாரம், அரசியலையும், இனத்தையும், சமமாக, சமாதானமாக வாழவேண்டிய இடத்தை மட்டும் எங்களுக்கு தாருங்கள் என்பது மட்டுமே.

அந்த வேண்டுகோள் திரும்பவும் கேட்டகப்பட வேண்டும். அதனை கொழும்பிலோ, புதுடில்லியிலோ, ஜெனிவாவிலோ என்றாலும் அங்கே கேட்க வேண்டும். தமிழர்கள் ஒரு இனம். ஆகையினால் இனத்திற்கு சொந்தமான எல்லா உறுதிகளும் எங்களுக்கு தேவையானது. அந்த உறுதிகளையும் உண்மைகளையும் எங்களுக்குத் தர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்” என்றார்.

http://athavannews.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/

Share this post

Link to post
Share on other sites

http://athavannews.com/தமிழ்-என்று-சொல்லும்-போத/

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார்.  நீங்கள் செய்த வேலை இராஜதந்திரமா என்று கேட்கிறேன். ஒருவிடயத்தில் பிளான்1 என்றும் பிளான் 2 என்றும் இருக்க வேண்டும். இவர்களிடம் அப்படி ஏதும் இருந்ததா. ஓன்றுல் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் சஜித்தை ஆதரிப்பது என்பது ஒரு பிளான் என்றால், சஜித் வெற்றி பெறாவிட்டால் அடுத்த பிளான் என்ன என்று ஏதும் வைத்திருந்தீர்களா?. என்னைப் பொறுத்தவரையில் அநியாயம் செய்பவர் இரண்டு பேரும் என்று சொன்னேன. ஆக யார் வந்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. எதற்கும் நாங்கள் ரெடி. இதில் மக்களை நாங்கள் தோல்வியடைந்தவர்களாக வீழ்ச்சியடைந்தவர்களாக இனிமேல் ஒன்றும் நடக்காது என்று விடமால், விழ விழ எழவோம் என்பதற்கமைய அழைத்துச் செல்ல வேண்டும். ஆக வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழ் மக்களாக இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் எங்கள் மக்களுக்கு எங்களை நாங்களே ஆளக் கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு, அதாவது அத்தனை பேரும் கட்சி பேதங்களைக் கடந்து தமிழன் என்ற உணர்வோடு வீறு நடைபோட வேண்டும். தேர்தல் பரப்புரை ஆரம்பத்தில் சிங்கள பௌத்த இனவெறிக் கூச்சல் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆதரவைக் கொடுத்தால் ஆதரவு கொடுக்கும் தரப்பிற்கு அது தென்னிலங்கையில் பாரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைச் செய்யும் என்று பலர் நம்பினார்கள். அதிலே உண்மையும் இல்லாமல் இல்லை. அது தான் களநிலவரம். அது தான் உண்மை. அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக்கட்சியினர் இங்கே நடைபெற்ற கிராம மட்ட கருத்தரங்குகளிலே நாங்கள் பகிரங்கமாகச் சொல்ல முடியாது என்றும் நீங்கள் கீழ் மட்டத்தில் வேலை செய்யுங்கள் என்றும் மக்களிடம் சொன்னவர்கள் திடீரென்று வவுனியாவிலே தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டப்பட்டு அதுவும் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளைக் கூட அழைத்து பேசாமல் தாமாக அவசரமாக அறிவித்ததன் பின்னனி என்ன?. ஆனால் நிலைமைகள் இவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாச விட்ட தவறு என்னவென்றால், நான் ஒரு புதிய பிரதமரை நியமிப்பேன் என்று கூறியது தான். அதனோடு ரணில் விக்கிரமசிங்க அலேட் ஆகிவிட்டார். அவர் அரசியலில் ஒரு நரி. நரித்தந்திரம் கொண்டவர். ஆக அந்த ஐயா சொல்லி, எங்கட ஐயா சேர்ந்து தான் இதனைச் செய்திருக்கிறார்கள். இதற்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படுகிறது. 200 கோடி செலவுக்கு என்று கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அதை செலவழித்தீர்களோ வைத்திருக்கிறீர்களோ தெரியாது. நாங்கள் அதைப்பற்றி கணக்கும் கேட்கவில்லை. மிச்சத்தையும் கேட்கவில்லை. நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது இந்த நிலைக்கு கொண்டு வந்த விட்டிருக்கின்றீர்கள் என்றால், கோத்தா மகிந்த ரணிலொடு சேர்ந்த தீர்வைக் கொண்டு வாருங்கள். நாங்கள் சந்தேசப்படுகிறோம். அது உங்கள் இராஜதந்திரம் என்றால் நாங்கள் ஆதரிக்கிறோம். இல்லை என்று சொன்னால் அவர் கட்சியில் பதவியில் இருப்பதற்காக ஆதரவு என்று நீங்கள் சும்மா கேமை கொடுத்தீர்களா?. ஆக நீங்கள் சேர்வதோ இல்லையோ என்பது பிரச்சனை அல்ல. அதாவது பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும். திரைமறைவில் நீங்கள் எதையும் கதையுங்கோ. என்னத்தையும் செய்யுங்கோ. எங்களுக்கு அதைப்பற்றி தேவையில்லை. நாங்கள் அதைப்பறி கதைக்க வரவில்லை. ஆனால் வெளிப்படையாக சொல்லுங்கள் செயற்படுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் திருந்த வேண்டும். அவ்வாறு திருந்தாவிட்டால் வருந்த வேண்டி வரும் என்றார். http://www.pagetamil.com/88297/?fbclid=IwAR08oNzDstx1K7CGvrSI5DATt3LCnfBVRM4Nqmcmz7UsqMYd_wCUDAjXLcs
    • ஹிஸ்புல்லாவின் ஊடகப்பிரிவு இப்படி சொல்லுது. எது உண்மையோ தெரியவில்லை. “ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டிருந்தார். அவர் மேற்படி நிகழ்வுக்கு உட்செல்லும்போது எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். மாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை மிகவும் மரியாதையுடன், நாகரீகமாக வரவேற்றிருந்தனர்” https://yarl.com/forum3/topic/234413-ஜனாதிபதியின்-பதவியேற்பு-நிகழ்வில்-பங்கேற்றமை-குறித்து-ஹிஸ்புல்லா-விளக்கம்/