Jump to content

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை அறிந்தேன் – சுரேன் ராகவன்

Recommended Posts

Suren-Ragavan.jpg

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தடைகளை உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தமிழ் தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில், “நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்மா இன்னும் தமிழனான இருக்கிறது என்பதை இந்த நாதஸ்வர வித்துவான்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். நான் அடிப்படையாக தமிழனாக இருக்கின்றேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்ற நினைவு எனக்கு வந்தது.

இன்று ஒரு அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு வரலாறு எங்களை தள்ளியிருக்கின்றது. நீதி, நியாயம், தர்மம் எங்கு இல்லலையோ, இந்த அப்பாவி மக்களை பாதுகாக்ககூடிய அரசு, அரசாங்கம், அரசன் எங்கு இல்லையோ அந்த நாடு ஒருநாளும் விடிவடையாது.

எனவே இந்த நாட்டில் சமத்துவமான, சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும். இது தான் எங்களுடைய ஆதங்கம். இதற்காக தான் 72 வருடங்களாக எமது ஆவனைகளையும், வேதனைகளையும் வித்தியாசமான முறையிலே முன்வைத்துள்ளோம்.

நான் கொழும்பு போகும் போது என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி தமிழர்களது வாக்குகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் சொல்லுங்கள் என்று. தமிழர்களுடைய வாக்கு சுப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றது என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லும் ஒரே பதில் உங்கள் அரசாங்கம், அரசு, அரசியல் 72 வருடங்களாக நாம் வேண்டுவதை புரிந்துகொள்ளாமல் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். தமிழர்கள் கேட்பது ஒரே ஒரு விடயம். எமது கலை, கலாசாரம், அரசியலையும், இனத்தையும், சமமாக, சமாதானமாக வாழவேண்டிய இடத்தை மட்டும் எங்களுக்கு தாருங்கள் என்பது மட்டுமே.

அந்த வேண்டுகோள் திரும்பவும் கேட்டகப்பட வேண்டும். அதனை கொழும்பிலோ, புதுடில்லியிலோ, ஜெனிவாவிலோ என்றாலும் அங்கே கேட்க வேண்டும். தமிழர்கள் ஒரு இனம். ஆகையினால் இனத்திற்கு சொந்தமான எல்லா உறுதிகளும் எங்களுக்கு தேவையானது. அந்த உறுதிகளையும் உண்மைகளையும் எங்களுக்குத் தர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்” என்றார்.

http://athavannews.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Suren-Ragavan.jpg

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை அறிந்தேன் – சுரேன் ராகவன்

‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தடைகளை உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தமிழ் தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில், “நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்மா இன்னும் தமிழனான இருக்கிறது என்பதை இந்த நாதஸ்வர வித்துவான்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். நான் அடிப்படையாக தமிழனாக இருக்கின்றேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்ற நினைவு எனக்கு வந்தது.

இன்று ஒரு அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு வரலாறு எங்களை தள்ளியிருக்கின்றது. நீதி, நியாயம், தர்மம் எங்கு இல்லலையோ, இந்த அப்பாவி மக்களை பாதுகாக்ககூடிய அரசு, அரசாங்கம், அரசன் எங்கு இல்லையோ அந்த நாடு ஒருநாளும் விடிவடையாது.

எனவே இந்த நாட்டில் சமத்துவமான, சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும். இது தான் எங்களுடைய ஆதங்கம். இதற்காக தான் 72 வருடங்களாக எமது ஆவனைகளையும், வேதனைகளையும் வித்தியாசமான முறையிலே முன்வைத்துள்ளோம்.

நான் கொழும்பு போகும் போது என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி தமிழர்களது வாக்குகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் சொல்லுங்கள் என்று. தமிழர்களுடைய வாக்கு சுப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றது என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லும் ஒரே பதில் உங்கள் அரசாங்கம், அரசு, அரசியல் 72 வருடங்களாக நாம் வேண்டுவதை புரிந்துகொள்ளாமல் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். தமிழர்கள் கேட்பது ஒரே ஒரு விடயம். எமது கலை, கலாசாரம், அரசியலையும், இனத்தையும், சமமாக, சமாதானமாக வாழவேண்டிய இடத்தை மட்டும் எங்களுக்கு தாருங்கள் என்பது மட்டுமே.

அந்த வேண்டுகோள் திரும்பவும் கேட்டகப்பட வேண்டும். அதனை கொழும்பிலோ, புதுடில்லியிலோ, ஜெனிவாவிலோ என்றாலும் அங்கே கேட்க வேண்டும். தமிழர்கள் ஒரு இனம். ஆகையினால் இனத்திற்கு சொந்தமான எல்லா உறுதிகளும் எங்களுக்கு தேவையானது. அந்த உறுதிகளையும் உண்மைகளையும் எங்களுக்குத் தர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்” என்றார்.

http://athavannews.com/தமிழ்-என்று-சொல்லும்-போத/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.