Jump to content

கோட்டாவுக்கே வியாழேந்திரன் ஆதரவு

Recommended Posts

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவகக-வயழநதரன-ஆதரவ/175-239979

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54 minutes ago, ampanai said:

நல்ல விடயம் ...பார்ப்போம் வியாழனின் அரசியல் திறமையை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்ட அபயவுக்கு ஆதரவளிப்பது நெருடலாக இருந்தாலும் வியாழேந்திரன் இதன் மூலம் மட்டு மாவட்ட மக்களுக்கு சிறிதளவேனும் பொருளாதார வாய்ப்புகளை பெறுவாராயின் அது நல்ல விடயமே.

சலுகை அரசியலா, இல்லை உரிமை அரசியலா என்ற 2009 முதல் நீண்ட கேள்விக்கு, சலுகை அரசியலே என முதன்முதலில் மணி கட்டியமைக்காக வியாழேந்திரன் பாராட்டப்ப்ட வேண்டியவரே.

இந்த சலுகை அரசியலை கையில் எடுப்பதன் மூலம் -மட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருபதோடு, பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்க முடிந்தால்- இந்த அரசியலின் வெற்றி, மன்னார் முல்லை தீவு என்று பரவக்கூடும்.

ஈற்றில் இணைந்த வட-கிழக்கு அரசியலை, மாவட்ட-அரசியல் பிரதியீடு செய்யும். இதை ஜேஆர் 81 தந்தபோதே எடுத்திருக்கலாமே? என்பது நியாயமான கேள்வியே. ஆனாலும் இதுவே தக்கண பிழைக்கும் வழி என்றால், அதுவே மக்கள் விருப்பு என்றால், அப்படியே ஆவதில் ஒரு தப்பும் இல்லை.

மட்டு மாவட்டம் அநேகமாக கோட்டவுக்கே.

ஆனால் கோட்டவின் வெற்றி4 அல்லது 8 வருடம்தான். ஆனால் வியாழேந்திரனின் அரசியல் வெற்றி பெறுமாயின் அது தமிழ் தேசிய அரசியலை, அதன் போக்கையே புரட்டிப்போட வல்லது.

வாழ்துக்கள். கோட்டவை ஆதரிபதற்காக அல்ல, துணிச்சலாக, மட்டு-க்கு மட்டுமான மாவட்ட அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்தமைக்கு.

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நல்ல விடயம் ...பார்ப்போம் வியாழனின் அரசியல் திறமையை 

தேர்தலில் சஜித் வென்றால் வியாழ மாற்றம் நடப்பது போல் சஜித் பக்கம் தாவ மாட்டாரா? 😀

9 minutes ago, goshan_che said:

மட்டு மாவட்டம் அநேகமாக கோட்டவுக்கே.

2015 தேர்தலில் மட்டக்களப்பில்,

மைத்திரி - 209,422

மகிந்த - 41,631

பெருமளவு வித்தியாசம் உள்ளது. அதை உடைக்க முடியும் என நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Lara said:

தேர்தலில் சஜித் வென்றால் வியாழ மாற்றம் நடப்பது போல் சஜித் பக்கம் தாவ மாட்டாரா? 😀

2015 தேர்தலில் மட்டக்களப்பில்,

மைத்திரி - 209,422

மகிந்த - 41,631

பெருமளவு வித்தியாசம் உள்ளது. அதை உடைக்க முடியும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக தாவுவார்.

ஆனால் மாவட்ட-மைய-அபிவிருத்தி அரசியலின் (செள. தொண்டா, பதியுதீன், ஹக்கீம் செய்வது) அடிப்படையே, தாவி-தாவி மக்களுக்கும், தமக்கும் வாய்ப்புகளை பெறுவதுதானே. ஆக இதில் ஒரு கொள்கை கேடும் வராது 😂.

உடைக்கலாம் என நினைக்கிறேன்.

மட்டில் எப்போதும், அது எந்த அரசியலாக இருந்தாலும் மாவட்டத்தை முன்னிறுத்தியே அரசியல் செய்ய முடியும்.

ராஜன் செல்வநாயகம், ராஜதுரை, காலத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற ஊன்றுகோலாய் இருந்தது மாவட்ட அபிமானம்.

புலிகளை கருணா கிழக்கில் அசுர பலத்தில் வைத்திருக்க கைகொடுத்ததும் அதுவே. மற்றைய மாவட்ட படையணிகளை மீறி நாம் சாதிக்க வேண்டும், நாம்தான் போராட்டத்தின் முதுகெலும்பு (இது உண்மை கூட) என அவர் நேரடியாகவே போராளிகள் மத்தியில் பேசுவார். 

கருணா பிரிவின் பின் அவரையும், பிள்ளையானையும் தொடர்ந்து அரசியல் செய்ய இலகுவாக்குவதும் இதே மாவட்ட அபிமானமே.

இப்போ வியாழேந்திரன் மாவட்ட அபிமானம், முஸ்லீம் விரோதம், அபிவிருத்தி, கூட்டமைப்பின் மீதான விமர்சனம் நாலையும் கையில் எடுக்கிறார்.

இது டிரம் செய்வதை போல ஒரு பக்க populist ஜனரஞ்சக அரசியல்(டிரம்புக்கு -அமெரிக்க அபிமானம், முஸ்லீம்/சிறுபான்மை விரோதம், அபிவிருத்தி make America great again, மற்றும் establishment மீதான விமர்சனம்) . 

இதுதான் உலகெங்கும் இப்பொ வெல்லும் டிரெண்ட். வியாழேந்திரன், பிள்ளையான் தமிழ் வோட்டுக்களை கவர, ஹிஸ்புலா முஸ்லிம் வோட்டுக்களை பிரிக்க- வெற்றி சாத்தியம். இல்லாவிடிலும் 45% வரை வாக்குகளை அள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வியாளன்  கூட்டமைப்பு  சார்பில்  தான் கடந்த  தேர்தலில்  வென்றார்  என்பதையாவது  ஞாபகம்  வைத்திருக்கின்றோமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆனால் வியாளன்  கூட்டமைப்பு  சார்பில்  தான் கடந்த  தேர்தலில்  வென்றார்  என்பதையாவது  ஞாபகம்  வைத்திருக்கின்றோமா????

எனக்கு நியாபகம் இருக்கு.

அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂.

ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே?

வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும்.

ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ?

மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல். 

பார்கலாம் மக்களின் முடிவை.

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

உடைக்கலாம் என நினைக்கிறேன்.

இப்போ வியாழேந்திரன் மாவட்ட அபிமானம், முஸ்லீம் விரோதம், அபிவிருத்தி, கூட்டமைப்பின் மீதான விமர்சனம் நாலையும் கையில் எடுக்கிறார்.

வியாழேந்திரன், பிள்ளையான் தமிழ் வோட்டுக்களை கவர, ஹிஸ்புலா முஸ்லிம் வோட்டுக்களை பிரிக்க- வெற்றி சாத்தியம். இல்லாவிடிலும் 45% வரை வாக்குகளை அள்ளலாம்.

எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம்.

பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும்.

வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம்.

ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன்.

2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில்,

சரத் பொன்சேகா - 146,057

மகிந்த - 55,663

வாக்குகளை பெற்றிருந்தார்கள்.

இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இன்று யார் எப்படிக் கருத்துக்கள் சொன்னாலும்.... தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தந்தை செல்வா. 

காப்பாற்றக் கடவுள் வந்தார். ஆனால் அவரைத் தமிழர்கள் முழுமையாக ஏற்கவில்லை. Bildergebnis für %e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d+

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை 
பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள் 
தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள்.

இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால் 
என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை. 

இந்த வியாக்கினத்தின் படி 
சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும்.

இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார்.

இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார்.

இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றையும் செய்ய முடியாது என விலகி வந்தது காலம் கடந்தது 

இருந்தாலும் பலர் கோட்டாவுக்கு ஆதரவு என்பது துளி கூட இல்லை ஆனால் அவருக்குத்தான் வாக்களிக்க உள்ளார்கள் காரணம் கிழக்கு என்பது கிழக்கு மக்களுக்கு சிங்களவன் எடுத்தாலும் பேசியாவது வாங்கி கொள்ளலாம் காணீகளை அதிகாரங்களை ஆனால் முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் நமக்கு தெரியாத ஆண்டு (இல்லாத) ஆண்டு வரலாறுகளைக் கொண்டு வந்து சேர்க்கிரர்கள் உதாரணம் கல்முனை ஏன் கிழக்கு பக்கம் இருக்கும் பல பிரதேசங்கள்

ஒரு வேளை கோத்தா வென்றால் பிள்ளையான் வெளியில் வரலாம் அல்லது வராமல் போகலாம் கருணா கொஞ்சம் சோல்டரை கூட தூக்கி திரிய வாய்ப்பு உள்ளது கோட்டா சாம்ராஜ்ஜியத்தில். இது எங்களுக்கு சின்ன வரம்பை போட்டு பாதுகாப்பது போல தான் அணையை உடைத்து நீர் பாய்வதை தடுப்பது போல 

கூட்டமைப்பும்  நல்லாட்ட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து கொண்டுவந்தது வந்தவர்கள் இருந்தவர்கள் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினையை தீர்த்துவைக்கவும் இல்லை தீர்த்து வைக்கப்ப்போவதும் இல்லை  இப்படியே இருப்பதை விட அவனுகள் பரவாயில்லை போல தோன்றும் சில சர்வாதிகார ஆட்சி சில வேளைகளில் தேவைப்படுவது போல மனதுக்கு தோன்றும் இருந்தாலும் அடிமை வாழ்க்கையும் அல்லல்படும் வாழ்கையும் தமிழருக்கு இலங்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கு பரிசாக கொடுத்துத்தான் இருக்கும் 

கோத்தா கூட டம்மிதான் இந்த எலக்சன்ல பின்புலம் மகிந்தவும் பசிலும்தான் 

எனது வாக்கும் கோட்டாவுக்கு விரும்பம் இல்லை ஆனால் போடத்தான் வேண்டும் இரண்டு தெரிவுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 

Link to comment
Share on other sites

வியாழேந்திரனின் துணிச்சலைப்பாராட்ட வேண்டும்.தமிழர் உரிமைக்காக அண்மைக்காலங்களில் அதிகம் கரிசனை கொண்ட ஒருவராகக் காணப்படுபவர்.இவரை அடியொற்றி அம்பாறை மாவட்டத்திலும் ஒருவர் உருவாகவேண்டும்.இல்லாவிடில் தமிழரின் இருப்பு அடியோடு அம்பாறை மாவட்டத்தில் மண்ணாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அடிப்படை பிரச்சனை மறந்துவிட்டு எழுதுகிறீர்கள் 
அத்திவாரம் வேண்டாம் அது பிறகு பார்க்கலாம் 
இப்போ சுவருக்கு பெயிண்ட் அடிக்க வியாழேந்திரன்தான் சரியானவர் என்பதுபோல இருக்கிறது.

இதுவரையில் முஸ்லீம்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது 
அதன் மூலம் சலுகைகளை பெற்றது என்பதுக்கு  முக்கிய காரணம் 
வீறு கொண்ட தமிழரின் விடுதலை போராட்டம் வெற்றிப்பாதையில் இருந்தது என்பதால்தான் 
தமிழரிடம் இருந்து முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய கட்டாயம் சிங்களத்துக்கு இருந்ததால் 
தற்காலிக சலுகைகளை முஸ்லீம்களுக்கு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழரை முளையிலேயே கிள்ளவேண்டும் என்று எண்ணும் கொடூரனான கோத்தா 
வியாழேந்திரன் ஆதரவு தந்தார் என்பதால் புல்டோசரை கொண்டுவந்து இவருக்கு ரோட்டு போட 
போவதில்லை டக்கிளசு மற்ற ஒட்டின ஓட்டாத குழுவெல்லாம் இவர்களால் தமிழரை அழிக்கவும் 
காட்டி கொடுப்புக்கும்தான் காவல் நாய்கள்போல வளர்க்கபட்டார்கள்.
இனி விசுவாச நாய்களுக்கு போக இடமில்லை எஜமான் வீட்டுக்குள் சுத்தத்துவது தவிர்த்து வேறு வழியில்லை 
என்பது சாதாரண சிங்கள குழந்தைக்கும் தெரியும் ..... இவர்கள் தமிழருக்கு எதுவும் செய்யப்போவதில்லை 
என்பதும் அவர்களுக்கு நன்றே தெரியும். 

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.
இவரை விட கிழக்கில் கொண்டுவந்து சூரியனையே கட்டுறன் எண்டுதான் கொம்மான் கிளம்பினவர் 
பின்பு எந்த கிழக்குக்குள் என்னத்தை கொண்டுபோய் கட்டினார் என்பது ஊரே பார்த்துச்சு.
இப்பிடியான கூலாந்திகளால் ஏதும் நல்லது நடந்தது என்று உலகில் உதாரணத்துக்கு சொல்ல கூட ஒன்று இல்லை. 

கருணாநிதி வைக்கோவை விலக்கியபோது வைகோவோடு சென்ற அத்தனை பேரும் ஒன்றுமே இல்லாத 
வைக்கோவிடம் பதவியையோ  பணத்தையோ எதிர்பார்த்து போகவில்லை. கருணாநிதியின் துரோகத்தை பார்த்த கோபமும் தமிழ் என்ற உணர்வும் தவிர்த்து வேறு ஏதும் இல்லை. இன்று அத்தனை பேரும் நடு ரோட்டில்தான்  நிற்கிறார்கள் .... வியாழேந்திரன்  போல வைக்கோ கட்சி விட்டு கட்சி தாவி கொள்கையை கொன்றதால்  அவர்கள் தெருவில்தான் நிற்கமுடியும்.

கிழக்கு மக்களுக்கும் வைகோ பின்னால் போனவர்களுக்கு முடிவு ஒன்றுதான்.
இது வியாழேந்திரனுக்கும் நன்கு தெரியும்  கோத்தாவுக்கும் நன்கு தெரியும் 
தெரியாதவர்கள்  ..... ஏன்? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறறிவுக்கு எட்டும் கேள்விகள் இல்லாதவர்கள். 

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் உறவினர் (அத்தான்??) முன்னாள் புளட் அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

10 hours ago, goshan_che said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

அர்ஜுன் அண்ணருக்கு  இவரை கனடா  வந்தபோது தான்  தெரியும்

அதுவும் கூட்டமைப்பின்  ஒரு  நாடாளுமன்ற  உறுப்பினராக..

ஆனால்  பழைய புளட்  உறவை  வைத்து

அதை  நம்பி

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  ஊரில் சில  விடயங்களை செய்யலாம்  என  இவரை அணுகி பேசியது  உண்மை

ஆனால்  அடுத்த  சில  மாதங்களில்  இவர் கூட்டமைப்பிலிருந்து ஓடி

 எங்கிருக்கிறார்  என்றே  தெரியாமல் ஒழிந்து

கடைசியில் மகிந்தவிடம்  சங்கமிக்க

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  தலைக்கு  வந்தது தலைப்பாகையுடன்  என....??(அதை  இங்கே  அவரே எழுதியிருக்கிறார்)

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.

வியாழேந்திரன் மகிந்த பக்கம் தாவிய போது பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண) பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர். ஆனால் அது நிலைக்கவில்லை.

DrANM7iU8AAgs5J.jpg

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 

புளொட்டினூடாக தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்.

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றையும் செய்ய முடியாது என விலகி வந்தது காலம் கடந்தது 

இருந்தாலும் பலர் கோட்டாவுக்கு ஆதரவு என்பது துளி கூட இல்லை ஆனால் அவருக்குத்தான் வாக்களிக்க உள்ளார்கள் காரணம் கிழக்கு என்பது கிழக்கு மக்களுக்கு சிங்களவன் எடுத்தாலும் பேசியாவது வாங்கி கொள்ளலாம் காணீகளை அதிகாரங்களை ஆனால் முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் நமக்கு தெரியாத ஆண்டு (இல்லாத) ஆண்டு வரலாறுகளைக் கொண்டு வந்து சேர்க்கிரர்கள் உதாரணம் கல்முனை ஏன் கிழக்கு பக்கம் இருக்கும் பல பிரதேசங்கள்

ஒரு வேளை கோத்தா வென்றால் பிள்ளையான் வெளியில் வரலாம் அல்லது வராமல் போகலாம் கருணா கொஞ்சம் சோல்டரை கூட தூக்கி திரிய வாய்ப்பு உள்ளது கோட்டா சாம்ராஜ்ஜியத்தில். இது எங்களுக்கு சின்ன வரம்பை போட்டு பாதுகாப்பது போல தான் அணையை உடைத்து நீர் பாய்வதை தடுப்பது போல 

கூட்டமைப்பும்  நல்லாட்ட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து கொண்டுவந்தது வந்தவர்கள் இருந்தவர்கள் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினையை தீர்த்துவைக்கவும் இல்லை தீர்த்து வைக்கப்ப்போவதும் இல்லை  இப்படியே இருப்பதை விட அவனுகள் பரவாயில்லை போல தோன்றும் சில சர்வாதிகார ஆட்சி சில வேளைகளில் தேவைப்படுவது போல மனதுக்கு தோன்றும் இருந்தாலும் அடிமை வாழ்க்கையும் அல்லல்படும் வாழ்கையும் தமிழருக்கு இலங்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கு பரிசாக கொடுத்துத்தான் இருக்கும் 

கோத்தா கூட டம்மிதான் இந்த எலக்சன்ல பின்புலம் மகிந்தவும் பசிலும்தான் 

எனது வாக்கும் கோட்டாவுக்கு விரும்பம் இல்லை ஆனால் போடத்தான் வேண்டும் இரண்டு தெரிவுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 

உங்கள் முன்னைய கருத்துகளை வாசித்ததன் அடிப்படையில் நீங்கள் இம்முறை கோத்தாவுக்கு தான் வாக்களிப்பீர்கள் என முன்னரே ஊகித்திருந்தேன். உங்களைப்போல் நினைக்கும் சிலர் இருக்கலாம்.

ஆனால் கூட்டமைப்பின் மேலுள்ள விமர்சனத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு வாக்களிக்க பலர் நினைக்க மாட்டார்கள், பெரும்பாலானோர் சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன். தேர்தல் முடிவுகளை பார்க்கலாம்.

வியாழேந்திரனுக்கு கூட்டமைப்பில் விமர்சனம் இருந்தது தெரியும். ஆனால் மனோ கணேசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் வியாழேந்திரனை போட்டியிட கேட்டிருந்தார்.

இப்பொழுது கோத்தாவை ஆதரித்ததன் மூலம் வியாழேந்திரன் அச்சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக்கொண்டு விட்டாரோ என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

11 hours ago, நந்தி said:

வியாழேந்திரனின் துணிச்சலைப்பாராட்ட வேண்டும்.தமிழர் உரிமைக்காக அண்மைக்காலங்களில் அதிகம் கரிசனை கொண்ட ஒருவராகக் காணப்படுபவர்.இவரை அடியொற்றி அம்பாறை மாவட்டத்திலும் ஒருவர் உருவாகவேண்டும்.இல்லாவிடில் தமிழரின் இருப்பு அடியோடு அம்பாறை மாவட்டத்தில் மண்ணாகும்.

2015 தேர்தலில் அம்பாறையில்,

மைத்திரி - 233,360

மகிந்த - 121,027

2010 தேர்தலில் அம்பாறையில்,

சரத் பொன்சேகா - 153,105

மகிந்த - 146,912

இம்முறை எவ்வாறு அமைகிறது என பார்ப்போம்.

Link to comment
Share on other sites

இதுவரைக்கும் கோத்தாவுடன் இணைந்து கொண்டவர்கள் யார் யார் என பார்ப்போம்

முரளிதரன் (கருணா)
டக்கிளஸ் தேவானந்தா
வரதராஜப் பெருமாள்
அத்தாவுல்லா
பிள்ளையான் கட்சி

இவர்கள் 2009 ஆண்டு இனப்படுகொலையின் போது எங்கு எவருடன் கூட்டு வைத்து இருந்தனர் என்பதும் இவர்கள் கூட்டு இனப்படுகொலையின் பங்காளர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். எம் போராட்டத்தினை காட்டிக் கொடுத்து, சிங்களவர்களிடம் சராணகதி அடைய வேண்டிய நிலைக்கு எம் தமிழ் மக்களை கொண்டு வந்து விட்டவர்களில் இவர்களும் அடங்குகின்றனர்.

கோத்தாவுக்காக எவர் ஆதரவு கொடுத்தாலும், கோத்தாவை வெல்ல வைப்பதற்காக பிறருக்கு வாக்களிக்க எவர் சொன்னாலும் அவர்கள் தன்னளவில் இந்த அணியில் இணைதவர்களாகவே கொள்ளப்படல் வேண்டும்.

இதில் வியாழேந்திரனும் இணைந்து விட்டார்.

முஸ்லிம்களை காரணம் காட்டி இவர் இணைந்து இருப்பதும் சிங்களத்தின் வெற்றியே தவிர தமிழர்களிற்கு எதையும் பெற்றுக் கொடுக்க போவதில்லை. கடும் பெளத்த சிங்கள தேசியவாதத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கும் கோத்தா தமிழர் தாயகத்தின் முதுகெழும்பான கிழக்கில் தமிழர்கள் பலம் பெறும் வண்ணம் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ கொடுப்பார் என நம்புவது நாம் வரலாறுகளில் இருந்து ஒருக்காலும் பாடம் படிக்க மாட்டோம் என்பதையே மீண்டும் மீண்டும் காட்டி நிற்கும்.

Link to comment
Share on other sites

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது- பசில்

சில சிறுபான்மை கட்சிகளை 'இணைத்ததன்' மூலம், வெற்றியை ஒரு தேசிய தேர்தல்  வெற்றியாக உலகிற்கு காட்டமுடியும்.

Link to comment
Share on other sites

48 minutes ago, ampanai said:

2015 தேர்தலில்,

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 15,044,490

வாக்களித்தவர்கள்: 12,264,377

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 140,925

செல்லுபடியான வாக்குகள்: 12,123,452

மைத்திரி பெற்ற வாக்குகள்: 6,217,162 (51.28%)

மகிந்த பெற்ற வாக்குகள்: 5,768,090 (47.58%)

மிகுதி வாக்குகள்: ஏனையோர்

இம்முறை அநுர போட்டியிடுவதால் முதல் சுற்றில் 50% இற்கு மேல் யாரும் பெறுவார்கள் என உறுதியாக கூற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

அடிப்படை பிரச்சனை மறந்துவிட்டு எழுதுகிறீர்கள் 
அத்திவாரம் வேண்டாம் அது பிறகு பார்க்கலாம் 
இப்போ சுவருக்கு பெயிண்ட் அடிக்க வியாழேந்திரன்தான் சரியானவர் என்பதுபோல இருக்கிறது.

இதுவரையில் முஸ்லீம்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது 
அதன் மூலம் சலுகைகளை பெற்றது என்பதுக்கு  முக்கிய காரணம் 
வீறு கொண்ட தமிழரின் விடுதலை போராட்டம் வெற்றிப்பாதையில் இருந்தது என்பதால்தான் 
தமிழரிடம் இருந்து முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய கட்டாயம் சிங்களத்துக்கு இருந்ததால் 
தற்காலிக சலுகைகளை முஸ்லீம்களுக்கு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழரை முளையிலேயே கிள்ளவேண்டும் என்று எண்ணும் கொடூரனான கோத்தா 
வியாழேந்திரன் ஆதரவு தந்தார் என்பதால் புல்டோசரை கொண்டுவந்து இவருக்கு ரோட்டு போட 
போவதில்லை டக்கிளசு மற்ற ஒட்டின ஓட்டாத குழுவெல்லாம் இவர்களால் தமிழரை அழிக்கவும் 
காட்டி கொடுப்புக்கும்தான் காவல் நாய்கள்போல வளர்க்கபட்டார்கள்.
இனி விசுவாச நாய்களுக்கு போக இடமில்லை எஜமான் வீட்டுக்குள் சுத்தத்துவது தவிர்த்து வேறு வழியில்லை 
என்பது சாதாரண சிங்கள குழந்தைக்கும் தெரியும் ..... இவர்கள் தமிழருக்கு எதுவும் செய்யப்போவதில்லை 
என்பதும் அவர்களுக்கு நன்றே தெரியும். 

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.
இவரை விட கிழக்கில் கொண்டுவந்து சூரியனையே கட்டுறன் எண்டுதான் கொம்மான் கிளம்பினவர் 
பின்பு எந்த கிழக்குக்குள் என்னத்தை கொண்டுபோய் கட்டினார் என்பது ஊரே பார்த்துச்சு.
இப்பிடியான கூலாந்திகளால் ஏதும் நல்லது நடந்தது என்று உலகில் உதாரணத்துக்கு சொல்ல கூட ஒன்று இல்லை. 

கருணாநிதி வைக்கோவை விலக்கியபோது வைகோவோடு சென்ற அத்தனை பேரும் ஒன்றுமே இல்லாத 
வைக்கோவிடம் பதவியையோ  பணத்தையோ எதிர்பார்த்து போகவில்லை. கருணாநிதியின் துரோகத்தை பார்த்த கோபமும் தமிழ் என்ற உணர்வும் தவிர்த்து வேறு ஏதும் இல்லை. இன்று அத்தனை பேரும் நடு ரோட்டில்தான்  நிற்கிறார்கள் .... வியாழேந்திரன்  போல வைக்கோ கட்சி விட்டு கட்சி தாவி கொள்கையை கொன்றதால்  அவர்கள் தெருவில்தான் நிற்கமுடியும்.

கிழக்கு மக்களுக்கும் வைகோ பின்னால் போனவர்களுக்கு முடிவு ஒன்றுதான்.
இது வியாழேந்திரனுக்கும் நன்கு தெரியும்  கோத்தாவுக்கும் நன்கு தெரியும் 
தெரியாதவர்கள்  ..... ஏன்? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறறிவுக்கு எட்டும் கேள்விகள் இல்லாதவர்கள். 

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

உங்களது இந்த பார்வையில் நான் மறுத்துரைக்க ஒன்றும் இல்லை மருதர்.

உண்மையில் இங்கே நாம் கதைக்காமல் விடும் விடயம், கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதே.

ஒரு காலம், கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை, வடக்கை விட தமிழ் தேசிய அரசியலை, கூட்டமைப்பை அதிகம் தாங்கி பிடித்தது கிழக்கு மக்கள். யாழில் எப்போதும் 10% டக்லசுக்கு போட, மட்டகளப்பில் சில தொகுதிகளில் 99% கூட்டமைப்பு போட்டது கூட உண்டு.

ஆனால் - முஸ்லிம்கள் உடனான கிழக்கு தமிழர்களுக்கு வரலாறு நெடுக இருந்த வளங்களுக்கான போட்டி, 2015 இல் மகிந்த தோற்றதின் பின் வேண்டும் என்றே இரண்டு பகுதியிலும் தூண்டி விடப்பட்டது. 

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் இந்த முரண்பாடு ஒரு படி உயரப் போனதை நானே கண்டேன்.

ஈஸ்டர் தாக்குதல் காலத்தில் இதை பற்றி நான் இங்கே எழுத முனைய, என்னை முஸ்லீம் அபிமானி எனப் பட்டம் கட்டி, வாயை அடைத்து விட்டார்கள்.

கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை கொதி நிலையில் வைப்பது நீண்ட காலத்தில் பின்வரும் விளைவுகளை தரும்.

1. முஸ்லீம்களும் தமிழரும் எப்போதும், ஒருவரை ஒருவர் வெட்டி ஆட தெற்கின் தயவை நாடுவர்.

2. முஸ்லீம்களை வெட்டி ஆட, சலுகை அரசியல் ஒன்றே தீர்வு எனும் முடிவுக்கு கிழக்கு தமிழர் வந்து - தமிழ் தேசியத்தை கைவிடுவர்.

3. இதனால் தமிழ்தேசிய அரசியல் வடக்குக்கு மட்டுமே என்றாக. மட்டகளப்பின் அரசியல் நுவரெலியாவின் அரசியல் போல ஆகும்.

முன் யோசனை இன்றி தமிழ் முஸ்லீம் விரோதத்தை தூண்டி விடும் போது இது இப்படி தமிழ் தேசிய அரசியல்/வட-கிழக்கு ஒற்றுமை மீதே பூமராங் ஆகும் என நம்மில் பலர் யோசிக்வில்லை.

கூட்டமைப்பும் இந்த விடயத்தை பொறுப்பாக கையாளாமல் கிடப்பில் போட்டது. கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஹிஸ்புல்லா போன்ற அரச ஆதரவு பெரும்புள்ளிகளின் ஆதரவில் நடந்த நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.

இன்னொருபுறம் முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலை மேலும் மேலும் ஏரியூட்டப்பட்டது. முஸ்லிம் பக்கத்தில் மேலும் மேலும் தமிழர்களை சீண்டும் செயல்கள் அரங்கேறின.

இருபுறமும் இதை பிண்ணணியில் நின்று இயக்கியவர்கள் மகிந்தவின் ஆட்கள்.

இப்போ இந்த திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இங்கே வியாழேந்திரனை எதிர்த்து எழுதுபவர்கள் யாரும் மட்டகளப்பு வாசிகள் அல்ல.

தனியும் அக்கினியும் எழுதுவதை பாருங்கள். என்னை விட தமிழ் தேசியத்தில் பற்றுக் கொண்டு எழுதியவர்கள் அவர்கள்.

தமிழ்தேசியத்தை நம்பி பலனில்லை, முஸ்லீமை எதிர்க்க கோட்டவே கதி என கூறப்படும் செய்தியை ஏற்றுக்கொண்டு “மூக்கை பிடித்தபடி” கோட்டவுக்கு வோட்டுப் போட பல மட்டு வாழ் தமிழ் மக்கள் தயாராகிறார்கள், தயாரக்கப்படுகிறார்கள்.

இப்போ புரிகிறாதா ஈஸ்டர் தாக்குதல் ஏன் மட்டுவில் நடந்தது என?

ஏனைய அரசியல்வாதிகளால் முடியாத போது வியாழேந்திரன் மட்டும் எமக்கு விடிவை தருவாறா? என்ற உங்கள் கேள்வியே தவறானது. வியாழேந்திரன் தமிழ் இனத்துக்கு தீர்வு தருவதாக சொல்லவில்லை. மாகாண சபை அதிகாரத்தை கூட்டுவேன் என்பது கூட இல்லை. தமிழ் ஊர்களுக்கு அபிவிருத்தி, அரசவேலை, முஸ்லீம்களிடம்பிருந்து காணியை பாதுகாப்பது, இப்படி அன்றாட பிரச்சினகளை கோட்டாவிடம் கேட்டு தீர்ப்பேன் என்பதே அவர் கூறுவது. இதை ஒரு எல்லை வரைக்கும் அவரால் செய்ய முடியும்.

மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள், வியாழேந்திரனின் சலுகை வழி செல்வார்களா? இல்லை தமிழ் தேசிய வழி செல்வார்களா?

வியாழேந்திரன் காட்டிய வழியில் போனால், குறுகிய காலத்தில் சில நன்மைகளை மட்டு தமிழ் மக்கள் அடைவார்கள். இந்த அரசியல் வெல்ல வேண்டும் என்பதே இனவாதிகளின் ஆசையும். எனவே வியாழேந்திரன் கேட்பதை ஒரு அளவுக்கு கொடுப்பார்கள். அவரும் கொடுக்க முடியாததை கேட்க மாட்டார்.

இந்த அரசியல், ஈற்றில் தமிழ் தேசிய அரசியலை வடக்குக்கு மட்டும் சுருக்கும்.

இந்த அவல நிலைக்கு யார் காரணம் 

1. இதை முளையிலேயே தீர்க்காத கூட்டமைப்பு

2. கண்மூடித்தனமாக தமிழ்-முஸ்லீம் விரோதத்தை தூண்டிய சகல தமிழர்களும், முஸ்லீம்களும்.

3. 4 வருடமாக கச்சிதமாக காய் நகர்த்திய மகிந்த தரப்பு.

8 hours ago, விசுகு said:

அர்ஜுன் அண்ணருக்கு  இவரை கனடா  வந்தபோது தான்  தெரியும்

அதுவும் கூட்டமைப்பின்  ஒரு  நாடாளுமன்ற  உறுப்பினராக..

ஆனால்  பழைய புளட்  உறவை  வைத்து

அதை  நம்பி

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  ஊரில் சில  விடயங்களை செய்யலாம்  என  இவரை அணுகி பேசியது  உண்மை

ஆனால்  அடுத்த  சில  மாதங்களில்  இவர் கூட்டமைப்பிலிருந்து ஓடி

 எங்கிருக்கிறார்  என்றே  தெரியாமல் ஒழிந்து

கடைசியில் மகிந்தவிடம்  சங்கமிக்க

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  தலைக்கு  வந்தது தலைப்பாகையுடன்  என....??(அதை  இங்கே  அவரே எழுதியிருக்கிறார்)

வியாழேந்திரன் மகிந்த பக்கம் தாவிய நாட்களில் அர்ஜூன் அண்ணா இங்கே எழுதுவதை நிறுத்தி விட்டாரே?

மேலதிக தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய வருவது கிந்தியவிற்கு ஏற்புடையது  அல்ல என்றே நம்பப்படுகிறது, தகவல் மற்றும் விடயம் அறிந்த வட்டங்களில்.

நான் அறிந்தது, கடந்த 18 மாதங்களில், ஹிந்தியை சீனாவை சொறி சிங்களத்தின் பல்வேறு துறைகள் மற்றும் விடயங்களில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதன் விபரங்களை அறியமுடியவில்லை.
 
கோத்தபாய வந்தால், சீனா மீண்டும் உள் வரும் என்பதை கோத்தபாய அணியில் உள்ள ரம்புக்வெல வெளிப்படையாக அறிவித்திருபது தெரிந்ததே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.