Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!


Recommended Posts

tamiul-party.jpg

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,

ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://athavannews.com/தமிழரின்-உரிமைகளை-வலியுற/

 

Edited by போல்
 • Like 1
Link to comment
Share on other sites

மாணவர் முயற்சி வெற்றி பெற்றது!

ஐந்து கட்சிகள் பொது உடன்படிக்கை மூலம் இணைந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை இவர்கள் இவர்கள் ஒன்றாக இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர்.

நேற்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்  கலந்து கொள்ளாமல் குழப்பத்தை  ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (தமிழ் மக்கள் முன்னணி) அழுத்தங்களால் "மனம் திருந்தி" இன்று கலந்துகொண்டு பொது உடன்பாட்டில் முதலாவதாக கையெழுத்து வைக்க, பின்னர் தமிழரசுக்கட்சி (மாவை), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்), சித்தார்த்தன் (புளட்) ஆகியோர் கையெழுத்து வைத்தனர்.

தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தாங்கள் ஏற்கனவே தனித்து கபட நோக்கத்துடன் பகிரங்கமாக அறிவித்த கொள்கையை எல்லாரும் ஏற்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வலியுறுத்திய கஜேந்திரகுமார் கோஷ்டி கையெழுத்து வைக்காமல் வெளியேறினார்.

 • Like 1
Link to comment
Share on other sites

காலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….

tamil-team.jpg

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சி முதலாவது கட்ட வெற்றியை எட்டியிருக்கிறது.

காலத்தின் தேவையுணர்ந்து தங்களின் சமூக கடமையை புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது.

ஐந்து கட்சிகளின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஆவணம், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டு அதுதொடர்பான அவர்களின் நிலைப்பாடு அறியப்படவுள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த ஐந்து கட்சிகளும் தமது ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளன.

கையெழுத்திடப்பட்டுள்ள ஆவணத்தில் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் காணி விடுவிப்பு – அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பௌத்த ஊடுவல் – தொல்பொருள் திணைக்களத்தின் எதேச்சாதிகார செயற்பாடு – அரச நியமனங்களில் காணப்படும் குளறுபடிகள் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை பொறுத்தவரையில் தமிழர் தரப்புடன் எந்தவிதமான எழுத்து மூலமான ஒப்பந்தங்களுக்கும் தயார் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர்.

அவர்கள் விரும்பினாலும்கூட ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலைகள் தென்னிலங்கையில் இல்லை. அதற்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களினால் புறந்தள்ளி விடவும் முடியாது. அது தமக்கான வெற்றியை அவர்களாகவே புறந்தள்ளி விடுகின்ற காரியமாகவே இருக்கும்.

இந்த தர்ம சங்கடமான நிலையை பிரதான வேட்பாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நன்கே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தமிழ் மக்கள் சார்ந்த பிரதான தரப்புக்கள் இணைந்துள்ளன.

இந்த இணைவு, “எந்த ஒப்பந்தங்களையும் செய்து கொள்ள மாட்டேன். ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கே வாக்களிப்பார்கள்” என்று எகத்தாளமிட்ட தரப்புக்களையும் நிச்சயம் கொஞ்சம் யோசிக்க வைக்கும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தொடர்ந்தும் புத்திசாதுரியமாக கையாள வேண்டும்.

“தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை, எழுத்து மூல ஒப்பந்தத்துக்கு தயாராக இல்லை” என்று இன்றைய சூழலில் சாத்தியமற்ற சாராம்சத்திற்காக யாரும் தாழியை உடைத்து நாசம் பண்ணி விடக்கூடாது.

ஓப்பீட்டளவில் அதிகபட்ச கோரிக்கையை சாதகமாக பரசீலிக்கும் தரப்பு எது? – எந்தத் தரப்பு கணிசமான – அதேவேளை காத்திரமான கோரிக்கைகளை தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க உடன்படுகின்றன போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, அதிகபட்ச கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் அவற்றிற்கான கால எல்லைகளை வரையறுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, முடியுமானவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செயற்படுத்த வலியுறுத்த வேண்டும்.

குறித்த செயற்றிறனின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் சிவாஜிலிங்கம் களம் இறங்கியிருக்கிறார். யார் சொல் பேச்சுக் கேட்டு இறங்கினாரோ தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே ஒரு தடவை ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் அவர்.

“பிரதான வேட்பாளர்கள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சாதகமாக பரசீலித்தால் தேர்தலில் இருந்து விலகுவது தொடர்பாக பரிசீலிக்கலாம்” என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

அதேவேளை, ஜே.வி.பி.யும் தனித்து நிற்பதால் சில ஆயிரம் வாக்குகள்கூட முடிவை மாற்றிவிடும் என்ற நிலையில் கள நிலைவரம் காணப்படுகின்றது.

எனவே, “நீங்கள் எமது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால் சிவாஜியை களத்தில் இருந்து அப்பறப்படுத்துவோம்” என்ற செய்தியை பக்கபலமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு முடிந்தவரை தமிழ் மக்கள் பயனடையும் வகையிலும் அடிப்படை அபிலாசைகளை முன்னகர்த்தும் வகையிலும், இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பின் இன்றைய இணைவு முன்னகர வேண்டும்.

இந்த ஒருங்கிணைவை இடையிலே துண்டிக்காமலும் சூழ்ச்சிகளை சூழவிடாமலும் முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பை மாணவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

http://athavannews.com/காலத்தின்-தேவை-உணர்ந்த-இ/

 • Like 1
Link to comment
Share on other sites

ஐந்து கட்சிகளை பொது இணக்கப்பாட்டில் இணைத்த வடகிழக்கு பல்கலை மாணவர்கள்! அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?

இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து,

வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும்“ என்று ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது உடன்பாட்டின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட் பொது உடன்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டிருந்தனர்.

ஐந்து தமிழ்க்கட்சிகளும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:

இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் எமது நிலைப்பாட்டுக்கு அமைவாக,

நடந்து முடிந்த யுத்தத்தின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வை சாத்தியமான வழிகளில் காண முடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்கு கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரசபடைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகாரசபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு; மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடக்கு – கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தை சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செயயப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றுள்ளது.

*****

https://www.tamilwin.com/politics/01/228565?ref=home-feed

 

 • Like 2
Link to comment
Share on other sites

எங்களை திட்டுமிட்டு ஓரம் கட்டிவிட்டார்கள்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.

இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30 மணியளவில் பொது இணக்கப்பாட்டு ஆவணம் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர், ஒப்பமிட்டனர்.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் கையொப்பம் இடவில்லை. இதில் இருந்து வெளிநடப்புச் செய்தது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர்,

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது. எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர்.

நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால், இனத்திற்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை மட்டுமல்ல, அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் இழக்க நேரிடும்.

போலி ஒற்றுமையைக் காட்டி பதவிகளை பெற்று, மக்களை ஏமாற்ற நாங்கள் தயாரில்லை. சிங்கள கட்சிகளும், சிங்கள பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட, இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய முன்னணிக்குத் தரவில்லை என்றார்.

இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ஆறு தமிழ்க் கட்சிகளுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் இணைந்து, பேச்சுக்களை நடத்தி வந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/politics/01/228548?ref=home-top-trending

 

 • Like 1
Link to comment
Share on other sites

ஒற்றையாட்சி தொடர்பான கருத்துக்களில் கஜேந்திரகுமார் மிகவும் அப்பட்டமான பொய்களை நாக்கூசாமல் மேலே கூறியுள்ளார்.  

தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தாங்கள் ஒற்றைக்காலில் நின்றதை மறைத்து விட்டார்!

நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்.  

(1) முதலாவது கலந்துரையாடலிலிருந்து தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை சேர்க்காவிட்டால் தாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்று கஜேந்திரகுமார் கும்பல் மிரட்டி வந்தது.

(2) ஒற்றையாட்சி நிராகரிப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு பற்றி தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இரண்டாவது கூட்டத்தில் சமர்ப்பித்த தமது அறிக்கைகளில் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் தமிழரசுக்கட்சி ஏனைய சகல கட்சிகளால் முன்வைக்கப்பட்ட "ஒற்றையாட்சி நிராகரிப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு" என்பதை உடனடியாக ஏற்றுக்கொண்டிருந்தது. எனவே இதை தமது தனித்துவமான கோரிக்கை என கஜேந்திரகுமார் கோஷ்டி உரிமை கொண்டாடி இப்போது நாடகமாடுவது, மக்களை ஏமாற்ற முனைவது  அவர்களின் மிகமிக மோசமான கீழ்த்தரமான பண்பினைக் காட்டுகிறது.

(3) இரண்டாவது கலந்துரையாடலின் பின்னர் கஜேந்திரகுமார் கோஷ்டி கபட நோக்கங்களுடன் தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அறிக்கைகளை வெளியிட்டனர்.  

(4) ஆரம்பத்திலேயே தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, பின்னர் நிலைமைக்கேற்ப தேவைப்பட்டால் அப்படியான ஒரு முடிவை பரிசீலிக்கலாம் என்று 5 கட்சிகளும் ஒருமித்துக்  கூறியவற்றை கஜேந்திரகுமார் கோஷ்டி ஏற்கவில்லை.

(5) கஜேந்திரகுமார் கோஷ்டி குறித்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தங்கள் கட்சியின் பெயரை தனித்துவமாக குறிப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து, அது ஏற்றுக்கொள்ளப்படாத போது தாமே வெளியேறினார்கள். அவர்களை யாரும் வெளியேற்றவில்லை.

Edited by போல்
 • Like 1
Link to comment
Share on other sites

"இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது."

ஆவணத்தை அனுர குமரவின் கட்சியிடமும் சமர்ப்பிப்பது நன்று. காரணம், வளர்ந்து வரும் கட்சி. நாளை, இரண்டாம் இடத்திற்கு வரக்கூடிய நிலையில் உள்ளது.      

Link to comment
Share on other sites

 

Five Tamil parties, Tamil National Alliance (TNA), People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Eelam's People's Revolutionary Liberation Front (EPRLF), Tamil Makkal Kootani (TMK) and Tamil Eelam Liberation Organisation (TELO),  signed a memorandum today, highlighting key demands of Tamils, which are to be presented to the two presidential candidates. This is in order to help decide the position of Tamils in the upcoming Presidential election.

https://www.tamilguardian.com/content/tamil-parties-sign-memorandum-key-demands  

Link to comment
Share on other sites

 

சரித்திரத்தின் ஒரு அன்றைய பக்கமும் இன்றைய பிரகடனமும் 

1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.

1976 ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.

வட்டுக்கோட்டை பிரகடனம்
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் தொகுதியில் வழகம்பரை அம்மன் கோவில் அருகில் மிக பிரமாண்ட அரங்கில் பிரகடனம் செய்தனர்.

 • இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
 • அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
 • அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்
Link to comment
Share on other sites

தமிழ்கட்சிகள் பஞ்ச ஒப்பம்! அதீத பிம்பம் தேவைதானா?

நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களை சமகாலத்தில் உள்ளுரிலும் காணமுடிகிறது உலக அரங்கிலும் காணமுடிகிறது.

வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்துகளின் முதுகில் அமெரிக்கா குத்தியவுடன் தமது இருப்புக்கு ஆபத்தாக எல்லைதாண்டி வரும் துருக்கியின் வியூகத்தை முறியடிக்க தமக்கு ஒவ்வாமை கொண்ட அசாத்தின் இராணுவத்தோடு குர்துகள் சமரசத்தை எட்டினர்.

இவ்வாறாக குர்துகள் எடுத்த திடீர் சமரச நிலையை எதிர்பார்க்காத டொனால்ட் ரம்போ தன்னால் முதுகில் குத்தப்பட்ட குர்துகளின் ஆற்றாமையையும் குர்துகளை கைவிட்டமை ஒரு துரோகம் அமெரிக்க ராணுவ உயர்மட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பையும் சமாளிக்க துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி என்ற கோதாவில் சில நகர்வுகளில் இறங்கியுள்ளார்.

அதன் முதற்கட்டமாக துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், துருக்கி அரச இயந்திரத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வோசிங்டன் கூறுகிறது. அத்துடன் இந்த நிலவரங்களை கையாளவென அமெரிக்க துணை அரசதலைவர் மைக் பென்சும் விரைவில் ஓடோடிச்செல்லவுள்ளார்.

இது உலக அரங்கில் நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களுக்கு ஒரு உதாரணம். உலக அரங்கில் இவ்வாறு இடம்பெற இலங்கைத்தீவின் அரசியல் அரங்கிலும் இவ்வாறான நகர்வுகளும் பீறிட்டுச்செல்லும் சில காட்சிகளும்; தெரியத்தான் செய்தன.

இன்னும் சரியாக ஒரு மாதத்தில் நவம்பர் 16 இல் சிறிலங்காவி முதன்மைத்தலையாரியை தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது.

ஆயினும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான நகர்வை எடுப்பது? எந்தப்பிசாசுக்கு வாக்களிப்பது? என இருக்கக்கூடிய முக்கிய பேசுபொருளுக்கு தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளால் இன்னமும் முறையான விடைவழங்கப்படவில்லை. இதற்குமாறாக தேர்தல் புறக்கணிப்பு என்ற குரல்கள் தேய்மானமாகவும் சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என்ற குரல்கள் தான் தமிழர் பிரதிநிதிகளிடம் இருந்து ஒலிக்கச் செய்கின்றன.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் ஒரு பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு அத்தியாயம் நேற்று முடிந்தவேளை தமிழ் கட்சிகளின் ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்;ட பொது உடன்பாடு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் ஒப்பமிட்டிருந்தன

ஆயினும் பலமான வாதப்பிரதி வாதஙகளுடன் நகர்ந்த இந்த அத்தியாயத்தின் ஒரு ஒரு முக்கிய மையப்புள்ளியாக சிறிலங்காவின் இடைக்கால அரசியலமைப்பை எதிர்ப்பதா? இல்லையா என்ற விடயம் மாறியிருந்தது.

குறிப்பாக சிறிலங்காவின் இடைக்காலஅரசியலமைப்பை எதிர்க்கும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாசகங்கள் இந்தஉடன்படிக்கை ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக இருந்தது ஆனால் ஏனைய கட்சிகளோ இதற்குத்தயாராக இல்லை.

இதனால் தங்களது நிலைப்பாட்டில் சமரசம் செய்த் தயாராக இல்லாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலிருந்து துருத்தியபடி வெளியேறியது. இறுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டனர்.

தற்போது இந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்ற பாணியிலான தன்னிலை விளக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித்தர்ப்பில் இருந்தும் அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் ஒற்றுமையை குழப்புவதாக விமர்சனம் சுரேஷ்பிரேமச்சந்திரன் தரப்பில் இருந்தும் வருகின்றன.

ஆனால் நேற்று இந்த 5 கட்சிகளுக்கும் இடையில் ஒப்பமிடப்பட்ட இந்த ஆவணம் இந்தத்தேர்தலில் தமிழ்மக்கள் எந்த நகர்வை எடுப்பது? அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற வினாக்களுக்கு நேரடியாக விடைவழங்கும் ஒரு ஆவணமாகத்தெரியவில்லை

மாறாக சிறிலங்காவின் முதன்மைத் தலையாரிக்குரிய தேர்தல் களத்தில் நிற்கும் சிங்களத்தின் முன்னணி வேட்பாளக்குதிரைகளிடம் தமிழர்களின் சார்பாக தமிழ்கட்சிகள் முன்வைக்கபடவேண்டிய 12 அம்சங்களை கோரும் ஒரு ஆவணமாகவே காட்சியளிக்கின்றது.

https://www.ibctamil.com/articles/80/129502

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 15 Oct 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த பொது ஆவணத்தில் கையெழுத்திட முன்னரேயே கோத்தபையனுடன் சுமந்திரன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தாரே?

இனி என்ன இரண்டாவது ரவுண்ட் பேச்சோ?

Link to comment
Share on other sites

பேரம் பேசும் பலத்தை இழந்தமையே தமிழர்பகுதியில் சிங்கள குடியேற்றம் பௌத்தமயமாக்கல் உருவாக காரணம் -யாழ்பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!

"ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர்." என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்பாடொன்றினை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் அந்த முயற்சியின்பலனாக ஐந்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றைத் தோற்றுவித்திருந்தன.

இது பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு :

இலங்கைத்தீவில் கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிவந்த நிலையிலேயே இன்று நாம் ஒட்டு மொத்தமாக எமது பூர்வீக ரீதியான தாயகத்தின் இனப்பரம்பல் முற்று முழுதாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. கிழக்கில் தொடங்கிய பௌத்த சிங்கள மயமாக்கல் இன்று வடக்கிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் அவற்றை தடுத்து நிறுத்த முடியாதவர்களாக கையறு நிலையிலேயே இருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களினது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களான அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், இராணுவ வெளியேற்றம், மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், காணாமல் போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வு காணுதல், முதலான விடயங்களிற்கு கூட எம்மால் தீர்வுகாண முடியாத துர்ப்பாக்கிய நிலையினை எமது அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொண்டிருந்தால் இத்தகைய பொது உடன்பாட்டு முயற்சி ஒன்றினை நாம் மேற்கொண்டு பேரம் பேசும் பலத்தினை அதிகரிக்க வேண்டும் என்கின்ற தேவையும் எண்ணமும் எமக்கு ஏற்பட்டிருக்காது.

தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த முடிவொன்றினை எடுப்பதன் மூலமாக நாம் இழந்த பேரம் பேசும் பலத்தினை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமாகவே நாம் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க சாத்தியமான வழிகளில் முன்னகர முடியும். இன்றைய சூழலில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டுமாயின் எமது பேரம்பேசும் பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள தமிழ்த்தேசிய நிலைப்பாடுடைய கட்சிகள் ஒருமித்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவை என்பதனை உணர்ந்து கொண்டதனாலேயே நாம் இத்தகைய முயற்சியில் கட்சிகளினை கலந்துரையாடுவதற்கு அழைத்திருந்தோம்.

இந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே ஓர் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினை தயாரித்து அதனை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது என்பது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதன் பேரிலேயே தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட கட்சிகளினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே இவ் ஆவணத்தயாரிப்பு இடம்பெற்றது.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் செம்மையான வகையில் தயாரிக்கப்படுவதில் தமது முழுமையான ஒத்துழைப்பினை பங்குபற்றிய அனைத்து கட்சிகளும் மனப்பூர்வமாக இணைந்து மேற்கொண்டிருந்தார்கள். இப்பொது உடன்பாட்டு ஆவணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய அனைத்து கட்சிகளும் முழுமையாக ஏற்றுக்கொண்ட போதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய யாப்புருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியை முன்னிலைப்படுத்துவதாக அமைவதால் அதனை நிராகரிக்க வேண்டும் என்பதனையும் குறித்த ஆவணத்தில் உள்வாங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பிரேரித்த வேளையில் அவ்விடயம் தொடர்பாக கட்சிகள் அனைத்தினாலும் ஒன்றிற்கு ஒன்று முரணான வாதங்கள் முன்வைக்கப்பட்டு நீண்ட நேர வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றும் ஓர் முடிவு எட்டப்படாத நிலையிலேயே நான்காவது கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளையும் இணங்க வைத்து பொது உடன்பாட்டை கைச்சாத்திடும் நோக்குடன் 14-10-2019 அன்று மதியம் 1.30இற்கு ஆரம்பமான கலந்துரையாடலின் போது இடைக்கால அறிக்கையினை நிராகரிக்க வேண்டும் என்பதனை ஆவணத்தில் உள்ளடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதியாக இருந்த நிலையில் தமிழரசுக்கட்சி, புளொட் என்பன அதனை ஆவணத்தில் உள்ளடக்க கூடாது என்றும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழியின் பேரிலேயே யாப்பு உருவாக்க முயற்சி இடம்பெறுகின்றது. அதனை நாம் குழப்பி விடக்கூடாது என்றனர்.

அதேவேளை ரெலோ தரப்பினர் கருத்து தெரிவிக்கும் போது தாம் அவ் இடைக்கால வரைபு வந்த போதே அதனை எதிர்த்தவர்கள் என்றும் இன்றைய நிலையில் அதனை ஆவணத்தில் உள்வாங்கி தமிழரசுக்கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமென்றும் தாம் ஒன்றாக பயணிப்பவர்கள் என்பதால் இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து இவ் ஆவணத்தில் இடைக்கால அறிக்கை நிராகரிப்பதை உள்ளடக்க தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தாம் இடைக்கால அறிக்கையினை வெளிப்படையாக நிராகரித்துள்ள போதும் புதிய யாப்பு உருவாக்கம் கைவிடப்பட்ட நிலையிலும் இவ் ஆவணத்தில் ஒற்றையாட்சி நிராகரிப்பு என்ற வாசகம் இருப்பதன் அடிப்படையிலும் இடைக்கால அறிக்கை பற்றி இவ்ஆவணத்தில் உள்ளடக்க வேண்டிய தேவை இல்லை எனவும் வாதிட்டனர்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியினர் இவ்வாதங்களுடன் உடன்பட மறுத்து அதற்கான நியாயப்பாடுகளினையும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இவ்யாப்பு உருவாக்க முயற்சி தொடர வாய்ப்புள்ளமையை ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்துக்களை குறிப்பிட்டு முன்வைத்தார்கள். அதனால் ஒற்றையாட்சி இடைக்கால வரைபு நிராகரிக்கப்பட வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் விவாதம் நீண்டு கொண்டு செல்வதாலும் இதனை ஓர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நோக்கிலும் அடிக்குறிப்பிலேனும் இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரேரித்தது என குறிப்பிடலாம் என சிவில் சமூக தரப்பினரால் ஓர் கருத்து முன்வைக்கப்பட்டது. அதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொண்ட போதும் ஏனைய கட்சிகள் அடிக்குறிப்பினை இடுவது எம்முள் இணக்கப்பாடு இல்லை என்பதனை தெளிவாக காட்டுமென்பதுடன் பொது ஆவணம் பலவீனமடையும் எனக் கூறி அதனை அடியோடு மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே நாம் எமது நிலைப்பாட்டினை கோரிக்கையாக புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழர் தேசத்தினை அங்கீகரித்து, அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெளிவாக தீர்வுத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிலையிலும் இடைக்கால அறிக்கையை நிராகரித்தல் என்பது இவ் ஆவணத்தில் தேவையற்றதென வாதிட்டனர்.

இந்நிலையில் இறுதியாக இடைக்கால அறிக்கை நிராகரித்தல் வேண்டும் என்ற விடயத்தை ஆவணத்தில் உள்ளடக்காது விடுவது என்பதுடன் இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட கட்சிகள் வெளிப்படுத்திய கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் நாம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக பகிரங்கப்படுத்துவதென்றும் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பால் வலியுறுத்தப்பட்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கையொப்பமிட மறுத்தனர்.

தொடந்தும் சிவில் சமூகத்தினர் சார்பில் பங்கு கொண்ட மதகுருமார்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் வெற்றி அளிக்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இப் பொது உடன்பாட்டில் கையொப்பமிட மறுத்ததுடன் தமது கவலையினையும் பதிவு செய்து வெளியேறிச் சென்றனர்.

இந்நிலையில் கையொப்பமிட்ட ஐந்து கட்சியினருடனும் தொடர்ந்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு ஐந்து கட்சித் தலைவர்களும் அடங்கிய குழுவினர் இவ் ஆவணத்தை முன்வைத்து மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதென்றும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகளினை தீர்மானிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம், ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இவ் பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ் விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக் கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்.

தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் எமது முயற்சி மக்கள் முன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் எனில் மக்கள் இவ் விடயத்தில் சரியான முடிவினை எடுக்கும் வகையில் அவ் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும் என்றுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/129558

 • Like 1
Link to comment
Share on other sites

தமிழர்களின் கோரிக்கைகள் தென்னிலங்கையில் தெளிவு படுத்தப்படவில்லை

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமிழ் கட்சிகளின் எதிர்பார்ப்புக்கள் வெளிப்படையான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என முற்போக்கான இளம் சிந்தனையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அந்த அடிப்படையில் குறித்த எதிர்பார்ப்பினை சமூக சிந்தனையாளரும் இளம் பொறியியலாளருமான சொபிஷன் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியால் ஜந்து தமிழ் கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஆவணம் தொடர்பாக தென்னிலங்கையில் பாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சொபிஷன், ‘குறித்த ஆவணம் சரியான முறையில் தென்னிலங்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மூன்று விடயங்களும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பானது. அவை வெற்றி பெறப்போகின்ற ஜனாதிபதியால் அடுத்த ஜந்து வருடங்களில் நிறைவேற்ற முடியாதவை என்பது அனைவருக்கும் தெரியும்.

எனினும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதே அவை குறிப்பிடப்பட்டதன் நோக்கமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

எனினும் முதல் மூன்று விடயங்களுமே தென்னிலங்கையில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றது. இதனால் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய ஏனைய விடயங்கள் மறைந்து போயுள்ளன.

எனவே, குறித்த ஆவணத்துடன் சம்மந்தப்பட்ட தரப்புக்கள், ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் அடுத்த ஜனாதிபதியின் காலத்தில் நிறைவேற்றக் கூடிய விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்தி வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/தமிழர்களின்-கோரிக்கைகள-2/

Edited by போல்
 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

சுமந்திரன் எப்படி தனது எசமான் ரணில் கும்பலுக்கு தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பது என்று ஆராய பிரான்ஸ் சென்று திரும்புகிறார்!

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

சுமந்திரன் எப்படி தனது எசமான் ரணில் கும்பலுக்கு தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பது என்று ஆராய பிரான்ஸ் சென்று திரும்புகிறார்!

பிரான்சில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இடையிலேயே கூட்டம் குழம்பியதாக கேள்விப்பட்டேன்.

பிரான்ஸ் உறவுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு மந்தைகளாகக் கூடாமல் சும்மா.. ஒப்புக்கு கூடாமல்.... உண்மைத் தன்மையோட்டு நல்ல கூட்டமாகக் கூடி.. இவர்கள் எதிரிகளை விஞ்சி எதை சாதிப்பார்கள்.. எப்படி சாதிப்பார்கள் என்பதே கேள்வி..??!

ஏற்கனவே இப்படி பல தடவைகள்.. ஒன்றாக கையெழுத்து இட்டுவிட்டு.. ஆளுக்காள் குழிபறித்தது தான் கடந்த கால வரலாறு. 

Image result for பிரபா பத்மநாபா சிறிசபாரத்தினம் பாலகுமார்

இந்தக் கூட்டணி நிலைத்திருந்தாலே.. அன்று நாம்.. எமது இலக்கை வெகு விரைவாக அடைந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

ஆட்டு மந்தைகளாகக் கூடாமல் சும்மா.. ஒப்புக்கு கூடாமல்.... உண்மைத் தன்மையோட்டு நல்ல கூட்டமாகக் கூடி.. இவர்கள் எதிரிகளை விஞ்சி எதை சாதிப்பார்கள்.. எப்படி சாதிப்பார்கள் என்பதே கேள்வி..??!

ஏற்கனவே இப்படி பல தடவைகள்.. ஒன்றாக கையெழுத்து இட்டுவிட்டு.. ஆளுக்காள் குழிபறித்தது தான் கடந்த கால வரலாறு.

Game Theory என்ற ஒரு துறைசார் அறிவியல் முறை இருக்கிறது. பொருளாதார திட்டங்களை வகுக்க இந்த அறிவு பெருமளவில் பயன்படுத்த படுகிறது. இராணுவ வியூகங்களும் இந்த Game Theory யை பயன்படுத்தி வெற்றி அடைந்து இருக்கின்றன. ஒரு சர்வதேச மட்டத்திலான ஆய்வில் இலங்கை இராணுவமும் இந்த Game Theory யை அதிகளவில் பிற்காலத்தில் பயன்படுத்தியதாக குறிப்பிட்டு இருந்தது.

அரசியல் வெற்றிகளுக்கும் Game Theory சிறப்பாக பயன்படும். இதன் கணித சமன்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, மேலோட்டமாக Game Theory யின் படி இந்த தேர்தலை எப்படி இலங்கை சிறுபான்மை மக்கள் அணுக வேண்டும் என்று சிந்தித்து பார்க்கலாம்.

தேர்தலில் தாக்கமுள்ள வழிகள் மூன்று:

 1. கோத்தபாயவுக்கு வாக்களிப்பது.
 2. சஜித்துக்கு வாக்களிப்பது.
 3. பங்குபற்றாமல் விடுவது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளில் சஜித்தே தங்கி இருக்கிறார்.

ஆகவே தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் சஜித் தோற்பார். சிறுபான்மை மக்கள் ஒரு போதும் கோத்தபாயவை வெற்றி பெற விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சஜித் உறுதியாக இருக்கிறார். அந்த எண்ணத்தை நிலைகுலைத்து சிறுபான்மை மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து ரனிலை தோற்க வைத்தது போல தன்னையும் தோற்க வைக்ககூடியவர்கள் என்ற பயம் சஜித்துக்கு வரவேண்டும். அந்த பயம் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை பற்றி சஜித் வெளிப்படையாக கலந்துரையாட முன்வரும் அளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும். அதேவேளை, சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை வெளிப்படையாக கலந்துரையாடுவதால் சஜித் சிங்கள வாக்குகளை கணிசமான அளவில் இழந்தாலும் தோல்வி அடைவார். ஆகவே சஜித் அதனையும் கருத்தில் கொள்வார் என்பதை சிறுபான்மை மக்கள் கவனத்தில் கொண்டே தங்கள் கலந்துரையாடலை திட்டமிட வேண்டும்.

எந்த ஒரு விடயத்தை எடுத்து கொண்டாலும், அதுபற்றிய தத்துவங்கள் (theory) ஒருபுறம், நடைமுறை சாத்தியமான தீர்வு மறுபுறம் என இரு அணுகுமுறைகள் உள்ளன. இந்த 5 கட்சிகளின் கோரிக்கைகளில் சில தத்துவார்த்தமானவை. உதாரணமாக, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நடைமுறையில் இவை மக்களுக்கு எப்படி பயன்படும்? என்பது கேள்விக்குறி. அதே வேளை Game Theory யின் படி, இந்த தத்துவங்கள் பற்றி கலந்துரையாடுவதன் மூலம் சஜித் இழக்க போகும் வாக்குகள், இந்த 5 கட்சிகளின் ஆதரவினால் கிடைக்க கூடிய வாக்குகளிலும் பார்க்க பெருமளவு அதிகமானவை. ஆகவே, இந்த 5 கட்சிகளின் கோரிக்கைகள், Game Theory யின் படி, வெற்றி பெற முடியாத கோரிக்கைகள். பல்கலைக்கழக மாணவர்கள் Game Theory யை பயன்படுத்தி இந்த தேர்தலை அணுகுவது கோரிக்கைகளை வென்றெடுக்க உதவ கூடும்.

 

Edited by Jude
 • Like 4
Link to comment
Share on other sites

3 hours ago, Jude said:

தேர்தலில் தாக்கமுள்ள வழிகள் மூன்று:

 1. கோத்தபாயவுக்கு வாக்களிப்பது.
 2. சஜித்துக்கு வாக்களிப்பது.
 3. பங்குபற்றாமல் விடுவது.

அதுசரி உந்த 2 பேர் தான் தெரிஞ்சிருக்கு.

உங்களுக்கு ஏன் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கம் கண்ணுல படேலை?

உண்மையிலே game therory அக்குவேற ஆணிவேறையா பிச்சு உதறிட்டீங்க அண்ணே! தமிழினத்தை அழிகிறதுக்கு சூப்பரா உங்கட theoryயை அமைச்சிருக்கீங்க.

தமிழினம் ஒன்டில் பேரினவாதத்துக்கு மட்டுமே வாக்களிக்கோணும் அல்லது வாக்களிக்கவே கூடாது என்கிறது தான் உங்கட பிச்சு உதறிண game therory ஓ?

தமிழினம் தப்பி தவறியும் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக்கூடாது என்று உங்கட game therory ஐ நல்லாதான்  உருவாக்கி இருக்கீங்க

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

அதுசரி உந்த 2 பேர் தான் தெரிஞ்சிருக்கு.

உங்களுக்கு ஏன் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கம் கண்ணுல படேலை?

உண்மையிலே game therory அக்குவேற ஆணிவேறையா பிச்சு உதறிட்டீங்க அண்ணே! தமிழினத்தை அழிகிறதுக்கு சூப்பரா உங்கட theoryயை அமைச்சிருக்கீங்க.

தமிழினம் ஒன்டில் பேரினவாதத்துக்கு மட்டுமே வாக்களிக்கோணும் அல்லது வாக்களிக்கவே கூடாது என்கிறது தான் உங்கட பிச்சு உதறிண game therory ஓ?

தமிழினம் தப்பி தவறியும் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக்கூடாது என்று உங்கட game therory ஐ நல்லாதான்  உருவாக்கி இருக்கீங்க

இதென்ன புதுக்கதை?  சிவாஜிலிங்கம் “தமிழத்தின்” ஐனாதிபதியாக வந்து எவ்வளவோ காலமாச்சே?😁 

நான் எழுதினது சிறிலங்கா பற்றி, “தமிழத்தின்” பற்றியல்ல.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

Game Theory என்ற ஒரு துறைசார் அறிவியல் முறை இருக்கிறது. பொருளாதார திட்டங்களை வகுக்க இந்த அறிவு பெருமளவில் பயன்படுத்த படுகிறது. இராணுவ வியூகங்களும் இந்த Game Theory யை பயன்படுத்தி வெற்றி அடைந்து இருக்கின்றன. ஒரு சர்வதேச மட்டத்திலான ஆய்வில் இலங்கை இராணுவமும் இந்த Game Theory யை அதிகளவில் பிற்காலத்தில் பயன்படுத்தியதாக குறிப்பிட்டு இருந்தது.

அரசியல் வெற்றிகளுக்கும் Game Theory சிறப்பாக பயன்படும். இதன் கணித சமன்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, மேலோட்டமாக Game Theory யின் படி இந்த தேர்தலை எப்படி இலங்கை சிறுபான்மை மக்கள் அணுக வேண்டும் என்று சிந்தித்து பார்க்கலாம்.

தேர்தலில் தாக்கமுள்ள வழிகள் மூன்று:

 1. கோத்தபாயவுக்கு வாக்களிப்பது.
 2. சஜித்துக்கு வாக்களிப்பது.
 3. பங்குபற்றாமல் விடுவது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளில் சஜித்தே தங்கி இருக்கிறார்.

ஆகவே தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் சஜித் தோற்பார். சிறுபான்மை மக்கள் ஒரு போதும் கோத்தபாயவை வெற்றி பெற விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சஜித் உறுதியாக இருக்கிறார். அந்த எண்ணத்தை நிலைகுலைத்து சிறுபான்மை மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து ரனிலை தோற்க வைத்தது போல தன்னையும் தோற்க வைக்ககூடியவர்கள் என்ற பயம் சஜித்துக்கு வரவேண்டும். அந்த பயம் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை பற்றி சஜித் வெளிப்படையாக கலந்துரையாட முன்வரும் அளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும். அதேவேளை, சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை வெளிப்படையாக கலந்துரையாடுவதால் சஜித் சிங்கள வாக்குகளை கணிசமான அளவில் இழந்தாலும் தோல்வி அடைவார். ஆகவே சஜித் அதனையும் கருத்தில் கொள்வார் என்பதை சிறுபான்மை மக்கள் கவனத்தில் கொண்டே தங்கள் கலந்துரையாடலை திட்டமிட வேண்டும்.

எந்த ஒரு விடயத்தை எடுத்து கொண்டாலும், அதுபற்றிய தத்துவங்கள் (theory) ஒருபுறம், நடைமுறை சாத்தியமான தீர்வு மறுபுறம் என இரு அணுகுமுறைகள் உள்ளன. இந்த 5 கட்சிகளின் கோரிக்கைகளில் சில தத்துவார்த்தமானவை. உதாரணமாக, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நடைமுறையில் இவை மக்களுக்கு எப்படி பயன்படும்? என்பது கேள்விக்குறி. அதே வேளை Game Theory யின் படி, இந்த தத்துவங்கள் பற்றி கலந்துரையாடுவதன் மூலம் சஜித் இழக்க போகும் வாக்குகள், இந்த 5 கட்சிகளின் ஆதரவினால் கிடைக்க கூடிய வாக்குகளிலும் பார்க்க பெருமளவு அதிகமானவை. ஆகவே, இந்த 5 கட்சிகளின் கோரிக்கைகள், Game Theory யின் படி, வெற்றி பெற முடியாத கோரிக்கைகள். பல்கலைக்கழக மாணவர்கள் Game Theory யை பயன்படுத்தி இந்த தேர்தலை அணுகுவது கோரிக்கைகளை வென்றெடுக்க உதவ கூடும்.

 

நீங்கள் கூறுவது நிகழ்தகவு(Probability) எனநினைக்கிறேன் தவறெனில் மன்னிக்கவும் ,நிகழ்தகவின் தரவுகளின் அடிப்படையில் ROR (Risk of Ruin simulator) இணைது ஒன்று நிகழ்வதற்கான சாத்தியகூறுகளை  ஆராய்வார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/16/2019 at 10:17 PM, ஈழப்பிரியன் said:

இந்த பொது ஆவணத்தில் கையெழுத்திட முன்னரேயே கோத்தபையனுடன் சுமந்திரன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தாரே?

இனி என்ன இரண்டாவது ரவுண்ட் பேச்சோ?

பேசுவதில் பிழையேதும் இல்லையே? 

4 hours ago, Gowin said:

அதுசரி உந்த 2 பேர் தான் தெரிஞ்சிருக்கு.

உங்களுக்கு ஏன் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கம் கண்ணுல படேலை?

உண்மையிலே game therory அக்குவேற ஆணிவேறையா பிச்சு உதறிட்டீங்க அண்ணே! தமிழினத்தை அழிகிறதுக்கு சூப்பரா உங்கட theoryயை அமைச்சிருக்கீங்க.

தமிழினம் ஒன்டில் பேரினவாதத்துக்கு மட்டுமே வாக்களிக்கோணும் அல்லது வாக்களிக்கவே கூடாது என்கிறது தான் உங்கட பிச்சு உதறிண game therory ஓ?

தமிழினம் தப்பி தவறியும் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக்கூடாது என்று உங்கட game therory ஐ நல்லாதான்  உருவாக்கி இருக்கீங்க

சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பதனூடாக நாங்கள் எத்தனை பெறமுடியும்?  அல்லது எத்தனை சாதிக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டுமல்லவா ? 

Link to comment
Share on other sites

9 hours ago, Jude said:

ஆகவே, இந்த 5 கட்சிகளின் கோரிக்கைகள், Game Theory யின் படி, வெற்றி பெற முடியாத கோரிக்கைகள். பல்கலைக்கழக மாணவர்கள் Game Theory யை பயன்படுத்தி இந்த தேர்தலை அணுகுவது கோரிக்கைகளை வென்றெடுக்க உதவ கூடும்.

பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தான் இந்த 13 கோரிக்கைகளை உருவாக்கினார்கள்.

இப்படியான கோரிக்கையை உருவாக்கி வெளியிட்டதன் மூலம் மகிந்த & கோவிற்கு சிங்கள மக்களின் ஆதரவை அதிகரித்தது தான் மிச்சம். இதை வைத்து நல்லா அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

15 hours ago, Jude said:

ஆகவே தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் சஜித் தோற்பார். சிறுபான்மை மக்கள் ஒரு போதும் கோத்தபாயவை வெற்றி பெற விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சஜித் உறுதியாக இருக்கிறார். அந்த எண்ணத்தை நிலைகுலைத்து சிறுபான்மை மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து ரனிலை தோற்க வைத்தது போல தன்னையும் தோற்க வைக்ககூடியவர்கள் என்ற பயம் சஜித்துக்கு வரவேண்டும்.

சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாவிட்டால் தான் தோற்கலாம் என்பது சஜித்துக்கு தெரிந்ததால் தான் சரத் பொன்சேகாவை தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிப்பேன், அது, இது என கூறி சிங்கள வாக்குகளை கவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

பிரேமதாசாவின் மகன் என்பதால் ஒருபகுதி சிங்களவர்கள் அதற்காகவே இவருக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன்.

சிறுபான்மை மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து ரணிலை தோற்கடித்தது போல் தன்னை தோற்கடிக்க வைக்கக்கூடியவர்கள் என்ற பயத்தை சஜித்துக்கு கொடுப்பதாக இருந்தால் அதற்கு தமிழ் கட்சிகள் மேற்கொள்ளும் செயல் மக்களை குழப்பியடித்து தேர்தலில் வாக்களிப்பதா வேண்டாமா என்ற நிலைக்கு இட்டு செல்லும் வகையில் இருக்கக்கூடாது.

கூட்டமைப்பு ஏற்கனவே யாருக்கு ஆதரவு என முடிவெடுத்து விட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என ஏன் நினைக்க முடியாது?

Edited by Lara
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics