Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

Recommended Posts

6 hours ago, Gowin said:

அதுசரி உந்த 2 பேர் தான் தெரிஞ்சிருக்கு.

உங்களுக்கு ஏன் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கம் கண்ணுல படேலை?

சிவாஜிலிங்கம் 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 9662 வாக்குகளை பெற்றதால் அவர் கண்ணில் பட்டிருக்க மாட்டார். 😀

Link to comment
Share on other sites

6 hours ago, Gowin said:

தமிழினம் தப்பி தவறியும் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக்கூடாது என்று உங்கட game therory ஐ நல்லாதான்  உருவாக்கி இருக்கீங்க

சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரிக்க நிற்கிறார். இம்முறை சிவாஜிலிங்கம் 25,000 வாக்குகளை பெறுவாரா என மகிந்தவே கேட்டவர்.

சிவாஜிலிங்கம் போட்டியிடுவதிலிருந்து இறுதி நேரத்தில் தன்னும் விலகினால் நல்லது.

ஆனால் அதற்கு முன்னமே சிங்கள எதிர் கருத்துகளை வெளியிட்டு சிங்கள மக்களை மகிந்த & கோ பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்.

Edited by Lara
Link to comment
Share on other sites

31 ஆம் திகதியும் 1 ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நிகழும். மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அதை செய்யாமல் கூடிக்கும்மாளமடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Edited by Lara
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது நிகழ்தகவு(Probability) எனநினைக்கிறேன் தவறெனில் மன்னிக்கவும் ,நிகழ்தகவின் தரவுகளின் அடிப்படையில் ROR (Risk of Ruin simulator) இணைது ஒன்று நிகழ்வதற்கான சாத்தியகூறுகளை  ஆராய்வார்கள்.

நிகழ்தகவை பெருமளவில் பயன்படுத்தும் தத்துவ கோட்பாடுகளில் Game Theory யும் ஒன்று.

தமிழில் :

https://ta.m.wikipedia.org/wiki/ஆட்டக்_கோட்பாடு

ஆங்கிலத்தில்:

https://en.m.wikipedia.org/wiki/Game_theory

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

சிறுபான்மை மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து ரணிலை தோற்கடித்தது போல் தன்னை தோற்கடிக்க வைக்கக்கூடியவர்கள் என்ற பயத்தை சஜித்துக்கு கொடுப்பதாக இருந்தால் அதற்கு தமிழ் கட்சிகள் மேற்கொள்ளும் செயல் மக்களை குழப்பியடித்து தேர்தலில் வாக்களிப்பதா வேண்டாமா என்ற நிலைக்கு இட்டு செல்லும் வகையில் இருக்கக்கூடாது.

கூட்டமைப்பு ஏற்கனவே யாருக்கு ஆதரவு என முடிவெடுத்து விட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என ஏன் நினைக்க முடியாது?

தமிழ் தலைமைகளின் வழி நடத்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியே எழும் சாத்தியம் இல்லை. சஜித் மட்டுமே அந்த வேட்பாளர். இந்த தலைமைகளின் வழிகாட்டல் சஜித்துக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது பற்றியதாகவே அமைய வேண்டும்.

சஜித் உண்மையிலேயே இந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து விடுவார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு அமைய வேண்டும். மல்யுத்த வீரர்களை பார்த்து இருப்பீர்கள். சண்டைக்கு முதல் தமது உடலை தட்டி தாம் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுவார்கள். அப்படி தமிழ் தலைமைகளும் காட்ட வேண்டும். இப்படி தான் லீ குவான் யு, மலேசிய பிரதமர் துங்கு ரஹ்மானுடன் சிங்கபூர் மக்களின் உரிமைகளுக்காக பேரம் பேசி, சிங்கபூர் சுதந்திர நாடானது. 

தேர்தலை பகிஸ்கரிப்பது பற்றி மட்டுமே அனைவரும் ஒற்றுமையாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யும் அதே வேளை, தமது  கோரிக்கைகளை சிங்கள வாக்குகளை இழக்க வைக்கும் கோரிக்கைகள் என்ற நிலையில் இருந்து முன்னேற்றி சாத்தியமான கோரிக்கைகளாக மாற்றி, பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் முயற்ச்சிக்க வேண்டும். 

சுருக்கமாக:

 1. வெளிப்படையாகவும் உண்மையாகவும் தேர்தலை பகிஸ்கரிக்க ஆயத்தப் படுத்த வேண்டும்.
 2. பின்னணியில் சாத்தியமான கோரிக்கைகளை ஆயத்தப்படுத்தி பகிஸ்கரிப்பை கைவிடும் சூழ்நிலை  உருவாக   கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இந்த முயற்ச்சியில் கோத்தபாய வெல்லும் சாத்தியம் உள்ளதே என்று அஞ்சுவீர்கள். அந்த அச்சம் பொன்சேகாவுக்கும், மங்களவுக்கும், சஜித்துக்கும், ரணிலுக்கும் வர வேண்டும். உங்களுக்கு அஞ்சும் நிலை வந்தால் தான் அவர்களுக்கும் அஞ்சும் நிலை வரும். அப்போது தான் இறங்கி வருவார்கள். எல்லாவற்றிலும் இழப்புகளுக்கும் ஆபத்துகளுக்கும்  சந்தர்ப்பங்கள் உள்ளன - இதை risk என்பார்கள். அதிக நன்மை வேண்டும் என்றால் அதிக ஆபத்து உள்ள முறை தான் தேவையானது. இதை the higher the risk, higher the reward என்பார்கள். 

 • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

தமிழ் தலைமைகளின் வழி நடத்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியே எழும் சாத்தியம் இல்லை. சஜித் மட்டுமே அந்த வேட்பாளர். இந்த தலைமைகளின் வழிகாட்டல் சஜித்துக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது பற்றியதாகவே அமைய வேண்டும்.

“சஜித்துக்கு ஆதரவு” என்று தான் முதலில் எழுதி விட்டு பின் “யாருக்கு ஆதரவு” என மாற்றியிருந்தேன். ஏனென்றால் தேர்தலை புறக்கணிக்கும் முடிவெடுத்தால் அது கோத்தாவுக்கு ஆதரவு என அர்த்தம்.

1 hour ago, Jude said:

இந்த முயற்ச்சியில் கோத்தபாய வெல்லும் சாத்தியம் உள்ளதே என்று அஞ்சுவீர்கள். அந்த அச்சம் பொன்சேகாவுக்கும், மங்களவுக்கும், சஜித்துக்கும், ரணிலுக்கும் வர வேண்டும்.

நீங்கள் வேற. மங்கள பல நாட்களுக்கு முன்னமே கூறியிருந்தார் கூட்டமைப்புக்கும் தமக்கும் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக, அதை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் போது வெளிப்படுத்துவார்கள் என. அது உண்மையாக இருந்தால் ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவு என அங்கு கூறிவிட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என அர்த்தமாகி விடும்.

Edited by Lara
Link to comment
Share on other sites

On 10/29/2019 at 1:23 PM, Jude said:

தேர்தலில் தாக்கமுள்ள வழிகள் மூன்று:

 1. கோத்தபாயவுக்கு வாக்களிப்பது.
 2. சஜித்துக்கு வாக்களிப்பது.
 3. பங்குபற்றாமல் விடுவது.

தமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது!

தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

நிகழ்தகவை பெருமளவில் பயன்படுத்தும் தத்துவ கோட்பாடுகளில் Game Theory யும் ஒன்று.

தமிழில் :

https://ta.m.wikipedia.org/wiki/ஆட்டக்_கோட்பாடு

ஆங்கிலத்தில்:

https://en.m.wikipedia.org/wiki/Game_theory

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஜுட்  .

Link to comment
Share on other sites

18 hours ago, Lara said:

சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரிக்க நிற்கிறார். இம்முறை சிவாஜிலிங்கம் 25,000 வாக்குகளை பெறுவாரா என மகிந்தவே கேட்டவர்.

ஆனால் அதற்கு முன்னமே சிங்கள எதிர் கருத்துகளை வெளியிட்டு சிங்கள மக்களை மகிந்த & கோ பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்.

முழுக் கட்டுக்கதை!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

தமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது!

தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.

சிறீலங்கா ஜனாதிபதியாக சிவாஜிலிங்கம் தெரிவானதும், தமிழீழ விடுதலை பிரகடனம் செய்வார். அவர் கொண்டோடிய மாகாணசபை செங்கோலை திருப்பி கொடுத்து விட்டாரா? 🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Gowin said:

தமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது!

தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.

என்னையா இது ஒரே வம்பாய் போச்சு. 

சிவாஜிலிங்கம் எப்போதையா தமிழ் இனத்துக்காக குரல்கொடுத்தார் ???  😃😃😃😃

Link to comment
Share on other sites

2 hours ago, Gowin said:

முழுக் கட்டுக்கதை!

பலரும் பல திரிகளில் பலவற்றை ஏற்கனவே எழுதி விட்டோம். அவை எதையும் நீங்கள் வாசிக்கவில்லை என நினைக்கிறேன். எனவே நாம் என்ன சொல்ல வருகிறோம் என உங்களுக்கு புரியாது. 😀

Link to comment
Share on other sites

இண்டைக்கு நடந்த சந்திப்புல உருப்படியான முடிவுகளை எடுக்க திணறி வருகினம் போல!

 • Like 1
Link to comment
Share on other sites

வரலாற்றின் ஒரு கடந்த பக்கம் ..................

73539267_1375762169265551_2762844571938324480_n.jpg?_nc_cat=108&_nc_oc=AQmW6V2ggz0z5XQLV5URDf9FleuLgUN3qEbUqOrID-0JldC2qdQTB4xu1Uli-e_07tDmEpUHcckJgURE9I_2s7hm&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=89a4afee8eb1540f52e3d35213f26155&oe=5E1788D6

பண்டா-செல்வா ஒப்பந்தம்முதல்
நல்லிணக்கம் அரசு-சம்பந்தர் ஒப்பந்தம் வரை
.
இன்நிலையில் எவருக்கு வாக்களிக்கலாம்?
பச்சையா? நீலமா? அல்லது தமிழ் வேட்பாளரா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

வரலாற்றின் ஒரு கடந்த பக்கம் ..................

73539267_1375762169265551_2762844571938324480_n.jpg?_nc_cat=108&_nc_oc=AQmW6V2ggz0z5XQLV5URDf9FleuLgUN3qEbUqOrID-0JldC2qdQTB4xu1Uli-e_07tDmEpUHcckJgURE9I_2s7hm&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=89a4afee8eb1540f52e3d35213f26155&oe=5E1788D6

பண்டா-செல்வா ஒப்பந்தம்முதல்
நல்லிணக்கம் அரசு-சம்பந்தர் ஒப்பந்தம் வரை
.
இன்நிலையில் எவருக்கு வாக்களிக்கலாம்?
பச்சையா? நீலமா? அல்லது தமிழ் வேட்பாளரா?

உலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. 

அதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Jude said:

உலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. 

அதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.

தமிழ் அரசியல் தலைகள் வாய்க்கு வந்தபடி பொய் வாக்குறுதிகளை வழங்காமல் யதார்த்தத்தை கூறினாலே தமிழர்தரப்பில் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்தமாதிரி  !!!!!!""""

Link to comment
Share on other sites

25 minutes ago, Jude said:

உலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. 

அதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.

உருப்படியான கருத்து! 

 • Like 2
Link to comment
Share on other sites

நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் – சுமந்திரன்

In ஆசிரியர் தெரிவு     October 31, 2019 10:21 am GMT     0 Comments     1391     by : vithushan

sumanthiran.jpg

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.

தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவுசெய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிந்துள்ளார்கள். வடக்கு, கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிந்துள்ளார்கள். அவர்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்” என கூறினார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலமான வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தற்போது கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் மிகுந்த அறிவும் அனுபவமும் உடையவர்கள். தமிழ் அரசியல்வாதிகளை விட, தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான அரசியல் சிந்தனை உண்டு என்றே கூறவேண்டும்.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற சரியான முடிவை, தமிழ் மக்கள் தாமாக சிந்தித்து சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவு ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் ஒரே முடிவாக அமையும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://athavannews.com/நாம்-ஆதரிக்கின்ற-வேட்பாள/

Link to comment
Share on other sites

6 hours ago, Gowin said:

அவர் மேலும் தெரிவிக்கையில், “சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.

சுமந்திரன் தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் ஐன்ச்டின். பெரும்பான்மை தமிழர்களுக்கு அது புரியவில்லை. நான் சிறுபான்மையினன். 

Link to comment
Share on other sites

On 10/31/2019 at 5:25 PM, Gowin said:

“சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம்.

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க சொல்லி தான் கேட்டால் பிறகு மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டுவிடுவார்கள் என சுமந்திரன் கவலைப்படுகிறார்!

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 8:01 AM, Lara said:

நீங்கள் வேற. மங்கள பல நாட்களுக்கு முன்னமே கூறியிருந்தார் கூட்டமைப்புக்கும் தமக்கும் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக, அதை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் போது வெளிப்படுத்துவார்கள் என. அது உண்மையாக இருந்தால் ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவு என அங்கு கூறிவிட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என அர்த்தமாகி விடும்.

தமிழரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது. 😀

https://yarl.com/forum3/topic/233790-சஜித்திற்கே-ஆதரவு-–-சம்பந்தன்-தலைமையிலான-முக்கிய-கலந்துரையாடல்-அதிரடி-முடிவு/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.