Jump to content

யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி சர்வதேச தரம்: TNA விசனம்

Recommended Posts

யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி சர்வதேச தரம்: TNA விசனம்

palali

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச விமான நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது விமானம் சென்னையிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி விமானம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர், அங்கு உருவாகியுள்ள தொழில் வெற்றிடங்களுக்கு தெற்கு இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

வடக்கில் தமிழ் பேசும் பலர் வேலையற்று இருக்கும் நிலையில், மாற்று மொழி பேசக் கூடியவர்களை பணியில் அமர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி விசனத்துக்குரியது எனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/190837/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதுதான் நடக்கும் என்று அடித்து சொல்லியிருந்தேன்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினரா?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதுதான் நடக்கும் என்று அடித்து சொல்லியிருந்தேன்.

இதுவும் நடக்கும் இதற்குமேலும் நடக்கும்.

விமான நிலையத்தை அண்டிய அரச காணிகளில், தரிசு நிலங்களில், நவீன வசதிகளுடன் கூடிய பாரிய விடுதிகள் கட்டி எழுப்பப்படும் அங்கு விமானநிலையத்தில் பணியாற்றும் தெற்கு மேற்கைச் சேர்ந்தவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சிங்களக் கிராமம் ஒன்று புத்ததூபிகளுடன் விரைவில் உருவாகும். இன்றுள்ள எங்கள் தமிழ்த் தலைவர்கள் மங்கள விளக்கேற்றித் திறந்துவைப்பார்கள்.   

Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினரா?

“முன்னாள்” பாராளுமன்ற உறுப்பினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இதுவும் நடக்கும் இதற்குமேலும் நடக்கும்.

விமான நிலையத்தை அண்டிய அரச காணிகளில், தரிசு நிலங்களில், நவீன வசதிகளுடன் கூடிய பாரிய விடுதிகள் கட்டி எழுப்பப்படும் அங்கு விமானநிலையத்தில் பணியாற்றும் தெற்கு மேற்கைச் சேர்ந்தவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சிங்களக் கிராமம் ஒன்று புத்ததூபிகளுடன் விரைவில் உருவாகும். இன்றுள்ள எங்கள் தமிழ்த் தலைவர்கள் மங்கள விளக்கேற்றித் திறந்துவைப்பார்கள்.   

இன்னும் ஒன்றை விட்டுவிட்டீர்கள் நாட்டை விட்டு ஓட தமிழர்களுக்கு வசதியாக விமான நிலையம் அவர்களுக்கு பக்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறாகள்.எப்ப்ப பாத்தாலும் புறு புறபத்தபடி.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னும் ஒன்றை விட்டுவிட்டீர்கள் நாட்டை விட்டு ஓட தமிழர்களுக்கு வசதியாக விமான நிலையம் அவர்களுக்கு பக்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறாகள்.எப்ப்ப பாத்தாலும் புறு புறபத்தபடி.😉

அரசும் அரசியலும் ஒழுங்காக இருந்தால் ஏன் நாட்டைவிட்டு ஓடுகின்றார்கள்? :cool:

Link to comment
Share on other sites

13 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் ஒன்றை விட்டுவிட்டீர்கள் நாட்டை விட்டு ஓட தமிழர்களுக்கு வசதியாக விமான நிலையம் அவர்களுக்கு பக்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறாகள்.எப்ப்ப பாத்தாலும் புறு புறபத்தபடி.😉

நாட்டைவிட்டு ஓடிவந்தவர்களைப் பற்றித் தவறாகக் கூறக்கூடாது. அவர்கள் ஓடிவந்ததால்தான் அங்கு கொட்டிலுக்குள் இருந்த வயிரவர் கோவிகளும் வானளாவிய கோபுரங்களுடன் மிளிருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி மானநிலைய புது படம் ஏதாவது இருக்குதா

Link to comment
Share on other sites

2 minutes ago, Paanch said:

நாட்டைவிட்டு ஓடிவந்தவர்களைப் பற்றித் தவறாகக் கூறக்கூடாது. அவர்கள் ஓடிவந்ததால்தான் அங்கு கொட்டிலுக்குள் இருந்த வயிரவர் கோவிகளும் வானளாவிய கோபுரங்களுடன் மிளிருது.

நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அங்கு தொழிற்சாலைகளை, வர்த்தக  நிலையங்களை அமைத்து அங்கு வேலை வாய்புக்களை கொடுத்திருந்தால்  பெருமைப்படலாம். வயிரவருக்கு வடைமாலையும் சம்பலும்  செய்ததை சாதனையாக பெருமைப்படும் நிலையில்  நாம்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அங்கு தொழிற்சாலைகளை, வர்த்தக  நிலையங்களை அமைத்து அங்கு வேலை வாய்புக்களை கொடுத்திருந்தால்  பெருமைப்படலாம். வயிரவருக்கு வடைமாலையும் சம்பலும்  செய்ததை சாதனையாக பெருமைப்படும் நிலையில்  நாம்.  😂

அதை இங்கே கேட்டு பிரயோசனமில்லை.
கோடி கோடியானபணத்தை தண்ணியாக வாரி இறைத்து  கேளிக்கை திரைப்படக்கள் எடுக்கும் லண்டன் வர்த்தகர்களை தட்டிக்கேளுங்கள்.
ஹெலி/குதிரை வண்டில் என ஜமாய்த்து பந்தாகாட்டும் கொண்டாட்ட வாசலில் நின்று உங்கள் வாய்வீரத்தை காட்டுங்கள்.
இங்கே நானும் எனக்கு தெரிந்த ஏனைய கள உறவுகளும் இருக்கும் வசதியை பிரித்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
மனம் இருப்பவனுக்கு வசதியில்லை.
வசதி இருப்பவனுக்கு மனம் இல்லை.

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

என்ன யாழ்களம் உங்களைப்போன்ற  ஒரு சிலர் மட்டும் பார்ககும் குண்டுச்சட்டிக்  களம் என்று நினைத்தீர்களா? பல ஆயிரக்கணக்கான அறிவார்ந்த தமிழ் வாசகர்கள்  பார்ககும் பெருமை மிகு  களம். அந்த வாசகர்களுக்காகவே   நானும் நீங்களும் சுதந்திரமாக  கருத்துக்களை இங்கு  வைக்கிறோம். உங்களுக்கு மட்டுமென்றால் விழலுக்கு இறைத்த நீராக   இங்கு time waste பண்ண எங்களுக்கு என்ன பைத்தியமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இப்படியே உங்களை நீங்களே சொல்லிக்கொண்டால்தான் உண்டு. மற்றவன் ஏன் **** என்றும் மதிக்கமாட்டான்.

Link to comment
Share on other sites

9 minutes ago, Eppothum Thamizhan said:

இப்படியே உங்களை நீங்களே சொல்லிக்கொண்டால்தான் உண்டு. மற்றவன் ஏன் **** என்றும் மதிக்கமாட்டான்.

நான் யாழ் வாசகர்களைப் பற்றி தான் தெளிவாக குறிப்பிட்டேன் நீங்கள் யாரைப் பற்றி கூறிக்  குழப்புகின்றீர்கள் என்று தெரியவில்லை. எப்போதும் தமிழன் என்று பெயர் சூடிக்கொண்டால் மட்டும் போதாது.  தமிழ் வசனங்களை வாசித்து அதனை விளங்கிக்கொள்ளும்  ஆற்றலும் வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே,

1. சுரேஸ் இப்ப எம்பியா? இல்லையே
2. அவர் இப்ப கூட்டமைப்பில் உள்ளாரா? இல்லையே.

பின்ன என்ன விண்ணானததுக்கு இந்த நம்பகம் இல்லாத செய்தியை நம்பி இவ்வளவு எழுதுகிறீர்கள் 🤦‍♂️
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

என்ன யாழ்களம் உங்களைப்போன்ற  ஒரு சிலர் மட்டும் பார்ககும் குண்டுச்சட்டிக்  களம் என்று நினைத்தீர்களா? பல ஆயிரக்கணக்கான அறிவார்ந்த தமிழ் வாசகர்கள்  பார்ககும் பெருமை மிகு  களம்.

 ஆ.....அப்படியா? அடேங்கப்பா!!!!! இது இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே.

3 hours ago, tulpen said:

உங்களுக்கு மட்டுமென்றால் விழலுக்கு இறைத்த நீராக   இங்கு time waste பண்ண எங்களுக்கு என்ன பைத்தியமா? 

இவ்வளவோ பென்னாம் பெரிய அறிவு மூளையை வைச்சிருக்கிறீங்கள் தனியாக திரி திறந்து சிந்தனைகளை விதைக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 ஆ.....அப்படியா? அடேங்கப்பா!!!!! இது இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே.

சாமியார், நீங்களும் நானும் பாக்கிறதை தான் அவர் சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

On 10/16/2019 at 10:50 AM, Paanch said:

நாட்டைவிட்டு ஓடிவந்தவர்களைப் பற்றித் தவறாகக் கூறக்கூடாது. அவர்கள் ஓடிவந்ததால்தான் அங்கு கொட்டிலுக்குள் இருந்த வயிரவர் கோவிகளும் வானளாவிய கோபுரங்களுடன் மிளிருது.

On 10/16/2019 at 10:57 AM, tulpen said:

நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அங்கு தொழிற்சாலைகளை, வர்த்தக  நிலையங்களை அமைத்து அங்கு வேலை வாய்புக்களை கொடுத்திருந்தால்  பெருமைப்படலாம். வயிரவருக்கு வடைமாலையும் சம்பலும்  செய்ததை சாதனையாக பெருமைப்படும் நிலையில்  நாம்.  😂

எங்கள் தமிழர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்களே என்ற எனது ஆதங்கத்தை நான் பதிந்திருந்தேனே தவிர அந்தத் தமிழர்களின் செயற்பாடுகளை நானும் வரவேற்கவில்லை ருல்பென் அவர்களே.! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.