ampanai

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு ; இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை - கோத்தாபய

Recommended Posts

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

gota.jpg

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்லவெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும்  இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் பிரதமர் பதவி மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க காரணம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/66920

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

SLPP presidential candidate and former defence secretary Gotabaya Rajapaksa said today said though he would work with the UN and human rights organisations in resolving contentious issues he could not recognize the UNHRC resolution on Sri Lanka because it was ‘illegal’.

The 30/1 UN resolution titled, ‘Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka’ was co-sponsored by the present Sri Lankan government and adopted in 2015.

http://www.dailymirror.lk/breaking_news/Cant-recognize-UNHRC-resolution-on-SL-Gota/108-176175

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு நாட்டின் உள்ளக தலைவர்களிடம் இருந்து எந்த தீர்வும் வராது. அது, சஜித் தரப்பிற்கும் பொருந்தும் ( சஜித் பகிரங்கமாக இதை கூற மாட்டார், ஆனால் செய்வார் இல்லை செய்ய வைக்கப்படுவார்). 

ஆனால், கோத்தா சனாதிபதியானால், அவருக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச மனித அமைப்புக்களிடம் இருந்தும் அழுத்தம்  கிடைக்கலாம். அதுவே, சஜித்திற்கு நடக்காது. 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

ஆனால், கோத்தா சனாதிபதியானால், அவருக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச மனித அமைப்புக்களிடம் இருந்தும் அழுத்தம்  கிடைக்கலாம். அதுவே, சஜித்திற்கு நடக்காது. 

ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளை கோத்தா கணக்கிலும் எடுக்க மாட்டார்.

Share this post


Link to post
Share on other sites

 

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பு - ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்திடம் 13,784 பேர் சரணடைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, விடுதலைப்புலிகள் காணப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது 2 வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் இடம்பெற்ற எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான புனர்வாழ்வு திட்டமொன்று முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் மிக வெற்றிகரமாக அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவ்வாறாயினும், ராணுவத்திடம் சரணடைந்த எவரும் காணாமல் ஆக்கப்படவில்லையா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஸ, சரணடைதல் என்பது வேறு, காணாமல் போகின்றமை என்பது வேறு என கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற போது ராணுவத்தில் கடமையாற்றிய உயர்நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என சுமார் 4000 திற்கும் அதிகமானோர் இன்றும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

யுத்தக் காலத்தில் பலர் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைவடைந்து உயிரிழந்ததாகவும், அவ்வாறு உயிரிழந்தவர்களை உறவினர்கள் அடையாளம் காணாமையினால், இன்றும் அவர்கள் காணாமல் போன பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் இடம்பெறுகின்ற காலப் பகுதியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் மீள திரும்பவில்லை என வடக்கிலுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. அவ்வாறாயின், அந்த குடும்பத்தினர் பொய் கூறுகின்றார்களா? என இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் வினவப்பட்டது.

''ஆம், சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அது ஒரு குற்றச்சாட்டாகும். இந்த விடயம் தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம். ஆணைக்குழுக்களை நியமித்தோம். ஆனால் குறிப்பிட்ட நபர்கள், குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட இடத்தில் காணாமல் போயுள்ளதாக யாரும் கூறவில்லை." என கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

பரணகம ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வெளியிட்டதை, ஊடகவியலாளர்கள் இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு கிடையாது என கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் மீண்டும் பதிலளிக்க, ஊடகவியலாளர்கள் பரணகம அறிக்கையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டதாக கூறினார்கள்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50054584

 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கை விபரங்கள்

யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு முன்னதாக காலப் பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளளன.

ராஜபக்ஷ

இந்த ஆண்டறிக்கையின் பிரகாரம், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 14,641 ஆவணங்கள், காணாமல் போனோர் தொடர்பில் தமக்கு கிடைத்துள்ளதாக அந்த அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

இந்த ஆவணங்களை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பதில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்டவர்களோ அல்லது ராணுவத்தில் கடமையாற்றியவர்களையோ தேடித் தருமாறு கோரி தாம் போராட்டங்களை நடத்தவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட, யுத்தத்துடன் தொடர்புப்படாத தமது உறவுகளை ஒப்படைக்குமாறே தாம் கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது உறவினர்களை தாம் ராணுவத்திடம் ஒப்படைத்தமை உண்மை எனவும், ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ இன்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுகின்றார்.

Share this post


Link to post
Share on other sites

பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித் 

(நா.தனுஜா)

போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தபாய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார். பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு 'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்' என்று நழுவமாட்டார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்? யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் கோத்தாபய ராஜபக்ஷ சரத்பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்ல. நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதித் தேர்தலில் எனது பிரதிவாதி கோதபாய ராஜபக்ஷ மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்? கோதபாய ராஜபக்ஷவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது, அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்குத் தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்கமுடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையைக் கூறிவிட்டார். பத்துவருட காலத்தின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

73150081_10156813133385186_6394181614741

https://www.virakesari.lk/article/67033

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, ampanai said:

உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு 'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்' என்று நழுவமாட்டார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்? யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் கோத்தாபய ராஜபக்ஷ சரத்பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்ல. நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபாஷ், சரியான போட்டி, அவர்களை விட நாங்கள் தான் பெரிய போர்க்குற்றங்களை, இனவழிப்பை தமிழர்கள் மீது செய்தொம் என்கிறார் சஜித்.  

Share this post


Link to post
Share on other sites

 

UzpfSTU0MTM2MzAwMToxMDE1Njc5MTk4MDExMzAw

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானது, அவருக்கு ஒரு இழுக்கான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருப்பது நல்லதொரு விடயம் எனவும், அதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்துக்கொள்ள உடன் முன்வர வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் அழைப்பு விடுக்கின்றார். அவ்வாறாயின், பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தாம் தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்பின் போது தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை தான் நல்ல கருத்தாகவே எடுப்பதாக அவர் கூறுகின்றார். தனக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக உணர்ந்து, அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான நிவாரணத்தை சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பாரா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றதாக தன்னால் கூற முடியாது என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து ஆட்சி செய்த போதே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அந்த நம்பிக்கை உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகித்ததாக அவர் கூறுகின்றார். தீர்வு விடயமானது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும், அந்த நடவடிக்கையில் தாம் வெகு தூரம் பயணித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். அதன் பிரதிபலனாகவே அரசியலமைப்பின் புதிய வரைவொன்றை வெளியிட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். தமிழர் தீர்வு விடயத்தில் ஒன்று செய்யவில்லை என கூற முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன், அந்த இறுதித் தருணத்திலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாது போன ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். 'தனித்துவம் என்ற நிலைப்பாடு முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது' கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? இந்த தீர்வுத்திட்டத்தை விடுப்பட்ட இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்வதாக சஜித் பிரேமதாஸ வழங்கிய உறுதிமொழியினாலேயே தாம் அவரை ஆதரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிடாத ஒருவர் ஜனாதிபதியாக தெரியாகியுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். இதன்படி, இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளிலேயே அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். மஹிந்தவிடமே தீர்வு குறித்து பேச வேண்டும் - கோட்டாபய தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது அனுமதியுடன் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலுக்கு முன்னர் பல தடவை சந்தித்து கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎம்.ஏ. சுமந்திரன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே கலந்துரையாட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார். அத்துடன், அனைத்து மக்களையும் சரிக்கு சமமாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தே தன்னுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார். அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், தான் அவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பங்களில் அவர்கள் வெவ்வேறு விடயங்களை வெளியிட்டாரே தவிர, அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என சுமந்திரன் தெரிவிக்கின்றார். சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா? தமிழர்கள் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான தன்மை இருந்ததாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெளிவான தன்மை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அதிகார பகிர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா? இலங்கையில் போலீஸ் அதிகாரம் முழுமையாக இருப்பதாகவும், காணி அதிகாரமே முழுமை பெறவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏற்கனவே உள்ள விடயம் என்பதனால், எந்தவித அரசியலமைப்பு திருத்தங்களும் இன்றி அதனை முழுமையாக அமுல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமலையக தமிழர்கள் (கோப்பப்படம்) 13ஆவது திருத்தத்திற்கும் அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் கடந்த கால விடயங்களை மேற்கோள்காட்டி கூறினார். இந்த வாக்குறுதியானது, மூன்று தடவைகள் எழுத்துமூலம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கூறிய விதத்திலேயே அதனை செய்ய வைக்க வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும், அதனையே இனிவரும் காலங்களில் தாம் கையாள வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் தலையீடு இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறுகின்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர்? இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா? இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடும் போது, தேர்தல் முடிவுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் இல்லை என்பதை காட்டுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறுவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவார் எனவும் அவர் கூறுகின்றார். அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதுவே காலம் காலமாக நடைபெற்று வருகின்ற விடயம் எனவும் அவர் நினைவூட்டினார். தமிழர் பிரச்சனை விவகாரத்தில் இந்தியா மேலும் கூடுதலான ஈடுபாட்டை காட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார். காணாமல் போனோர் விவகாரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னேற்றகரமான பல செயற்றிட்டங்கள் கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகங்கள் என்பன கடந்த ஆட்சியின் போதே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால், அந்த அலுவலகங்களின் செயற்பாடுகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும், புதிய அரசாங்கம் அதற்கான இடத்தை வழங்குமோ, இல்லையோ என தமக்கு தெரியாது எனவும் அவர் கூறுகின்றார். எது எவ்வாறாயினும், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ஷ 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியின் இருந்த சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான அழுத்தங்களை கொடுத்ததாக கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக, தாம் வழங்கும் அழுத்தங்களை விடப்போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்குமானால், வரவுள்ள ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக தாம் மாற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், தமது இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-50484475
    • கிண்டிலில் தேட வேறு எதோ வருகிறது முகவரி கிடைக்குமா ?
    • மீனுக்கு மீனே உணவாகும், அம் மீனே அனைத்துக்கும் உணவாகும்......!   🐋