Jump to content

தோட்ட தொழிலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி: இம்முறை தீபாவளி முற்பணம் 15,000 ரூபா..!


Recommended Posts

(இரா.செல்வராஜா)

தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக  15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

virakesari.jpg

தோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முற்பணத்தை துரிதமாக தொழிலாளர்களுக்கு  வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளமையும் முக்கிய விடயமாகும்.  

https://www.virakesari.lk/article/66932

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக  15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த முற்பணம் தீபாவளிக்கா?தேர்தலுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த முற்பணம் தீபாவளிக்கா?தேர்தலுக்கா?

தேர்தலுக்கு.......
இது இண்டியன் ஸ்டைல் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கடை பிரச்சனை அவங்களுக்கு.எங்கடை பிரச்சனை எங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அன்பளிப்பு அல்ல. எப்படியும்.... திரும்ப கொடுக்க வேண்டிய பணம்.
மொத்தமாக ஒரு தொகை கிடைத்ததில்.... தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
 என்பதில் சந்தேகம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.